Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueபோரும் இலக்கியமும் 2
 

பாரதிதாசன்

           நான் வந்து இலக்கியவாதியில்லை. நான் தற்செயலாகத்தான் வந்தேன். கூடுதலாக இலக்கியத்தை தெரியாது. சொல்ல இயலாது. நான் இங்க வந்தபோதுதான் எல்லோருக்கும் வந்து கேட்டதும் “புகலிட இலக்கியத்தைப் பற்றி சொல்லுங்கோ. புகலிட இலக்கியத்தைப் பற்றி சொல்லுங்கோ”. என்று. அப்பதான் யோசிச்சேன். நான் எங்கோ சந்திரமண்டலத்திலிருந்து வந்தமாதிரியோன்னு. இது வந்து எனக்கு… நான் வந்து ஆட்கள் இல்லாத கோளத்துல இருந்துட்டு வந்து இங்கே வந்து அங்கே ஏதோ வித்தியாசமாகப் படைக்கிறார்கள் எல்லோரும் ஆவலாய் இருப்பது எனக்குக் காட்டுது. ஆனால் அங்க ஆரம்பத்தைவிட, இப்ப 90க்குப்பிறகு அங்கு காலமயிருந்து சன் டி.வி, சினிமா பார்க்கறதிலிருந்து எல்லாம் உள்ள இடம்தான் அது. அங்க வந்து வித்தியாசமா எனக்கு சொல்றதுக்கு தெரியல. ஆனால் படைப்புகள்ல வித்தியாசம் இருக்கலாம்.

            என்ட பேர் பாரதிதாசன் சொல்லியிருப்பேன். நான் வந்து “இலக்கிய சந்திப்பு” நிகழ்ச்சி நடக்குது. அந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடையவன்…ஆரம்பத்திலேர்ந்து மற்றது “புதுமை” என்றொரு பத்திரிக்கையை சஞ்சிகையை நடத்த முயற்சித்து தோல்வியடைந்தேன். ஐந்தாறு இஷ்யுவோடமுடிந்துவிட்டது. வில்வரத்தினத்தோட கவிதையைக் கேட்டபிறகு-இங்க வந்தப்ப திரும்ப எனக்கு… எஸ்.பொ பேட்டிக்குப் பிறகும் புகலிட இலக்கியம் வந்து ஏதோ ஒருமேன்மையான இலக்கியமாதிரி காட்டப்பட்ட மயக்கம் இருந்தது. இலக்கியமென்றால் இங்கிருந்துதான் வருமென்று. வில்வரெத்தினத்தோட கவிதையைக் கேட்டா இவ்வளவு கஷ்டத்துக்கிடையும் இவ்வளவு வித்தியாசம் தத்துரூபம கொண்டுவர நான் பார்த்தன். புகலிட இலக்கியத்தில் வித்தியாசம் இருக்கு. வேறு போக்குகள் இருக்கு. மாற்றங்கள் இருக்கு. 

ஒரு வித்தியாசம் பார்த்துதான் கேட்கிறன். என்னென்றால் இந்தியா வந்து நான் பேப்பர்ல பார்த்தபோதும் புகலிடத்துல இலங்கையில் பேப்பர வாசித்தபோதும் இந்த போராட்டச்சூழல் ஒரு வித்தியாசத்த கொண்டு வந்திருக்கு.

            போராட்டங்கள் என்னென்றால் கற்பு என்ற குயசஅ விளங்குதில்லையா? ராணுவம் வந்து பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குகிறது வந்து ஒரு ஆயுதமாகப் பாவித்தது. ராணுவத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் வந்து அத வெளியில வரபோது கற்பழிக்கப்பட்ட பெண்கள் என்று வந்தது. அதாவது வந்து ராணுவத்தால் அடக்கப்பட்டு பின்பு சமூகத்தாலும் (விளங்குதா இது இல்லை) அடக்குமுறை ஒன்றும் அங்கு. அதனால இதுகள் வெளியில வராம அடக்குமுறை. மறைக்கக்கூடியதென்றால் இந்த பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் ஆனால் புகலிடத்திலும் சரி இலங்கையிலும் சரி நடந்த போராட்டங்கள் இலக்கிய கவிதைகள் இதுகள் என்ன செய்தனயென்றால் அந்த கற்பழிப்பு என்ற பதத்தை மாற்றி பாலியல் பலாத்காரமென்று அது அவர்களுக்கு செய்யப்பட்ட துரோகம் என்ற செய்தியை அதற்கு மாத்திரம் முன்னிலைப்படுத்துது. இல்லையென்றால் அதில் என்ன விசயமென்றால்… புகலிடத்தில் பார்த்தீங்கள் என்றால்… இந்த இந்திய பத்திரிக்கைகள்ல இன்றைக்கும் பார்த்தால் இந்த கற்பழிப்பு என்ற வார்த்தைகளும் கூட பாவிக்குது நாங்கள் அங்கே இப்படி பாவிக்கவியலாது. அப்படி பாவிச்சா அடுச்சுப்போடுவோன் உண்மையா… அது வந்து… துரோகம் தானையா… பெண் பாவங்கறது மூன்றாவது துரோகம் தானே? இப்படி எழுதக் கூடாது அங்கு இலக்கியம் வந்து வாழ்வுக்கு பயன்படுவது என்று சொன்னால் நான் யோசித்தேன். இந்த கட்டுரைகள் எல்லாம் வாசித்து இதாப்பண்றது தெரியாதெனக்கு. ஆனால் கையில பட்டத சொல்றன். வேற வித்தியாசங்கள் கணக்கு இருக்கு. அத சில மணியில கலந்துரையாடல்ல கதைச்சுக்கலாம்.

அந்தனி ஜீவா

 போர் நடைபெறாத ஒரு பிரதேசத்துல வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் போர்க்கால சூழலிலேதான் நாங்களும் வாழ்கிறோம் என்று சொல்லவேண்டும். செல் அடிகளும் ராணுவத்தாக்குதல்களும் நிறைந்த பிரதேசத்தில் அங்கு வாழுகின்ற மக்கள் அந்த செல் விழுந்தால் இறந்து விடுவார்கள். ஆனால் நாங்கள் அந்த செல் விழாமல் தினம் தினம் இறந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் உணர வேண்டும். இதற்கு என்ன காரணமென்றால் மலைநாட்டின் மத்தியப்பிரதேசத்தில் மலையகத்தின் தலைநகர் கண்டியில வாழுகின்ற எங்களுக்கு எங்கையாவது குண்டு வெடித்துவிட்டால் போதும் அன்றோடு சோதனை நடைபெறும். வீடு வீடாக வந்து தேடுவார்கள். அதே நேரத்தில் எங்களைவிட தோட்டப்பெண்களும் அல்லது மலைவாழ் நகருக்கு வருகின்ற அந்த மலைவாழ் தோட்டத்து தேச மக்கள் சோதனையிடப் படுவார்கள். அவர்களிடம் அடையாள அட்டை என்று ஒன்று இருக்கிறது. அது இல்லாவிட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு அங்கே தடுத்து வைக்கப்படுவார்கள். ஆனால் இவர்களுக்காக குரல் எழுப்புகிற தளம் அங்கேஇல்லை. காரணம் வேற பிரதேசங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கு தலைமை இருந்தது. ஆனால் மலைவாழ் பிரதேசத்து மக்களுக்குத் தலைமையில்லாமல் போனது. இதுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு.

             இந்த மக்கள் குடியேறி கிட்டத்தட்ட 700 வருடங்களாகப் போகின்றன. இந்த மக்கள் அங்கு போய் குடியேறி ஒரு அடிமைச் சூழ்நிலையிலேயே வாழ்ந்து கொண்டு ஒரு 100 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இவர்களிடையே ஒரு தலைமை தோன்றியது. அந்த தலைமை வேறு யாருமில்லை. தஞ்சையிலே பிறந்து, மக்களிடையே வந்து சேவையாற்றிய பத்திரிக்கையாளர் கோ.நடேசய்யர்தான். அவருடைய துணைவியாரும் அவரும் சேர்ந்து பாடிய பாடல்களை அங்கே பரப்பி, அந்த மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியைத் தூண்டினார். அடுத்து அந்த மக்களிடையே விடுதலை ஆர்வத்தை ஊக்குவித்தார்கள். எழுத்தால்தான் அரசு.பாராளுமன்றத்தில், சட்டசபையிலே சென்று முடியாதவற்றை நான், பத்திரிக்கை மூலம் செய்து காட்டுவேன் என்று துணிந்து பேசியநேரத்திலே, இந்திய மேலாதிக்கமும், இந்திய தலைமைத்துவமும் வந்து தனித்துவமாகச் செயல்பட்ட அவரை தேர்தலிலே (அவர் சட்டசபையிலும் இருந்தார். பாராளுமன்றத்திலும் இருந்தார்) அவரை தோல்வி காணச் செய்தது. அவரும் இங்கிருந்து வந்த காந்திக்கும், நேருவுக்கும் தலை வணங்காமல் “தோட்ட மக்கள் நீங்கள் இலங்கை மண்ணிலே பிறந்தவர்கள். இங்கே காலூன்றி நில்லுங்கள் நீங்கள் இந்தியாவுக்கு ஜெ போட வேண்டாம். காந்திக்கும் நேருக்கும் ஜெ சொல்ல வேண்டாமென்று ஒரு பேச்சு இருந்தது. அதன் பின்னர் வந்த தலைமைகள் அனைத்தும் இந்திய மேலாதிக்கத்தின் ஆதரவிலே அங்கு வந்த தலைமைகள்தான். ஆனாலும் அவர்கள் ஆரம்பத்திலே, இடது சாரிகளுடன் சேர்ந்து வில்வரெத்தினம் குறிப்பிட்ட டி.எஸ். சேனநாயகா என்ற மிகப் பெரிய இனவாதி. அந்த மக்களின் வாக்குகளை 1947விலே பறித்தார். ஆங்கே பாராளுமன்றத்திலே அப்பொழுது 9 பிரதிநிதிகள் இருந்தார்கள். அதன் பிறகு, அந்த மக்கள் குடியுரிமை பறிக்கப்பட்டது. அந்த மக்களிடையே ஒரு போராட்டத்தை செய்யவோ, அந்த மக்களுக்காக குரல் எழுப்புவதற்காகவோ வீரமிக்க, அந்த மக்களைப்பற்றி, சிந்திக்கிற ஒரு தலைமையில்லாத நேரத்திலே 60 களுக்குப்பின் அந்த தோட்டப்புற மக்களிடையே ஒரு படித்த இளைஞர் கூட்டம் ஒரு ஆத்திரப் பரம்பரை பீறிட்டு வந்தது. அவர்களை ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் அவர்கள் தங்களுடைய பேனாவைத்தான் ஆயுதமாகத் தூக்கிப் பிடித்தார்கள்.

அப்போது அவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் சி.வி.வேலுப்பிள்ளை என்ற ஒரு மிகப்பெரிய கவிஞன். ஆங்கிலத்தில் எழுதி எங்களையெல்லாம் உலகறியச் செய்தவன். ஆனாலும் அவர் அகிம்சாவாதி. தாகூரினால் கவரப்பட்டவர். அவருக்குப் போராட்டமென்றால் பிடிக்காது. தொழிற்சங்கவாதியாக இருந்தாலும் கூட தங்கள் துன்ப துயரங்களை சோகப் பெருமூச்சுகளை எழுத்துக்களால் வெளியிட்டார்.

          (50களில்… 60களுக்கும்) 60 களுக்கும் பின்னால் அந்த ஆத்திரப்பரம்பரையிலே வந்தவர்கள் என்.எஸ்.எம்.ராமையா, எலியட், ஜோசப் சாரல்நாடன் இவர்கள் வந்து தங்களுடைய மக்களை, படைப்புகளால் தங்களுடைய எழுத்துகளை ஆயுதமாக்கி, தங்களுடைய தனித்துவத்தை மலையக இலக்கியமென்று அறிமுகம் செய்தார்கள்.

           அதே நேரத்திலே நாவல்கள் மூலம் கோவிலூர் சுப்பையாவின் தூரத்துப் பச்சை என்ற நாவல் முதல் 83 கலவர கால கட்டத்திற்குப் பின்னணியாகக் கொண்ட இனி படமாட்டேன் நாவல் வரையில் கிட்டத்தட்ட சுமார் 10 நாவல்கள் அந்த மக்களின் ஒரு வரலாற்று ஆவணமாகும். ஓவ்வொரு காலகட்டத்திலும் அந்த மக்களை, அந்த மக்களின் மண்ணைப் பறித்ததை குருதி மழை என்ற நாவல் அழகாக எடுத்து டாக்டர் ஞானசேகர் எழுதிய நாவலது. 

          இப்படி ஒவ்வொரு நாவலையும் நாங்கள் பெயர் குறிப்பிட்டுக் கூறமுடியும். இதைப்போல, இந்த மக்களிடையே தலைமைகள் அரசியலில் வரமுடியவில்லை. காரணம் ஒரு தொழிற்சங்க தலைமை வந்து, இந்த மக்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக வந்து இருந்தால்தான் இவர்களுக்கு எங்களால் தலைவராக முடியும் என்று கூறிக்கொண்டு, கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் ஒரு சர்வாதிகாரத் தலைமை அந்த மக்களிடையே இருந்தது. இவற்றை எதிர்க்க முடியாது. ஏனென்றால் அறிவு ஜீவிகளோ அல்லது பல்கலை உயர்கல்வி பெற்று இருந்தவர்களும் கூட இவர்களை எதிர்க்க முடியாமல் தங்களின் பதவிகளையோ, தங்கள் கல்வித் தகுதியை(யோ)க் காப்பாற்றிக் கொள்ள இவர்களுக்கு எதிராகச் செயல்படாமல் தங்கள் தொழிலைச் செய்து கொண்டிருந்தார்கள். எழுத்தாலும்கூட எழுதினார்கள். ஆனால் அங்கம் வேறு ஆகாவிட்டாலும், கூட வடக்கு கிழக்கு மாகாணங்களிலே இருந்த பத்திரிக்கைகளோ அல்லது புத்தி ஜீவிகளாலோ, அறிவு ஜீவிகளாலோ, பல்கலைக்கழகங்களில் மதிக்கப்பட்டார்கள்.

          அதை அடித்தளமாகக் கொண்டு நாங்கள் அண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்னால் பேரா.சிவத்தம்பி ஆலேசனை வழிகாட்டுதலுடன் மலையகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஒன்று நடத்தினோம். அப்பொழுது நாங்கள் அதிலே கல்வி கலை இலக்கியம் எங்கள் நாட்டார் இயலைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தோம். அப்பொழுது கேலியாகப் பேசினார்கள். மலையகத் தமிழ் இலக்கியம்… கேலியாகப் பேசியவர்கள் யாருமில்லை. எங்கள் சகோதர வடக்கு கிழக்கு மக்களல்ல. நான் அந்த புத்தகத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே கொண்டுவந்து இங்குள்ள நிறுவனங்களுக்கு இலவசமாக கொடுத்தபொழுது தமிழ் ஆராய்ச்சி நிறுவனமே எங்களைக் கேலியாக மலையகத் தமிழ் ஆராய்ச்சி என்று ஒன்று இருக்கிறதா என்று கிண்டலாகக் கேட்டார்கள். இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் தஞ்சையிலே பிறந்த நடேசய்யர் அவர்கள் எத்தனை சாதனைகள் செய்தார்கள் நாங்கள் எப்பொழும் எங்கள் அண்டைநாடான இந்தியாவை உதாரணம்காட்டி நாங்கள் இந்த பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்று தான் சொல்கின்றபோது நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை இவர்கள் அவதானிக்கத் தவறிவிடுகிறார்கள் என்பதையும் கூறிக்கொண்டு நாங்கள் கடந்த காலங்களிலே என்ன செய்தோம் என்பதைவிட என்ன செய்கிறோம் என்பதைதான் அண்மையில் நடந்த “தமிழ்இனி” மகாநாடு எங்களுக்கு உணர்த்தியது அதன்படி நாங்கள் பாரதியையும் புதுமைப்பித்தனையும் தான் பேசிக்கொண்டு இருக்கிறோம். இதைபோல நாங்களும்தான் நீங்கள் மாத்திரமில்லை. எங்களிடையே இந்த நடேசஅய்யரையும் வேலுப்பிள்ளையும்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். 

           இனி வருகின்ற தலைமுறையில் விழிப்புணர்ச்சி பெற்று மாபெரும் படைப்பாளிகளை உருவாக்க தவறிவிடுகிறோமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. நான் சொன்னதைப்போல எங்களுடைய சிறுகதையாளர்கள், இளங்கவிஞர்கள் மிக அற்புதமாக வந்தார்கள் அவர்களில் ஒருவன் நான் பிறந்த நாட்டினிலே எனக்கு வழியில்லையே என்று சொல்லி சீறிமாசாஸ்திரி ஒப்பந்தத்தால் இங்கே வந்து குடியேறிய கவிஞன் வண்ணச்சிறகாக மாறி, கவிதைப் படைத்தான். இப்போது அவன் எங்கே இருக்கிறானோ தெரியவில்லை. இன்னொரு மிகப்பெரிய படைப்பாளி பன்னீர்செல்வம். திண்டுகல்லிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதற்குப்பிறகு 70 களிலே அல்லது 80களிலே அற்புதமாக வந்த ஒரு கவிஞன் சு.முரளிதரன் என்பவர். அவரது தியாக எந்திரங்கள் என்பது அந்த மக்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வந்தது. அந்த மக்களிடை எண்ணங்களை. அதே போல ஹைகூ கவிதை கூடைக்குள் தேசம் இந்த மக்கள் தங்கள் பறிக்கின்ற தேயிலையை அந்த கூடைக்குள் வைத்திருப்பதை அவன்படிமமாக- மிகச்சிறப்பாக கூடைக்குள்ளே தேசம் என்றுச் சொன்னான். பின்னர் அவன் எழுதி நூலாக வராவிட்டாலும் சஞ்சிகையில் வெளிவந்த தீவகத்து மனிதன் என்ற புதுக்கவிதை நெடுந்தொடர் பல உண்மைகளை வெளி உலகத்திற்குக் காட்டியது.

            இப்படி பலர் வந்துகொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் இப்பொழுதுதான் மலையக இலக்கியம் ஒரு தனித்துள்ள இலக்கியமென்று இலங்கை இலக்கியத்தில் மாத்திரமன்று@ சர்வதேச ரீதியாகவும் அது, உதாரணமாக புலம்பெயர்ந்து: சென்றவர்கள் விசேசமாக இங்கே நான் அதற்கு இந்த ஒரு சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்க வேண்டும். சுசீந்திரன் போன்றவர்கள், மு.நித்யானந்தன் போன்றவர்கள் நடேச அய்யரின் நூற்றாண்டு விழாவினை ஜெர்மனியில் நடத்திய பின்னர்தான் இலங்கையிலும் நடேசஅய்யரை அங்கீகரிக்க வேண்டிய சூழல் வந்தது. அதற்காக இன்று கிடைத்த இந்த சந்தர்ப்பத்திற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

நட்சத்திரன் செவ்விந்தியன்

 போரை ஒட்டிய சகல விடயங்களை ஈழத்தில் சிறுகதையும் கவிதையும் பதிவு செய்ததில் கவிதைதான் அதிகமாக பதிவுசெய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். கவிதை இன்று ஈழ தேசியத்தினுடைய மனசாட்சியினுடைய குரலாகவும் இருந்து வருகிறது.              

அதுல முக்கியமாக ஆக்டோபஸ் என்ற கவிதைகள் இந்த போர் யாருக்கானது? என்னத்துக்காக நடத்தப்படுகிறது? என்பதைப் பற்றி ஒரு சிவசேகரனுடைய சில கவிதைகள் ஒரு பக்கமும் சாராமல் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த போர் ரெண்டு வகையான போர் அல்லது மனித விடுதலைக்கான போரெண்டு பாக்கனும்.

              விடுதலைப்புலிகளின் போர் இலங்கை ராணுவத்தின் போர் அல்லது சிங்கள தேசியவாதத்தின் போர் அல்லது தமிழ் மக்களின் நலன்களுக்கான போர். இப்படி போருக்குள்ளே பலவகையான போர் இருக்குது. விடுதலைப்புலிகளின் ஆட்சிப் புலத்திலே இருக்கிற கவிஞர்கள் அந்த போர் என்னது? அந்த போரினால் நாங்கள் தீர்வு பெறலாமா? அல்லது போராட வேற வழிகளை போராட்ட வழிகளால் மேற்கொள்ள வேண்டுமா என்றில்லாமல் நடக்கின்ற போரை எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரிக்கிறார். ஆனால் நான் நினைக்கின்றேன் அது மிகப்பெரிய தவறு என்றும், இந்த போர் என்னத்துக்காக? யாருக்காக போரென்று மிகவும் உரத்துக்கேட்க வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறதென்று. 

            (வேற எதுவும்) விடுதலைப்புலிகள் நடத்திய போர் அது தமிழ் மக்களுக்கு விடுதலைக்காக நடத்தப்படுகிற போராகும் அல்லது பிரபாகரன் என்ற தனிமனிதனுடைய புகழுக்காக நடத்தப்படுகிற போரா என்பதையும் நாங்கள் கவிதைகளுக்கூடாக இந்த விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் விடுதலைப்புலிகள் நடத்துகிற போரைச்சொன்னால் பிரபாகரனைப்பற்றிச் சொன்னால் அது ஒரு மொழியில் ஒரு கவிதைக்குரிய மொழியில் சொன்னால் நான் சொல்வேன் பிரபாகரன் யுத்தத்திற்கு அடிமையானவர். அவருடைய தலைமுறை போர் நடக்கிறபோதுதான் நியாயப்படுத்தப்படும. போருக்கு வெளியில அவருக்கு எந்தவித பாத்திரமல்ல. ஆகவே இந்த போர் இது பிரபாகரனுடைய தனிப்பட்ட முறையில் நடத்தப்படினும் இந்த விடுதலைப்புலிகளுடைய கூட்டமைப்பு எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் மக்கள் தங்கள் உணர்வுகளுக்கு தக்கவொன்றாக இருக்கின்றதா? அல்லது பிரபாகரன் வழியிலதான் முழுத்தீர்மானம் எடுத்துக்கொள்கிறதா என்ற வகையிலெல்லாம் நாங்கள் இவற்றை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக நாங்கள் கலந்துரையாடலில் பேசுவோமென்று சொல்லிக்கொண்டு நான் இத்துடன் முடித்துக்கொள்கிறேன். வணக்கம்.

சுகுமாறன் 

           எல்லோருக்கும் வணக்கம். எனக்கு சிலவேளைகளில் பேசுகிற இங்கிதம் தவறிப்போவதால் அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். போருக்கு போர் அதாவது விடுதலை வேண்டி போராடுற நீங்கள் ஒரு குறிப்பிடுகிற இயக்கத்துக்குள் விடுதலை வேண்டுகின்ற இலக்கியங்கள் பெறவில்லை. அதை எனக்கு முதல் பேசியது சரியென்று சொன்னால் அந்த 35௪0 வயசு அவர்கள் கூட பாசிச நடவடிக்கைகள் தான் என்றுமே கணக்கிலெடுத்துக் கொள்ளப் படுவதில்லை. வரலாற்றில் பதியப்படுவது இல்லை. அதுக்கு நாங்களும் ஒரு காரணம். ஏனென்றால் இதில் இவ்வளவு நேரம் பேசியிருக்கின்றோம். புலம்பெயர்ந்த நாங்கள் சொல்கிறோம். அதனாலே பெற்ற நஷ்டங்கள் பற்றி எல்லாம் தலையடித்து குழறுகிறோம். ஆனால் எங்களால் அதாவது நாங்கள் அரசியல் ரீதியாக அதிகாரம் பெறாதநிலை ஒரு ஆயுதத் தளத்தைக் கொண்டு ஒரு முஸ்லீம் சமூகத்தை இரண்டு மணித்தியானத்துக்குள் 2000 ரூபா பணத்துடன் காதில் தோடு எதுவுமற்று யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியிருக்கிறோம்.

           இந்த மக்கள் யுத்தகளத்தில் இன்றும் அகதியாக வாழ்கிறார்கள். ஆனால் எங்களால் மேலைநாடுகளுக்குச் சென்று மிகவும் வசதியாக எனதுதாய் தந்தை என் கூடப்பிறந்தவர்களை அங்கு அழைத்து மிகவும் வசதியாக வாழ முடியும். ஆனால் இந்த மக்களுடைய பிரச்சனைகளை அது அந்தமக்கள்படுகிற துன்பங்களை கொழும்பிலிருந்து மிகவும் 3 மணித்தியானப்பிரயானம் செய்யக்கூடிய தூரம் புத்தளம். புத்தளத்தில் முஸ்லீம் மக்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய அவர்களுடைய பிரச்சனைகள் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லை. மிகவும் வேதனையோடு குறிப்பிடுவது என்னவென்றால் எங்களுடைய விடுதலை இயக்கங்களிலிருந்து முரண்பாடுகள் காரணமாக அதன் அராஜகத் தன்மையின் காரணமாக வெளியேறியவர்கள். இன்னும் மௌனம் சாதிக்கிறார்கள் ஏனென்று புரியவில்லை. ஏன் மௌனம் சாதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களுடைய அந்த அனுபவங்கள் அந்த நடவடிக்கைகள்  வெளிவரவில்லை. அப்போதுதான் உண்மையான விடுதலையை நம்மக்கள் சேர்ந்து… (எந்த இடத்துலவிட்டேன் மறந்து போயிடுச்சு) அப்படியாக உள்முரண்பாடு காரணமாக வெளியில் வந்து ஆக்கப்பூர்வமான இலக்கியப் படைப்புகளை படைப்பதே இல்லை. ஏதோ ஒன்றிரண்டு ஒருசில பேர் அந்த உள் முரண்பாடுகளால் நடந்த விடுதலைக்கான அந்த உச்சத்தின் பாதிப்புகள் சம்பந்தமாக சில பேர் எழுதுகிறார்கள். அது சரிதானா? இல்லை அதற்கான களம் அப்படி அமைகிறதா என்பது கேள்விக்குறி. இலங்கையில் வெளிவருகிற விடுதலைக்கு அல்லது விடுதலை என்று சொல்லப்படுகின்ற இலக்கியத்துக்கு மாற்றாக உண்மையான விடுதலையா என்ற கேள்வியோடு வருகின்ற இலக்கிய படைப்புகளுக்கு அங்கீகரிக்கின்ற வெகுஜனத் தொடர்பு ஊடகங்கள் எவ்வாறு களம் அமைத்து கொடுக்கிறது என்றெல்லாம் கேள்வி.

          மற்றது நண்பரொருவர் சொன்னார். எனக்கு கொழும்பிலே இருக்கையில் பிரச்சனையாயிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு இப்போது சிப் தான் ஓடுகிறது(கப்பல்). அந்த கப்பலில் வந்து யாழ்ப்பாணத்திலிருந்து வருவதற்கு கொழும்புக்கு 10 ஆயிரம் பேர் தவிக்கின்றார்கள். ஒரு கப்பலில் 300 பேர்தான் வரலாம். 10 ஆயிரம் பேர் வர அங்கிருந்து சீட் கிடைப்பதில்லை. ஆனால் இங்கிருந்து போவதற்கு யாழ்ப்பாணம் போவதற்கு டிக்கெட் கிடைக்கிறது. இது என்னத்தைக் காட்டுகிறது. மற்றது துணை இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது அங்கிருந்த முழுமக்களுமே வன்னிக்கு நகர்த்தப்பட்டிருந்தார்கள். ஆனால் ஓராண்டு இப்போரால் இலங்கை ராணுவம் நிலைகொண்ட அந்த யாழ்ப்பாணத்திற்குள் மக்கள் வந்துவிட்டார்கள். அதாவது புலிகளுடைய கட்டுப்பாட்டில் இருந்து, புலிகளினுடைய கட்டளையை மீறி அவர் வந்திருக்கிறார். இதெல்லாம் என்னத்தைக் காட்டுகிறது என்பதை (நீங்கள்) உங்களுக்கு புரியாது.நீங்கள் தேடி அதனை அறிந்து கொள்வது நன்று என்று கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.       

செல்வம் அருளானந்தம்

             அனைவருக்கும் வணக்கம். நான் இங்கே வந்தது ஆட்களை பாக்கறதுக்கும் கேட்கறத்துக்கும் மாத்திரம் தான். பேசுவதற்கென்றே நான் சென்னைக்கு வரவில்லை. என்ற கவிதையிலே, கோட்டை முனியப்பன் கோயிலில் பார்த்தவனை பார்த்து சில காலம் ஆச்சுது. வில்வரெத்தினத்தோடு கவிதைகளையெல்லாம் பாத்து எவ்வளவு காலம் ஆச்சு? இப்படி ஒரு சூழ்நிலையில் வந்தால் அவரையெல்லாம் பார்க்கலாம் என்று வந்தது. வெக்கையிலும் வேர்வையிலும் பெரிசாக பார்க்கவும் முடியவில்லை. கதைக்கவும் முடியவில்லை.

             என்னுடைய பணி இந்த இலக்கியத்துல நான் பெரிய ஆக்க இலக்கியக் காரனில்ல. இந்த புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்பது கனடிய தமிழ் இலக்கியம் ஆக்க வேண்டுமென்ற அந்த அடிப்படையிலேதான் என்னுடைய உரைகள் இருக்கின்றன. ஆனால் அது  இன்றுவரை தமிழ் தெரியாமல் புதிய பரம்பரையே தோன்றினாலும் இன்றுவரை அது புலம்பெயர் இலக்கியமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.

        இன்றைக்குக்கூட செழியனால விஞ்சியிருப்பது கரிதுண்டுகளாயினும் எழுதிய முடிப்போம் என்று சொல்லி 13 வருடங்களுக்குப் பிறகும் இலங்கையை நினைத்து கவிதை எழுதுபவர்களாக கட்டுரை எழுதுபவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இனி அது கனடிய தமிழ் இலக்கியமாக மாறவேண்டுமென்று என்ற நம்பிக்கையுடன் தமிழில் கூட எழுதாட்டாகூட, என்னுடைய மகன் தமிழில் எழுதப்போவதில்ல. ஆங்கிலத்தில் எழுதினாலும் அது கனடாவின் தமிழ் இலக்கியமாகத்தான் கணிக்கப்பட போகின்றது. அந்த அடிப்படையிலதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். 

            இரண்டு லட்சம் பேர் இருக்கிறோம் என்ன நடந்தாலும் 10000 பேர்கூட திரும்பி ஈழத்திற்கு வருவார்கள் என்ற நம்பிக்கை அப்படி யாரும் சொன்னால் முடியாதிருக்கும். இப்படித்தான் பிரான்சிலும் ஜெர்மனியிலும். பிரான்சு தமிழ்இலக்கியம் ஜெர்மன் தமிழிலக்கியம் என்றுமாய்தான் மாறவேண்டுமென்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். அது தமிழுக்கு வளம் சேர்க்கும. இந்த புலம்பெயர் இலக்கியம் என்பது அங்க ஒன்னும் பெருசா நடக்கயில்ல. பாரதிதாசன் சொன்னமாதிரி அப்படி இங்க இருக்கிறது தான்       அங்கு நடந்து கொண்டிருக்கிறது. அந்த வாழ்க்கையை பதிவுசெய்து இலக்கியங்களும் அங்க பெரிசாக வர இல்ல. சமூக நிலைமைகள பார்வதி சொன்னா ஏறத்தாழ அந்த கருத்துக்கள் எனக்கு உடன்பாடானது. சிலதுகளை நீட்டலாம். சிலதுகளை குறைச்சுக்கலாம்.

            நிறவெறியைப் பற்றி சொன்னால் அது பெரிசா எங்கள பாதிக்கல்ல. யாழ்ப்பாணத்தில ஒரு வெள்ளாளன், பறையனுக்கு குடுக்குற மரியாதையைவிட ஒரு வெள்ளையன் எங்களுக்குண்டான மரியாதையைத் தருகிறான். இப்ப அதெல்லாம் இலக்கியங்களில் சில வேளை உயர்ந்த இடங்களில் இதுகளிருக்கலாம் . சாதாரண இடத்துல போன நாங்கள் அவைகள்ல சில மாறுபாடுகள் இருக்கலாம். ஒரு யாழ்ப்பாணத்துல கூட இந்த யுத்தம் சில நிலைமைகளை மாற்றியிருக்கு. கனடாவில ஒரு இருபது வருசத்துக்கு தலைவாழை இலைபோட்டு சாப்புடுற தன்மையோடதான் இருக்கின்றோம். ஒரு சின்ன உதாரணம் சொல்லுகின்றேன். இந்த தலைமுறையில் ஆரும் கல்யாணம் காதலிச்சு கட்டியது கிடையாது. பேசி, சாதிபார்த்து சமயம் பார்த்துதான் நடக்குது. ஆனால் இது எங்கட பிள்ளைகள்ல தலைமுறைல நடக்கப் போறதில்ல. அதுகளுக்கு அதச் சொல்லி புரிய முடியாது. ஒரு பெரிய சிக்கலான நிலைமை இருக்கு. தமிழப் புத்தகம் இங்கேருந்து தான் வருது. “உ”னா “ரி”னா “உரி”யென்று என்னன்னு காட்றதுக்கு அங்க ஒன்றும் இருக்காது. அப்ப, ஒரு நீளமான கலந்துரையாடல்ல சந்தர்ப்பம் கிடைச்சா கதைக்கலாம். வணக்கம்.

சாரல்நாடன்

           தாய்நாட்டைவிட்டு 17 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த தமிழர்களின் தாயக நினைப்பு கவிதைகளை நாங்கள் தொடர்ந்து வாசித்திருக்கிறோம். தாயக நினைப்பு இந்தியாவிலிருந்து திரும்பிச் சென்ற லட்சக்கணக்கான மக்களைப்பற்றி பாரதி பாடுகின்றபோது அவர்கள் இனிப்போய் தாய்நாட்டை காண்பார்களோ? என்ற ஏக்கத்தோடு பாடியதாக சொல்லியிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரையில் 5 லட்சம் மக்களை இலங்கை இந்திய அரசின் ஒப்பந்தத்தால் நாடு கடத்தியபோது எந்த நாளினி போய்க் காண்பேன்? சென்று வருகிறேன் ஜென்ம பூமியே என்று இலங்கை தாயகத்துக்கு இன்று இப்பொழுது எப்படி இருக்கிறான் என்பதே தெரியாது. ஏனென்றால் அங்கிருந்து வந்த லட்சக்கணக்கான மக்களை, இங்குள்ள மலைப்பிரதேசங்களில் குன்னூரிலும் நீலகிரியிலும் கோத்தகிரியிலும் குடியேற்றி அவர்களின் பலத்தை உடைத்து எறிந்த இந்த நாட்டிலே அவர்களது இந்திய மக்களாக இலங்கையில இருக்கிற மற்ற மக்கள் நாலாந்தம் துன்பங்களையும் துயரங்களையும் சுமந்து கொண்டுதான் வாழுகிறோம். போர்ச்சூழல் எங்களுக்கு இல்லாவிட்டாலும் போர்ச்சூழலினால் ஏற்படுகின்ற அனர்த்தங்கள் எங்களை நுவருலியாவிலிருந்து வந்தால் வருகிற வழியிலே அடையாள அட்டைச்சோதனை வருகிற வழியிலே கொழும்பிலே தாங்கமுடியாமல் அதே இரவில் திரும்பவும் மலைநாட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. இந்தச் சூழல் போர்க்காலச்சூழலில் அனுபவிக்கிற அதே அனர்த்தனங்களையும் எண்ணங்களையும் எங்களிடையே ஏற்படுத்துகின்றன. அதனால்தான் எல்லைத்தாண்டா அகதிகள் என்றும் குருவிமலை என்றும் எங்களைப்பற்றி எங்கள் நாவல்கள் பேசுகின்றன. வடபுலத்து மக்கள் இந்த நாட்டில் அகதிகளாக வாழ்கின்ற கொடுமை தாளாது - இந்த வாழ்க்கையை ஐரோப்பியக் கண்டங்களிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மலைநாட்டிலே வாழுகின்ற, பூமியிலே அகதிகளாக வாழ்கின்ற நாங்கள் அகதி வாழ்க்கையே வாழ வேண்டிய நிலையில் இருக்கின்றோம். 

           இதுபோன்ற வாழ்வை முடித்துவிட்டு இனி புதியதோர் வாழ்க்கைக்கு எங்களை தயார் செய்து கொள்ள வேண்டிய நிலையிலே இருக்கிறோம் என்பதனால்தான் இனி இப்படி ஒரு துயரை படமாட்டோம் என்று அவர் சொன்னார். இன்று வாழுகிற இளம் சந்ததியினர் அந்த நினைப்பிலேதான் வாழுகிறார்கள் என்று எண்ணுகிறேன். ஆகவே ஒரு புதிய சரித்திரம் பிறக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வணக்கம்.

            நண்பர்கள் அதிகமாக பேசிவிட்ட காரணத்தினாலோ போரும் இலக்கியமும் பற்றி பேசுகிறபோது நம்மைப்பத்தி பேசுவதாக இருப்பதால் அது எவ்வளவு தூரம் முடியுமென்பது எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் இதுபற்றி சிந்திக்கிறபோதே இந்த போராட்டத்தினுடைய ஒரு நெருக்கடிமிக்க கால கட்டத்தினிடையே வாழ்ந்து வந்த தலைமுறையைச் சார்ந்தவர். அதனால் அதனுடைய அழுத்தங்களும் துயரங்களும் சுமைகளும் கண்ணெதிரே கண்டு வந்தவர். இதனை சமகாலத்தில் என்னோடு வாழ்ந்திருக்கக்கூடிய படைப்பாளிகள் எவ்வாறு இலக்கியத்தில் படைத்திருக்கிறார்கள் என்பதையும் நன்கு அறிந்தவன் ஏனென்றால் போரும் இலக்கியமும் என்ற ஒரு தலைப்பாக இருக்கின்ற காரணத்தினால் நான் அது பற்றிய வட்டத்துக்குள்ளேயே எனது கருத்துக்கள் சிலவற்றைக்கூற முற்படுகிறேன்.

             இந்தப் போரினுடைய பல்வேறு பரிமாணங்களையும் அது எத்தகைய இலக்கிய படைப்புகளாயிருந்தாலும் சரி அல்லது நிகழ்த்துவடிவங்களாய் இருந்தாலும் சரி அதற்குத் தகுதி செய்யப்பட்டுத்தான் வந்திருக்கின்றன. அதேநேரம் இந்த போராட்டத்தினால் ஏற்பட்டிருக்கக்கூடிய பல்வேறு விளைவுகள் அதுதொடர்பான கேள்விகள் கருத்தியல் சிக்கல்கள் கூட எமது இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அல்லது பதிவு செய்ய காத்திருக்கின்றன.

              1981 லே பாவம் மக்கள் என்று சொல்லி ஒரு கவிதைத் தொகுதி வெளிவந்தது. பாவம்மக்கள் என்று தலைப்பிட்டு ஒரு கவிதைத் தொகுதி வருகின்றபோது அது ஒரு போராட்டத்தினுடைய வெளிப்பாட்டை ஒரு படைப்பு எவ்வாறு எதிர்கொண்டது என்பதற்கான ஒரு சாட்சி. இதைப்போல் 81க்குப் பிறகு போராட்டம் தொடர்பாக அது எத்தகைய நம்பிக்கைகள் கொடுத்ததோ அதே அளவுக்கு நம்பிக்கையின்மையும் படிப்படியாக தரக்கூடிய சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு படைப்பாளிகளும் அது ஏதோ ஒரு விதத்தில் ஒரு கருத்தியல் சார்ந்த அது எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் வருகின்றது. அதுக்காக அவர் தனது படைப்புகளில் ஒரு தத்துவார்த்த ஒரு அரசியல் சார்ந்த உரையாடலைக்கூட அவன் தன்னுடைய எழுத்துக்களில் வடித்துச் சென்றிருக்கின்றான். இதற்கு நான் பல்வேறுபட்ட படைப்புக்களை இங்கு சொல்லமுடியும்.

             அது கவிதையாக இருக்கலாம். சிறுகதையாக இருக்கலாம். ஏன் சொல்லுகிறேன் என்று சொன்னால் போராட்டம் என்பதை ஒரு ஒற்றைப் பரிணாமத்தில் நாம் விரும்புகின்றதைவிட போராட்டத்தினுடைய பல பரிமாணாங்களை ஒரு விடியலையும் விரிவடைந்த நோக்கில் எவ்வாறு எனது சமூகம் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான முழு சாத்தியங்களும் எமது படைப்புகளில் இருக்கின்றன. அதே நேரம் பல மௌனங்களும் இல்லாமல் இல்லை.

             ஒவ்வொரு படைப்பாளியினுடைய தார்மீகம் அது எதிர்கொள்ளக்கூடிய நோக்கினுக்குரிய நம்பிக்கை அல்லது எதிர்கொள்ளக்கூடிய வலு இதைச் சார்ந்த வடிவமாக இருக்கின்றன. ஆனால் சாத்தியமான அளவு அதை ஏதோ சாத்தியப்பட்டவகையில் பதிவு செய்கிறார்கள். போராட்ட களத்திலிருக்கக் கூடியவர்கள் இன்னொரு தளத்தில் தங்களுடைய அனுபவங்களை பதிவு செய்கிறார்கள். போராட்ட களத்திலிருக்கக்கூடியவர்கள் இன்னொரு தளத்தில் தங்களுடைய அனுபவங்களை பதிவு செய்கிறார்கள். போராட்டத்திற்கு வெளியிலிருந்து அகதிகளாகப் புலம் பெயர்ந்தவர்கள் இன்னொரு தளத்தில் அதைப் பதிவு செய்கிறார்கள். ஆக ஈழத்தினுடைய போரும் இலக்கியமும் என்பது ஒரு பல பரிமாணத் தன்மைகளில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன, பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பதிவு செய்யக் காத்திருக்கின்றன. ஆனால் ஒரு மனித விடுதலையுனுடைய விரிதளங்கள் என்பதை மட்டும் அனைத்து கட்டுத்தளைகளிலிருந்தும் விடுவிக்க வேணடுமென்ற உந்துதல் ஒவ்வொரு கலைஞனிடமும் படைப்பாளிகளிடமும் இருக்கின்றது. அதற்கான துறைகள் எழுத்தில் படைப்பில் பல நிகழ்வுகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற கருத்தைக்கூறி நான் நேரத்தே கலைந்து செல்ல இருக்கின்றேன்.

கவிஞர் சேரன் 

பேரா.சிவத்தம்பி அவர்களே! பேரா.அரசு அவர்களே! ஈழத்து மக்களினுடைய அஅவலங்களையும் போராட்டங்களையும் வாழ்க்கையையும் மிகுந்த அக்கறையுடன் செவிமடுத்து வந்திருக்கின்ற கவிஞர்களே இலக்கியவாதிகளே! நண்பர்களே! அன்பர்களே!

             கடைசிக்கவிதையில் ஒரு கவிஞர் சொன்னது கொஞ்சம். ஆனால் சொல்லாமல் விட்டது அதிகமென்று சொல்வார்கள். அதுபோல ஒரு கடைசிப் பேச்சாளருக்கு சொல்ல வேண்டியது மிக அதிகமாக இருக்கும்.ஆனால் சொல்ல முடிவது மிகவும் கொஞ்சமாகத்தான் இருக்கும். கடந்த பல வருடங்களாக ஈழத்து மக்களுடைய போராட்டங்களைப்பற்றியும் யுத்த அனுபவங்களைப்பற்றியும் சர்வதேச செய்தி ஊடகங்களும் குறிப்பாக இந்திய செய்தி ஊடகங்களும் தருகின்ற செய்திகளை வைத்து பார்க்கிற பொழுது ஈழத்துத்தமிழர்களைப் பற்றிய இரண்டு துருவ நிலைமட்ட ஒரு படிமம்தான் எமக்கு எழுகிறது. 1.ஈழத்து தமிழர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என்பது 2. ஈழத்து தமிழர்கள் மிகுந்த வீரம்கொண்டு போராடுபவர்கள் வீரப்போராளிகள். இந்த இரண்டு துருவங்களுக்கும் நடுவில் ஏராளமான பன்முகப்பட்ட அனுபவங்களும் சிந்தனைகளும் கருத்து மோதல்களும் இலக்கிய வெளிப்பாடுகளையும் பற்றி இதற்கு முன்பு பேசிய நண்பர்கள் பேசினார்கள். இந்த பன்முகப்பாடமும் இந்த பன்முக அனுபவங்களும் இந்திய தமிழுக்கும் இந்திய மக்களுக்கும் சென்றடைய வேண்டுமான ஒரு முக்கியத்தேவை எங்கள் முன்னால் இருக்கிறது.

               ஈழத்துக் கவிதை ஒன்றை வங்காள மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டபோது அதனுடைய தாக்கத்தைப் பார்த்த “சமீ சௌத்ரி" என்ற ஒரு இலக்கிய அறிஞரும், வங்காளக் கவிஞரும் குறிப்பிட்ட ஈழத்து மக்களுடைய இந்த அவலங்களையும் துயரங்களையும் பற்றி நீங்கள் பத்தி பத்தியாக கட்டுரைகளை பிரசுரிப்பதைவிட ஈழத்துக் கவிதைகளை நீங்கள் அனைத்தும் இந்திய மொழிகளிலும் மொழி பெயருங்கள் அவை இந்த அரசியல்வாதிகளும் ஏனையோரும் செய்ய வேண்டியனவற்றை மிக இலகுவாக செய்யுமென்று.

               இந்த “சமீ சௌத்ரி" என்பவர்தான் 60-களில் “ஹாங்கிரி ஜெனரேசன்" பசித்தோர் தலைமுறை என்றவொரு தலித் இயக்கத்தினுடைய மூலவேந்தராக இருந்தார். இந்த 60-களுக்கு பின்னால் ஈழத்துத் தலைமுறை தேசியவாதத்தின் குழந்தைகளென்று அழைக்கப்படுகிறது. அந்த தேசியவாதத்தின் குழந்தைகளாகத் தான் பெரும்பாலான ஈழத்து இலக்கியவாதிகளும் கவிஞர்களும் இருக்கிறார்கள் என்ற கருத்து முன்னுரைக்கப்படுகிறது. அதில் உண்மையும் இருக்கிறது. ஆனால் என்னுடைய தலைமுறையில் என்னோடு சேர்ந்து எழுதக்கூடிய இனி வருகின்ற இந்த இலக்கிய தலைமுறை நிச்சயமாகவே தேசியத்தினுடைய குழந்தை மட்டுமல்ல. மார்க்சியத்திற்கும் தேசியத்திற்கும் இடையேயான மிகுந்த கடினமான மிகுந்த சிக்கலான விளைவாக உருவாகிய ஒரு தலைமுறை. இது வெறும் தேசியம் மட்டுமல்ல. தேசிய என்ற அந்த இணைப்பான ஒரு முக்கியமான கருத்து நிலைக்கும். அந்த கருத்து நிலையை அனுபவமாக நடைமுறைபடுத்தியமையின் குறியீடாகத்தான் எங்களுடைய கவிதைகள் 80களில் மீறலும் என்று கருதுகிறேன்.

              “போரும் யுத்தமும்" என்று பேசுகிறபொழுது, இந்த போர் அனுபவங்களிலும், இந்த போரும் எவ்வளவு தூரம் வேறு வேறுபட்ட பிரதேசங்களிலும், வித்தியாசமான முறையில் உள்வாங்கப்படுகின்றன. வித்தியாசமான முறையில் அவை வெளிப்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி கவனத்தில் எடுப்பது மிகவும் முக்கியமென்று நான் கருதுகிறேன். ஏனென்றால் தமிழக மக்களும் கிழக்கு மாகாணத்து  முஸ்லீம் மக்களும் அல்லது வடபுலத்திலிருந்து விரட்டியக்கப்பட்டப் பட்ட முஸ்லீம் மக்கள் அல்லது பெண்களும் அகதிகளும் இந்த போரைப் பற்றியும், இந்த போர் தொடர்பான தங்களது அனுபங்களை வெளிப்படுத்துவது பற்றியும் மிகுந்த பயங்கரமான வேறுபாடுகளும், அனுபவச்சிக்கல்களும் உள்ளன. இந்த “டயஸ்பொரா" என்பதைப் பற்றிய ஒரு சில வார்த்தைகள் குறிப்பிடவேண்டியிருக்கிறது. டயஸ்பொரா என்பது சிதறுண்ட சமூகம் அல்லது புகலிடச் சமூகம் என்று நாங்கள் எடுத்துக்கொண்டால் இந்த புகலிடச் சமூகத்தினின்றும் இந்த அனுபவங்கள் வெளிப்படுத்துவதில் தான் சார்ந்து, வர்க்கம் சார்ந்து, அவரது சலுகைகள் சார்ந்து பல்வேறுபட்ட சார்புகள் இருக்கின்றன. இவற்றை நாங்கள் இரண்டாக பார்ப்பது மிகவும் சிரமம். இதுவொரு மிக முக்கியமான சிக்கலாக பிரச்சனையாக இருக்கிறது. இதுவரை காலவுமான இந்த “டயஸ்பொரா" ஸ்டெடிஸ்  இந்த புலம் பெயர்ந்தோர் பற்றிய ஆய்வுகள், அகதிகளைப் பற்றிய ஆய்வுகள் பெருமளவுக்கு ஆழ்நிலைப்பட்ட ஆய்வுகளாகவும், தங்களுடைய புலம்பெயர்ந்த ஆட்களுடைய புலம் பெயர்ந்த அனுபங்களுடைய முன் வைப்பாகதான் இருந்திருக்கின்றன. அண்மைக் காலங்களாகத்தான் இந்த அனுபங்கள் மாறிக்கொண்டு வருகின்றன. இவை பற்றிய கருத்துகளும் இலக்கிய படைப்புகளிலும் தெளிவாக மெல்ல மெல்ல வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றன்.

             போரினுடைய மறுபக்கம் நிச்சயமாக அகதி வாழ்வுதான். அது தவிர்க்க முடியாமல் எல்லா சந்தர்ப்பங்களிலும் இருந்திருக்கிறது. இந்த போரினுடைய மறுபக்கமான அகதி வாழ்வையும் புலம் பெயர்வையும் ஈழத்துக்கவிதைகள் மிகத் தெளிவாகப் பிரதிப்பலிக்கின்றன. அதே நேரம் ஒரு முக்கியமான விசயம் என்று நான் கருதுகிறேன் என்று சொன்னால் (போரும் காதலும்) வீரமும் காதலும் தான் தமிழர்களுடைய சிந்தனையினது பண்பாட்டினுடைய அடிபடையான கூறுகள் என்று சங்க இலக்கியத்திலிருந்து நாங்கள் வாதிடக்கூடும். அந்த அனுபவங்களில் உண்மை இருக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் பார்த்தீர்கள் என்று சொன்னால் “போரும் காதலும் வெளிப்படுத்தப்படுகிற அதே நேரம், போரும் அகதி வாழ்வும் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த பன்முகப்பாடுதான் ஈழத்துக்கவிதை, தமிழ்கவிதைக்கு கொண்டுவந்து சேர்த்த மிக முக்கியமான பங்களிப்பு என்று நான் கருதுகிறேன். போர் பற்றியும், போரினுடைய அனுபவங்கள் பற்றியும் கவிஞனென்ற முறையில் என்னுடைய அனுபவங்களும் என்னுடைய வெளிப்பாடு என்ன? “யுத்தம் பற்றிய ஒரு மிகச்சுருக்கமான அறிமுகம்" என்ற சிறுகவிதையில் இப்படிச் சொல்கிறேன்.

“நீங்கள் ஒடுக்குபவர்களானால்

அது குருதியின் கண்ணீர்.

நீங்கள் ஒடுக்கப்பவர்களானால்

அது கண்ணீரின் குருதி.

ஒரு தரமான இலக்கியம் கவிஞர்களுடைய பங்கு, கவிஞர்களுடைய குரல் பற்றி என்னுடைய கருத்து என்னவென்றால் மனிதம் உருவழிகையில், சயனத்திரையகற்றி நிஷ்டை கூடுதல் கவிஞனுக்கு அப்பட்டது. மனிதம் உருவழிகையில் (அதே) பேசுகிற கவிஞன் ஒரு கண்ணிவெடி. பேசாதவன் பிறகு பிரளயமாவான.

  மாநாட்டுக்காக வந்திருந்த ஈழப்புலம் பெயர் எழுத்தாளர்களும், ஈழத்து எழுத்தாளர்களும் தங்களுடைய மனப்பதிவுகளை எடுத்துக் கூறினார்கள்.இதில் இங்கிருந்த, கேட்பவர்களுடைய மனப்பதிவுகள் அவர்களுடைய கருத்துக்களும் முக்கியமாகின்றது என்று கருதுகிறேன். இப்பொழுது நேரம் 5க்கு 10நிமிசம் இருக்கிறது. நாங்கள் எந்த வழியில் செல்கிறோம் என்பதைப் பொறுத்து 5 மணிக்கு படாமல் எங்களுடைய கலந்துரையாடலை வைத்துக் கொள்ளலாம் என்று கருதுகிறேன்.

அந்த கலந்துரையாடலுக்கு முன்னர் ஒரு நிமிட நேரம் வந்தால் நாங்கள் தொகுத்துப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பும் இருக்கும் என்று கூறி இப்பொழுது நண்பர்களை இந்த பேசபட்ட விடயங்கள் சம்பந்தமாகவும், போரும் இலக்கியமும் சம்பந்தமாகவும் அலசப்பட வேண்டிய பிரச்சினைகளை அல்லது கேட்கப்பட வேண்டியவற்றைக் கேட்குமாறு நாம் கேட்கின்ற அதே வளையில் தயவுசெய்து கூட்டத்தில் பேசுபவர்கள் 5 நிமிடத்திற்கு மேலே பேசாமல் இருப்பின் அது ஒரு ஜனநாயக முறைப்பட்ட தீர்மானமாக இருக்கும். ஏனென்றால் ஒருவர் 10 நிமிடம், 15 நிமிடம் எடுத்து விட்டால் நிச்சயமாக கூட்டம் முடியப்போவது 5 மணி என்பது நிச்சயம். எனவே தயவு செய்து இந்த கருத்தரங்கில் இந்த கலந்துரையாடலை சுவாரசியமான விசயமாக ஆக்கித் தருமாறு மிக்க பணிவன்போடு வேண்டுகிறேன். அன்பர்கள் பேசலாம்.

பேரா.அரசு

              உண்மையில் இந்த அமைப்பை கலந்துரையாடுவதற்கென்று ஏற்பாடு செய்தோம். இந்த இடவசதி இன்மையாலும் வட்டமாக உட்கார்ந்து பேசக்கூடிய வாய்ப்பு இல்லாததனாலும் இப்படி நாங்கள் ஒவ்வொருத்தரை பேசவிட்டு இப்படிப் பேசுவதென்று திட்டமில்லை. ஆனால் இங்கே இருக்கக் கூடிய இந்த இடச்சூழல் வாய்ப்பளிக்கவில்லை. அதனால்தான் சிலபேரை பேசிக்கொள்ளவிட்டு பிறகு கேட்கிறோம். குறிப்பாக எங்கள் மாணவர்களில் ஈழத்து இலக்கியத்தைப் படித்தவர்கள் அந்த இலக்கியத்தை கட்டமைத்த வில்வரத்தினத்திலிருந்து சேரன் போன்றவர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு ரொம்பவும் அரியது. அவர்கள் இங்கு வருவது என்பதும் திருப்பி சந்திப்பது என்பதும் நமக்கு இயலாத ஒன்று. எனவே இந்த வாய்ப்பைத் நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று வேண்டுகிறேன். 

பா.செயப்பிரகாசம்

 

             என்னுடைய பெயர் பா.செயப்பிரகாசம். சூரியதீபன் என்ற பெயரிலும் எழுதுவதுண்டு. இங்கே பேச்சுக்களில் கேள்வி எழுப்புவற்காக நான் வரவில்லை. எங்களுக்குள்ளாக சில கேள்விகளை எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதலில் ஈழத்திலே நடைபெறுகிற போர் தமிழகத்திலே என்ன வகையான பாதிப்புகளை உருவாக்கியிருக்கிறது. அரசியல் ரீதியாக என்று பார்க்கிறபோது, அது இங்கேயும் ஒரு தனிநாடு கோரலாக மாறிவிடுமோ என்கிற அச்சம் இந்த இந்தியாயினுடைய முந்தானையைப் பிடித்துக்கொண்டு அழுகிற குழந்தை என்று சொல்லுகிறவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அந்த இலக்கியம் எங்கள் மத்தியிலே தேசிய இனத்தினுடைய குரலை தோற்றுவித்துவிடுமோ என்ற அச்சமும் இங்கே இருப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனுடைய விளைவாக ஒரு போக்கை நாம் பார்க்க முடியும். அது கடந்த காலங்களிலிருந்து கூட இங்கே நிலை கொண்டிருக்கிறது என்பதை நான் தெரிவிப்பதற்காக வந்திருக்கிறேன்.

 

            பாரதிக்கு பன்முகத்தன்மை உண்டு. ஆனால் தாசனுக்கு அது இல்லை என்று இலக்கிய விமர்சகர்கள் உரையாடுகின்றனர். பாரதி இந்திய வேதாந்த மரபு, இந்துத்துவ மரபு, சிந்தாந்த மரபு, பக்தி என்று இப்படி பல்வேறு வகையான பார்வைகளை பாரதி கொண்டிருந்தான். அவைகளிலே நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் இவைகளிலிருந்தெல்லாம் சளித்தெடுத்து பாரதிதாசன் தன்னுடைய பகுத்தறிவு பூர்வமான பார்வைகளை வைத்தான். அவனுடைய குரல் ஒற்றைக்குரலல்ல அதுவும் பன்முகக்குரல்.

             தமிழ்த் தேசிய இனத்தின் குரலாக பாரதிதாசன் குரல் ஒலித்தது. அவனுடைய படிமங்கள், குறியீடுகள் இவையெல்லாம் சில நேரங்களில் பாரதியை விஞ்சியிப்பதை நாம் காணமுடிகிறது. ஆனால் எல்லோருமே இடதுசாரிகள் உட்பட பாரதியைவிட பாரதிதாசனை ஒருபடி கீழேதான் வைத்துக் கொண்டு வந்துள்ளார்கள் இவ்வளவு காலமாக. எனவே உங்களிலிருந்து நாங்கள் பொற்றுக்கொள்ளுகிற இந்த ஒரு கருத்து.

             இன்றைக்கு தமிழ்த்தேசிய குரலை நாம் உச்சமாக ஒலிக்க வேண்டியிருக்கிறது. இந்திய இலக்கியங்கிலே ஒன்று. அடிப்படை மக்களுடைய குரலாக அது ஒலிக்க வேண்டும் என்று காணமுடிகிறது. இன்குலாப்பை அடையாளம் காணவேண்டும். அறிவுமதியை அடையாளம் காணவேண்டும். ஏனென்றால் ஒரு திட்டவட்டமாக ஒரு விருப்பத்துடன் செயல்படுகிற இலக்கியப்போக்கு என்பது இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக மணிக்கொடி காலத்திலிருந்து, அதை அரசு அவர்கள் திராவிட இலக்கியம் பேசுகிற போது மிகத் தெளிவாகவே குறிப்பிட்டார்கள். எனவே, இந்த வகையான போக்குகளை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உங்களிடமிருந்து உங்களுடைய மொழியிலேயே சொல்வதனால் மிகக் காத்திரமான படிப்பினைகள் என்று சிலவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

எப்படி போரும், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் நீங்கள் காத்திரமான இலக்கியமாக ஆக்கிக்கொண்டிருக்கிறீர்களா அதைப்போல் இங்கே இருக்கிற பிரச்சனைகள் தலித்துகளுடைய பிரச்சனைகளை, பெண்களுடைய பிரச்சனைகளை இங்கே உறவுச்சிக்கல்கள், இவைகளையெல்லாம் கூட எப்படி சிறப்பான படைப்புளாக ஆக்குவது என்பதை படைப்பாளிகள் என்ற அளவிலே, நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. காலமும் சூழலும் உங்களுக்கு எப்படி சிறந்த இலக்கிய வடிவங்களைத் தந்திருக்கிறதோ, அதைப் போல இங்கே நிலவுகிற காலமும் சூழலும் எங்களிடம் அந்த படிப்பினைகளை கொண்டு வந்து சேர்க்கும் என்று நான் கருதுகிறேன். பேசுகிறபோது ஆன்டனி ஜீவா அவர்கள் குறிப்பிட்டார்கள். மற்றவர்களும் குறிப்பிட்டார்கள். போரைப்பற்றி எழுதிய வண்ணச்சிறகு, இப்போது நீலகிரி, மலையிலேதான் வாழுகிறார். அவர் அங்கே இருக்கிற தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலேதான் அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறா. 

கண்ணன (இதழாளர்)

             என்னோட பேர் கண்ணன். பத்திரிக்கையாளராக இருக்கிறேன். இங்கே புலம் பெயர்ந்த தமிழர்கள் வந்து போரும் இலக்கியமும் அந்த நாட்டுல அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் ஊடாக எழுந்த இலக்கியத்தை பேசினாங்க.

             கடந்த 15௨0 ஆண்டுகளாக தமிழ்நாட்ல இலங்கைப் பிரச்சனை தொடர்பாக நிறைய அகதிகள் வர்றாங்க. நம்மோட இரண்டறக் கலந்தும் அங்கே வாழ்ந்துகிட்டிருக்காங்க. அவங்க சந்தித்த பிரச்சனைகள் இது இங்கே வந்து இங்கே இருக்கிற படைப்பாளிகளால் எவ்வளவு தூரத்துக்கு பதிவு செய்யப்பட்டிருக்கு? உதாரணமாக அவங்க வந்து இங்க ரொம்ப பாதிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு எவ்வளவோ நிகழ்ச்சிகள் நடந்துகிட்டிருக்கு. இது எந்த அளவுக்கு தமிழக படைப்பாளிகளிடத்தில் வந்து கவனிக்கப்பட்டிருக்கிறது என்ற ஒருகேள்வி. மிகச் சமீபத்தில் இலங்கையிலிருந்து, அகதிகள் வருவதை மத்திய அரசும் மாநில அரசும் மிகக்கடுமையா தடுத்து நிறுத்தினாங்க.

 

          அங்கிருந்து எல்லாவற்றையும் இழந்து, (உயிரை) தவிச்சிட்டு வர்றவங்களை துறைமுகத்துல கொண்டு வந்து விட்டா, படகுகளையும் சீஸ் பண்ணிடறாங்க. படகோட்டியையும் கைது பண்ணிடறாங்க. அதனால அவங்க திட்டுகள்ல விட்டுட்டு போயிடுறாங்க. அந்த திட்டுகள்ல அவங்க உயிருக்குப் போராடி கிட்டுருக்கிறதை பரிதாப்பட்டு நம்ம மீனவர்கள் அவர்களை காப்பாத்தி எடுத்துகிட்டு வந்தாங்கன்னா நம்ம மீனவர்களை கைது பண்றாங்க. அவர்களுடைய படகு ஓட்டுகின்ற உரிமையை அந்த தொழிலை வந்து செய்யக்கூடாதுன்னு தடைபண்ணிடுறாங்க. ரொம்பப் பெரிய பிரச்சனைகளில் தலைகீழா கட்டி வச்சி அடிக்கிறாங்க. இதுபற்றி இராமேஸ்வரத்துலேர்ந்து வந்த மீனவர்களும் பேட்டி கொடுத்தாங்க. அது போதுமான அளவுக்கு பத்திரிக்கைகளிலேயே வந்து பதிவு செய்யப்படல. பல பத்திரிக்கைகளுக்கு தகவல் கொடுத்து கூப்பிட்டபோது, பலரும் வந்து கலந்துக்கல. இந்த மாதிரியான விடயங்கள் தமிழக படைப்பாளிகளால எவ்வளவு தூரம் பதிவு செய்யப்பட்டிருக்கு என்று யாராலும் சொல்ல முடிஞ்சா நல்லாருக்கும்.

              கனட(க்) பேராசியர்கள் இந்த இருக்கையிலே இருப்பதால் ஒரு கேள்வி கனடாவில் ஒரு நிகழ்வு. அங்கு அங்கிருக்கிற மக்கள் யாருடைய தலைவர்களை விரும்புகிறார்களோ அவர்கள் தபால் தலையை அடித்துக்கொடுத்து விடுவார்கள். அப்படிதான் காந்தியைக் கேட்டார்கள் அந்த அரசு கொடுத்தது. சுபாஸ் சந்திரபோசைக் கேட்டார்கள் கொடுத்தது. இப்படி யார் யாரைக் கேட்டார்களோ அவர்களெல்லாம் அந்த அரசு கொடத்தது. ஆனால் பிரபாகரனைக் கேட்டார்கள். அவர்களும் அடித்து கொடுத்துவிட்டார்கள். ஆனால் பிறகு தான் தெரிகிறது. அது சிலருக்கு தெரியவில்லை. ஆனால் அப்பொழுதே அரசு விழித்துக்கொண்டது. பிரபாகரன் படத்தைப் பார்த்து அய்யய்யோ பிரபாகரன் படத்தை நாம் அடித்துவிட்டோமே என்று அந்த சட்டத்தையே வாபஸ் பெறுகிறது. ஆக யார்யாரோ கேட்டார்கள், கொடுத்தார்கள். தமிழ் தமிழக அதாவது போரைச் சார்ந்தது அது. பிரபாகரனைப் பற்றியெல்லாம் நமக்குத் தெரியாது.ஆனால் அவருடையப் படத்தைக் கேட்டவுடனேயே சட்டத்திற்கு கண் திறக்கிறது. பாரதத்திலும்கூட பிரபாகரனைப் பற்றி பேசமுடியவில்லை. அது அந்நியச் சூழலாக இருக்கலாம். ஆனால் இங்குகூட நம் இலக்கிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பரணி இலக்கியம் புகழ் வாய்ந்த இலக்கியத்தினுடைய நிகழ்வு இங்கே நடக்கவில்லை. எங்கோ நடந்தது. ஆனால் அதைப் பற்றி இன்று நாம் ஆகோ ஓகோ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம. இன்று நாம் அதைப்பற்றி சிந்திக்காமல் இருக்கலாம். வேறொரு காலக்கட்டத்தில் பிரபாகரனை பாட்டுடைத் தலைவனாக வைத்து இலக்கியம் ஈழத்தில் படைத்திருக்கிறார்களா? அவரைப்பற்றி ஒரு புதுக்கவிதையாகவோ, அவரைப் பற்றிய ஒரு புதுக்கவிதை புத்தகம் படைத்திருக்கிறார்களா அல்லது ஈழத்தில் அங்கிருக்கின்ற ஏனென்றால் ஒரு பேராசிரியர் சொன்னார் பல்கலைக்கழகத்திற்கு வெளியே பேசவேண்டிய செய்திகள் என்று கூறினார். எனவே அப்படி அங்கு ஏதேனும் இலக்கியங்கள் வெளிவந்திருக்கின்றதா? இல்லை ஈழத்தமிழர்களை அல்லது ஈழப்போரை ஆதரிக்கின்ற இங்கிலாந்து போன்ற தமிழ்புலத்தில் அவரைப்பற்றி தமிழ் இலக்கியங்கள் ஏதேனும் வந்திருக்கின்றதா? என்று கேட்டுக்கொள்கிறேன்.

கவிஞர் இன்குலாப்

இங்கு சொல்லப்பட்டகருத்துக்களை கவனமாக செவிமடுத்துக் கொண்டு வந்தேன். இதனுடைய தொடக்கத்தில் பேராசிரியர் அரசு அவர்கள் குறிப்பாக மாணவர்கள் இங்குவந்த படைப்பாளிகளிடம் தங்களுடைய ஐயங்களை தீர்த்து தெளிவு பெறுகிற ஒரு நிகழ்வு என்பதை சுட்டிக்காட்டியதனால் நான் இதில் குறிக்கிடாமல் இருப்பது நல்லது என்று அமைதியாக இருந்து கொண்டிருந்தேன். இதுவரையில் மாணவர்கள் யாரும் கேட்டது மாதிரி தெரியவில்லை. எனவே என் பங்குக்கு இனிமேலும் பேசாமல் இருப்பது அவ்வளவு நல்லாயில்லை? ஒரு சில கருத்துக்களை இங்கு கூறுவதற்கு விழைகிறேன்.

          இந்த புலம் பெயர்ந்தோர் பற்றிய இலக்கியங்கள் அங்கே தமிழீழத்தில் நடைபெறக்கூடிய செய்திகள் பற்றியெல்லாம் கூறப்பட்டன. இலக்கியத்தில் பன்முகத்தன்மைக்கான கேள்விகளைப் பற்றியும் அதனுடைய சனநாயக சாராம்சம் பற்றியும் வலியுறுத்தப்பட்டதையும் நான் கவனித்தேன். பன்முகத்தன்மை என்ற ஒன்றை வலியுறுத்திய நண்பர்கள் இங்கு அந்த பன்முகத்தன்மைக்கு இடமில்லாமல் போனது பற்றியும் கொஞ்சம் கவனிக்க வேண்டுகிறேன். இங்கு ஒரு விடுதலைப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறவர்கள் மீது விமர்சனம் கூடாது என்பதல்ல. அந்த விடுதலைப்போரில் பங்கேற்றவர்கள் இங்கு எந்த கருத்தையும் சொல்ல முடியாத சூழ்நிலை. இந்த அரங்கிற்கு மட்டுமல்ல அரங்கிற்கு வெளியிலும் இருக்கிறது என்பதை பன்முகத்தன்மை குறித்து பேசுபவர்களுடைய கவனத்திற்கு நான் ரொம்ப தாழ்மையாக கொண்டு வருவதற்கு விரும்புகிறேன். இதை இங்கு யோசித்துப் பார்க்கிறேன்.

           தமிழ்இனி போன்ற ஒரு மாநாட்டை நாங்கள் நடத்துவதாக இருந்தால் தமிழீழ விடுதலைப்போராளிகளுக்கு ஆதரவாளர்களாக இருக்கக்கூடிய நாங்கள் நடத்தியதாக இருந்தால் (அந்த வசதிகளை விட்டுவிடுங்கள்) நாங்கள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டு விடுவோம். உங்களை அழைத்திருக்கிறார்கள் உங்களுடைய பின்புலங்கள் என்ன என்பது பற்றி அரசுக்கு தெரியாமலும் இருக்கலாம்@ தெரிந்தும் இருக்கலாம். உங்களால் பங்கேற்க முடிகிறது. நாங்கள் தமிழ்இனி போன்ற ஒரு மாநாட்டை நாங்கள் எங்கள் பராமரிப்பில் நடத்துவதாக இருந்தால் எங்களில் எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்பதை உங்களுடைய கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

          ஒரு சமயத்தில் ஐயா சிவத்தம்பி அவர்கள் கூட தடுக்கப்பட்ட அளவுக்குத்தான் இங்கு சனநாயக உரிமைகள் இருந்தன என்பதை நாம் மறந்து விடக்கூடாது. எனவே ஒரு போர் பற்றிய செய்தியைச் சொல்லும் பொழுது அதற்கு ஆதரவான கருத்துக்கள் மட்டும் தான் ஒலிக்க வேண்டும் என்று நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன். அதற்கு மாறான கருத்துக்கள் அது போராளிகள் பார்க்கத்தவறிய கருத்துக்களாக இருக்கும். அந்த போராட்டத்தில் நாம் மறைக்கப்பட்ட கருத்துக்களாக இருக்கும். அந்தப் போராட்டத்தில் நாம் மறைக்கப்பட்ட கருத்துக்களாக இருக்கும். ஆனால் போராளிகள் பார்க்கத் தவறியது என்று நீங்கள் நினைக்கும்போது நீங்கள் பார்க்கத் தவறிய உண்மைகளும் நீங்கள் பார்க்கத்தவறிய நியாயங்களும் இருந்ததாகும் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.

             முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது இங்கு சொல்லப்பட்டது. ஒரு தீர்வாக சொல்லப்பட்டது. முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது. ரொம்ப தவறுதலான ஒன்று அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் எந்தச் சூழலில் நடந்தேறியது என்பதை உங்களில் யார் மனம்திறந்து பேசுவதற்கு தயாராக இருக்கிறீர்கள்? இதை நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். அது போலவே ஒரு போரை நடத்திக் கொண்டிருக்கிற ஒரு இயக்கத்தை உங்களால் விமர்சிக்க முடிகிறது. விமர்சிப்பது உங்கள் பிறப்புரிமை. யாரும் கேள்வி கேட்க முடியும். அந்த இயக்கத்தை ஒரு பகுதியினர் வந்து அவர் கிட்டத்தட்ட ஒரு சூதாட்டத்தை விரும்புகிறவர் போல அல்லது ஒரு போதையை விரும்புகின்றவர் போல என்று சொல்லுகிற திறன் உங்களுக்கு இருந்திருக்கிறது. ஆனால் அந்த போரின் நியாயங்களைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு இன்றும் உரிமை இல்லை. என்றும் உரிமை இல்லை என்பதை உங்களுக்கு பணிவன்புடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, நீங்கள் பார்க்கிற ஒரு பன்முகத்தன்மை உங்கள் அளவில் கூட பேணப்படவில்லை என்பதை இந்த அரங்கிலே பதிவு செய்கிறேன். நன்றி வணக்கம்.

 கவிஞர் கே.அறிவுமதி

          என்னுடைய பெயர் அறிவுமதி தமிழ்இனி என்றதற்கு சில நன்றிகள் கூட சொன்னார்கள் சில ஈழத்து எழுத்தாளர்கள். ஒரு நாள் எங்களுடைய நாட்டிலும் ஒடுக்கப்பட்ட அந்த பறையர்கள் என்பவர்கள் பள்ளர்கள் என்பவர்கள் இப்பொழுதுதான் விடுதலைக்கு தங்களை அடையாளப்படுத்தி போரிடுவதற்கு கைகளை உயர்த்தி இன்றைக்கு குரல் கொடுக்கிற ஒரு தளத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதைப்போலவே தமிழ்தேசிய இனம் இரண்டாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த அந்த உணர்வுகளையும் இப்போதுதான் நாங்கள் ஈழத்தில் அந்த கரும்புலிகள் அங்கே தங்கள் உடல்களையே சிதறி, தங்களுடைய போராட்ட வாழ்க்கையை அங்கே கொடுத்து உயிர்களை கொடுத்து தேசிய இன உணர்வை அங்கே எழுப்புகிறார்களே... அவர்களிலிருந்து, எங்கள் அடிமை விலங்குகளை, தாழ்வுமனப்பான்மைகளை, நாங்கள் விலக்கிக் கொள்ள இங்கே முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழலில் இன்றைக்கு பாரதிய சனதா என்கிற மதவாத இயக்கங்கள் எங்களுடைய இந்த தலித்தியத்தை மிக சாமார்த்தியமாக கையிலெடுக்கிறது. இன்றைக்கு திருமாவளவன் போன்றவர்கள், கிருஷ்ணசாமி போன்றவர்கள் மிக சாமாத்தியமாக பின்னுக்கு தள்ளப்பட்டார்கள். மதவாதம் என்ற சூழ்ச்சித் தளத்தில் உளவாங்கப்படுகிறார் பங்காரு லஷ்சுமணன் என்பவர். அங்கே காஞ்சிபுரத்தில் இளையராஜாவை பெயர் வைப்பதற்காக பல்கலைக்கழத்திற்கு அங்கே பதிவு செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில் எங்கள் அங்கே ஒரு முழு வீச்சாக போரட்டம் நடந்து கொண்டிருக்கிற சூழலில் மறுபடியும் எந்த பார்ப்பனியத்தாலும் எங்களுடைய தமிழனம் நசுக்கப்பட்டதோ, ஒழிக்கப்பட்டதோ, அந்தப்பார்ப்பனியத்தின் அடையாளமான சுந்தர ராமசாமியும், அவருடைய பையன் கண்ணனையும் அத்தகைய போரட்டக்களத்திலிருந்து மானங்கெட்டு வந்து, இங்கே நீங்கள் உள்ளே வந்து உள்ளத்தில் இருக்கிற குறைகளை கொட்டுகிறீர்கள்... இவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? என்பதையும் இங்கே கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய போரட்டத்திற்கு உதவவில்லை என்றால் எங்களுடைய போராட்டத்திற்கு உதவவில்லை என்றாலும் எங்களுடைய இந்த போராட்டத்தை நீங்கள் கொச்சைப்படுத்தாதீர்கள். 

ஊழல் செய்து விட்டாராம். இங்கே பல்வேறு உளவுத்துறையிடம் பணம் வாங்கி, “தமிழ் இனி" என்பது 40 லட்ச ரூபாய்க்கு மேல் (நீங்கள்) இங்கே ஊழல் செய்திருக்கிறார்களே, அதைப் பற்றி பேச இந்த நட்சத்திரனுக்கு உரிமையிருக்கிறதா?

ரவிக்குமார் எங்களுடைய பிள்ளை. இன்றைக்கு அவன் சூழ்ச்சியாக வளைக்கப்பட்டிருக்கிறான். அப்படிதான் எங்கள் இனத்தில் பிறந்த சேரன். அவரும் இன்று சூழ்ச்சியில் ஆள்பட்டிருக்கிறார். இவையெல்லாம் வரலாற்றில் எங்கே போய் முடியுமோ? உங்களுடைய வரலாறு இதற்கெல்லாம் எப்படி பதில் சொல்லப்போகிறதோ என்ற விரக்தியோடு நான் இந்த கருத்தை வைத்து விடைபெறுகிறேன்.    

வில்வரத்தினம்

           என்ன விடயமென்றால் மிகவும் அன்போடு என்ன விடயமென்றால் நீங்கள் நாங்கள் ஈழத்திலிருந்து வந்த பொழுது நாங்கள் இவ்வாறானோர் விடயம் சம்பந்தமாக தமிழத்தேசியம் பற்றியெல்லாம் எங்களுக்குத் தலைப்பு தரப்பட்ட பொழுது வில்வரத்தினமாகிய நான் உங்களைப்போலவே உணர்வில் சற்றும் சளைக்காதவன்.

           தமிழ்த்தேசியம் பற்றிய என்னுடைய குரலை வைப்பதற்கான ஒரு அரங்கு கிடைத்தபொழுது அதுவும் தமிழகத்தில் கிடைத்த பொழுது அந்தகுரலை செம்மையாக எனது மனசாட்சிக்கு எந்தவிதமான விரோதமுமில்லாமல் வைப்பதற்காக வந்தவன். எனக்கு இங்கே உள்ளுக்குள் இருக்கின்ற இந்தமாதிரியான வாதப்பிரதிவாதங்கள் ஆகிய ஒன்றும் எங்களுக்கு எட்டவில்லை. இதிலே நீங்கள் உண்மையில் வந்து எந்த எழுத்தாளர்களாக இருந்தாலும் நான் ஒன்றைச் சொல்லுகிறேன்.

          காலச்சுவடு ஆறாம்திணை சரிநிகர் சார்பாக இங்கே ஈழத்து எழுத்தாளர்களான நாங்கள் 30 பேர் வந்திறங்கியபோது எங்களை வரவேற்க ஈழத்து எழுத்தாளர்கள்தான் வந்தார்கள். நாங்கள் ஹோட்டலில் வந்திறங்கியபோது எங்களை வரவேற்றவர்கள் ஈழத்து எழுத்தாளர்கள்தான் தமிழக எழுத்தாளர்கள் எவரும் இல்லை. அப்பொழுதும் கடமையை நிறைவேற்ற வேண்டுமென்ற ஆதங்கம்தான் எங்களுக்கிருந்தது. அப்பொழுதும் இந்த குத்து வெட்டுக்கள் எங்களுக்குத் தெரியாது. அடுத்தது இன்னுமொரு பிரச்சனை இந்த காலச்சுவடு அல்லது ஆறாம்திணை என்பவற்றுக்குப்பின்னால் நான் குற்றம் சாட்டுவதாக நினைக்க வேண்டாம் ஏதோ ஒரு வகை அரசியல் தொனிப்படலாம் என்கிற ஒருசந்தேகம் இந்த மூன்று நாட்களுக்குள் எங்களுக்கு முளைவிடத்தொடங்கியது. என்ற ஒன்றையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் அதை அவதானிக்கிறேன் என்னவென்றால் இதை நான் பகிரங்கமாகச் சொல்வதில் எனக்கு எந்தவிதமான தவறுமில்லை.. இனி சரிநிகர் உட்பட நாங்கள் எல்லாருமே சேர்த்து ஏமாற்றப்பட்டிருக்கிறோமோ என்கின்ற ஒரு ஆதங்கமும் எனக்கு இருக்கிறது. 

            என்ன விடயமென்றால, இதற்குப்பின்னால் இந்த கருத்தியல்களுக்குப் பின்னால் ஒருவகை அரசியல் இருக்கிறது. அது எந்தவகை அரசியல் சிலவேளை நான் பல்வேறு அரங்குகளில் கருத்துக்கள் முன்வைத்தபோது முன்கண்ட முகத்தோற்றம் பின்னால் எங்களுக்கு வைக்கப்படவில்லை. எமக்கு முன்பாகவே இறுதிநாளில் நீங்கள் குறிப்பிட்ட அன்பர்கள் அறிவுமதி குறிப்பிட்ட அன்பர் எனக்கு முன்னால் நின்ற புலம்பெயர் எழுத்தாளர்களாகிய சுசீந்திரனை ஒரு விருந்துக்கு அழைத்தார். அதற்குப்பின்னால் இன்னொரு புலம்பெயர்ந்த அன்பரான பாரதிதாசனை விருந்துக்கு அழைத்தார். நானொரு இலங்கையைச் சேர்ந்தவன். நானும் பக்கத்தில் நிற்கிறேன். நீங்களும் வாருங்கள் விருந்திற்கு என்றவர் அழைக்கவில்லை. இன்னுமொரு அன்பர் அவர் (நோ)நார்வேயில் இருந்து வந்தவர் சரவணன் அவர்கள் அவரும் பக்கத்தில் நின்றார். அவர் இலங்கைச்சேர்ந்தவர். நோர்வேயில் இருந்து வந்தவரென்று தெரியவில்லை போலும். ஆக என்னையும் அழைக்கவில்லை. அவரையும் அழைக்கவில்லை. ஆக புலம்பெயர் சந்தை என்கிற ஒரு வியாபாரத்தளம் தேவைப்படுகிற பொழுது புலம்பெயர் எழுத்தாளர்கள் உங்களுக்குத் தேவைப்படுகிறார்கள் இந்தப் புலம்பெயர் எழுத்தாளர்கள் உங்களுக்குத் தேவைப்படுகிறார்கள் இந்தப் புலம்பெயர் எழுத்தாளர்கள் புண்ணுண்டவர்கள். ஆக எனக்குத் தேவையானது நான் இங்கே கண்டேன். அவர்கள் ஊடாக வந்து நான் அவர்களுக்குத் துரோகம் செய்ததாக நான் அந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை. நாங்கள் உங்களைச் சந்தித்தோமல்லவா? உங்களுடைய குரல்களை இங்கு கேட்டோமல்லவா? இது நாங்கள் இங்கே வரமுடியாதிருந்தால் நடந்திருக்குமா? உங்களோடு என்ன பிரச்சனை என்றால் நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.. எங்களுக்கு இந்த பிரச்சனைகள் பின்னால் நாங்கள் இப்ப அறிகிறோம்.இதை பகிரங்கமாக முன் வைக்கிறேன்.

            காலச்சுவடு, ஏழுகடல்தாண்டி பிரசுரிக்கிறது. தொலை மூலம் பிரசுரிக்கிறது. இங்குள்ள ஈழத்து அகதிகள் படுகிற பிரச்சனைக்கு ஒரு களம் அதில் இல்லை. இதற்குப்பின்னால் என்னவோ இருக்கு என்பது எனக்கு விளங்குகிறது. இன்னொரு ஆங்கிள். இங்கு குறிக்கின்ற குரல். அது எந்தக் குரலாக இருந்தாலும் அதை நாங்கள் கவனத்துடன்தான் தொழிற்பட வேண்டும் ஆதரவுக் குரலாக இருந்தாலும் கூட. ஏனென்றால் ஆதரவு நீட்டியபல கரங்கள் பின்னால் அந்த கரங்கள், தங்களை ஒடுக்கிக் கொண்டுவிட்டன.

            புதிய ஆதரவுக் கரங்கள் நீண்டிருக்கின்றன. இவர்களிலே எங்களுடைய பிரச்சனைகளை சரியாக யார் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? எங்களுக்கு இடையிலே முஸ்லீம் மக்களின் வெளியேற்றம் குறித்து மனசாட்சியுள்ள ஒரு கலைஞன் என்ற வகையில் என்னுடைய மூன்று தொகுதிகளிலும் முஸ்லீம் மக்களுடைய பிரச்சனைகளை நான் முன்னிலைப்படுத்தியிருக்கிறேன். அதுமட்டுமல்ல அந்த மக்களுக்காக புலம்பெயர் எழுத்தாளர்கள் பலர் அழுதுவடிவதைவிட அவர்களுக்கு, ஆக்கப் பூர்வமாக, நிதி பூர்வமாக அவர்களுடைய பிள்ளைகளுடைய கல்விக்காக எங்களுடைய சுற்றங்கள் சேர்த்து, வாரி வழங்கியதும் செய்ய முடியுமா என்று அன்பர்களிடம் கேட்டிருக்கிறேன். ஆனாலும் அந்த வடபுலத்து மக்கள் இன்றும் தமிழ் மக்களின் வாழ்வோடு தம்மை இணைத்துக் கொள்வதற்கு எங்களுடைய விடுதலையோடு தங்களுடைய விடுதலையையும் சமப்படுத்துவதற்கு தயாரான மனநிலையோடும் அதற்கான அரசியல் ஒத்துழைப்போடும் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் உங்களிடம் மனப்பூர்வமாக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஆகவே இனிமேல் எங்களிடத்தில் எதாவது இருக்கும்போது அதை நாங்கள் நிதர்சனபூர்வமாக நாங்கள் ஆராய்ந்து தீர்த்து (சில) இவற்றிற்கு முனிய வேண்டுமென்பதும் ஆனால், இது எங்களுக்குத் தளம் அமைவது இவ்வாறான உங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்வது, கருத்துக்கள் பகிர்ந்து கொள்வது இவற்றில் எல்லாம் மனதாபத்தோடு மட்டுமல்ல. உண்மையான ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பையும் நாங்கள் தரவேதான் செய்வோம். ஆகவே உங்களுடைய கடமை உங்களுக்கு இருக்கட்டும். ஆனால் விமர்சனப்பூர்வமான ஒரு பக்கமென்பது எந்தவொரு விடுதலை இயக்கத்துக்கும் குந்தகம் விளைவிக்காத ஆரோக்கியமான பாதையில் அவர்களை இட்டுச்செல்வதற்காக நாங்கள் மனந்திறந்து சொல்வதற்குரிய களம் இதுவல்ல. நன்றி!

 பேராசிரியர் கா.சிவத்தம்பி

இறுதியாக தொகுத்துக் கூற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது என்று கருதுகிறேன். இந்த கலந்துரையாடல் நாம் எதிர்பார்த்தப்படி பல்வேறு கருத்து நிலைகளை வெளியே கொண்டு வந்தது. இங்கு வந்துள்ள படைப்பாளிகள் பார்க்க வந்துள்ள நண்பர்கள், இவர்கள் ஒவ்வொருடைய ஆளுமைகளும் எவ்வாறு வௌவேறுபட்டனவோ அந்த வேறுபாடுகளினூடே, நாங்கள் பல்வேறு கருத்துக்களை காணக்கூடியதாக இருக்கிறது. மருத்துவத்திலே சொல்வார்கள் நோய் வெளியே தெரியாமல் அதனை சிகிச்சையில் அடக்குவது. இன்னொன்று சொல்வார்களாம். நோயின் தன்மை எல்லாவற்றையும் வெளியே கொணர்ந்துவிட்டு சிகிச்சை செய்வது. நான் நம்புகிறேன். நோயின் தன்மை தெரியாமல் நாங்கள் நோயை எந்த காலத்திலும் தீர்க்க முடியாது. பிரச்சனைகளை எடுத்துப்பேசாமல் நாங்கள் அடுத்த கட்டங்களைப் பற்றி எந்த காலத்திலும் சிந்திக்க முடியாது. அந்த அளவில் இந்த விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஏற்றுக்கொள்ள வேண்டும். இதிலே, பக்கச்சார்பு அவர் சொன்னது சரி@ இவர் சொன்னது சரி என்பதல்ல பிரச்சனை ஒரு பொதுவான கலந்துரையாடல் நடைப்பெற்றதா அதிலே மேலாண்மையுள்ள கருத்துக்கள் (அல்) முக்கியமான கருத்துக்கள் இடம் பெற்றனவா என்பதுதான்.

               நான் ஆரம்பத்தில் சொன்ன விடயத்திற்கு திரும்பி வருகின்றேன். அதாவது “போரும் இலக்கியமும்” என்பது நான் முதலே சொன்னதுபோல இரு நிலைப்பட்டது. 1. ஏன் போராடுகிறோம், யார் போராடுகிறார்கள், போராட்டத்தின் தன்மைகள் என்ன என்பது பற்றிய வினா அது. அந்தப் போராட்டத்தினுடைய கருத்துநிலை (ஐனநயடழபல) சம்பந்தமானது. அதில் கருத்து வேறுபாடுகளுக்கு இடமுண்டு. ஆனால் போருக்கு இன்னொரு பக்கம் உள்ளது. மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்கள் அவர்களுக்கு ஏற்படக்கூடிய வாழ்க்கைச்சிதறல்கள், சிதைவுகள் பற்றியது. ஒருசமூகஅனுபவம் பற்றியது. இந்த சமூகஅனுபவங்கள் இப்போது பதிவு செய்யப்படுகின்றனவா? இதுதான் கேள்வி. அந்த இலக்கியம் எந்தஅளவுக்கு இந்தச் சமூக அனுபவங்களை பதிவு செய்து கொள்ளுகிறது?

           ஒரு விடயத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது மிகவும், மிகவும் எளிதுபட்ட மலினப்படுத்தப்பட்ட ஒரு பிரதிபலிப்பு கோட்பாட்டிலேதான். சமூகத்திலே உள்ளது எல்லாம் இலக்கியத்தில் வரும் என்று சொல்லுகிறது அப்படியல்ல. சமூகத்திலே உள்ள சில விசயங்கள் இலக்கியத்தில் வராது. வரவிடாது. அது மாத்திரமல்ல. இந்தச் சமூகத்திலிருந்து இலக்கியத்திற்கு வருகிறபொழுது ஒரு படைப்பாளி என்கின்ற ஒரு கண்ணாடி மூலம் இதுபோகிறது. அவனுடைய ஃ அவளுடைய கண்ணோட்டங்கள் அவர்களுடைய மன ஏற்ற இறக்கங்கள் அதிலே பதிகின்றன. அந்த பதிவுதான் அந்த நோக்கத்தைத் தருகிறது. இதனாலேதான் படைப்பு மிக முக்கியமானது. ஏனென்றால் இந்த படைப்பு எந்த கண்ணோட்டத்திலிருந்து சொன்னாலும் கூட மனித இன்னல்களை சரியாகப் பதிவு செய்கின்ற ஒன்று. ஈழத்தின் “போரும் இலக்கியமும்” நாங்கள் காணுகின்ற மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த பெயர்வுகளை அந்த இலக்கியம் எந்த அளவிற்கு பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று இரண்டாவது அவ்வாறு பதிவு செய்து கொண்ட முறைமையில் மேலோங்கி நிற்கின்ற அம்சம் யாது? இரண்டாவது மிக முக்கியமானது.

           கலைகளிலிருந்து விடுபட்டு நிற்கிற, (இந்த) வந்தவர் கையில் தமிழிலக்கியப் பாரம்பரியத்தை இந்த இலக்கியம் சாதித்துள்ளது. இதுதான் நம்முடைய கருத்து. இது சம்பந்தமாக கருத்து வேறுபாடுகள் இருக்கும். இருக்க வேண்டும். இல்லாமல் இருக்கமுடியாது. ஆனால் ஒட்டுமொத்தமாக இந்த இலக்கியம் எத்தகைய பதிவை நமக்குச் செய்திருக்கிறது. இந்தப்பதிவு தமிழிலக்கியத்தின் ஆழ அகலங்களை விஸ்தரிக்கின்றதா? விளக்கணும. அப்படிப் பார்க்கிறபோது நிச்சயமாக இந்த அனுபவம் தமிழ் இலக்கியத்தினுடைய ஆழத்தை, தமிழிலக்கியத்தினுடைய அகலத்தை அகட்டியிருக்கிறது. ஆழப்படுத்தியிருக்கிறது. அது மாத்திரமல்ல. இந்த மொழியினுடைய ஆற்றலை இதனுடைய ப்ழவநவெயைட - ஐ நாம் உணராமலே இழந்த பல சாத்தியப் பாடுகளை நமக்கு வெளியில கொண்டு வந்து காட்டியிருக்கிறது.

           நான் இந்த இடத்தில் தலைமை தாங்குகிறவன் என்ற முறையில் நான், கிளப்பப்பட்ட பிரச்சனைகளின் எல்லா அம்சங்களுக்கும் செல்ல விரும்பவில்லை. சொல்வது அழகும் இல்லை. அதனால் ஒரு பழியுமில்லை. அதாவது “போரும் இலக்கியமும” என்பது எந்தவகையில் முனைப்பு பெற்றுள்ளது. அதில், மேலோங்கி நிற்பது யாது? இதுதான் பிரதானமான கருத்து. அந்த மேலோங்கி நிற்கின்ற பிரதானமான உணர்வு மனிதாய நிலைப்பட்டதா இல்லையா என்பதுதான் கேள்வி. அது மனித விடுதலை பற்றி, மனித இன்னல்களிலிருந்து விடுவிக்கின்ற ஒரு நிலையிலிருந்து பிறழ்ந்து போகிறதா என்பதுதான் கேள்வி. அவ்வாறு பிறழ்ந்து போகுமேயானால் அந்த இலக்கியம் நமக்குத் தேவையில்லை. ஆனால் நாம் பார்க்கின்ற வகையில் இந்த இலக்கியம் ஏதோ ஒரு வகையில் அந்த மனித விடுதலையை சுட்டிக் காட்டுவதாக அது நோக்கியிருக்கிறது.

          இந்த வகையிலேதான் இன்னொன்றையும் நாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் நெடுக எல்லாக்காலங்களில் தமிழிலக்கியத்தை தமிழிலக்கியத்துக்குள்ளேயே நின்று பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழிலக்கியத்தினுடைய தேசிய சர்வ தேசிய வேலிகளை அகட்ட வேண்டும். நான் நம்புகிறேன். இப்போது இந்த இலக்கியம் சர்வதேசியம் பேசுகிறது. இந்த இலக்கியம் சரியாக மொழி பெயர்க்கப்படுமேயானால், சரியாக எடுத்துக் கூறப்படுமேயானால், இது உலகத்தின் குரலாக மாறப்பெற்ற சத்தியப்பாடுகளைக் கொண்டது. நிச்சயமாக இந்த கவிதைகளுக்கு அந்த பலம் அந்த வாய்ப்பு உண்டு. வங்காளத்து கவிஞர் சொன்ன நிர்ணயங்களுக்கு நண்பர் சேரன் சொன்னார். இது ஏன் என்று சொன்னால், அது உண்மையான நிஜமான மனித இன்னல்களின் பிரதிபலிப்பாக, எடுத்துக்காட்டாக அமைந்தது. இந்த உண்மையை இந்த மாணக்கர் சரிவர உணர்ந்து கொண்டார்களேயானால் அதுவே போதும் ஏனென்றால் “உலகம் எத்தனை? மனிதர் அத்தனை”.

பேரா.வீ.அரசு

        இந்தக் கலந்துரையாடலில் நாம் நினைத்ததைப்போல பேரா.கா.சிவத்தம்பி சுட்டிக்காட்டியதுபோல விவாதிக்கப்பட்டன. அதற்கான தர்க்க பூர்வமான செய்திகளை அடிப்படையாகக் கொண்டதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக்குக்கூட “தமிழ் இனி” பங்கேற்றது பற்றி நம்முடைய நட்புக்குரிய நண்பன் அறிவுமதி இவ்வளவு தூரம் கோபப்படுவதற்கென்று நியாயமில்லை. ஆனால், நானும்கூட அந்த ப்டயவகழசஅ  - ல் பேசினேன். அந்த அரங்கைப் பயன்படுத்தினேன். முழுமையாகப் பயன்படுத்தினேன். அந்த அரங்கத்தினில் ஒன்றுகூட வரவில்லை. அதற்கு முன்னர் என்னோடு பல(ர்) இனிமையாகப் பேசிக் கொண்டிருந்த தமிழகத்தினுடைய (பேரைக்கூட என்னால் சொல்லமுடியும்) ஒரு படைப்பாளியும், முகத்தை சுளித்துக் கொள்ளக்கூடிய ஒரு அனுபவம் எனக்குக் கிடைத்தது. ஏனென்று சொன்னால் ஒன்று காலம்காலமாக கட்டப்பட்டு வந்து, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழன் பற்றிய வரலாறு, தமிழ் சம்பந்தப்பட்ட விசயங்களையெல்லாம் ஒரு வகையான, ஒரு ஆதிக்க மணமும் பார்வைக்கு ஊடாக தரப்பட்டதும் அவை எதிர்கொள்ளக்கூடிய வேறு பல நேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதும் சூழலினுடைய சோகம். இந்த சோகத்திற்கு எங்கெல்லாம் இடம் கிடைக்குமோ அங்கெல்லாம் சண்டை போட வேண்டிய, போராட வேண்டிய அவசியம் இருக்கிறது.

 

          வணக்கத்திற்குரிய நம்முடைய வில்வரெத்தினம் சொன்னதைப் போல,இதில் யார் கை ஓங்குகிறது? என்ன செய்கிறோம். இந்த வியூகத்தில் நாம் விவாதிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அறிவுமதி இதை ஏற்றுக்கொள்ளலாம் கூட. ஆகவே, இந்த ஒரு வகையான தமிழ்நாட்டினுடைய ஒரு நிகழ்வுக்கும் அந்த நிகழ்வுக்கு உலகம் முழுதும் வந்திருக்கிற நமது சகோதர ஈழத்தவர்களினுடைய பகுதியைப் பொறுத்தும் அதற்கான பல்வேறுபட்ட முரண்பட்ட கருத்துக்களுக்கும், நம்முடைய தமிழப் பேராசிரியர், முதுதமிழ் பேராசிரியர் சிவத்தம்பி தலைமையில் நாம் அமைதியாக உரையாற்றுவதற்கு ஒரு களம் அமைத்து கொடுத்த இந்த சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு நன்றிசொல்லி இத்தோடு முடித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்

 
 
Related News
 • தலித் பெண்களின் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக தலித் இலக்கியக் குரல்கள்

 • எல்லீசர் தமிழாய்வு முன்னோடி

 • எழுத்துக்கடன் கொண்டு மொழி தழைக்குமா? வீழுமா?

 • நீரற்றது கடல் நிலமற்றது தமிழ்

 • போரும் இலக்கியமும் 1
 •   
    
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World