Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueசொல்ல மறந்தது சினிமா!
 

  ஆக்கம்: ஸ்ரீ மொழி வெங்கடேஷ்

         "REDING MEDIA"    என்கிற எழுத்து வழியான ஊடக மெய்ப்பாட்டை விட மிக நுட்பமாகவும், எந்கவித உள் நோக்கம் கொண்ட அல்லது இயல்பை மீறிய கற்பனைகளுடன் புனைவிற்ரு உரியதல்ல.  "VISUAL MEDIA" என்கிற காட்சியியல் ஊடகம் அப்பட்டமாக அப்படியே நிலையை தருவதால் அவை காலபூர்வமாக இருக்கின்றன "எழுத்தில்" கூடுதல் குறைவை சொல்லயியலும் ஆனால் எடுக்கப்பட்ட காட்சியின் "இடத்தின்" தன்மைகளை மாற்றதக்கதாகாது. அதுவே அதன் வெற்றி முன்நாட்களில்.  ஆனால் "புனைகதைகள்" காட்சி ஊடகத்தை ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியபின். யதார்தவாத போக்குகள் முற்றிலுமாக வீழ்த்தப்பட்டு விட்டன "டாக்குமெண்ட்ரியாக" பிறப்பெடுத்தபோதில் இருந்த உயிர்மெய் இன்று சினிமாவிற்ரு இல்லை முற்றிலும் இறந்த "பிணாடுலையில்" அதுதன் வாழ்நாளை கழிக்கிறது. அதீத கபனைகளுக்குள் தன் சுயவுணர்வற்ற போதையில் தடுமாறி வீழ்கிறது சினிமா...............
 
          சினிமாவின் "கேமரா" வின் பிறப்பு எப்படி குழப்பமானதோ அப்படியே அதன் காட்சியியல் போக்கும் அமைந்து விரவி இருக்கிறது. 1877 தாமஸ் ஆல்வ எடிசனே ஒளி ஊடலின் "பிறப்பிடம்” என்கிற வரலாறு. மறுபுறம் வேகமாக அதை மறுத்து 1884ல் ஈஸ்ட்மென் தான் என இரு அமெரிக்கர்களையும் முன்வைக்கிறது.  அதேபோல் இங்கிலாந்தும் இராபரடைபால்- 1895- சார்லஸ் பிரான்ஸிஸ்.    ஜென்கின்ஸ் 1890 எனமுன் வைக்கும் வேளையில் பிரான்ஸ்-லூமியர் சகோதரர்களை=1934 ஒவ்வொரு கால நிலையிலும் சினிமாவின் அதி நுட்பமான வளாநிலையிருந்துள்ளது. ஆனால் நுட்பம் சார்ந்து வளர்ச்சிகட்ட அளவு சினிமா  ரசனை சார்ந்த வளர்ச்சியில் எந்தவித வளர் நிலையையும் எட்டவில்லை டிஜிட்டல் எஸ்.எல். ஆர். கேமராக்கள் வந்தபின்னும் "ஆன்லையன்" எடிட்டிங் வந்த பின்னும் ரசனையும் காட்சியின் மாறுதலும் எவ்வித்த்திலும் மாறுபாடு கொள்ளவில்லை. மாறாக சிலகூறுகள் ஒழிந்துவிட்டன்.
 
            நவீன சினிமாவின் "முக்கிய அங்கம் வகிக்கும். DTஸ், ஸ்பெஷ்ல் எஃபெக்ட், போன்றவற்றை நீக்கி கொஞ்சம் துரிதகெதியில் இன்றைய சினிமாவை   பார்வையாளன் திரையில் நகர்த்துவானாகின் முற்றிலும் சினிமாவை விட்டே அவன் வெளியேறி விடுவான், எந்தவித தொழில் நுட்பமும் இன்றி "கதையும் கதைமாந்தரும் கதைகளமும் நிமிர்ந்து நிற்பதே" சினிமா என்பதை அவனை அறியாமல் காலகாலமாய் மறைந்து வாழும் நினைவிள் பதிவு. ஆனால் "காலம்காலமாய் உள்ள பதிவை" காயடிப்பு செய்தே, நடிகர்கள் தொழில் நுட்பத்தின் மேல் "போலி" சவாரி மேற்கொள்கிறார்கள். முன்ணனி நடிகர்கள். நடிகள்களுக்கென தனிதிறன் ஒன்றுமில்லை. இன்று, ஆனால் அன்று நடிகர்களின் தனிதிறன் மட்டுமே சினிமா!
 
            காலவெளியில் சினிமாவின் ரசனையுன் ரசனைசார்ந்த உலகமும் சுருங்கி போய்விட்டது ஒரு வேளை ஆல்ப்ரெட் ஹிட்க்காக் மொழிவது போல் பேனாவும் பேப்பரும் மலினப்பட்டு சகலரும் எழுதும் வாய்ப்பை பெற்றது போல், படச்சுருளும் கேமராவும் மலினப்படும் போது நேர்மையான படைப்பாளி வெளிப்படுவான் என்றார் அதன் காலாநிலை நிகழ்வு மெல்ல மெல்ல கனிந்து கொண்டுதான் இருக்கிறது எனலாம். கலாச்சாரம், வாழ்வில், அரசியல் கோட்டுபாடுகள், வெளிப்படை விமர்சனங்கள், தொல்லியல் பார்வை பூ உள்ளீடுற்ற விமர்சன முன்வைப்பு எதுவும் சினிமாவின் வழியே மனித சமூகத்திற்கு எடுத்துயம்ப இயலும், ஆனால் அது "காட்சிவழி ரசனையைவிட்டு" விலகி சொல்லாமல் சற்று சோர்வின்றி உள்ளிடு படுத்தப்பட வேண்டும் என்கிற சம நோக்கியல் இல்லை.

         நியோ-ரியலிச சினிமாக்களில் கூட ஹீரோக்கள் மரத்தைச் சுற்றியும் .பெண்ணின் முலைகளைப் பற்றிப் பிடித்துப் பால் சூப்பியும் ஆடுகிறார்கள். இதன் அலங்கரிப்புப் போக்கில் மிகமிக நுட்பமான குழப்பம் மேலோங்குகிறது.குண்டிகளைத் தடவி சுகித்தும் கதாநாயகியுடன் பொழுதிடும் கதாநாயகன் பெண்ணியம் பேசுகிறான். இன்னொருபுறம் பருத்திவீரன் போன்ற படங்களில் வேசிகளின் உலகம் குறித்தும், அவர்களின் இருப்பு குறித்தும் சொல்லப்பட்ட மிகச்சிறிய அளவு ஷாட்டுகளில் அவர்களது வாடிக்கையாளர்களின் நுகர்வுத்தெளிவும் சொல்லப்பட்ட விதம்.யோனியின் வழியே தரையில் வழியும் ரத்தத்தின் வழியே ஆணின் மிருகக் குணத்தை காட்சிப் படுத்தினார்.அமீர். இறுதியில் இதில் எந்த போலிகளுக்கும் இடமில்லை என  ரசிகனும் பார்த்தான் , மனந்திறந்து. இதையே பாலச்சந்தர் அவருடைய காலச் சூழலுக்குஏற்ப ஆம்பளை என்றாலே மரத்துப்போச்சு என்று சொல்ல வைத்தார் "அரங்கேற்றத்தில்."இரண்டிலும் காலச்சூழலுக்கேற்ப பொருள்கொள்ள வேண்டியுள்ளது.பாலியல் சார்ந்த காட்சியில் கால்சட்டையும் இறுக்கிப்பிடிக்கும் முலைக்கச்சையுமாய் நடனப்பெண்களும்  "பார்வையாளனின்" குறிகளுக்குள் வெறி திணித்தே இன்னமும் நடனமாடுகிறார்கள். சினிமாவில். முலைக் கச்சையில் பிதுங்கி வழியும் காமத்தைப் பருகத்துடிக்கிறான் பார்வையாளன்.

         ஆனால் பெண்ணின் மரணவேதனையுடன் கூடிய நுட்பமான இடர்ப்பாடுகளை வேதனைகளை அறுவெற்ப்பு என்கிறார்கள்.அதில் மனித வாழ்வின் அவல நிலையும் உண்மையும் இருப்பது அவர்களுக்குவணிகத்துக்கு இடைஞ்சலாக உள்ளது அப்படியாயின் மலிந்த முலைக்கச்சைகளுடன் பெண்களை ஆடவைத்து வணிகம்செய்யும் சோரம்போனவர்களால் எப்படி உண்மையான மனித வாழ்வியலைசொல்லவியலும்? சினிமாவின் நிதர்சனமென்பது, பார்வையாள்னை தன்னூடாக அழைத்துச்சென்றுதன்னையும் அதில் ஒரு க்குற்றவாளியாக இணைத்துப் பயணிக்கும் கலைவடிவம்மட்டுமே மெய்யான ஒளி உலகமாக இருக்கவியலும். சினிமா மாற்றத்தையும் மாறுதலுக்குள்ளாகி வரும் உலக்த்தையும் அதுமனித வாழ்வில் இருந்தே எழுத்தாளுமை கொள்கிறது. காலங்காலமாய் காட்சிகளுக்காக "செட்"அமைக்கும் அபத்தப்போக்கிலிருந்து விலகி பார்வையாளனைப் புதிய அனுபவத்திற்கு இட்டுச் சென்ற சத்ய ஜித் ரேயின் "பதேர் பாஞ்சாலியோ .ரித்விக் கட்டக்கின் மேக் தத் தாராவோ.அடூரின் மதிலுகளோ காட்சித்தளத்தின் இணைப்பாகிறபோது ரசிகனின் இயல்பாகிறது. தமிழ்மனோபாவத்தை மிக ஒத்துப் பதிவுறும் சொற்ப எண்ணிக்கையிலான ஈழத்திரைப்படங்கள் சொல்லும் நிதர்சன வெளிப்பாடுகளைக் கூட தமிழில் திரைப்பட வெளியில் நிரம்பிக்கிடக்கும் படங்கள் மெய்மை கொள்ளவில்லை. 1956-க்குப்பிறகு வெளியே வந்து  தயாரிப்பை மேற்கொன்ட இலங்கைத் தமிழ்ப் பட உலகம்  தன் உள் கட்டமைப்புகளில் விரிவுபெற்றன எனலாம்.

          இலங்கையின் முதலாவது 35 எம் எம் தமிழ்ப்படமான "தோட்டக்காரி"  எனும் படத்தை எழுதி இயக்கி நடித்த பி .எச். கிருஷ்ணகுமாரின் படத்தில் தொழில்நுட்ப மேதமையைவிட கதைசொல்லலில் கவனம் பெறுவதைக் கண்ணுறுகிறோம். ஒரு காட்சியின் வலுவை தொழில்நுட்பம் மட்டுமே நிரப்பிவிடாது அதைத் தாண்டிய ஒன்றைப் பார்வை கேட்கிறது. சினிமாவின் காட்சித்தடத்தின் நுட்பவியலை மூன்றே மூன்றுலென்சு வடிவங்கள் தீர்மானிக்கின்றன.அவை விரித்துக்காட்டுபவை (வைட் ஆங்கிள்) அடுத்து இயல்பு நிலை (நார்மல் லென்சு) மூன்றாமவை டெலிபோட்டோ லென்சுகள். இவற்றை பயன்படுத்துவதில் மட்டுமீறிப் பயன்கொள்ளும்போது  அதாவது காட்சியின் தன்மையை மீறிய ஆடிகளைப் பயன்படுத்தும் போது கதையின் இயல்புகளை சிதைவுறச் செய்கின்றன.

          இப்பொமுது எமுதுகிற படைப்பாளிகள் பேனாவை மூடிவிட்டு கேமராவை கையில் எடுத்தால் மட்டுமே நல்ல சினிமா என்பது சாத்தியம் "வாசகர் பரப்பு சுருங்கி அது பார்வையாளர் பரப்பாக விளிவடைந்த காலநிலைகளுக்குள் நாம் நிற்கிறோம் படித்து “சிலாகித்து” பேசும் பழக்கத்தில் இருந்து பார்த்து ரசிப்பதற்கு. வெகுதொலைவிற்கு இருத்து வந்து விட்டது காட்சி ஊடகம், ஆனால் அது தொழில்நுட்ப வெளிப்பாட்டை மட்டுமே கொண்டுள்ளதே கலையின் மிகப்பெரும் சிக்கல், ஒருகாலத்தில் அதிதீவிர வாசகனாக் இருந்தவனே தற்போது பார்வையாளனாக மாறியிருக்கிறான். தான் படித்த அனுவித்து. படிப்பத்ற்கு சோம்பலாக  உள்ள விசயங்களை “பார்வை ஊடகம் வழியே கேட்கிறான்” ஆனால் அதைக்காட்சிபடுத்தும் திராணி இழந்தவர்களாக் இருக்கிறார்கள் திரைப்படைப்பாளிகள். ஏனெனில் முதலில் அவர்கள் படித்து “சிலாகித்து” இருந்தால்தானே மற்றவர்களுக்கு சொல்ல இயலும் “குருடர்கள் யானையைத் தொட்டுரசிக்கும் நிலையிலேயே திரைப்படைப்பாளிகள் உள்ளனர்”. 

        அவர்களுக்கு தீவிர இலக்கியவாதிகளின் “மூளை” தேவைப்படுவதை வைத்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம் வெறும் தொழில் நுட்பம் மட்டுமே “கதை” யை நகர்த்துவது என்று தொழில் நுட்பமே அற்ற “நாடகமும்” “தெருக்கூத்துகளும்” கதையை நகர்த்திய அளவீடுகளில் சிறு அளவை கூட இன்றைய நவீன காட்சி ஊடகம் நகர்த்தவில்லையே! 

          நாடகங்களிலும், கூத்துகளிலும், கட்டியக்காரன், விகடகவி, கோமாளி, என சோல்லப்படும் “கதாபாத்திரதன்மைகள்” தமிழ் சினிமாக்களில் “கதாநாயகர்களாக” இருக்கிறார்கள் இன்று. எமுத்தாளர் ஜெயகாந்தனின் "உன்னைபோல் ஒருவளின்" தொழில் நுட்ப குறைபாட்டை கூறியவர்களால் அதைபோன்ற கதை சொல்லும் ரசனையை “மேம்படுத்திக்கொள்ள” அறிவுபோதாமல் போனது. அதனால்தான் ஜெயகாந்தன் கூறினார் விமர்சிப்பவர்களை நோக்கி "என்படங்களில் குரங்குகள் காதலிப்பதில்லை" என்றார், அதே ஜெ,கே, தொடர்ந்து பேசுகிறார் "என்படைப்பில் நூறு குறைகளை நீங்கள் கூறினால் நூற்றி ஒராவது குறை ஒன்றை என்னால் கூற முடியும் அது இங்கு முக்கியமல்ல என்படைப்பின் சிறந்த ஆளுயைத் தர இயலும் "என நம்முள் கேள்வியை வைக்கிறார்.

  “திரை" என்பது தொழில் நுட்பம் மட்டுமே சார்ந்தது அல்ல மிக நுட்பமான கதை சொல்லும் வழிமுறைகள் சார்ந்ததும்.

 
Related News
 • மலேசிய தோட்டப்புறவியல் - உள்ளும் புறமும்

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World