Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueபுத்தகத்தின் எதிர்காலம்
 

 

 -உம்பர்ட்டோ ஈகோ

(தமிழில்: ஜெ.சாந்தாராம்)

 

[சேன் மரினோ பல்கலைக் கழத்தில் ஜுலை 1994-ல் நடைபெற்ற 'புத்தகத்தின் எதிர்காலம்' (The Future of the book) குறித்து  கருத்தரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரை.]

 

'புத்தகத்தின் எதிர்காலம்'குறித்து கருத்தரங்குக்கு நான் வந்து சேர்வதற்கு முன்னாக ‘Cesi tuera cela’   -வை எவரேனும் மேற்கோள் காட்டுவாரென எதிர்பார்த்திருந்தேன்.டுகுய்டு மற்றும் நன்பெர்க் இருவருமே எனக்கு சாதகமாக உதவிபுரிந்தார்கள்.அந்த மேற்கோள் நமது விவாதப்பொருளிற்குத் தொடர்பற்றதென கூறுவதற்கில்லை.

விக்டர்ஹியூகோவின் நாவலான ‘Hunchback of Notre Dame    - பிரதானக் கதாபாத்திரமான ப்ரோல்லோவை நீங்கள் ஐயமின்றி நினைவு கூர்கையில்,அவன் அவனது பழைய மறைமாவட்டப் பேராலயத்துடன் ஒரு புத்தகத்தை ஒப்பிடும் போது சொல்கிறான்: ‘Cesi tuera cela’   (அச்சிடப்பட்ட புத்தகம் மறைமாவட்டப் பேராலயத்தை அழித்தொழித்துவிடும்,அகரவரிசைமுறை கருத்துக்காட்சிப் படிமங்களை மறுத்தொதுக்கிவிடும்).மன்ஹாட்டன் டிஸ்கோதே நிகழ்வை கூடன்பெர்க் கேலக்ஸிக்கு (gutenbeerg galaxy) ஒப்பிடும் போது,மெக்லுஹன் ‘Cesi tuera cela’   எனச் சொன்னார். இக்கருத்தரங்குடன் தொடர்புடையவற்றுள் ‘Cesi (கணிணி) tuera cela’   (புத்தகம்)வும் ஒன்று.

போதுமான அளவில் நாம் புத்தகம் பற்றி அறிந்துள்ளோம்.ஆனால்(கணிணி)என்ன பொருள் குறிக்கிறது என்பது நிச்சயமற்றள்ளது.போற்றுவதற்குரியவர்கள் ஏராளமான தகவல்களை மேன்மேலும் அதிகமாக வழங்குவதற்கும் உதவும் துணைச்சாதனமாக அது விளங்குகிறதா?தாள் போன்றதன் தேவையின்றியே எழுவதற்கும் படிப்பதற்கும் உங்களால் இயல்வதற்குகந்த துணைச் சாதனமாக இருக்கிறதா? அத்த அ-நேர்கோட்டு வலைப்பின்னற் பனுவல்  (hupertext) சார்ந்த அனுபவங்கள் பெறுவதைச் சாத்தியமாக்கும் ஊடகமாக அது இருக்கிறதா?

கணிணி என்ற முறையில் அதன் சிறப்பியல்புகளை குறிப்பிடுவதற்கு,இந்த வரையறைகளில் எவ்வொன்றும் போதுமானதாக இல்லை முதலாவதாக,சிற்ப்பானதாகவும் அகரவரிசை சார்ந்த கருவிகளாகவும் இருக்கின்ற காட்சிவழித் தகவல்முறை கணிணிகளில் நிலவுவதை விட தொலைக்காட்சி திரைப்படம் மற்றும் விளம்பரத்தில் விஞ்சிய மேம்பாட்டுடன் வெளிப்படுகின்றன இரண்டாவதாக,நன்பெர்க் குறித்துரைத்ததைப் போல,கணிணி "புதிய உற்பத்தி முறைகளை உருவாக்குகிறது;அச்சுப்பதிவான ஆவணங்களை எங்கும் விரிந்தும் பரவச்செய்கிறது" மற்றும் மூன்றாவதாக,சிமோனே நமக்கு நினைவுறுத்தியதைப் போல சிலவகை அதீத அ-நேர்கோட்டு வலைப்பின்னற் பனுவல் சார்ந்த அனுபவம்  மற்றும்  வரலாற்றுக் காலகட்டங்களில் உளதாயிருந்து. 

ஏதோ ஒன்று  மற்ற ஏதோ ஒன்றை மறுத்தொதுக்கிறது எனும் கருத்து மிகவும் பழமையானதாகும் அது  ஹியூகோவுக்கும் முன்னதாக மற்றும் வரலற்றின் மத்தியக் காலப்பிற்பாடான மனக்கவலைகளை  ப்ரோல்லோ கொள்வதற்கும் முன்னதாக வந்துள்ளது. பிளாட்டோ தானெழுதிய  Phaedrus (dialogue) -ல்  எடுத்துச்சொல்கிறபடி எழுத்துகலையைக் கண்டுபிடித்தவராக குறிப்பிடப்பட்ட தியூட் அல்லது  ஹீர்மீஸ் தனது கண்டுபிடிப்பை,பண்டைய எகிப்து அரசன் தமஸின் அரண்மனைக்கு கொண்டுவந்து அறிமுகபடுத்தி,மனிதர்கள் வேறுநிலையில் மறந்துவிடக் கூடியனவாக இருப்பவற்றை நினைவில் மீட்பதற்கு இடமளிப்பதாக தனது புதிய எழுத்துக்கலைநுணுக்கத் திறத்தைப் போற்றிப் புகழ்ந்துக் கொண்டார்.ஆனால் அவ்வளவு திருப்தியுறாத அரசன் இவ்விதம் கூறினான்: "கைகோர்ந்த எனது தீயூட்!மாபெரும் நன்கொடையான நினைவைத் தொடார்ந்து பழகுதன்மூலம் அதை உயிர்த்துடிப்புடன் வைத்திருக்க வேண்டும் . உனது கண்டுபிடிப்பை உடன் கொண்டு மக்கள் நெடிதுகாலம் நினைவுத்திறத்தை முயன்று பழக்குவித்துக் கொள்வதற்கு கடமைப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள்பொருள்களை எழுதுவதன் மூலம் நினைவூட்டிக் கொள்ளக் கூடுமெனில்,அது அகவய முயற்சியின் பயனாக அல்லாது,புறவய வழிவகைப் பாற்பட்ட திறத்தின் பயனாகவே விளையும்".

எகிப்து அரசின் கவலைக்கான காரணத்தை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது. எழுத்துகலையானது மற்ற ஏதாகிலும் ஒன்றான புதிய தொழில்நுட்பவழிவகையென அமைந்தது மனித சக்தியை  மாற்றீடு செய்வதன் மூலமும் மீண்டும் செய்ற்படுத்துவதன் மூலமும் அதை உணர்ச்சியற்ற தன்மை கொள்ளச் செய்து கழிமடிமை வாய்ந்தாக ஆக்கி இருந்திருக்க வேண்டும் -நடந்து செல்வதற்கு முன்னிலும் குறைவன வல்லமையே உடையோராக நம்மை கார்கள் ஆக்கியுள்ளதைப் போலவே மனிதர்களை உணர்ச்சியற்ற கல்லாக விறைக்கச்  செய்து ,அவர்களின் மனதை நகைப்பிற்கிடமான கேலிச்சித்திரமாக்கி,விலங்குகளுக்கும் உரிதைப்போன்ற நினைவுடைதாக்கிப் பலியாகத் தருவதன் மூலம் மனிதின் ஆற்றல்களை குறைவுறச் செய்வதன் காரணத்தால்,எழுத்துத்திறனானது அபாயம் விளைப்பதாக இருந்தது.

பிளாட்டொவின் பனுவல் வஞ்சப்புகழ்ச்சி சார்ந்தது,இயல்பானது எழுதலுக்கு எதிராக அவர் எழுத்து மூலமாகக் குறித்து வைத்தார். ஆனால் எழுத்து மூலம் பதிவு செய்யாத சாக்ரடீஸினுடன் தொடர்புடையமுறையில் தனது ஆய்திற வாதத்தை நிறுவுகிறவராக பாசாங்கு செய்கிறார் (எழுதி வெளியிடாததால், சாக்ரடீஸ் அழிவுக்கு ஆளாகியது கல்விநிறுவனஞ்சார்ந்த நோக்கில் தெளிவாகிறது).எனவே பிளாட்டோ தனது வாழ்நாளில் எஞ்சிப் பிழைத்திருப்பதர்கான அச்சமதிப்பை வெளிப்படுத்துகிறார் சிந்திப்பது அகவயமாய் சம்பவிப்பது உண்மையான சிந்தனையாளர் புத்தகத்தை அவருக்குப் பதிலாக சிந்திப்பதற்கு அனுமதிக்கமாட்டார்.

இன்றைய நாட்களில் இரு மிக சாதராணமான  காரணங்களினால் எவரும் இவ்விதப் அச்சமதிப்புகளைப் பகிர்ந்து கொள்வதில்லை முதலாவதாக  நமது இடத்திற்கு பதிலாக மற்ற எவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டுகிற வழிகளாக புத்தகக்கள் இல்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம் முற்றிலும் மாறாக அவை இன்னும் மிகுதியான  எண்ணங்களை கிளர்த்தும் இயந்திரங்களாக இருக்கின்றன . எழுத்துகலை கண்டுபிடிக்கப்பட்ட பின்னரெ,தானாக இயல்கிற நினைவைப் பாடுபொருளாக ஏழுதொகுதிகளில் கொண்ட மிகபுகழ்பெற்ற  தலைச்சிறந்தபடைப்பான 'இழந்தக் காலத்தைத் தேடிக்கொண்டிருந்தால்'  (Recherche du temps perdu)   எனும் அத்தகை நாவலை ப்ரவ்ஸ்ட் எழுதுவதற்குச்சாத்தியமானது.இரண்டவதாக முன்பொரு காலத்தில் மக்கள் பொருள்களை  நினைவுப்படுத்திக் கொள்வதற்காக நமது நினைவைத் தொடர்ந்துப் பழக்குவித்துக் கொள்ள வேண்டியவர்களாக இருந்த நிலையில் எழுத்துக்கலைகண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் புத்தகங்களை நினைவில் கொள்ளும் பொருட்டு நமது நினைவுதிறத்தை முயன்று பழக்குவித்துக்கொள்ள வேண்டியவர்களயினார்.புத்தங்கள்  நினைவிற்கு உரிமை கோரி,நினைவை மேலும் சிறந்து வளரச்செய்கின்றன; அவை நினைவை மயக்க மருந்தின்செயலுக்கு உட்படுத்துவதில்லை.

ஒருவர் எப்போதும் அந்த பழைய தர்க்கத்தை நெடுநீளாய்வு செய்ய உரிமை வாய்ந்தவராகிறார் எனில் ஒருவர் புத்தங்களுக்கு பதிலியாக பாசாங்கு செய்கிற அல்லதுதோற்றமாளிக்கிற புதிய தகவலறிப்பு  (communication)   கருவியை சென்றடைகிறார். இந்த கருத்தரங்கின் போக்கில், 'புத்தகத்தின் எதிர்காலம் ' என்ற தலைப்பின் கிழ்,பின்வரும் வெவ்வேறான வகை மாதிரி  பற்றி விவாதிக்கப்படுகிறது புத்தங்கள் தொடர்புடைவை அவற்றின் எல்லாமும் விவாதிக்கப்படவில்லை.

கருத்துக் காட்சி படிமங்கள்  Vs  அகரவரிசை சார்ந்த கலாசாரம்

நமது சமகாலத்தியக் காலசாரம் குறிப்பாய் கருத்துக் காட்சி படிமம்  (image) சார்ந்ததாக அமைந்ததல்ல கிரேக்க அல்லது மத்தியகாலச் கலாச்சாரத்தைச் சான்றாக எடுத்துக்கொண்டால் அந்த காலங்களில் எழுத்தறிவு வரையறுக்கப்பட்ட உயர்ந்தோர்  குழாமிற்கே (ஒதுக்கபட்டதாக இருந்தது மற்றும் பெரும்பாலான மக்கள்(சமயப்பற்று,அரசியல்,நன்னெறி ஆகியன சார்ந்த முறையில்) கருத்து காட்சிப் படிமங்களினூடே பேணிப் பயிற்றுவிக்கப்பட்டு வளர்ந்தவர்களாக ,விவாதத்தில் மெய்ப்பித்துக் காட்டுபவர்களாக விளங்கினார்கள் இருந்த போதிலும் ,அமெரிக்கவில் வெளியீடாகும் சஞ்சிகை Today -ல் போல்டென்சான்றாய் , சிற்றுருக்களாக தீட்டப்பட்ட ஒவியப்படங்கள் பேசுவது போல் சுருக்கமான விளக்க வாசங்கள் சுவடிச் சுருள்களில் பல  அச்சு முறையில் மத்தியக் காலங்களில் பிற்பாடு பதிப்பிக்கப்பட்ட ஏடான ஏழைகளின் விவலியத்துடன் (Biblia pauperum) ஒப்பிட்டால் சஞ்சிகை Today -ல் போற்றப்படும் பிரபலங்களின் உருவப்படங்களும் மற்றும் தகவலறிவிப்பான எழுத்துப் பதிவுகளும் சம அளவில் கலந்தமைந்திருக்கிறது ஏராளமான மக்கள் ,தொலைக்காட்சி பார்ப்பதிலேயே அவர்களின் நாளை செலவழிப்பதாகவும் புத்தகத்தையோ செய்திகளையோ படிப்பதில்லை என்றும் குறை கூறுகிறோம் இது நிச்சயமாய் சமுக மற்றும் கல்வி சார்ந்தபிரச்சனைதான் ஆனால் நாம் அதே மக்களை அடிக்கடி மறந்துவிடுகிறோம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர்கள் பெரும்பாலும் பொதுநிலையாக நிர்ணக்கப்பட்ட வெகுசில கருத்துக் கருத்துக் காட்சிப்படிம்மங்களையே கண்டிருந்தார்கள்.அவர்கள் முற்றிலும்  எழுதப்படிக்க தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

நாம் அடிக்கடி மெம்போக்கான மற்றும் வழக்கமான பழம்பாணியிலுள்ள "வெகுமக்கள்-ஊடகம் பற்றிய வெகுமக்கள்-ஊடக விமர்சனத்தில்" தவறான வழியில் இட்டுச் செல்லப்படுகிறோம் .வெகுமக்கள்-ஊடகம் நமது வரலற்றுக் காலகட்டம் பற்றி இன்னமும் கூறியது கூறுதலாக கருத்துக்கட்சிப் படிம்மங்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாக இருக்கிறது.அது மெக்லுஹனின் முதலாவது தவறான வாதமாக  இருந்தது.வெகுமக்கள்-ஊடகம் சார்ந்தவர்கள் மெக்லுஹனை மிகத் தாமகமாகவே படித்தனார் தற்போதையே மற்றும் வரவிருக்கிற இளம் தலைமுறையினார் கணினி சார்ந்த தலைமுறையினராக  இருக்கின்றனர் அவ்வாறே இருப்பவர்கள் .கணினிதிரையின் அகரவரிசை சார்ந்தவர்களே இருப்பர்கார்கள் ,கருத்துக்காட்சிப் படிமம் சார்ந்தொராகவே இருக்கமாட்டர்கள்.நாம் மீண்டும்  கூடன்பெர்க் கேலஸிக்கு  திரும்பி வந்து கொண்டிருக்கிறோம் .மற்றும் உயர்தரமான தகவல் தொழில்நுட்பங்கங்களையும் பலவகை ஊடகத் தொழிநுட்பங்களையும் விற்பது தொடர்பாகஆப்பிள் ரஷ் கூட்டிணைப்புக் கழக வர்த்தக நிறுவனமானது, அமெரிக்கவில் கணினி சார்ந்த உச்சவுயர் தொழில்துறை விஞ்ஞான நிறுவனங்கள்  உள்ள சிலிகான் வாலிக்கு சென்றடைந்த வரை மெக்லுஹன்தொடர்ந்து நிலவிலிருந்து அவர் இந்த பொதுநிலை  கடந்த நிகழ்வைப்பாராட்டி ஏற்றுக்கொண்டு இருந்திருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

மேலும் புதிய தலமுறையினர் நம்புதற்குரிய விரைவுயுடன் படிப்பதற்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள்.பழம்பாணியரான ஒரு பழ்கலைக்கழகப்பேராசிரியர் இன்று இளைஞ்ர்கள் படிக்கும் அதே விரைவில் கணிணித் திரையை  படிப்பதற்கு ஏலாதவராக இருக்கிறார் இந்த இளைஞர்கள் எதேச்சையாக அவர்களின் சொந்த வீட்டு  உபயோக கணிணியில் ,திட்டநிகழ்நிரலை  (programவகுத்து கொள்ள  விரும்பினார்கள்  என்றால் அவர்கள் காரணகாரியத் தொடர்புடையசெயல்முறைகளையும் முன்னெற்பாடான திட்டம் படிப்படியாக நிகழ் கொள்வதற்குரிய அரபிய பதின்முறை இலக்கமான கணக்கியலையும் (algorithm)  கட்டயமாக அற்ந்துக்க அல்லது கற்றிருக்கவண்டும் மற்றும் விசைப்பலகையில் வெகுவிரைவாக சொற்களையும் எண்களையும் தட்டச்சு செய்ய வல்லோராக இருக்க வேண்டும்.

எண்பதுகளின் காலப்போக்கில் சிலர் கவலை அடைந்தார்கள்.அமெரிக்கவில் எழுத்தறிவு படிப்படியாய் குறைவுறுவதைப்பற்றியவிசனமிக்கப்.பொதுமதிப்புரைகள் வெளியாகின வால் தெருவில் கடைசியாக ஏற்பட்ட வாணிக  நொடிப்பிற்கான காரணாங்களில் ஒன்று ஆவதணிகள்பலரின் கருத்துபடி கணிணிகளிடத்தில் மிகைப்பட்ட நம்பிக்கை வைத்திருந்தல் மட்டுமல்லாது , பங்கு-மாற்று வாணிகத்தை கட்டுப்படுத்தும் ஆட்சியாற்றலூடைய யுஹ்பீக்களில்  (Yuppies) எவ்வெவரும் 1929ஆம் வருடத்தில் வாணிக நெருக்ககடி குறித்து போதுமான அளவிற்கு உண்மையில் அறிந்திருகாததும்தான் வரலாற்று தகவல் இல்லாக் குறையோடு அவர்களிருந்ததால், வாணிக நெருக்கடி ஏற்பட்ட போது,அது தொடர்பாய் வாணிக முறையில் செயலேற்க அவர்களால் இயலவில்லை 1929ஆம் வருடத்தில் வாணிகநொடிப்பு நிகழ்வான  Black Thursday  பற்றிய சில புத்தங்களை அவர்கள் படித்திருந்தால்,நல்ல முடிவுகளை எடுத்திருந்திருக்கவும்,குறிப்பிடதக்க பல ஆபத்தான இடறு குழிகளில் வீழ்வதை தவித்திருக்கவும் அவர்களால் இயன்றிருக்கும்.

ஆனால் தகவல்கள் தேடிப் பெறுவதற்கு புத்தகங்கள் மட்டுமே நம்பந்தக்க ஊடகமாக நிலவி இருந்திருக்க வேண்டும் என்ற நிலையை பார்க்கும் போது நான் வியப்படைகிறேன் பல வருடங்களுக்கு முன்பு அயல்மொழியை (தாயகத்தை விட்டு நீங்கி,அயல்நாட்டுக்குச் சென்றுள்ள பயண காலத்தில்) கற்றுக் கொள்வதற்கு ஒரே வழி ஒரு புத்தகத்திலிருந்து அந்நாட்டின் மொழியைப் படித்து,ஆர்வமுற்று ,கூர்ந்து பயில்வதுதான்.இப்போது நமது குழந்தைகள் அடிக்கடி மற்ற மொழிகளை ஒலிப்பதிவுநாடா அல்லது குறுந்தகட்டைஉற்றுக்கட்ப்பதன் மூலம்,திரைப்படங்களை அவற்றின்மூலப்பிரதியில் பார்ப்பதன் மூலம் அல்லதுபானவகையின் டப்பியில் அச்சாகியுள்ள நெறிமுறை விவரக்குறிப்புகளின் அர்த்தத்தைக்கண்டுபிடிப்பதன் மூலம் கற்றுக் கொள்கிறார்கள். புவியியல் தகவல்களை அறிவதிலும் அவ்வாறே நிகழ்ந்து.அயற்பண்புடைய வேற்றுநாடுகள் பற்றி பாடப்புத்தகங்கள் மூலம் அல்லாது வீரசாகஸங்கள் நிறைந்த நாவல்களை வாசிப்பதன் மூலம்(எடுத்துக்காட்டாக,ஜூலைஸ்வெர்ன்,அல்லது எமிலியோ சல்கரி,அல்லது கார்ல் மே ஆகியோர் எழுதிய நாவல்களிலிருந்து) நான் கற்றறிருந்தேன். அதே தகவல்களை எனது குழந்தைகள் என்னை விடவும் மிகுதியாக வெகுமுன்னதாகவெ தொலைக்காட்சியையும் திரைப்படங்களையும் காண்பதன் மூலம் அறிந்துக் கொண்டு விடுகிறார்கள்.

வால் தெரு யுஹ்பீக்களின் எழுத்தறிவின்மையானது புத்தங்களைப்படிக்கப்பெறுவதற்கு போதாமையுற்றதால் மட்டுமின்றி,கருத்துக் காட்சிப் படிமங்கள் மூலம் கற்றறிவதற்கும் போதாமையுற்றதால் ஏற்பட்டதாகும். 1929ஆம் வருடத்திய வாணிக நொடிப்பு  பற்றிய புத்தங்கள்  உருவாகியிருக்கின்றன. அவை இன்னும் குறித்த காலங்களில் வெளியிடப்படுகின்றன.((யுஹ்பீக்கள் புத்தகக் கடைக்கு செல்வோராக இல்லாததன் பொருட்டு கட்டாயம் குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்களே.) அதே சமயம் வரலற்று நிகழ்வுகளை அணுப்பிழையாது கவனித்து மறுஆய்வு செய்து  திருத்தலுடன் நடமுறையில் சம்பந்தமில்லாதவையாக தொலைக்காட்சியும் திரைப்படமும் இருக்கின்றன ஒருவர் ரோமானிய சாம்ராஜியம் பற்றி வரலாற்றுரீதியாக சரியாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள்  மூலம் கற்றறிய  இயலும்  ஹாலிவுட்டின் குறைபாடு டேசிடஸ் அல்லது கிப்பான் எழுதிய  புத்தங்களுக்கு எதிரானதாக அதன் திரைப்படங்களைபெற்றிராததுதான் ஆனால் இன்னும் சரியாக சொல்லுமிடத்து அது டேசிடஸ் மற்றும் கிப்பான் இவ்விருவருடைய மலிவான ஜனரஞ்சகமும் நிஜமற்ற்தன் சாயலும் நம்பமுடியாத நிறைந்த சாணித்தால் நாவல்களான பல்ப்-பிக்ஷன்களை  கவர்ச்சியூட்டும் பிரமாண்ட திரைப்படங்ளை வெளியிடுவதுதான் யுஹ்பீக்களுடனானபிரச்சினை அவர்கள் புத்தங்களைப் படிப்பதற்குப் பதிலாக தொலைக்காட்சியை பார்த்ததுதான் பொதுஒலிஒளிப்பரப்பு மட்டுமே கிப்பான் யாரென்பதை எவெரேனும் அறிந்துக் கொள்வதில் ஒரே இடமாக இருந்தது.

இன்றுஎழுத்தறிவு பற்றிய பொதுக்கருத்து பல நிலைகளைக் கொண்டிருக்கிறது எழுத்தறிவு புகட்டுவதற்குரிய செயல்முறைக் கொள்கை இந்த எல்லா ஊடகங்களின் சாத்தியங்களையும் கவனத்தில் கொள்வது மிக அவசியமாகும். ஊடகம் முழுமைக்கும் கல்வி நலங்கள் சார்ந்த  தொடர்பு கட்டாயமாக விரிவுப்படுத்தப்பட வேண்டும் பொறுப்புகளும் பணிகளும் ஒப்ப அமைந்த முறையில்  ஈடேற்றப்பட வேண்டும் மொழிகளை புத்தங்கள் மூலம் கற்பதைவிட ஒலிப்பதிவு நாடாக்கள் மூலம் கற்பதே  சிறந்ததெனில் நாடாக்களைப் பத்திரப்படுத்துங்கள் மனிதத் தகவலறிவிப்பின் பிரபஞ்ச மொழியாக 18-ஆம் நூற்றாண்டில் சோபின் அமைந்துருவாக்கில் மகோன்னத நுண்நய இசை முழுமைக்கும்விளக்க வர்ண்னையுடன வழங்கும் குறுந்தகடுகள் மக்களுக்கு சோபினை அறிந்து கொள்ள உதவினால் ,சோபினின் இசை வரலாறு பற்றிய புத்தகத்தின ஐந்து தொகுதிகளையும் விலைக்கு வாங்காததற்கு அவர்கள் கவலைப்பட வேண்டாம் காட்சிவழி , தகவலறிவிப்பிற்கு எதிராக எழுந்துரிதியானவற்றை கருதுவதும் கூடபிரச்சினையாக இருக்கலாம் பிரச்சினை எப்படி இவ்விரண்டையும் மேம்பாட்டையச்செய்யப் போகிறோம் என்பதே மத்தியக் காலங்களில்  காட்சிவழி தகவலறிவிப்பு பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரை எழுதப்பட்டவற்றை விடவும் மிக முக்கியமானதாக இருந்து ஆனால் அண்டப் படைப்புக் கோட்பாடு வான்கோளங்கள் மற்றும் வானிலை குறித்தும் காலக்கணிப்பு முறை குறித்தும் 18-ஆம் நுற்றாண்டில் கிறித்துவசமய இறைமை ஆய்வியல் நூலறிஞர்  ஹானரியஸ் ஆஃப் ஆட்டுண் எழுதிய  ImageMundi.  -ஐ விடவும் சார்ட்ரெஸ் மறைமாவட்டப் பேராலயம் கலாசாரரீதியில் தாழ்ந்ததாக  இல்லை அந்தக் காலங்களில்` தொலைக் காட்சியாக மறைமாவட்டப் பேராலயங்கள் செயலாற்றின நமதுதொலைக்காட்சியிலிருந்து வேறுபாட்டதான அந்த மத்திய காலத் தொலைக்காட்சியின் நெறியாளுநர்கள் நல்ல புத்தங்களைப் படித்து ஏரளமான     படைப்புத்திறன் உடையவர்களாக பொது நலனிற்காகப் பணிசெய்தனர் (அல்லதுகுறைந்தபட்சம் பொதுநலன் என்று அவர்கள் எதை நம்புகிறார்களோ அதன் நிமித்தம் பணிசெய்தனர்).

புத்தங்கள்  Vs   மற்ற ஆதாரமானங்கள்

தனிவேறுபட்ட இரு கேள்விகள் பற்றிய குழப்பம் அங்கே நிலவுகிற்து:(!) கணிணிகள் புத்தங்களாக  ஆக்கப்பட்டவற்றை வழக்கற்றுப் போகச் செய்து விடுமோ? (!!) கணிணிகள் எழுதிவைக்கப்பட்டிருக்கிற மற்றும் அச்சாக்கப்பட்டப் பிரதியை வழக்கற்றுப் போகச் செய்து விடுமோ?

கணிணிகள் புத்தகங்களை மறையச் செய்து விடும் என்று வைத்துக் கொள்வோம் (இது விரிவாகச் சொல்லிவிருக்கிறேன் ஆனால் விவாதத்தின் பொருட்டு உண்மையென்று வைத்துக் கொள்வோம்).இன்னும் இது அச்சாக்கப்பட்ட பிரதியின் மறைவை பயனாக ஏற்படுத்தப்போவதில்லை. கணிணிகள்,குறிப்பாய்  World Processors  கலைப்படைப்பை அல்லது கட்டுரையை எழுதுதல் திருத்தியமைத்தல்,வகுத்துத் தொகுத்தல் வடிவமைத்தல் மற்றும் கூடுமான வரையில் அச்சிடுதல் உட்பட அச்சில் வெளியிடுவதற்குகந்தவற்றை உண்டக்குவதற்கு உதவுவதன்மூலம் அவை மரங்களைக் காப்பாற்ற உதவியிருந்திருக்க வேண்டும் என்னும்  நம்பிக்கைக்கு ஏதுவாயிருப்பதை நாம் பார்த்தோம் கணிணிகள். அச்சுப்பிரதி உற்பத்தியாவதற்கு ஊக்கமூட்டுகின்றன. புத்தங்களே. இல்லாத கலாச்சாரத்தை நம்மால் கற்பனை செய்து பார்க்கவியிலும். என்ற போதிலும்  அங்கே மக்கள் டன் கணக்கில அகன்ற தாள்களைக் கட்டுக்கட்டாக சுமந்து கொன்டு இங்குமங்கும் செல்கிறார்கள் இது உண்னையில் எளிதில் கையாள முடியாததாக,நூலகங்களுக்கு திகைப்பூட்டி திணறச் செய்யும் புதிய பிரச்சினையாக உருவெடுக்கக் கூடும்.

எபிரேய நாகரிகம் அது நாடோடி நாகரிகமாக இருந்ததெனும் உண்மைச் சார்ந்திராமல்,ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டமைந்த நாகரிகமே எனும் உண்மையை டீபிரே நுணுகிக் கண்டுச் சொன்னார். அவரின் = = குறைஎடுத்துரைப்பான இக்கூற்று மிகமுக்கியமானது என்று நான் எண்ணுகிறேன்.எகிப்தியர்கள் தம் ஆவணவிவங்களை நிலைச்சான்றாக சதுரக்கல்தூபிகளில் செதுக்க முடிந்தது,மோசிஸினால் அவ்வாறு செய்யமுடியவில்லை.நீங்கள் செங்கடலைக் குறுக்காகக் கடக்க விரும்பினால்,அனுபவ மெய்ம்மைகளை பதிவு செய்ததன் காரணமாய்,காரியத்திற்கு மிகப்  பயன்படுகிற சாதனமாக ஒரு புத்தகம் விளங்குகிறது.இன்னொரு நாடோடி நாகரிகமான அராபிய நாகரிகமும் ஒரு புத்தகந்தை அடிப்படையாகக் கொண்டமைந்ததுதான்;அது கருத்துக்காட்சிப் படிமங்கள் மிசைய எமுதப்படுவதற்கு தனிச் சுதந்திரம் அளிக்கப்பட்டதாக விளங்குகிறது.

கணிணியைப் பற்றிய வகையில்,புத்தகங்களும் பயன்பயப்பதாக உள்ளன. திராவகப் பரப்பில் அச்சுப்பதிவான போதிலும்,அவை எமுபது வருடங்களுக்கு அல்லது அதற்குச் சற்றேறக் குறைந்த அளவாக மட்டுமே நீடித்திருக்கின்றன. மற்றும் அவை காந்தசக்தியுள்ள ஆதாரமானங்களை   (Supports)  விட இன்னும் கூடுதலாய் நீடித்துழைக்க இயல்வனவாக இருக்கின்றன. மேலும் மின்சாரப் பற்றாக்குறைகளால், முமுவிளக்கணைப்பு போதான மின்வெட்டுகளால் அவை பாதிப்படைவதில்லை. அவை அதிர்ச்சிகளைத் தாங்கும் உறுதியானத் தடையமைவைப் பெற்றுள்ளன. போல்டெர் குறிப்பிட்டுச் சொன்னதைப் போல,"அது சில வருடங்களுக்கு வெகுமுன்னதாகவே தொழில் துறை விஞ்ஞானம் சார்ந்த மாற்றம் பற்றி வருவதுரைக்க முயறசிப்பதற்கு முன்னாய்வற்றதாக உள்ளது." ஆனால் குறைந்தது இப்போது வரை,மிக்ச் குறைந்த செலவில் அமைந்து,= ஆடையை வெளுத்து அணிவதான வழிமுறைப்பில் தகவலைக் கடத்துவனவாக இருப்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

மின்னணுத் (electronic) தகவல்தொழில்நுட்பம் உங்களுக்கு முன்னாகப் பயணிக்கிறது;புத்தகங்கள் உங்களுடன் உங்களுடைய வேகத்தில் பயணிக்கின்றன. உங்களின் கப்பல்  பாலைநிலத் தீவில் தகர்ந்து பாடழிவுற்றால்,அப்போது ஒரு புத்தகம் உங்களுக்கு பயனளிக்கக் கூடியதாக இருக்கும்,அதே சமயம் கணினி பயன் பயப்பதாக இருக்காது - லேண்டோ குறிப்பிட்டுச் சொன்னதைப் போல,மின்னணுப் பனுவல்களுக்கு வாசிப்பு நிலையமும்,குழூஉக் குறிகளை மறைவிடுத்துப் பகர்க்கும் கருவியும் தேவைப்படுகிறது. கப்பல் பாடழிவுற்ற நிலையிலும் அல்லது அந்நாளிற்க்குப் பிறகும் புத்தகங்களே இன்னமும் மிகச்சிறந்த துணைவர்களாக இருக்கின்றன்.  

கலைக்களஞ்சியங்கள்,கையேடுகள் போன்ற பலவகைப்பட்ட புத்தகங்களை புதிய தொழில் துறை விஞ்ஞானங்கள் நடைமுறையில் வழக்கற்றுப் போகச் செய்து என்று நான் பெரிதும் உறுதியாக நம்புகிறேன். ஹாரிசான்ஸ் அன்லிமிட்டெடு நிறுவனத்தால் படிப்படியாய் தோற்றுவிக்கப்பட்ட கலைக்களஞ்சியத் திட்டத்தை எடுத்துக்காட்டாய்க்கொள்வோம். அது முடிவடைந்த போது அநேகமாய்   Eneyclopaedia Britannica  (அல்லது ட்ரெக்காணி அல்லது லாரவ்ஸ்)-வை விட அதிகத் தகவல்களை உள்ளடக்கியதாக,மீட்பு வாய்ப்புக்குரிய அ-நேர் கோட்டு முறையில் குறுக்கு மேற்கோள்களுக்கும் தகவல்களுக்கும் இடமளிக்கிற பயன்பாடு மிக்கதாக அமைந்தது ஒரு கலைக்களஞ்சியம் ஆக்கிரகிப்பதில் ஒன்றீல் ஜந்துப் பங்களவை குறுந்தகடுகள் முமுமையும் அவற்றுடன்கூட கணிணியும் ஆக்கிரக்கும்  CD-Rom போல கலைக்களஞ்சியத்த்தை இடம் விட்டு இடம் கொண்டு செல்வது ஆகக் கூடியதல்ல மற்றம் காலத்துக்கு ஒத்த வகையில் அவ்வப்போது தகவல்களைச் சேர்த்து அமைந்தலும் எளிதில் செய்யக் கூடியதல்ல;பொதுமாதிரியான புத்தகதின் நடைமுறைஅனுகூலங்களை அது பெற்றிருக்கவில்லை. எனவே அது ஒரு தொலைபேசிப் புத்தகந்தினால் திருப்தியாய் செய்யக் கூடுவதைப் போல CD-Rom -ஆல் மாற்றீடு செய்யப்படக் கூடுவதாகிறது. எனது வீட்டிலும்,அதைப் போலவே நூலகங்களிலும் நிலையடுக்குகளில் இன்று மீட்டர் கணக்கில் ஆக்ரமித்துள்ள கலைக்களஞ்சியத் தொகுதிகள் எல்லாம் அடுத்த யுகத்தில் விட்டொழிக்கப்படக்கூடும். அவற்றின் மறைவிற்காகப் புலம்பி வருந்துவதற்கு அங்கே எந்த காரணமும் இருக்கப் போவதில்லை.அதே காரணத்தை முன்னிட்டு இன்று விரும்புவெப்பற்ற ஒரு ஓவியர் வரைந்த கனத்த உருவோவியம் இன்னுமும் நீடித்து எனக்குத்தேவையாக இருக்கப்போவதில்லை. அதற்கு பதிலாக நான் எனது காதலிக்கு பளபளப்பான பற்றார்ந்த புகைப்படத்தை அனுப்பிவிடமுடியும்: அது போன்ற மாற்றம் ஒவியம் தொடர்பான சமூகச்செயல்முறைகளில் நிலவுவதானது ஒவியத்தை வழக்கற்றப் போகச் செய்து விடவில்லை. அன்னிகோனியின்  யதார்த்தவகை ஒவியங்களும் கூட ஒரு     நபரை உருவமாகத் நீட்டும் செயல்முறையில் முற்றிலும்  இசைவுற்றதாக அமைந்திருக்கவில்லை மாறாக முக்கியமான ந்பரைப் போற்றிப் புகழ்வதாக அவை அமைந்துள்ளன வேண்டலறிவிப்பிற்கும் விலையிற்  கொள்ளுதலுக்கும் ஏற்ப காட்சிக்குவைக்கப்படும்  அத்தகைய உருவோவியங்கள் உயர்குடியினர் பண்பியல்புகளை குறிபிலூணர்ந்துவனகாக அமைந்துள்ளன.

புத்தங்கள் தவிற்கமுடியாதவனாக தொடர்ந்து நீடிப்பனவாக இருப்பது மொழிவகையில் நடைநயம் கலைச்சுவை வாய்ந்த இலக்கியமாக இருக்கின்றன என்பதால் மட்டுமல்லாது, எந்த ஒரு சூழ்நிலையிலும் கவனமுடன் படிப்பதற்கும் தகவல்களைப் பெறுவதற்கும் ஆழ்ந்து சிந்தனை செய்வதற்கும் அவை தேவைப்படுகின்றன்.

கணிணித் திரையைப் படிப்பது புத்தகத்தைப் படிக்கிற அதே போன்றதல்ல. மென்பொருளின் (Software) ஒரு பகுதியை எவ்விதமும் உபயோகிப்பது என்பதைக் கற்றுக் கொள்ளும் நிகழ்முறை பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்  மென்பொருள் மற்றும் அதனைச் சுற்றியளாவும் பலவேறு கருவிகளும் சேர்ந்து கணிணியைச்செயற்படுத்துவும் ஒருங்கியக்கு முறைவி (System) வழக்கமாய் உங்களுக்குத் தேவையான எல்லா நெறிமுறைகளையும் திரையில் காட்சிப்படுத்த வல்லதாக இருக்கிறது ஆனால் கணிணியின் திட்டநிகழ்நிரலைக் கற்றுக்  கொள்ள  விரும்பும் உபயோகிப்பாளார்கள் பெரும்பாலும்  கணிணியிலிருந்து  நெறிமுறைகளை அச்சிட்டுக்கொண்டோ அல்லது புத்தக வடிவில் அவை இருப்பதை போன்று கருதியோ அவற்றை படிக்கிறார்கள் அல்லது அச்சிட்ட வெளியீடான வழிகாட்டுங்கையேடு வாங்கி அவர்கள் படிக்கிறார்கள் (நடமுறையில் கணிணி உடனாக வழிகாட்டுங்கையேடுகள் (manual) அனைத்தும் பொறுப்பற்ற முறையில் ஒரே வாக்கியத்தில் சொன்னதையே பயனில் அடுக்காக மீண்டும் வேறு சொற்களில் கூறும்  மூடர்களால் எழுதப்படுவது எளிதில் காணக் கூடியதாக உள்ளதை நான் படிக்கமல் விட்டு தாவி செல்கிறேன் அதே சமயம்  வாணிகம் சார்ந்த வழிகாட்டுங்கள் விவேகமானவர்களால் எழுதப்படுக்கின்ற்ன) வரையுருவக்கலைப் பயன்படுத்தி  காட்சிவழித் திட்டநிகழ்நிரலானது (Visual Program) எம்முறையில்  புத்தகத்தை அச்சிடுவது எம்முறையில் புத்தகத்தை ஏடுகாட்டுவது என்பன பற்றி மிக நன்றாகவேவிவரிப்பதை எண்ணிப் பார்பபது சாத்தியமானதுதான் ஆனால் அத்தகைய கணிணித் திட்டநிகழ்நிரலை எப்படி எழுதுவது என்பதற்கான நெறிமுறைகளைப் பெறும் பொருட்டு அச்சிட்ட வெளீடான வழிகாட்டுங்கையோடு நமக்கு தேவைப்படுகிறது.

விசைபலகைவிசைத்து கணிணித் திரை முன் பன்னிரண்டு மணி நேரத்திற்கும் குறையாமல் செலவழித்தப் பிறகு,எனது கண்கள் டென்னிஸ் பந்துகள் போல ஆகிவிட்டன கைப்பிடிகளுள்ள நாற்கலியில் வசதியாக உட்கார்ந்து கொண்டு நான் ஒரு பத்திரிக்கையை அல்லது ஒருவேளை நல்லதொரு கவிதையைப் படிக்க வேண்டிய தேவையுணர்ந்தேன். கணிணிகள் எழுத்தறிவுக்குரிய புதிய வடிவத்தை எங்கும் பரவச் செய்வதாக எனக்குத் தோன்றுக்கிறது; ஆனால் அவை உண்டுபண்ணுகிறௌள்தூண்டுதலின் அறிவுத்திற நோக்கிய தேவைகள் யாவற்றையும் திருத்திப்படுத்த ஏலாத்தாக உள்ளன. நான் நன்மை விளைவில் நம்பிக்கை வைத்திருந்த கால கட்டங்களில் நான் ஒரு கணிணித் தலைமுறையைக் கனவு கண்டிருந்தேன் அவர்கள் கணிணித் திரையை படிக்க நிர்பந்திக்கப்பட்டு, திரையிலிருந்து படிப்பதற்கு பரிச்சயம் பெற்று, ஆனால் குறிப்பிட்டதொரு தருணத்தில் மனநிறைவுறாமல் வேறுபட்டதும் பதற்றத்தை இன்னும் குறைப்பதும் வேறுமுறையில் இடப்பாடுடையதுமான படிப்பின் வடிவத்தை எதிர்பார்த்துள்ளார்கள்.

புத்தக வெளியீடு  Vs  தவலறிப்பு

மக்கள் ஒருவர் இன்னாருவருடன் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஆவலுற்றார்கள். பழைய காலத்தில்  அவற்றை வாய்மொழியாகப் பகிர்ந்தனர் மிகவும் சிக்கலான சமுதாயத்தில் அவர்களவற்றை புத்தகமாக அச்சாக்கி வெயிடுவதன் முலம்  செய்தார்கள் புத்தகக் கடையில் கட்சிப்படுத்தியுள்ள மிகப்பெரும்பாலான புத்தகங்கள் ஆரவாரப் பகட்டன அச்சுத்துறையின் பதிப்புகளை வரையறுக்கப்படக் கூடியவையாக உள்ளன. லேண்டோ குறிப்பாய் தெரிவித்தன்படி, நாம் புதிய சமிஷ்டட்  (samizdhat) சகாப்பத்தில் நுழைந்து கொண்டிருக்கிறோம் புத்தக வெளியீட்டு நிறுவனங்களின் இடையீடு இல்லாமலே மக்கள் நேரடியாக தகவலறிப்பு செய்து கொள்ளவியலும். அறிவாற்றலில் மிகச் சிறந்த பலர் புத்தகம் வெளியிட விரும்புவதில்லை; அவர்கள் தம் ஒவ்வொருவருடனும் எளியமுறையில் தகவலறிப்பு செய்து கொள்ளவே விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் அதை மின்னஞ்சல் (E-Mail) அல்லது இனையம் (Internet)  வழியாக செய்து கொள்வார்கள் என்பது புத்தங்களும் கலாச்சரத்திற்கும் புத்தகச் சந்தைக்கும் மாபெரும்  வரமாக அமையும் புத்தகக் கடையைப் பாருங்கள் அங்கே ஏரளமான புத்தங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாரமும் நான் பல புத்தங்களைப் பெற்றடைகிறேன். கணிணி வலைமைப்பு (network) புத்தங்கள்   வெளியிடப்படும் அளவைக் குறைப்பதில் வெற்றி கண்டுள்ளது இது மேதகவான கலாச்சார வளர்ச்சியாக அமையக் கூடியதாகும்.

கணிணிகள் போன்மை- எழுத்தறிவிற்கு(pseudoliteracy) எதிரான மிகப்பல ஆப்சேபங்களில் ஒன்று ,இளைஞர்கள் மறைபொருளான சிறுசூத்திரங்கள் வாயிலாகப் பேசுவதற்கு மிகமிகுதியாக பழகிக் கொண்டு விடுவார்கள்  என்பதே: dir,help,diskcopy,error67  மற்றும் இன்னும் பல அது இன்னும் எழுத்தறிவுக்கு உரியதாக இருக்கிறதா? நான் அபுர்வ புத்தங்களைச் சேகரிப்பவன். 17-ஆம் நூற்றாண்டு தலைப்புகளை படிக்கும் போது நான் பேருவகைக் கொள்கிறேன் அவை ஒரு பக்கத்தில்,சில சமயங்களில் அதற்கும் அதிகமான பக்கங்களில் காணப்படும் அவை லினா வெர்ட்டுல்லரின் திரைப்படங்களைப் போன்று காணப்படும்  அறிமுகவுரைகள் அநேக பக்கங்களுக்கு நீண்டதாக இருக்கும். மிகச்சிறந்த விலாசதாரரை வழக்கமாய் சாம்ரஜியச் சக்கரவர்த்தியை அல்லது போப்பைப்புகழும் பொருட்டு மரியாதை காட்டும்  சூத்திரங்களை அவர்கள் வரிவாகத் தொடங்குகிறார்கள் பற்பல பக்கங்களுக்கு நீடிப்பதாக 17-ஆம்  நூற்றாண்டின் கலைப்பணியில் மனம் போன போக்கில் விசித்திர மிக குறிகோள்களும், நற்பண்புக் கூறுகளும் உடைய பனுவல் பின்தொடர்கிறது அத்தகைய கலைபாணியுடைய எழுத்தாளர்கள்  நமது சமகாலத்திய புலமைசான்ற புத்தங்களைப் படிக்க நேர்ந்தால் அதிர்ச்சியடைந்து போவார்கள் இப்போதெல்லாம் அறிமுகங்கள் ஒரு பக்க அளவே இருக்கின்றன; புத்தகத்தின் பாடுப்பொருள் பற்றிய முக்கியாம்சங்கள் சுருக்க வரைவாக தரப்படுக்கின்றன; புத்தங்கள் வெளியிடும் பொருட்டு தேசிய அளவில் அல்லது சர்வதேச அளவில் பரந்த மப்பான்மையுடன் நன்கொடையாக நிதி வழங்கப்பட்டு வருவதற்கு நன்றி சொல்வோம்!சுருக்கமாக விவரிக்குமிடத்து மனைவி அல்லது கணவன் மற்றும் சில குழந்தைகள் ஆகியோரின் நேசத்தினாலும் மனஒத்திசைவினாலும் கையெழுத்துப்பிரதியை பொறுமையுடன் தட்டச்சு செய்த செயலாரிந்தனிச்சிறப்பினாலும்.புத்தகம் சாத்தியமாகும்படி செய்யப்படுகிறது.மனிதகுலம்  முழுமைக்கும் கல்வி சார்ததுமான கடுஞ்சோதனை வேதனை நிறைந்த அனுபவங்கள் அந்த சில வரிகளில்துல்லியமாக வெளிப்பட்டிருப்பதை,படியுருவப் படிவங்களில் அடிக்கோடிடுவதில் நூற்றுக்கணக்கான  இரவுகள் செலவழிக்கப்பட்டிருப்பதை, உறைந்த எண்ணற்ற கறுப்பு திராட்சைகளை மனமார விரும்பி மென்று தின்னப்பட்டிருப்பதை நாம் துல்லியமாக அறிந்து கொண்டிருக்கிறோம்.

 

ஒரு வினோதமான கருத்திற்கிணங்க,வாய்மொழியில் எவ்வளவு அதிகம் அறிவாழமும் புலனுனார்வும் மிக்கவராக நீங்கள் இருப்பீர்க ள்  நிறுவனங்களில் வடிவங்களின் எண்ணங்களின் பிரபஞ்சத்தை உள்ளத்திஉன் நினைவாழத்திலிருந்து தோன்னுமாறு செய்ய என்று உச்சாரித்தலே போதுமானது மல்லார்மே நமக்குச் சொன்னார் குறைவான சில சொற்கள்  அதிக அளவில் அர்த்தங்களை சொல்லக்கூடுவது  கவிதையில் அடிக்கடி நேர்வாகிறது .மூன்று வரிகள் அறமுறைகளையும் மனொதத்துவத்தையும் குறித்தான  அயர்ச்சியூட்டும் ஆய்வுக்கட்டுரையை முந்நுறு பக்கங்களுக்கும்  அதிகமாக நெடுங்கட்டுரையாய் விரித்து  சொல்லக்கூடிவையாகும் புதியதான எழுத்தறிவையும் பெறுவதற்கு  மேற்கொள்வதற்கும் தேடலானது  முன் தகவலறிக்கிற அளவை அவாவி நாடுவதாக இருக்கக் கூடாது. எழுத்துக்கு தீங்கிழைமைக்கும் எதிரிகள் வேறேவ்விடத்திலும் பதுங்கிறார்கள்.

மூவகையான அதீத அ-நேர்கோட்டு வலைப்பின்னற் பனுவல்கள்

இந்தநேரத்தில் அதீத அநேர்கோட்டு வலைபின்னற் பனுவின் (hypertext)  மூன்று வெவ்வேறு வகைப்பட்ட கருத்துப்படிமங்களை நேர்கொள்ளுகிறோம் என்றே எனக்குத் தோன்றுகிறது தொழில்நூட்ப ரீதியில் சொல்லுமிடத்து அதீத அ-நேர்கோட்டு வலைபின்னற் பனுவல் அமைப்புமுறையிலுள்ள   (hypertext system)  ஆவனங்களின் தொகுதியான அதீத ஆவணம்  விவரித்திருந்தாரோ ஏறத்தாழ அவ்வாறாகவே இருக்கிறது .ஒரு அதீத ஆவணம்    (hyper document) என்ன பொருள் குறித்து நிற்கிறது  என்பதே பிரச்சினை இங்கே  நாம் முதலாவதாக,அமைப்பு  முறைகளுக்கும் (systems)  பனுவல்களுக்கும் (texts)  இடையே தொடர்புடையதான தனிவேறுபாட்டு நிலையை  அவசியம் உருவாக்க வேண்டும் ஒருஅமைப்பு முறை(எடுத்துகாட்டாக மொழி சார்ந்த அமைப்பு முறை ) குறிப்பிட்ட இயல்பான மொழி ஊடாக சாத்தியக்கூறுகளின் முழுமையையும் காட்சிப்படுத்துக்கிறது இந்தப் பணிச்சட்டகத்தில் அது பியர்ஸினால் விளக்கியுரைத்தைப்போல உலகிலுள்ள ஏதாகிலூம் உயிர்ப் பொருளின்  புலனுணர்விலிருந்து தோற்றம் (signs) குறிகள் மூலமாக அர்த்தத்தை உருவாக்கிற வரையற்றகுறி நிகழ்முறை(unlimited semionsis) சார்ந்த மூலக்கோட்பாட்டை வசங்கொண்டுள்ளது. மொழி சார்ந்த (linguistic) வகைமாதிரிகளை குறிக்கும் விதமாய் அல்லது குறிகள் குறியிடுகள் .மொழியில் இவற்றின் பயன்பாடு மொழியின் கட்டமைப்பு மற்றும் அர்த்தம் சார்ந்த (semiotic) வகைமாதிரிகளைக் குறிக்கும் விதமாய் ஒவ்வொரு மொழி சார்ந்த வகைமாதிரியும் பொருள்விளக்கம் அளிக்கப்படக் கூடியவையாகும் . நீங்க்ள் Webster’s Third  அகரதியை உபயோகிக்க வல்லவரெனில் Paradise Lost மற்றும் Ulysses  இவ்விரண்டையுமே நீங்கள் எழுதிவிட இயலும் .அத்தகை வழிமுறையில் மனதில் உருவாக்கிக் கொண்ட நிலையில் அதீத அ-நேர்கோட்டு வலைபின்னற் பனுவல் ஒவ்வொரும்  வாசகரையும் ஒரு நூலாசிரியாக மாற்றம் செய்து விட இயல்வதாகிறது  அதே அதீதப் பனுவல் அமைப்பு [முறையை (hyper text system)  சேக்ஸ்பியருக்கும் டேன் குவாய்லிற்கும் நீங்கள் ஏற்ப்டுத்திக் கொடுத்தல், Romeo and Juliet உருவாக்கத்தில் அவர்கள் தத்தம் அதே தனித்தனிப்படைப்புகளையே வசமாக்குவார்கள்.

அமைப்புமுறையை  ஒத்தமாதிரியான  அதீத அ -நேர்கோட்டு வலைபின்னற்  பனுவல்களை உருக்குவதற்கு  பெரியளவில் முயற்சி தேவைப்படுகிறது என்பது நிருபிக்க கூடியதாக இருக்கலாம்  நீங்கள் ஹாரிசான்ஸ் அன்லிமிட்டைடு நிறுவனம் உருவாக்கிய கலைகளஞ்சியத்தை எடுத்துக்கொண்டால் அதில் 17-ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பொருள்விளக்கங்கள்  சிந்தாந்த நிலையில்  உள்ளடக்கிமாகி இருக்கின்றன  அது உளதாயிருப்பதற்கு முந்தைய இணைப்பு கணிணிகளினூடே நீங்கள்  நன்குசெயலாற்றுவதற்கு வல்லமை கொண்டிருப்பதைச்  சார்ந்தே உள்ளது குறிப்பிடப்பெற்ற அதீத அ-நேர்கோட்டு வலைப்பின்னற் பனுவல் அமைப்புமுறை கிப்பானுடையது போன்றோ ஆகுவதென்பது உண்மையாய் உங்களது பொறுப்புப் பாற்பட்டதுதான். நடைமுறை உண்மையாக அதீத அ-நேர்கோட்டு  வலைபின்னற் பனுவல்  கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே கூட நல்லதொரு  அகராதி மூலமாக ஒரு எழுத்தாளர் ஒவ்வொரு சாத்தியமான புத்தகத்தை அல்லது நாவலை அமைப்பாக வகுத்தெழுதிப் படைக்கக் கூடியவராக இருந்தார்.

ஆனால் ஒரு பனுவலானது மொழி சார்ந்தோ (linguistic)    அல்லது கலைக்களஞ்சிய அமைப்புமுறை  சார்ந்தோ இல்லை குறிப்பிடப்பெற்றதொரு பனுவலானது,வரையறுக்கப்பட்ட பிரபஞ்சத்தின் இழப்புக்கு ஈடுசெய்வதற்குரிய ஒரு அமைப்புமுறையின் வரையற்ற அல்லது எல்லையற்றசாத்தியப்பாடுகளைக் குறைக்கிறது. Finnegans Wake நாவல் புனைவு நிச்சியமாக  மிகப்பல பொருள்விளக்கங்களுக்கு இடமளிக்கிறாது.ஆனால் போதிய சான்றில்லாமல்  முன்னறிக் கூற்றாக  அமைந்த ஃபெர்மட்டின் கடைசித் தேற்ற வாய்ப்பாடுக்குரிய  என்பிப்பையோ அல்லது திரைப்படம் நாடகம் ,நெறியாளுகை எழுத்திலகியம் இசை என சகலத் துறைகளிலும் பிரப்பலமான ஊட்டி ஆலெனின் சுயசரித்தை குறிப்புகளையோ  Finnegans Wake   நிச்சயம் உங்களுக்கு ஒருபோதும் அளிக்கப்போவதில்லை .

பிறகு அங்கே  மைக்கேல் ஜாய்ஸ் மாதிரியாக அளித்த மூன்றாம் சாத்தியக்கூறு நிலவுகிறது . நாம் எல்லையற்ற அதீத அ-நேர்கோட்டு வலைபின்னற் பனுவல்களை மனதில்  உருவாக்கிக் கொள்ளாம் .ஒவ்வொரு உபயோகிப்பாளம் ஏதோ ஒன்றை துணைச்சேர்க்கையாக தொடர்ந்து கூறவியலும் மற்றும் நீங்கள் 'ஜாஸ் இசை போன்ற முடிவிலா கதை'வகைப்பட்ட முறையில் செயல் நிறைவேற்றவியலும் இத்தருணத்தில் நூலாசிரியர்தொழில் குறித்து செவ்வியல் கருத்து நிச்சயமாக மறைந்துவிடுக்கிறது;நாம் கட்டற்றப் படைப்பாகத்தை நிறைவேற்ற புதியதொரு வழிமுறையை பெற்றுள்ளோம்  The open Work  - நூலின் ஆசிரியர்  என்றமுறையில்,நான்  அத்தகைய சாத்தியத்தை வரவேற்பதற்கும் உருவான பனுவல்களின்  நிலைக்கும்  இடையில் வேறுபாடு நிலவுகிறது நாம் புதியதொரு கலாச்சாரத்தைப் பெறுவோம் என எதிர்பார்க்கலாம்  அதில் வரையறையற்ற மிகப்பல பனுவல்களை உருவாக்குவதற்கும் வரம்பிற்குற்ப்பட்ட எண்ணிக்கையிலான பனுவல்களுக்குத் துல்லியமாகப் பொருள்விளக்கம் கூறுவதற்கும்  வேறுபாடு நிச்சயம்  நிலவும் அதுவே நமது தற்போதைய கலாச்சாரத்தில்  நிகழ்கிறது;அதில் பீத்தோவனின் ஐந்தாம் செவ்வியல் சிம்ஃபனி பதிவிசை  நிகழ்வையும்  புதிய எடுத்துக்காட்டாக நியூ ஆர்லீன்ஸ் கூட்டுக்குழுவினர் கொண்டாடும்  ஜாஸ் இசை நிகழ்வையும் நாம் வேறுவகையில் மதிப்பிடுகிறோம்.

இன்னுமதிக விடுதலையுரிமை உடைய சமுதாயத்தை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் அதில் சுதந்திரமான படைப்புத்திறனானது மூலப்பாடஞ்சார்ந்த பொருள்விளக்கமுடன் ஒருங்கி இயல்பாகவே அமையும் நான் இதை  விரும்ப்புகிறேன்  பழையப் பொருளை இன்னொன்றினால்  மாற்றீடு செய்திருந்தோ என்று கூறுவதில்தான் பிரச்சினை இருக்கிறது நாம் இவிரண்டையும் ஒருங்கே பெற்றிருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லாவும் தொலை இயக்கி  (remote control மூலம் தொலைக்காட்சி அலைவரிசையை மாற்றம் செயல்     (TV   Zapping)    ஒரு திரைப்படத்தை வாசிப்பாதுடன் எத்தகைய தொடர்பும் அற்றிருக்கிறது இத்தலிய தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் அலைவரிசையிலிருந்து பதிவு செய்துகொண்ட    The Blob   திரைப்படத்தை மிகச்சிறந்தப் படைப்பாகப் பாராட்டுகிறார்கள். அலைவரிசையிலிருந்து பதிவுசெய்து கொள்வதானது, ஒவ்வொருவரையும் தொலைக்காட்சியைத் தன்னிச்சையாக உபயோகிப்பதற்கு அழைப்பு விடுக்கிறது ஆனால் இது ஹிட்சாக் அல்லது ஃபெலினியின் தனித்தன்மை வாய்ந்த கலைப்படைப்பாகத் திகழும் திரைப்படத்தை ஒவ்வொருவரும் வாசிப்பதற்குரிய சாத்தியப்பாடுடன் எத்தகைய தொடர்பும் அற்றிருக்கிறது.

மாறுதல்  Vs கலந்திணைதல்

நிழற்படக்கலையின் கண்டுபிடிப்பானது,பார்த்துப் போலிசெய்யவும் பணியிலிருந்து ஒவியர்களை விடுவிக்கிறது என்று டீபிரே நமக்கு நினைவுட்டினார் இதை நான் ஒத்து கொள்ளுவதை தவிர  வேறுவழியில்லை  பாதரஸ ஆவி மூலம் நிழற்படமெடுக்கும் முறையான டாகையரின்  கண்டுபிடிபை உடன் கொள்ளாமல் விரிநுணுக்கப் கூறுக்க்களில்லாமலே பாவமும்  தொணியும்  உண்டுபண்ணும்  மனச்சாய்வியல் ஒவியக் கலைபணி  (Impressionism)   சாத்தியமாக் கூடியதாக இருக்கவில்லை. முன்னர்பொறுப்பேற்றுப் பங்காற்றிய ஒன்றை புதியதுறை விஞ்ஞானம் ஒழித்துவிடுகிறது  எனும் கருத்து கடமைப்பணியை மிகமிக எளிமையாக்கும் பாங்கு சார்ந்தாகவே இருக்கிறது டாகையிரின் கண்டுபிடிப்புக்கும்  பிறகு ,ஒவியார்கள் நாம் காண்பதாக நம்பும்  யதார்த்தை ம்றுவுற்பத்தியாக்க்குகிற வெறும் கைவினைஞ்ர்களாக பணிசெய்யக் கடமைப்பட்டிருப்பதற்கு இனியும் நீடித்து உணர்வு கொண்டிருக்கபோவதில்லை ஆனால் அது டாகையின் கண்டுபிப்புமட்டுமே அருவ ஒவியமுறையை ஊக்குவித்கிறது என்று அர்த்தமல்ல. பார்த்துத் தீட்டுவதற்குரிய நிழற்பட உருமாதிரி இல்லாமல் நவீன ஒவியமுறையின் முழுமரபும் உளதாய் இருக்க முடியாது: அதீத யதார்த்தத்தாவாதத்தை  (hyperrealism)  மட்டுமே நான் எண்ணிப்பார்க்கவில்லை ஆனால் (என்னைச்சொல்ல அனுமதிங்கள் ) ஹூப்பாரையும் எண்ணிப்பார்க்கிறேன் யதர்த்தம் நிழ்ழற்படக் கலைக் கண்ணினூடாக ஒவியாரின் பார்வையினால் நோக்கப் பெறுக்கிறது .

திரைப்படம் மற்றும் நகைச்சுவைத் துனுக்குகளின் வருகையானது,பழமரபான வழியில் செயலாற்றுவதற்கு ஏற்றிருந்த கதை சொல்லாடல் சார்ந்த கடமைப்பணிகளிருந்து இலக்கியத்தை நிச்யமாக விடுவித்துள்ளன. ஆனால் அங்கே பின்நவீனத்துவ இலக்கியம்  (Postmoderm literature)   போன்று ஏதோ ஒன்றிருந்தால் ,அது மிகப்பெரும்பாலும்  நகைச்சுவைத்துன்டுகள் அல்லது திரைப்படத்தின் செல்வாக்கினால் உண்டுபண்ணப்பட்ட விளைபயனாக இருப்பதன் காரணமாய் உளதயிருக்கிறது.இது கலாச்சரத்தின் வரலாற்றில் ஏதோ ஒன்று வெறுமான மற்ற ஏதோ ஒன்றினால் முனைப்பழிக்கப்படுதல் ஒருப்போதும் நிகழ்ந்ததில்லை என்பதைக் குறிக்கிறது. ஏதொ ஒன்று அறிவாழமிக்க மற்ற ஏதோ ஒன்றாக மாற்றமடைக்கிறது.

உண்மையான எதிர்முரனிலை கணிணிகளுக்கும்  புத்தங்களுக்கும் இடையிலோ,மின்னணுவியல் சார்ந்த எழுதுமுறைக்கும் அச்சிடப்பட்ட அல்லது கைகளிலான எழுதுமுறைக்கும் இடையிலோ இல்லையென்றே எனக்கு தோன்றுக்கிறது  நான் முன்னரே குறிப்பிட்ட மெக்லுஹனின்முதலாவது தவறான வாதத்தின் படி காட்சி சார்ந்த கேலக்ஸியினால் (Visual Galaxy) கூடன்பெர்க் கேலக்ஸி மாற்றீடு செய்யப்பட்டுள்ளது. மெக்லூஹனின் இரண்டாவது தவறான வாதம் ,"நாம் புதியதொரு மின்னணுவியல் சார்ந்த உலகளாவிய கிராமத்தில் (global village)   வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் " எனும் கூற்றின் மூலம் எடுத்துக்காட்டி விளக்குவதாகும் நாம் ஐயமற புதியதொரு மின்னணுவியல் சார்ந்த சமுதாயத்தில்  வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்  அது போதுமான அளவிற்கு உலகளாவியதாக இருக்கிறாது.ஆனால் மனிதக் குடியேற்றங்களில் மக்கள் ஒருவரை ஒருவர் பதிலாக  நேரடியாய் பரஸ்பரம் செயலாற்றுக்கிறார்கள் எனும் நிலையைக் குறிப்பாதாக வைத்துக்கொண்டால் அது ஒரு கிராம்மாக இல்லைமின்னணுவியல் சார்ந்த சமுதாயத்தின் உண்மையான பிரச்சினை தனிமைதான். இந்த புதிய சமுதாயத்தில் புதிய பிரஜையாக இருப்பவர்,புதிய பனுவல்களைக் கண்டுபிடிப்பதற்கும்,நூலாசிரியார் தொழிலுக்குரிய மரபுவழிப்பட்ட கருத்தை செல்லுபடி ஆகாமல் செய்வதற்கும் நூலாசிரியாருக்கும்  வாசகருக்கும் இடையிலான மரபுவழிப்பட்ட பிரிவினைகளை ஒழிப்பதற்கும்  ரோலண்ட் பார்தெஸ் மற்றும் ஜாய்ஸ் டெரிடா ஆகியோரது வெளிறிவிட்ட கருத்திலான குறிக்கோள் நிலைகளின்  எலும்புகளுக்குள்ளும் தசையுள்ளும்  பொருளை இன்னொரு பொருளாக மாற்றியமைப்பதற்கும் சுதந்திரமானவராக உள்ளார்(குறைந்தபட்சம் இது தொழில்துறை விஞ்ஞானத்தின் பற்றார்வலர்கள் சொன்னதை  நான் கேள்விப்பட்டதுதான்.அதீத அ-நேர்கோட்டு வலைப்பின்னற் பனுவல்களின் வடிவமைப்பு அனுபவ வரம்பைக் கடந்த அர்த்தத்தின் (Transcendental Meaing)  பேயை ஒழித்துக்கட்டிவிடும் என்றால் ,நீங்கள் டெரிடாவிடம்தான் விடைகோரி வினவ வேண்டும் -நான் எனது சகோதரரின் காப்பாளரல்ல- மற்றும் பார்தெஸைப் பொறுத்தவரை,அது இன்னொரு நாட்டில் இருந்து தவிர ஒரேகாலத்தவரானஅவர் இறந்துவிட்டார்.)ஆனால் குறிப்பிட்ட சில பனுவல்களை (டிடர்ராட்னுடைய   Encyclopaedia  -வை ) படிப்பதானது, ஐரோப்பிய ஆராய்ச்சித்துறை    விவகரங்களில் மாற்றத்தை விளைவித்தை நாமறிவோம் இனையம்  (Internet)   மற்றும் உலகளாவிய வலைப்பின்னல்  (World Wide Web)  இவற்றை உடன் கொண்டு என்ன நிகழுப் போகிறது?

நன்மை விளைவில் ந்ம்பிக்கை வைத்திருப்பவனாக நானிருக்கிறேன் . வளைகுடாப் போரின் போது சண்டை முடிவிற்குமுன்னதாக அந்த போரைப் பற்றிய தனது கருத்துக்களை வெளியிட முடியாது என்பதை ஜார்ஜ் லேக்கோஃப் அறிந்துக் கொண்டிருந்தார். ஆகையால் இடர் உணர்த்தி விழிப்பூட்டும் எச்சரிக்கை அறிவிப்பை குறித்த காலத்தில் வெளியிட அவர் இனையம் மீது நம்பிக்கை கொண்டு சார்வுற்றார்  அரசியல் ரீதியான மற்றும் போர் சம்பந்தமான காரியத்துவங்களில் முதற்படியாய் நற்றொடக்கம் செய்ய உதவுகிற அவரது முயற்சி முற்றிலும் பயனற்றுப்போனது. ஆனால் அது விஷயமன்று. அவர் உண்ர்ந்த அதே முறையில் உலகெங்கிலும் உண்ர்ந்த ஒத்தக்கருத்துள்ளவர்களை சென்றெட்டுவதில் அவர் வெற்றிப்பெற்றார்.

தனிஒதுக்கப் பண்புடைய ஆத்மாக்கள் இடையில் ஒன்றை ஒன்றுடன் தொடர்பு கொள்விக்கும் கணிணி வலையமைப்பை  (network)  அல்லாமல் ஆனால் ஒருவரை ஒருவர்பாதித்தலாக பரஸ்பரம் செயல்விளைவு உண்டுபண்ணிக் கொள்கிற உண்மையான தனிமுறை கூட்டுக் குழுநலத்தை கணிணிகள் நிறைவேற்ற இயலுமா?1968-ஆம் ஆண்டில் என்ன நிகழ்ந்தது என்பதை எண்ணிப் பார்ப்போம். பொதுப்போராட்டத்திற்காக அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் வரை,ஜெர்மனியிலிருந்து இத்தாலி வரை,மரபு வழிப்பட்ட செய்தித்தொடர்பு முறைகளான அச்சு வெளியீடு வானொலி ம்ற்றும் தட்டச்சு செய்திகள் ஆகியவற்றில் அக்காலத்திய  தலைமுறையினார் முழுவதும் ஈடுப்பட்டிருந்தனர். அரசியல்ரிதியாக அல்லது நன்னெறிரிதியாக  . என்ன நிகழ்ந்தது என்பது பற்றி மதிப்பிடுவதற்கு நான் முயலவில்லை அது நிகழ்ந்தேறியதை வெறுமனெ நான் குறிப்பிடுகிறேன் பல வருடங்களுக்கு பிறகு, இத்தலியில் புதியதொரு மாணவப் புரட்சி அலை திடீரெனத்  தோன்றியது . அது முன்நிகழ்ந்ததைப் போலன்றி மார்க்கிய சிந்தாந்தத்தை அடிப்படையாகக் கொள்ளாத மாணவப் புரட்சி அலையாகும் அதன் முக்கியாம்சம் பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான தொலைநகல்  (fax)  வழியன கருத்துப் பரிமாற்றத்தினால் அது சிறப்பாக நிகழ்ந்தது. புதிய தொழில்துறை விஞ்ஞானத்தை துணைச்சாதனமாகக் கொண்டு செயல் நிறைவேற்றிய போதிலும் அதன் விளைபயனாக எதிப்பர்த்தைவிட மிககுறைவாகவே அமைந்தன. அந்த கிளார்ச்சி இரண்டுமாதக் காலப்போக்கில் தானாகவே மூர்க்கத்தன்மை தணித்து படிமானமாகியது நவநாகரிகப் புதுநடைபாணிகள் எண்கிற காரணங்களுகாக மட்டுமே தோற்றமெடுக்கும் இயக்கத்திற்கு புதுதகவல்தொடர்பு முறைகளால் உயிர்த்துடிப்பை அளிக்க முடியவதில்லை.

சமீபத்தில் இத்தாலியில்,இத்தாலிய மக்களின் விருப்பார்வ மனோபாவங்களை அவமதித்துப்புண்படுத்தும் படியான ஒரு புதிய சட்டத்தை அரசு விதிக்க முயற்சி செய்தது முதன்மையான எதிரியக்கம் தொலைநகல் இடையீடாக நடைபெற்றது அத்தனை ஏராளமான தொலைநகல்கள்வழி கண்டணக் கருத்துகளை நேர்க்கொண்ட அரசு அந்த சட்டதை மாற்றியே தீரவேண்டியதை உணர்ந்து இது புதியதகவல்தொழில்நூட்ப விஞ்ஞானங்களின் புரட்சிகர  சக்திக்கு நல்லத்தொரு எடுத்துக்காட்டாகும் ஆனால் தொலைநகல் வழியான கண்டனக் கருத்துகளுக்கும்,சட்டம். நீக்கப்பெற்றதிற்கும் இடையே இன்னும் கூடுதலாக ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அந்த சமயத்தில் நான் அயல்நாட்டிற்குப்பயணம் மேற்கொண்டிருந்தேன்.நான் அந்த அயல்நாட்டுச் செய்தித்தாளில் நிழற்ப்படம் ஒன்றைப் பார்க்க மட்டுமே செய்தேன் அந்த நிழற்படம் இளைஞர்களின் ஒரு குழுவை அனைவரும் ஒன்றிணைந்து நாடளுமன்றத்தின் முன்னே அணிதிரண்டவர்களாக காட்சிப்படுத்தியது தொலைநகல்கள் மட்டுமே போதுமானதாக  இருந்திருக்க வேண்டும் என்பது பற்றி நான் நன்கு தெரிந்திருக்கவில்லை. தொலைநகல்கள் வழியகப் பகிரும் கருத்துகளின் சிற்றொட்டம் தனிப்பட்டங்கள் இடையேயான புதுவகைத் தொடர்பை விளைவித்துள்ளது;தொலைநகல்கள் வழியாக மக்கள் மீண்டும் ஒன்றுக்கூடி சந்திப்பதற்குரிய நேரகாலத்தை அறிந்து கொண்டார்கள்.

அந்தக் கதை அதன் தோற்றுமூலத்தில்,அங்கே வெறும் உருவவழிபாடு மட்டுமே இருந்தாக,பெர்லுஸ்கோனியின் புன்னகை அவ்வளவு மிகப்பெரும்பாலான இத்தலியாகளை அவ்ருக்கு  வாக்களிக்கும் விதமாக காட்சிரீதியில் கருத்தைக் கவர்ந்து இணங்குவிப்பதாக அமைந்தது.அதன்   பிறகு அனைத்து எதிர்க்காட்சிகாளும் எண்ணம் செயல் குலைந்தவர்களாக தனிமைப்படுத்தப்பட்டவர்களாக தம்மை உணர்ந்தவார்கள் ஊடக மனிதர் வெற்றி பெற்றுவிட்டார் பின்பு பொறுக்க முடியாத அளவிற்கு மக்கள் சின மூட்டப்பெற்ற நிலையில் அங்கே புதிய தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானமாது மக்கள் தம் அதிருப்தியை அதைப் போலாவே தம் வலிமையை உய்த்தறிந்துக் கொள்ள ஏதுவானது. பின்பு அவர்களில் பெரும்பாலோர் தொலைந்கல் வழிப்பட்ட அவர்களின் தனிமைலிருந்து வெளியேறி வந்து மீண்டும் ஒன்று கூடி சந்தித்துக் கொண்டா போது அந்த தருனம் வந்தது வெற்றியடைந்தார்கள்.

பலவற்றின் முழுதொகுதியில் ஒரு பிரிவான கிளைக்கதை ஒன்றிலிருந்து விளக்கக் கோட்பாட்டை உருவாக்குவது  பெருமுயற்சி  தேவைப்படுக்கிறதாகும் இவ்வித உதாரணத்தை ஒரு உருவாக் கதையாக உபயோகித்துக் கொள்ள என்னை அனுமதிங்கள் நடைமுறையில்  மெய்ம்மையாய் கொள்ளத்தாக இல்லாத யதர்த்தாத்திற்கு திரும்பவும்  மக்களைக் கொண்டுவருவதில் முழுமையாக ஒருங்கினைந்த பல ஊடங்கள் வழியான நிகழ்ச்சிகளின் தொடர்வரிசை வெற்றிபெறுகிறபோது,ஏதோ ஒன்று புதியதாக நிகழக்கூடியதாகிறது.

ஒரே மாதிரிப்பட்ட சட்டகத்தின் நிகழ்வுகளை வழிநடத்தி ஆளும் மேலாண்மையை நான் கொண்டிருக்கவில்லை . கேஸ்சியோடோரஸ் வழிமுறையை  (cassiodorus Way)   முன்மொழிபவனாக நானிருப்பத்தை உண்ர்கிறேன் மற்றும் எனது  அந்த உருவகத்தை ஒரு ரூப் கோல்டுபெர்க் இயந்திரப்பொறி வழிமுறையிலான கட்டமைப்பு (Rube Goldberg Construction)  போல காணப்படுகிறது,ஜேம்ஸ் ஒ'டோன்னொல் தொடர்புப்படுத்திச் சொன்னதைப்போல ரூப் கோல்டுபெர்க் உருமாதிரியனது ந்ம் மின்னுணுவியல் சார்ந்த எதிர்காலத்திற்கான ம்னோதத்துவ வார்ப்பட அளவுச்சட்டமாய் மட்டுமே இருப்பாதாகc எனக்கு தோன்றுக்கிறது.

வாசகருக்கான குறிப்புகள்:         (கூடன்பெர்க் 14-ஆம் நூற்றாண்டில் அச்சுயந்திரத்தை முதன்முதலாக கண்டுபித்தவர்)

(i)குடன்பெர்க் கேலக்ஸி:(மார்ஷல் மெக்லுஹனால் 1962-ல் எழுத்தப்பட்ட “The Gutenberg Galaxy:The Making of Thphographic Man” எனும் புத்தகம் ஐரோப்பிய கலாசாரம் மற்றும் மனிதப் பிரக்ஞை மீது வெகுமக்கள்-ஊடகம்,குறிப்பாக அச்சுத்துறை ஏற்படுத்திய விளைவுகளைப் பகுத்தாராய்கிறது. இது பிரபலபடுத்திய வாசகம் "உலகளாவிய கிராமம்"  (global village)-  முழு உலகிற்கும் கிராமம் தொடர்புடையதாகிட வெகுமக்கள் தகவலறிப்பு   (mass communication)   வழிகோலுகிறது. கூடன்பெர்க் கேலக்ஸியை பதிவான மனிதக் கலை மற்றும் அறிவு,குறிப்பாக புத்தங்கள் ஆகிய படப்புகளின் குவிக்கப்பட்ட திரட்டைக் குறிப்பதற்குரிய சொல்லாக இன்று நாம் கருதலாம்  கூடன்பெர்க் மனிதன் என்று  மெக்லுஹனால் அழைக்கப்படும் மனிதன் அச்சிட்ட புத்தகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பிரக்ஞை மாற்றத்தினால் உற்பவமானவன்."இந்த புத்தகத்தின் முக்கிய வாதப்பொருள் கூடன்பெர்க் கேலக்ஸி அல்லது நிகழ்வுகளின் கூட்டமைப்பு ,அது அகரவரிசை சார்ந்த மற்றும் எழுதது கலை சார்ந்த கலாசாரத்திற்கு மிக முன்னோக்கியதாக பரந்து காணப்படுக்கிறது என்பாதாக  இருந்த போதிலும் அகரவரிசை இராத நிலையில் ஏன் அங்கே கூடன்பெர்க் இருந்திருக்கவில்லை என்பது அறியப்பட்ட வேண்டிய தேவையுள்ளது" எனவும் மெக்லூஹன் மிகத்தெளிவாக குறிப்பிடுகிறார்.

(ii) சமிஷ்டட் (Samizadhat): சோவியத் ருஷ்யாவில் அரசினால் தணிக்கை செய்யப்பெற்றவற்றையும் (வெளியீடுகள்,பிரசுரங்கள்,ஆவணங்கள்,அறிக்கைகளை)தம் கையினாலேயே எழுதி நாடெங்கிலும் ஒரு வாசகரிடமிருந்து இன்னொரு வாசகருக்கு வாசிக்க வேண்டி தனிச்சுற்றுக்கு விட்ட செயலை சமிஷ்டட் என்ற ருஷ்ய சொல் குறிக்கிறது.

(iii) அக்யூனாஸின் பிரபஞ்சம்: 12-ஆம்நூற்றண்டில் செயிண்ட் தாமஸ் அக்யூனாஸினால் எழுதப்பட்ட நூல் “From The Nature of The Universe”.

(iv) The open Work:உம்பெர்டோ ஈகோ எழுதிய எனும் புத்தகம் அதன் "முடிவுறா திறந்த  செல்வழி" எனும் இயல்திறமிக்க கருத்திற்காக தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது-கலைஞ்ன் அவனது படைப்பின் சிலகூறுகளை எல்லோரும் அறியும் படி அல்லது இடைவரவிற்கு வாய்ப்பு தரும் ஏற்பாடாக இருக்க விடுதலின்ற்கான  அவனது தீர்மானம்  பற்றி உம்பெர்டோ ஈகோ இந்த புத்தகத்தில் விளக்குகிறார் .சமகாலத்திய  இலக்கியக் கோட்பாட்டின் இரண்டு முக்கிய  பாடுப்பொருள்கள் தொடர்பான "முடியுறா திறந்த  செல்வழியின்" புதிது நாடி  மேற்கொள்ளும்  எதிர்பார்ப்புக்குரியன எவையெனில்,கலையில்  பலவகைப்பாடு மற்றும்  பன்மை ஆகியவற்றை  கொண்டுள்ள மூலப்பொருள் எனவும் வாசகருக்கும் பனுவலுக்கும் இடையே பரஸ்பர  தொடர்பில் செயல்விளைவு உண்டுபண்னும் நிகழ்முறையாக  (Interactive process)  இலக்கியம் சார்ந்து  எதிர்வினையால் பதிலளிக்க வேண்டியதிற்கு தனிமுக்கியத்துவம் கொடுத்தால் எனவும் உம்பெர்டோ ஈகோ குறித்துரைக்கிறார்.

(v) அதீத யதர்த்தம் (Hyperreality): யதார்த்கமாக உணராததை உண்ர்ந்தாக பாவித்துக் கொள்வதிலிருந்து குறிப்பாக தொழில்துறை விஞ்ஞானரீதியில் மிகமுன்னேற்றமடைந்த பின்நவீனத்துவ சமுதாயங்களிலிருந்து யதர்த்தத்தை அடையாளம் உணர்வதற்குரிய பிரக்ஞையின் இயலாமையை வவரிப்பது தொடார்பான குறிகள் குறியிடுகள் மொழியின் கட்டமைப்பு மற்றும் அர்த்தம் சார்ந்த இயலிலும்  (Semiotics)  பின்வீனத்துவ தத்துவத்திலும் அதீத யதர்த்தாம் பிரயோக மாறுகிறது ஊடகத்தின் எண்ணிற்ந்த நிலையனது மெய்ம்மூலமானதொரு  நிகழ்வை அல்லது அனுபவத்தை தீவிர  முன்னேற்றத்தில் அதீதமடைவதாக வடிமைத்து வடிகட்டிக் கொள்கிற உலகத்தில் ந்மது பிரக்ஞை எதை மெய்மையானதாக வரையருக்கிறதோ அதை தனிச்சிறப்புப் பண்புருவேற்றி வர்ணிக்கும் வழிமுறையாக அதீத யத்ர்த்தம் இருக்கிறது.

(vi) Hypertext fiction: இது ஒரு மின்னுணுவியல் சார்ந்த இலக்கியம் இணைப்புக் கண்ணிகளை (links)  பிரயோகிப்பதன் மூலம் தனிச்சிறப்பு வர்ண்னை கொள்ளும் அதீதப் பனுவல் ";இலக்கியத்திலான" அ-நேர்கோட்டுத் தன்மைக்கும் வாசகர் இடையினராககச் செயலாற்றி அளிக்கிறது பனுவல் ஒருகண்ணிக்கணுவிற்கு(node) கிளைத்துச் செல்லும் பணியில் உள்ளார்ந்த வளமுடைய கதைகளின் ஆழமிக்க பொதுசேர்மத்திலிருந்து ஒரு கதையை சீராக அமைத்துக் கொள்கிறது.

//மைக்கேல்  ஜாய்ஸ் 1996-ல் முதன்முதலாக  எழுதிய Twelve Blue  எனும்  Web Hypertext fiction வாழ்க்கையின் இரட்டைத்தன்மையும் ஆற்றொழுக்கத்தையும் மிகச்சிறந்த சிருஷ்டித திறமுடன் அமைத்துப் படைக்கப்பட்ட பனுவல்  இப்பனுவல் கணு இடைக்கூறுகளினூடாக  மட்டுமல்லாமல் அதன் சொற்பொருள் ரீதியான கட்டமைப்பிலும் புதிது நாடி ஆய்வதற்கு பயணிப்பதற்கான கதையாக இருக்கிறாது ஜாய்ஸ் ஒரு பிரிவு தொடங்குவதை  அறிவிக்கும் போது அங்கே "நயாகரா நீர்வீழ்ச்சிக்குச் செல்வதற்கு பலவழிகள் இருக்கின்றன " என்று கதையின் மையக்கருத்தை விளக்குகிறார் .அங்கே ஒரு இடத்தைஅடைவதற்கு அடிக்கடி பலவேறுபட்ட வழிகள் இருக்கின்றன.இவ்வாறு விருப்பத்தேர்வுக்குரிய மானய வாசகருகளுக்கு வழங்கப்படுகிறது ஆனால் தொடக்கநிலையில் ஒரு எண்னை தேர்ந்தெடுத்துக் கொண்டால் வெகுசில நிகழ்வுகளே அங்கே இருக்கின்றன.  முடிவுகளுக்கு வந்தடைய பல்வேறான பாதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் ஆனால் நாம் யாவரும் படிப்பது ஒரே கதையைதான் ஒரு  -ஆக   உள்ள நாவல் சட்டங்களையும்ப் கருர்க்ர்குக் காட்சிப்படிமம் நிலப்படங்களையும்  பயன்படுத்தியிலிருக்கிறது  தொழில்நுட்ப நோக்குநிலையிலிருந்து எளிதானதாக இருந்த போதிலும் இந்த படைப்பு நினைவு ஆசை இச்சை உண்மை மற்றும் காரணகாரியத் தொடர்புகளின் சிக்கலான புதிரமைவான கதையைச் சொல்கிறது.

//இவ்வித அதீத அ-நேர்கோட்டு வலைப்பின்னற் பனுவலின் சாரம் ஒன்றையொன்று பதித்தலாக செயலெதிர் செயல்விளைவு உண்டுபன்னும் புனைவிலும் (Interactive  fiction)   காணக்கூடுவதாக இருக்கிறது வழிவழிமரபாக வெளியிடப்படும் புத்தங்களில் அ-நேர்க்கோட்டு  சொல்லும்  (Non-linear narrractive)  செயலெதிர் செயல் விளைவு உண்டுபண்னும்  சொல்லும்(Ineractive narractive) உள்ளகமான குறிப்புத்தேட்டங்களின் ஊடக சாதிக்கப்பெறும் நிலையில் அதீத அ-நேர்கொட்டு  வாலைபின்னற் பனுவல் கொண்டமைந்த புனைவுகளுக்கு அவை இருக்கின்றன இவ்வித புனைவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் வருமாறு:

(1)ஜேம்ஸ் ஜாய்ஸ்  எழுதிய நாவல்கள் Ulysses   (1922)  மற்றும் Finnegans Wake(1939)

(2)ஜோர்ஜ் லூயி போர்ஹே எழுதிய சிறுகதை The Garden of Froking paths(1941)

(3)விளாடிமிர் நபகோவ் எழுதிய நாவல் pale fire(1962)

(4)ஜுலியோ கொர்த்தஸார் எழுதிய நாவல்Hopscotch(1963)

 

(vii) கேஸ்சியோடோரஸ் வழிமுறை  (Cassiodorus Way):

பண்டைய ரோமானியக் குடியரசின் ஆட்சிப் பேரவை உறுப்பினரான கேஸ்சியோடோராஸ்  கி.பி562-ல் எழுதிய  “Institutiones” ,  எனும் நூலில் 37 கொடிவழிகள் அடங்கியுள்ளன பனுவல் தொடர்களாக அமைந்துள்ளது இந்த கொடிவழிகள் தத்துவம் சொல்லணியிலக்கணம் கணிதம் சார்ந்த கருத்தியல் ஆகியவற்றின் மூலப்பொருள்களை(elements) பகுத்தாய்ந்து ஆக்காம்சக் கருத்து கூறுக்கள்  (component terms) எப்படி ஒன்றையொன்று பரஸ்பரம் பாதிலாக செயலெதிர் செயல்விளைவு உண்டுபண்ணுகின்றன என்பதை கண்பிக்கின்றன ஒவ்வொரு கொடிவழியும் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு பெயர்வது சில தொடர்பினையுச் சொற்களினூடாக ஈடுப்படுகிறது (A என்பது X,Yமற்றும்  Z னினால் உருவாக்கப்ப்பட்டது ...A அல்லது B தனித்தனி பலவேறான  A )மற்றும் இவற்றுக்கு பதிலீடான முறையில் எப்படி அந்த ஆக்காம்சக் கூறுகளை ஒன்றை இன்னொன்றுடன் ஒப்புமைப்படுத்துவது என்பதை தெரிவிப்பதற்கு அந்தந்த பக்கத்தின் சூழமைவும் குறிப்புகள் தரப்பட்டுள்ளன அறிமுகமாகவும் ஒவ்வொன்றயும் கலந்தாரய்வது சிறிதளவான அறிவுணர்வையே தரும் ஆகையல்  பெரும்பாலும் விடைஉறவுத்தன்மைகளை திரும்பவும் கொள்ளாமலே பின்பற்றிச் செல்லும் ஒவ்வொரு தொடர் செயலினூடாகவும் ஆக்காம்சக் கருத்துக் கூறுகளின் ஆழ்ந்த அர்த்தத்தை நாடி அறியப்பெறுக்கிறோம்.

(viii) Rube Goldberg Construction: அமெரிக்கரான ரூபன் லூசியல் கோல்டுபெர்க் (1883- 1970)புகழ்பெற்ற கார்டுன் ஒவியர் சிற்பி பொறியியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளார் திருகுமுறுகான வழிமுறைகளினூடே எளிய பணிகளைச் செயலாற்றும் விதமாய் சார்பிற்குரியவை உள்ளிணைவான சிக்கலமைவால் பலகூட்டுத்தன்மை கொண்ட சிறுபொருட்களை கார்ட்டூன்களாக அவர் நுட்பத்துடன் வரைந்து வெளியிட்டார் கருவிகளாக உதவும் இச்சாதனங்கள் இப்போது ரூப் கோல்டுபெர்க் இயந்திரங்கள் என்று அறியப்படுகின்றன. பெரும்பாலும் கல்விச்சாலைகளில் ரூப் கோல்டுபெர்க் இயந்திரப்பொறி வழிமுறையிலான கட்டமைப்பு நிறுவப்படுகிறது.

 

 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World