Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueஅயலகத் தமிழ் இதழ்கள்
 

 அறிமுகக் குறிப்புகள்

                                      - மகேஸ்வரி

 

பூமி இரண்டாம் முறையாகத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டபோது உருவான இனமொன்று காட்டில் பச்சையைத் தின்று, உடுத்தி, நெருப்பை  உண்டாக்கி, காடு விட்டு ஓடி, ஆற்றோரச் சமவெளியில் தின்று போட்டது மீண்டும் முளைக்கும் அதிசயங்கண்டு பயிரிட்டது. இட்டது துளிர்த்து வளர,மேய வந்த இனங்களைக் கால்நடையாக்கிச் சக்கரம் கண்டது. சக்கரச் சுற்றலில் இந்தப் பூமியை மூன்றாம் முறையாகப் புதுப்பித்தது. அந்த இனம் கடல் கண்டது.நிலம் பிரித்தது.அந்த இனம் ஒவ்வொரு கண்டச்சூழலில் ஒவ்வொரு நிறம் கண்டது.கைகால் அசைத்து பிறருக்கு உணர்த்துவதை விடுத்து உதடசைத்து மொழி கண்டது.

 

அப்படிக்கண்ட உலக முதல்மொழி தமிழ். அதற்கான ஓர் இனமான தமிழர்களை உலகப் பரவல்களில் முதலிடத்தில் வைத்தது.வணிகத்திற்கு, பிழைப்புக்கு, உழைப்பிற்கு, உறவிற்கு, புகலிடத்திற்கெனத் திரைகடலோடிய தமிழர்கள் உலகில் தற்போது பரவலாக அனைத்து நாடுகளிலும் உள்ளனர்.எந்த நாட்டில் தமது இடப்பெயர்வை அதிக அளவில் அமைத்துக் கொள்கிறார்களோ, அங்கு மரபின் முன் தொடர்ச்சியைப் பதிய வைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுள் ஒன்றுதான் தமிழ் இலக்கிய இதழ்கள்.

 

இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே

எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே

எள்ளின் றெண்ணெய் எடுப்பது போல

இலக்கியத்தினின் றெடுபடும் இலக்கணம்

 

  என்று அகத்தியம் கூறுவதைப் போன்று தமிழிலக்கியம் மிகமிகத் தொன்மை வாய்ந்தது. அவ்வாறானதொரு சிறப்பினைப் பெற்றுத் திகழும் தமிழ்மொழி அயலகத்தில் தன்னை நிலைநிறுத்தப் பல்வேறு வடிவங்களில் போராடியது.

 

இதழ்களின் தேவை

அயலகத்தில் தமிழ் மக்களின் பண்பாடு, தமிழ்ச்சூழல், அனுபவங்கள், சிக்கல்கள், உணர்வுநிலைகள் இவற்றைக் கலை இலக்கியம் வாயிலாகப் பதிவு செய்யவும், அதன் மூலமாகத் தமிழ்சமூக மக்களை அடுத்தகட்ட நகர்விற்கு இட்டுச் செல்லவும், தமது ஆக்கங்கள் மூலம் தமிழ்மொழியை வளப்படுத்தவும், புலம் பெயர் மக்கள் விழைகின்றனர். அதன் பொருட்டு கருத்துப் பரிமாற்றமென்பது அச்சிதழ்கள், மின்னிதழ்கள், வலைப்பூக்கள் போன்ற தளங்களில் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றது.இவற்றில் அச்சிதழ்கள் தற்போது மின்னிதழ்களாகவும் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. மின்னிதழ், வலைப்பூ தவிர அச்சிதழாக வெளிவரும் புகலிடச் சிற்றிதழ்கள் அனைத்தும் இலங்கைத் தமிழர்கள் குடியேறிய நாடுகளிலிருந்து 1983 க்குப் பிறகு பரவலாக வெளிவரத் துவங்கின. அயலகத் தமிழர்களின் சூழல் அங்கு இதழ்களுக்கான தேவையை விரைந்து உருவாக்கியது.

அச்சு இதழ்களைப் பொருத்தமட்டில் பொழுதுபொக்கு அம்சங்கள் நிறைந்த ஜனரஞ்சக இதழ்களாகவும், குறிப்பிட்ட பொருண்மையின் கீழ் வரும் சிறப்பு இதழ்களாகவும் பிரிக்கலாம். சிற்றிதழ்கள் பெருமளவு இலக்கிய இதழ்களாகவே வெளிவருபவையாகும். தவிர பெண்ணியம், மார்க்சியம், மார்க்சிய எதிர்நிலை, கவிதை, முற்போக்கு சிந்தனை, அறிவியல், விழிப்புணர்வு, அரசியல், சிறுவர், வணிகம், பொதுஅறிவு, ஆன்மீகம் போன்ற பல்வேறு தளங்களிலும் வெளிவருகின்றன. புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் முயற்சியால் வெளிவருகின்ற எண்ணற்ற இதழ்களில், தமிழ் இலக்கிய இதழ்களை மட்டும் குறிப்பாக மாதாந்திர இதழ்களை மட்டும் இக்கட்டுரை அறிமுகம் செய்கின்றது.

 

ஈழத்தமிழ் இதழ்கள்

 இலங்கையில் தமிழ் இலக்கிய இதழ்களின் தோற்றமானது நவீன கல்விமுறையில் ஏற்பட்ட மாற்றம், அரசியல் கட்சிகளின் உதயம், சோசல்பரி குழுவினரால் உருவான அரசியல் காழ்ப்புணர்ச்சி, தமிழக செல்வாக்கு, ஈழகேசரி ஏற்படுத்தியிருந்த இலக்கிய நாட்டத்தின் அடிப்படையிலே  1940 களின் பிறகு உருவாகிறது.

 

 இலங்கை

   

 

 

வ.எண்

இதழ்கள்

வெளிவந்தகாலம்

வெளிவந்த நாடு - இடம்

ஆசிரியர் பெயர்

1

மறுமலர்ச்சி

1946 - 948

இலங்கை யாழ்ப்பாணம்

      _

2

உதயம்

1954 ஏப்ரல் 1956 ஏப்ரல்

இலங்கை

வை.அநவரத விநாயக மூர்த்தி

3

செளசெள

-

                  _

4

கலைச்செல்வி

1958

சிற்பி.சி.சரவணபவன்

5

கலைமதி

1958

வடமாகாணம் அளவெட்டி

_

6

மூன்றாவது மனிதன்

 

 

எம்.பெளசர்

7

மல்லிகை

1966

 

டொமினிக்ஜீவா

8

இனிமை

1970 களில்

 

சி.மகேஸ்வரன்

 

9

இதயம்

1970 களில்

 

அப்துல்காதர்லெப்பை

10

மணிமஞ்சரி

1970

 

_

11

பூங்குன்றம்

1976 ஜனவரி

பதுளை

       _

12

வசந்தம்

1976 தை

 

_

13

கலசம்

1970 ஏப்ரல்

 

_

14

அலை

1975-1990

 

அ.யேசுராசா

15

அக்னி

1975 ஜூலை

கொழும்பு பம்பலபிட்டி

கவிஞர்.ஈழவாணன்

16

அக்னினிக்குஞ்சு

1980

யாழ்ப்பாணம்

முல்லை மருதன்

17

வசந்தம்

1980 களில்

 

க.கோணேஸ்வரன்

18

அஞ்சலி

1981

 

கொழும்பு வத்தளை

ஏ.எம்.செல்வராஜா

19

களம்

1981 ஜூலை

மட்டக்களப்பு

_

20

வகவம்

1987 செப்

 

இப்னு ஆசுமத்

21

பூந்தளிர்

1987

 

ரியா யூசுப்

22

கொழுந்து

1988 ஜனவரி

 

 

அந்தினி ஜீவா

23

இந்துமதி

1990 களில்

 

நிர்மலன் தாஸ்

24

 

எங்கள் மலையகம்

1990 -1997 ஜூன்

கண்டி

பி.எம்.எஸ்.குணம்

 

25

கண்டி இலக்கிய செய்தி 61ல்

1990

 

இரா.அ.இராமன்

 

26

காலரதம்

1990

கல்முனை

எம்.வரதராசன்

27

சாளரம்

1990 களில்

 

_

28

மின்மினி

 

கொழும்பு

_

29

படி

1990

 

_

30

புதுமை இலக்கியம்

1990

 

க.சண்முகலிங்கம்

31

தடாகம்

1995 ஆகஸ்ட் முதல் 2001 நவம்பர் வரை

கிழக்கு மாகாணம் அம்பாறை

 

_

32

போது

1998

 

வாகனராவணன்

33

ஞானம்

2000 ஜூன்

 

தி.ஞான சேகரன்

34

செங்கதிர்

2008 ஜனவரி

கிழக்கு மாகாணம்

செங்கதிரோல் அமைப்பு

35

ஜீவநதி

2007 ஆகஸ்ட் 5

யாழ்ப்பாணம்

கலாமணி பரணீதரன்

36

கலைமகள்

 

 

ஹிதாயா

37

அம்பலம்

2007

யாழ்ப்பாணம் திருநெல்வேலி

 

_

38

தமிழமுது

1970 களில்

 

பா.சிவபாலன்

 

 

* இலங்கையில் வெளிவந்த இதழ்களில் முதல் இலக்கியச் சிற்றிதழாக மறுமலர்ச்சிகருதப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் பத்து இதழ்களை வெளியிட்டது.

* உதயம் இதழ் மூன்றாண்டுகள் வெளியானது. இலக்கிய இதழ்கள் வெகுகுறைவாக வெளிவந்த காலத்தில் வெளியான இதழாகும்.

* எட்டு ஆண்டுகள் வெளிவந்த கலைச்செல்வி இதழே இலங்கையில் ஈழகேசரி, மறுமலர்ச்சி இதழ்களுக்குப் பிறகு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது.

*மல்லிகை இதழ் நாற்பது ஆண்டுகளாக முற்போக்கு மாத இதழாகத் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

*கலசம் இதழ் பல்வேறு செய்திகளுடன் வெளிவந்த ஜனரஞ்சக இதழாகும்.

*அக்னி இதழ் புதுக்கவிதைகளை அதிகம் வெளியிட்டது.

*அக்கினிக்குஞ்சு       கலை,இலக்கிய,அரசியல்,பொழுதுப்போக்கு அம்சங்கள் நிறைந்த இதழாகும்.

*கொழுந்து இதழ் நிறுத்தியும்,தொடங்கியும் வெளியிடப்பட்டு வந்தது.

*”அம்பலம்”    மரபு, புதுக்கவிதை, இலக்கிய  ஆக்கங்களைத் தாங்கி வந்தது.

 

கனடா தமிழ் இதழ்கள்

 

வ.எண்

இதழ்கள்

வெளிவந்தகாலம்

வெளிவந்த நாடு - இடம்

ஆசிரியர் பெயர்

1

தேடல்

1980

கனடா

 

2

பரிமாணம்

1990 களில்

க.நவம்

3

பொதிகை

1990

 

4

தமிழர்தகவல்

1991 பிப்ரவரி

எஸ்.திருச்செல்வம்

5

காலம்

1990 ஜூலை

கவிஞர்.செல்வம்

6

அற்றம்

2005 மே

 

7

அறிதுயில்

2005

ரொறன்ரோ

கற்சுறா.கோமதி எஸ்.வி.ரபேல்

8

மண்வாசம்

2006 ஜனவரி 16

கனடா

இரா.ஜணி

9

தமிழ்சோர்ஸ்

-

 

10

கைநாட்டு

-

ரொறன்ரோ

 

11

தாய்வீடு

-

கனடா

 

12

பறை

-

மாமூலன்

13

பூவரசம்

2007

புங்குடு தீவு பழைய மாணவர் சங்கம்

 

*அறிதுயில் நவீனத்தமிழிலக்கிய விமர்சன முனைவுடன் வெளிவந்த ஓர் இதழ்.

*கைநாட்டு இதழின் குறிக்கோளாக மாற்றுக்கான களம் என்பதே எமது குறிக்கோள்என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

*தமிழர்தகவல் கடந்த இருபது வருடங்களாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.குடிவரவு,கல்வி, கனடிய அரசியல்,மொழிபெயர்ப்பு ஆகிய தகவல்களைத் தருகிறது.

*”தாய்வீடுஇதழ் வீடு தொடர்பான பல்வேறு தகவல்களைத் தருகின்றது.அ.முத்துலிங்கம்,தேவகாந்தன்,குருஅரவிந்தன் முதலானோர் எழுதி வருகின்றனர்

*பூவரசம் இதழ் புங்குடுதீவு மாணவர்களால் தம் கல்லூரி புகழ் பரப்பும் வகையில் நடத்தப்படுகிறது.

*பொதிகை சமூகப்பிரச்சினைகளை விமர்சித்து வந்தது.பிறகு தீவிர எதிர்ப்பினால் நின்றுவிட்டது.

*காலம் இதழ் இதுவரை 25 ஆண்டுகளில் 35 இதழ்களை வெளியிட்டுள்ளது.சிறப்பு என்னவெனில் தமிழ் படைப்பிலக்கியச் சூழலின் ஆளுமைகளை, அவர்களின் படைப்புகள் பற்றிய உரையாடல்களை முன்னெடுப்பதாக அமைந்திருப்பதாகும்.

*தீவிர பெண்ணிய இதழாக வெளிவருவது சுற்றம்

*தேடல் கனடிய தமிழ்ச்சமூகத்தை அடுத்தக் கட்ட நகர்விற்கு இட்டுச் சென்றது.

கனடிய தமிழ் இதழ்களைப் பொருத்தவரை புலம்பெயர்ந்து  வாழும் மக்களின் துன்பதுயரங்களையும்,புதிய அனுபவங்களையும்,பலதரப்பட்ட அரசியல் கருத்துக்களையும் தடையின்றி வெளிப்படுத்த, களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன.

 

ஐக்கிய அமெரிக்கா:

 

1980 களில் வாஷிங்டன்னிலிருந்து வெளிவந்த இதழ் குமரி”.இதன் ஆசிரியர் ஜே.ஜோ.பிரகாசு ஆவார்.

 

ஐக்கிய அரபு அமீரகம்:

 

1990 களில்  கமால்  பாட்சாவை ஆசிரியராகக் கொண்டு தமிழன் குரல்வெளியானது.இதனை தமிழ்ச்சிந்தனை மன்றம் வெளியிட்டது.

 

ஐக்கிய இராச்சியம்

 

வ.எண்

இதழ்கள்

வெளிவந்தகாலம்

வெளிவந்த நாடு - இடம்

ஆசிரியர் பெயர்

1

ஈழகேசரி

1990 களில்

லண்டன்

ஈ.கே.ராஜகோபால்

2

காற்றுவெளி

 

முல்லை அமுதன்

 

3

தாகம்

1990 களில்

 

4

லண்டன் முரசு

1970

பிரித்தானியா

சம். சதானந்தன்

5

எதுவரை

2009 ஏப்ரல் 4

லண்டன்

 

 

 

*ஈழகேசரி ஈழசெய்திகளை அதிகளவில் எடுத்துக்கூறியது.

*காற்றுவெளி காலவரையறை இன்றி வெளிவந்த இதழாகும்.

*பேரின மேலாதிக்கம் குறித்த ஆக்கங்களைப் பெற்று வெளிவந்த இதழ் தாகம்.

*எதுவரை இதழானது இதுவரை 4 இதழ்களை வெளியிட்டுள்ளது.

 

சிங்கப்பூர் இதழ்கள்

 

நவநீதம்என்னும் இதழ் 1931 களில் தமிழ் முஸ்லீமான புகாரி என்பவரை ஆசிரியராகக் கொண்டு சிங்கப்பூரில் வெளியானது.

 

சுவிட்சர்லாந்து

 

ப.மயூரன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு 2000-ஆண்டில் வெளியான இதழ் குருத்துஆகும்.கலை, இலக்கிய ஆக்கங்களுடன் வெளிவந்தது.

 

 

டென்மார்க்

 

            “பாலம்எனும் இதழ் மட்டும் 1990 இல் வெளிவந்துள்ளது.

 

நியூசிலாந்து

 

வெண்ணிலவு இதழை 1997 ஆவணியில் முதல் இதழாக வெளியிட்டவர் லி.நந்தகுமார் ஆவார்.

 

ஆஸ்திரேலியா

 

அக்டோபர் 2011 முதல் அரவிந்த், பாண்டிமாதேவி பழனிச்சாமி,வெங்கடேஷ்.ஐ ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவரும்  ஜனரஞ்சக இதழ்.

 

நார்வே

 

சர்வதேசத்தமிழர் இதழை 1990 களில் ஆசிரியராக இருந்து வெளியிட்டவர் ந.ச.பிரபு ஆவார்.மேலும் சுவடுகள் இதழை அதே காலகட்டத்தில் வெளியிட்டவர் துருவபாலகன் ஆவார்.

 

பன்னாட்டு இதழ்கள்

 

*அம்மா எனும் இதழ் 1991 ஏப்ரலில் எஸ்.மனோகரனை ஆசிரியராகக் கொண்டு வெளியானது.

*பாரிசு, நியூயார்க், இலண்டனிலிருந்து 1980 களில் தமிழ் மலர்ச்சி எனும் இதழ் வ.இந்திரபவானியால் வெளியிடப்பட்டது.

*மீட்சி- 1993 மே மாதத்திலிருந்து வெளிவந்த இலக்கிய இதழ் ஆகும்.வெளிவந்த இடம், ஐக்கிய ராச்சியம், லண்டன் ஆகும்.

*ஓசை இதழ் (1990) பிரான்சிலும், மெளனம் இதழ் அதே காலகட்டத்தில் பிரான்சில் வெளிவந்தது.இதன் ஆசிரியர் கி.பி.அரவிந்தன்.

*புலம்பெயர் மக்கள் வெளியிட்ட முதல் இதழாகக் கருதப்படுவது தூண்டில் ஆகும்.

*கமலம் பகுத்தறிவு எழுத்துகள் நிறைந்த இதழ் ஆகும்.

மேற்குறித்த இதழ்கள் அனைத்தும் மாதம் ஒருமுறை என்ற காலசுழற்சியில் வெளிவந்த அயலகத் தமிழ்   இதழ்களாகும்.இவற்றில் பெருமளவு வெளிவரவில்லை எனினும் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டு இன்றுவரை வெளிவரும் இதழ்களும் இதில் அடக்கம்.

இவ்வாறாக தொடர்ந்தும் போராடிக்கொண்டும் உலகளாவிய தமிழ் வாழ்வியலை பரவலான கவனவீச்சுக்குக் கொண்டுவரும் அயலக இதழ்களைக்குறித்து அத்துறையையும் முன்னெடுப்பையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

*****

 

 
Related News
 • வளர்ந்து வரும் அயலகத் தமிழ்த்துறை

 • நினைவேந்தல்

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World