Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueபெரியாரின் அயல்நாட்டுப் பயணக் குறிப்புகள் வழி அயலகத் தமிழர் வாழ்வும் எழுச்சியும்
 

 

 

தந்தை பெரியார் அவர்களின் உள்ளம் ஒரு கருத்துச் சுரங்கம். அவர் அறிவுக் களஞ்சியமாகவும், அனுபவக் கொள்கலனாகவும் திகழ்ந்தார் என்பது நாம் அனைவரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஓர் ஊருக்கோ, ஒரு நாட்டுக்கோ மட்டுமே உரித்தான கருத்துக்களை அவர்தம் நா எடுத்துரைக்கவில்லை. மனித சமுதாயம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய பொதுவான பகுத்தறிவுத் தத்துவத்தை எடுத்துரைத்தார். மூடநம்பிக்கை என்பது சாதி, மத, மொழி, இன நாட்டு வேறுபாடு கடந்து உலகம் முழுதும் பரவி நிற்கிறது. எனவே பெரியாரின் தொண்டும், பிரசாரமும் தமிழகத்திற்கு மட்டுமின்றி உலகின் பிற்பகுதிகளுக்கும் இன்றியமையாத தேவையாகிவிட்டது. அவர்தம் கொள்கை-நாட்பட்;டு எல்லைக் கோடுகளைக் கடந்து, மனித இன மேம்பாட்டிற்காக அலைகடலுக்கு அப்பாலும் பரவியது. எங்கெல்லாம் அறியாமை இருள் சூழ்ந்து நிற்கிறதோ அங்கெல்லாம் பகுத்தறிவு பரப்ப அறிவுச்சுடர் ஏந்திப் பெரியார் பயணமானார்.


தமிழகத்திலிருந்தும், இந்திய நாட்டிலிருந்தும் கடல் கடந்து அயல்நாடு சென்றவர்கள் பலர் பெரும்பாலோர் இன்பப்; பொழுதுபோக்கிற்காகவும், பொருள் ஈட்டுவதற்காகவும,; கல்வி கற்பதற்காகவுமே பயணமாயினர். ஆனால் தந்தை பெரியார் அவர்கள் தமது கருத்துக்களைப் பரப்புவதற்காகவே பயணம் மேற்கண்டார். திரை கடலோடித் திரவியம் தேடு எனும் பழமொழியினை மாற்றித் திரைகடலேராடியும் பிரச்சாரம் செய் எனும் புதுமொழியினை நடைமுறைப்படுத்திய பெருமை தந்தை பெரியார் அவர்களைச் சாரும். உலகின் பல பகுதிகளுக்கும் பெரியார் சென்றார். அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையினையும், அரசியலாரின் அணுகுமுறையினையும், சமுதாயப் பொருளாதார நிலையினையும், நமது நாட்டு நிலைமையுடன் ஒப்பிட்டு நுணுகி ஆராய்ந்தார். பிற நாடுகளில் மக்கள் பெற்றிருக்கின்ற வசதிகளும், உரிமைகளும் இந்நாட்டு மக்களும் பெற்றிட வழிவகைகளை எடுத்துரைத்தார்.

தந்தை பெரியார் அவர்கள் அயல்நாடுகளில் மாநாடுகளைத் தொடங்கி வைத்தும், பலபெரும் கூட்டங்களில் சொற்பொழிவாற்றியும், சுயமரியாதைக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்தார். அவ்வாறு பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் தன் நண்பர்களுடன் சென்று பிரச்சாரம் செய்த பல நாடுகள் பின்வருமாறு காணலாம்.

 

மலேசியா

சிங்கப்பூர்

பர்மா

ஆப்பிரிக்கா

எகிப்து

கிரீஸ்

துருக்கி

சோவியத் இரஷ்யா

செர்மனி

இங்கிலாந்து

பிரான்சு

ஸ்பெயின்

போர்ச்சுகள்

இலங்கை

முதலான பல நாடுகளுக்குபயணம் செய்து கருத்துக்களைப் பரப்பினார். அவர்தம் உரையினைக் கேட்க மக்கள் வெள்ளம் திரண்டது.

வடநாட்டுச் சுற்றுப்பயணம்

தந்தை பெரியார் அவர்கள் 1959-ஆம் ஆண்டு வடநாட்டில் பல முக்கிய நகரங்களில், அகில இந்திய ரிப்பப்ளிகன் கட்சியின் சார்பாக அழைக்கப்பட்டு ஜாதியொழிப்புப் பிரச்சாரம் புரிந்தார்.1 ஜாதியின் ஆணிவேர் இந்து மதமும், இந்துமத சாஸ்திரங்கள், வேதங்கள், இதிகாசங்கள் இவைதான் ஆகவே, ஜாதி ஒழிய வேண்டுமென்றால், ஜாதிக்கு ஆதாரமான இந்துமதம், இந்துமதக் கடவுள்கள், இந்து சாஸ்திர, வேத, இதிகாச, புராணங்கள் என்பதை அவர்களுக்கு விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்தார்கள்;

கான்பூர்

கான்பூரில் தந்தை பெரியார் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, இதுவரை அந்நகரமே கண்டிராத முறையில் இருந்தது. கான்ப+ரில் இன்னும் அலிகார் போன்ற பல இடங்களிலிருந்தும், தந்தை பொரியார் அவர்களைக் காண வந்த முஸ்லிம் தலைவர்கள், தாங்கள் இந்தப் பார்ப்பனக் கொடுமை ஆட்சியில் சிக்கிச் சீரழிவைக் குறித்தும் எல்லாப் பதவிகளும் பார்ப்பானுக்கே இந்திய ஆட்சியில்  தரப்படுகிறது என்ற புள்ளி விவரங்கள் கொண்ட புத்தகங்கள் தந்து, சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டுள்ள நாங்கள் விடுதலை அடைய வேண்டும் என நம்புகிறோம் என்றும் குறிப்பிட்டார்கள்.


லக்னோ

லக்னோவில் தந்தை பெரியார் அவர்களுக்கு, லோகியா சோஷியலிஸ்ட் கட்சித் தலைவரான திரு.பிரிஜ் நாராண்சிங் சட்டசபைக் கட்டடத்திற்குள் இருக்கும் எம்.எல்.ஏக்கள் வந்து குழுமி, ஜாதியொழிப்பைப் பற்றிப் பெரியார் அவர்களின் கருத்துரையைக் கேட்டு முழுதும் சரியே என்று ஒப்புக் கொண்டனர்.2 லக்னோ பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஜாதி ஒழிப்புக் குறித்து ஆற்றிய சொற்பொழிவு அந்நாட்டு மாணவர்கள் உள்ளங்களில் மாபெரும் விழிப்புணர்ச்சியை உண்டாக்கியது.
டெல்லி

    தந்தை பெரியார் அவர்களுக்குச் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட பார்லிமெண்ட் பெம்பர்கள் ரிப்பப்ளிகன் கட்சியைச் சேர்ந்தவர் சிறப்பான முறையில் விருந்தளித்து வரவேற்பு நடத்தினர். அங்குத் தந்தை பெரியார் அவர்கள், சட்டசபையின் மூலமோ, பார்லிமென்ட் மூலமோ ஜாதியை ஒழிக்க முடியாது. ஜாதியை ஒழிக்கப் பெருங்கிளர்ச்சியால்தான் முடியும் என்பதை வெகு தெளிவாக எடுத்துரைத்ததோடு அக்கருத்தை அப்பார்லிமென்ட் பலரும் ஒப்புக்கொள்ளும்படிச் செய்தார்கள். 

பம்பாய்

பம்பாயில் பல இடங்களில் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் ஜாதி, மதம், கடவுள் பற்றிய மூடநம்பிக்கைப் பற்றி விரிவாக விளக்கி, மனித சமுதாயம் உயர ஒரே வழி, உயர்ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற அமைப்பும், அவ்வமைப்பைப் பலப்படுத்தும் பல்வேறு சாதனங்களும் ஒழிய வேண்டுமென்றார். கடவுள் மதம், ஜாதி, ஜனநாயகம், இம்மூன்றும் இந்நாட்டு மக்களைப் பிடித்துள்ள பேய்கள், அதேபோல, சட்டசபை, பத்திரி;கை, பார்ப்பான், தேர்தல், சினிமா இவை இந்நாட்டைப் பிடித்துள்ள  நோய்கள் ஆகும் என்ற கருத்தை விளக்கிப் பல மணி நேரம் பேசினார்.

இதுபோன்று நேரிடையாகவும் மறைமுகமாவும் பெரியரின் பிரச்சாரம் விளைத்த பயன் ஏராளம் தமிழ்நாட்டில் நாற்பது ஆண்டுக் காலம் தந்தை பெரியார் அவர்கள் உழைத்த உழைப்பு, வடநாட்டில் பத்து ஆண்டுகள் உழைத்திருந்தால், இந்தியத் துணைக் கண்டத்தையே தமது காலடியின் கீழ்க்கொண்ட அரும்பெரும் தலைவராக விளங்கியிருப்பார் என்பதில் சிறிதும் அய்யப்பாடு இல்லை. தந்தை பெரியார் அவர்களது வடநாட்டுச் சுற்றுப் பயணத்தினால் ஏற்பட்ட விளைவுகள் பலன்கள் மிக அதிகமானவைகளே.

பெரியாரின் மேல்நாட்டுச் சுற்றுப்பயணம்

ஈ.வெ.ரா பெரியார் அவர்கள் சுற்றுப்பிராயணம் புறப்பட விரும்பினார். அப்போது அவருக்குச் சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது மருத்துவ அறிஞர்கள் அவர் நீண்ட ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தினார்கள், என்றாலும் 1931 டிசம்பர் 13ஆம் நாள் சென்னையில் கப்பலேறித் தன் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.3 மேல்நாடுகளில் அரசியல் இயக்கங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன? சமுதாய இயக்கங்கள் எவ்வாறு இயங்குகின்றன? அவர்களின் பழக்க வழக்கங்கள் யாவை? அவர்கள் அரசியல் பொருளாதாரம், சமுதாயம் முதலியவற்றில் எவ்வாறு முன்னேற்றமடைந்தனர்? பொது இயக்கங்களை எவ்வாறு நடத்துகின்றனர் என்பவற்றை நேரில் கண்டறிய விரும்பினார்.


ஈஜிப்ட், கிரீஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், பர்மா, ஃபிரான்சு, போர்ச்சுகல், கொழும்பு முதலிய பல நாடுகளுக்குச் சென்றனர். ஒரு வருடம் போய்ச் சுற்றி ஆங்காங்கேயுள்ள பல பொது இயக்கங்களையும் கண்டறிந்தார்.


ஜெர்மனி

ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் ஈ.வெ.ராவும், அவருடைய தோழர்களும் பல தினங்கள் தங்கியிருந்தார்கள். அப்பொழுது அது குடியரசு அரசாங்கமாக இருந்தது. ஹிட்லர் ஆட்சிக்கு வரவில்லை அங்கே பல சமதர்ம சங்கங்கள் இருந்தன. பல சமதர்மப் பத்திரிகைகள் நடைபெற்று வந்தன. இவர்கள் பல சமதர்மச் சங்கங்களுக்கும் சென்றார்கள். அரசாங்கத்தார்களுடன் கலந்து பழகினர். அவர்கள் கொள்கைகளைத் தெரிந்து கொண்டார்கள.; நிர்வாகச் சங்கங்களுக்கும் சென்று, அவர்களுடைய உண்மை நோக்கங்களையும் உணர்ந்துகொண்டார்கள்.


ஸ்பெயின்

அக்காலத்தில் ஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுக் குழப்பம் இல்லை. அமைதியாகவேயிருந்தது. அதன் தலைநகரமாகிய மாட்ரிட் நகரிலும் பல தினங்கள் தங்கியிருந்தனர். அந்நாட்டு சமதர்மிகளுடன் பழகினர். அந்நாட்டில் உள்ள பொது இயக்கங்கள் பற்றியும் உணர்ந்தனர்.

ரஷ்யா

ஈ.வெ.ராவும், அவர் தோழர்களும் நீண்ட நாள் சுற்றுப் பிரயாணம் செய்த நாடு ரஷ்யாதான் அங்கே சமதர்ம ஆட்சி எவ்வாறு நடைபெறுகிறது? அவ்வாட்சியால் அந்நாடு அடைந்த பயன் என்ன? அந்நாட்டு மக்களின் நிலை எவ்வாறுள்ளது? அவர்கள் தங்கள் அரசாங்கத்தைப் பற்றி என்ன நினைக்கின்றனர், என்பதைத் தெரிந்து கொள்ளவே நீண்ட நாள் தங்கி அரசாங்க விருந்தினராக இருந்தது, அந்;நாடு முழுவதும் உள்ள பல நகரங்களையும், சுற்றிப் பார்த்தனர். அரசாங்க காரியங்களையெல்லாம் பார்வையிட்டனர். பெரிய தொழிற்சாலைகளுக்கெல்லாம் சென்றனர். கல்வி நிலையம், நாடக அரங்குகள், சுவடி நிலையங்கள், படிப்பிடங்கள் ஆகியவற்றை எல்லாம் பார்த்தார்கள்.

தொழிலாளர்கள் சங்கங்களுக்கும் விவசாயப் பண்ணைகளுக்கும் சென்றார்கள். அவைகள் விஞ்ஞான முறைகளில் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதையும் அறிந்துகொண்டனர். அந்நாட்டு அரசாங்கத்தின் பொறுப்புள்ள அதிகாரிகளைச் சந்தித்து, அவர்கள் வாயிலாகப் பல உண்மைகளையும் கேட்டறிந்தனர். இவர்கள் அந்நாட்டுப் பொதுமக்களாலும், தொழிலாளர்களாலும், அரசாங்கத்தார்களாலும், அரசாங்கத்தினுடைய விருந்தினர்களாகவே நன்கு வரவேற்கப்பட்டனர். பல வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளிக்கப்பட்டன. பல பொதுக்கூட்டங்களில் அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள். அவற்றில் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும், அதன் கொள்கைகளைப் பற்றியும் கூறினர். இவ்வியக்கத்தை இந்நாட்டினரும் ஏற்றுக் கொண்டு கொண்டாடினர்.

இங்கிலாந்து

ஈ.வெ.ரா அவர்கள் இங்கிலாந்து சென்ற போது பல தொழிலாளர் தலைவர்களைச் சந்தித்தார். அந்நாட்டு தொழிலாளர் இயக்கத்தைப் பற்றிய உண்மைகளை அறிந்தார். 26.06.1932-இல் இங்கிலாந்தில் மெக்ஸ்பரோ லேக் பார்க்கில் ஒரு தொழிலாளர் பொதுக்கூட்டம் நடைபெற்றது.4 இதில் ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கூடியிருந்தனர். இக்கூட்டத்தில் தொழிலாளர்களின் தலைவர் சொற்பொழிவாற்றினார். அதற்கு விடை கூறும் முறையில் ஈ.வெ.ரா அவர்கள் பேசியதாவது பின்வருமாறு.

1. இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத் தகுந்த சமூகமாகக் கருதலாம் ஆனால் நாங்கள் பிரிட்டிஷ் தொழிற்கட்சியை மிகமிகப் பரிகசிக்கத்தக்க விஷயமாய்க்கருதுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். 2 இந்தியச் சுரங்களில் பத்து மணிநேர வேலைக்கு எட்டு அணா கூலி கொடுத்து இந்தியர்களிடம் வேலை வாங்கப்படுகிறது. சுமார் நாற்பது ஆயிரம் தினம் ஐந்து அணா கூலிக்கு ப+மிக்குள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தக்கொடுமையையும் ஆபாசத்தையும் நிறுத்த தொழிற்கட்சி அரசாங்கம் என்ன செய்தது என்றும்? அவ்வளவோடு மாத்திரம் அல்லாமல், இந்தியாவானது இந்திய அரசர்களும் ஜமீன்தார்களும், முதலாளிமார்களும் மட்டுமே ஆதிக்கம் வகிக்கும் படியானதும், குடித்தனக்காரர்களுக்கு பாத்தியமும், பொறுப்பும், இல்லாததுமான ஓர் அரசியல் சபை மூலம் நிர்வாகம் நடக்கும்படியான காரியத்திற்கு உதவி செய்கிறார்கள். ஆதலால், தொழிலாளர்களே! நீங்கள் இந்தப்போலிக் கட்சிகளையும், கொள்கைகளையும்,நம்பாமல் மனித சமூக விடுதலைக்கும், சுதந்திரத்துக்கும், சமத்து;வத்துக்கும் உண்மையாகவே போராடுவதற்கு உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை எதிர் நோக்கிக் கொண்டிருங்கள.என்று ஈ.வெ.ரா பெரியார் அவர்கள் இலங்கையில் சொற்பொழிவாற்றினார்.

பர்மா

அனைத்துலக புத்த சமய மாநாடு, பர்மாவின் தலைநகரான இரங்கூனில் நடக்கவிருந்த இம்மாநாட்டை பர்மிய அரசே முன்னின்று நடத்தியது, அப்போது பர்மாவின் தலைமை அமைச்சராக இருந்த ஊநூ புத்தமதத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டவர். உண்மையான சமய நம்பிக்கை உடையவர். அவருடைய ஆர்வமும், பெருமுயற்சியும் தான் அனைத்துலக புத்த சமய மாநாட்டின் சிறப்புக்குக் காரணமாய் அமைந்தது. டாக்டர் அம்பேத்கார் புத்த சமயத்தில் புதிதாகச் சேர்ந்ததால், அதற்குப் புது வலிவும் பொலிவும் கூடியிருந்தது, எனவே மாநாட்டைக் கூட்டியவர்கள் பெருமைக்குரிய டாக்டர் அம்பேத்கார் தலைமையில் அதனைக் கூட்டுவதே சிறப்பென்று முடிவு செய்தார்கள்.

டாக்டர் அம்பேத்கார், இந்த மாநாட்டில் பெரியாரும் கலந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினார். அவருடைய விருப்பத்தை மாநாட்டுக் குழுவினர் ஒப்புக்கொண்டனர். உடனே தந்தி மூலம் செய்தியை பெரியாருக்குத் தெரிவித்தனர். உயிர் நண்பரும் தாழ்த்தப்பட்ட மக்கள் அடை;கிறார் என்றவுடன் பெரியாரும், தம் மற்ற வேலைகைளையெல்லாம் தள்ளி வைத்து விட்டு உடனே புறப்பட்டார்.6

பர்மாவுக்கு பெரியார் வந்திருப்பதறிந்த மோல்மேனள் நகர இந்திய மக்கள் பெரியாருக்கு வரவேற்பு கொடுக்க விரும்பினார்கள் பின்னர் இரங்கூனில் ;இருந்த அத்தனை இந்திய இனத்தவர்களும்பெரியாரை வரவேற்று பெருமைப்படுத்தியுள்ளார்கள். அம்மாநாட்டில் பெரியார் அவர்கள் மேடையில் இந்திய மக்கள் பர்மிய மக்களோடு ஒட்டுறவு இல்லாமல் வாழும் முறையைப் பெரியார் தம்முடைய சொற்பொழிவுகளில் கண்டித்துப் பேசியிருக்கிறார். அயல்நாட்டில் வாழும் தமிழர்கள், அந்த நாட்டு மக்களோடு ஒன்றிப்பழக வேண்டுமென்றும், கூடுமான வரை அந்த நாட்டையே தங்கள் தாய்நாடாகப் பாவிக்க வேண்டும் என்றும் பெரியார் அறிவுரை கூறியிருக்கிறார். பெரியாரின் வருகை எல்லாருக்கும் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியிருந்தது. அடுத்தடுத்து நடந்த கழகக் கொள்கை பரப்புக் கூட்டங்களில் அந்தப் புத்துணர்வும் எழுச்சியும் ஏற்பட்டது. அனைவரும் மன நிறைவோடு வணக்கம் சொல்லிக்கொண்டு, அவரவர் வீடு நோக்கிப் புறப்பட்டார்கள். 

இலங்கை

இலங்கை வழியாக இந்தியாவுக்கு வந்தார். அப்போது இலங்கையிலிருந்த பெருந்தலைவர்களெல்லாம் இவரை வரவேற்றார்கள். இலங்கை சட்டசபையினர் ஒரு விருந்தளித்தனர். இவர் இலங்கை வந்தவுடன் திரு நாகம்மையாரும், மாயவரம் தேரிர் சி.நடராஜன் அவர்களும,; இலங்கை சென்று அவருடன் கலந்து கொண்டனர். இலங்கை சுயமரியாதைக்காரர்கள் அனைவரும் இவர் வருகையால் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். பல சங்கங்கள் இவரை வரவேற்றனர். இவர் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று பல பொதுக்கூட்டங்களிலும் சொற்பொழிவாற்றினார், இப்பேச்சுகளில் தொழிலாளர்கள் முன்னேற்றம், பொருளாதாரச் சமத்துவம், மற்ற நாட்டுத் தொழிலாளர்கள் அடைந்துள்ள உயர்ந்த நிலைமை, அவர்கள் ஒன்றுபட்டுழைத்து நன்மை பெறும் வழி, முதலாளிமார்களால் தொழிலாளர்களுக்கு உண்டாகும் துன்பங்கள், அத்துன்பங்களை நீக்கி முன்னேறும் வழிகள் ஆகியவற்றையும் பற்றிப் பேசினார் ஈ.வெ.ரா மேல்நாடு சென்றிருந்த காலத்திலும், சுயமரியாதை இயக்கம் சிறிதும் தளர்ச்சியடையவில்லை.

சிங்கப்பூரில் பெரியார்

02.01.1955 அன்று தந்தை பெரியார் அவர்களுக்கு சிங்கப்ப+ர் ஹேப்பி ஓர்ல்டு ஸ்டேடியெத்தில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.7 அக்கூட்டத்தில் பெரியார் உரையாற்றும் போது, தமிழ்ப் பெருங்குடியின் நல உரிமைகள் தேடுவாரற்றுக் கிடந்த நாளில,; நான் அயராத தொண்டு செய்து தமிழரை விழிக்க வைத்தேன் என்று வரவேற்புரையில் கூறியிருப்பதை நான் ஒப்ப முடியாது. ஏனெனில் இதற்கு முன் எத்தனையோ பெருமக்கள் இருந்திருக்கிறார்கள். அல்லாமலும் இதற்குக் காரணம் மக்கள் அடைந்த மாற்றமே ஆகும் என்றார்.


எதற்கெடுத்தாலும் பகவான் செயல் என்ற போக்கு உதவாது, ஏமாற்றி வஞ்சித்து ஒருவர் பணம்சேர்த்திருப்பார், அவரைக் கேட்டாலும் “எல்லாம் பகவான் கொடுத்தது” என்பார்;, அதேநேரத்தில் பாடுபட்டு, கஞ்சிக்கும் உப்பில்லாமல் இருக்கிறவர்களிடம் போய்க் கேட்டால் அந்த ஏழையும் “பகவான் செயல”; என்றே சொல்லிவிடுவார்கள். இந்தப் போக்கு கூடாது என்பதனால் தவறான வழி போக வேண்டும் என்பது பொருளல்ல. மக்களை மக்கள் மதிக்க. ஒன்றாகக் கூடி வாழ ஒழுக்கம் வேண்டும். ஒழுக்கம், உண்மை, அன்பு இவைதான் முக்கியம் மனித சுபாவம் எந்தக் காரியத்திலும் இன்பம் காணுவது இன்னொன்று புகழ்பெறுவது இந்தச் சீர்மையைப் பெற விரும்பும்போது பணச் சேமிப்பில் அறவழியையே மேற்கொள்ள வேண்டும். அறவழியில்லா மற்றெல்லாம் புகழுக்குரியன அல்ல, இதனைத் தான் வள்ளுவர். 

“அறத்தான் வருவதேஇன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழு மில?”

என்று கூறியிருக்கிறார். அறவழியால் பெற்ற பணத்தை தாம் பெற்றெடுத்த பிள்ளைகட்கு மட்டும் கொடுத்துப் பயனில்லை. பிறருக்கும் ஏழை எளியவர்களின் பிள்ளைகளுக்கும், உதவும் வகையில் பள்ளிக்கூடங்களை, கல்விக்கழகங்களை, கல்வி நிலையங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். தந்தை பெரியார் அவர்கள் சிங்கப்ப+ர் ஹோட்டலில் சர்வ சமூகத்தார் சிறப்பான தேநீர் விருந்து அளித்தனர் அவ்விருந்திற்கு நன்றி தெரிவித்து பெரியார் உரையாற்றினார்.

தமிழ்நாட்டில் இழிவு படுத்தப்பட்டிருக்கும் நாலாம் சாதியினர் உயர்வுக்கு நாங்கள் பாடுபடுகிறோம். நாங்கள் அரசியல் காரியங்களில் தலையிடுவதில்லை. மக்கள்உள்ளத்தில் மறுமலர்ச்சி உண்டாக்க வேண்டும் என்பதே எங்கள் அரசியல்காரர்கள்  அதிகம் விரும்பமாட்டார்கள். நாங்கள் முழுக்க, முழுக்க சமுதாயத் துறையில் பாடுபடுகின்றோம். சிங்கப்ப+ரில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும். இங்கு சாதியைப் பற்றிக் கவலை இல்லை. தமிழர்கள் இங்கு முன்னேறத் தன் முயற்சி வேண்டும். சோம்பேறித்தனம் போக வேண்டும். தமிழர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் நல்லெண்ணப் பரிமாறுதல், நல்ல ஒற்றுமையோடு உதவி கொண்டு வாழவேண்டும்.


ஜனவரி ஐந்தாம் தேதி அன்று சிங்கப்ப+ர் கிளாங்ரோடு இல்லத்தில் நடைபெற்ற வரவேற்பில் கலந்து கொண்டு பேசும்போது, நம் மக்களிடத்திலிருந்து அறியாமை நீங்கும் வரையில் திராவிடர் கழகத்திற்கு வேலை இருந்து கொண்டேதான் இருக்கும். நம் மக்களிடையே அலகுக் காவடியும், தீ மிதியும் இவை போன்ற அறிவுக்குப்பொருந்தாத அநாகரிகச் செயல்களும் இருக்கின்ற வரையில் திராவிடர் கழகம் இருந்துதான் வருகிறது. நம் மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளை நீக்கி, அவர்களை மானமுள்ள மக்களாக வாழச்செய்ய வேண்டுமென எண்ணி, அதற்கான முறையில் ஏதோ என்னால் இயன்ற வரையில் தொண்டாற்றி வருகின்றேன் என்று கூறினார்.

சிங்கப்பூரில் தமிழர் சீர்திருத்த சங்கம்

தந்தை பெரியார் அவர்கள் சிங்கப்பூர் சென்று சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்பி, மக்களிடையே விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார். சுயமரியாதை இயக்கத்தின் மேன்மையினை மனதில் பதியும்படி எடுத்துரைத்தார். அதன் விளைவாக சிங்கப்ப+ர் தமிழர்கள் பெரியாரின் கொள்கைகளை உள்ளடக்கி “தமிழர் சீர்திருத்த சங்கம்” ஏற்படுத்தினர். அச்சங்கத்தின் தொடக்க நிகழ்ச்சி பற்றிய செய்தியினைக் குடியரசு இதழ் வெளியிட்டது. அதில் தமிழர் சீர்திருத்த சங்கம்என ஒரு சுயமரியாதைச் சங்கம் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் 13.7.36 ஞாயற்றுக் கிழமை ஓ.ராமசாமிநாடார் அவர்கள் தலைமையில் இந்திய சங்கக் கட்டிடத்தில் ஆரம்பக் கூட்டம் நடந்தது.


அக்கூட்டத்தில் சிங்கைத் தமிழ் மக்கள் பொதுக்கூட்டத்தில் தீர்மானித்த வண்ணம் தமிழ் மக்களாகிய நமக்கு இவ்வ+ரில் சீர்திருத்தக் கொள்கையோடு ஒர் சங்கம் நிறுவ வேண்டியதைப் பற்றி யோசனை செய்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்கெனவே இக்கூட்டம் கூட்டி இருக்கிறோம் என்றார் இவ்வ+ரில் நம் தமிழ் மக்களால் நிறுவப் பெற்ற பல சங்கங்கள் கொஞ்ச காலத்திலேயே மூடிவிடப்பட்டிருக்கின்றன  என்பது நாம் ஒவ்வொருவரும் அறிந்ததே ஆகும். இப்படி ஏற்பட்டதற்கு காரணம் என்னவென்றால் இச்சங்கங்களெல்லாம் போதிய ஆதரவின்றி ஆரம்பிக்கப்பட்டு சங்க வாடகைக் கூட கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டதேயாகும். எனவே நாம் எல்லோருமிருந்து ஆரம்பிக்கப்படும் இவ்விதமான சங்கடங்களுக்கு ஆளாகாமலும் பிறர் பார்த்து பரிகாசம் செய்யாத வண்ணமும் இரக்க வேண்டியது அவசியத்திலும் அவசியம் என்று கூறினார். தமிழன் கூலிக்காரன் இவர்களால் என்ன செய்ய முடியும் என்று நமது சகோதரர்களாகிய இலங்கையரும் வட இந்தியரும்சொல்லக் கேட்டிருக்கிறோம.; இந்த இலங்கையரும்;, வட இந்தியரும் முற்பட்டுச் செய்யும் எந்த காரியத்திற்கும் தென்னிந்தியர்கள் ஆகிய நம்மால் மற்ற எல்லோரையும் விட அதிகமான பணம் கொடுக்கப்படுகின்றது.

இவ்விதம் நம்மை இழிவுபடுத்திக் கூறுவதற்குக் காரணம் நாம் பொது விசயங்களில் அதிகம் கவனம்செலுத்தாமலும், அதிகமாய் வேலைகளில் ஈடுபட்டு; இருப்பதேயாகும்;. இனியும் நாம் இவ்விதமே இருந்து கொண்டே இருப்போமேயானால் நமது சுயமரியாதையை நாம் காப்பாற்றிக் கொண்டவர்களாக மாட்டோம் என்பதல்லாமல், அறிவு உலகத்திலும் நமக்கு நியாயமாயக்; கிடைக்க வேண்டிய ஸ்தானத்தை நாம் என்றும் அடைய முடியாது. ஆகையினால் நாம் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கான பொது விசயங்களில் பிறரின் தூண்டுதலும,; வற்புறுத்தலுமின்றி முன்னணியில் வந்து நின்று இயன்ற அளவு தொண்டாற்ற வேண்டியது மிகவும் அவசியமென்பதை ஒவ்வொருவருக்கும் பொது ஜனத் தொண்டில் உங்கள் பங்கைச் செய்ய முற்படவேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஆரம்பிக்கப் போகும்  சங்கத்தின் முக்கிய நோக்கங்கள் சிலவற்றை அவர் கூறினார்.

1. மக்கள்  பணியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருணாசிரமம்

2. தர்மத்தையும், தீண்டாமையையும் ஒழித்தல்.

3. பெண்களுக்கு உரிமை அளித்தல்.

4. அறிவு விருத்திக்கான கல்வியைப் போதித்தல்.

5. சிக்கன முறையைக் கைக்கொள்ளுதல்

6. அறிவிற்குப் பொருத்தமற்ற பழக்க வழக்கங்களை நீக்குதல் ஆகியவைகளே குறிப்பிடத் தக்கன. இவையாவும் நீங்கள் ஒவ்வொருவரும் மனப் ப+ர்த்தியாய் விரும்பும் சீர்திருத்தங்களே ஆகுமாதலால், இச்சங்கம் நிறுவுவதற்கான யோசனைகளையும் அபிப்பிராயங்களையும் தெரிவித்து நிகழ்ச்சிக் குறிப்பில் கண்டுள்ள விஷயங்கள் எல்லாம் தீர்மானிக்கும்படி உங்கள் யாவர்களையும் வணக்கமாய் கேட்டுக் கொள்ளுகிறேன் எனப்பேசி முடித்தார்.

மலேசியாவில் பெரியார்

உலகின் பல பகுதிகளுக்குச் சென்று, அறிவுப் புரட்சி செய்த தந்தை பெரியார் அவர்களின் முதல் வெளிநாட்டுப் பயணம் மலேசியாதான். மலேசியா அப்போது மலாயா என்று அழைக்கப்பட்டது. அப்பாவின் கருத்துக்கள் அகிலத்தின் கருத்துக்களாவதற்கு தொடக்கவுரை மலேசியாவில்தான் எழுதப்பட்டது. 1929-ஆம் ஆண்டு முதல் முறையாக மலேசியா சென்ற தந்தை பெரியார் அவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 1954ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பயணம் மேற்கொண்டார்.11 அந்நாடு முழுவதும் சுற்றுப்பிராயாணம் செய்வதற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இதன் பொருட்டு அவருடைய தோழர்களும் அழைக்கப்பட்டனர். 1929 டிசம்பர் 15 ஈ.வெ.ராவும், நாகம்மையாரும், தோழர்கள் முதலியவர்களும் நாகையில் கப்பலேறினர்.


அந்நாட்டிலும் தேசியத்தின் பெயரால் சிலர் கொள்ளை அடித்து வந்தனர். மதத்தின் பெயரால் ஏமாற்றி வந்தனர். இக்குழுவினரை ஈ.வெ.ராவின் வருகையைக் கேட்டுத் திகைத்தனர். தாங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடும் என்ற நடுங்கினர். இவர்கள் ஈ.வெ.ராவையும் அவர் தோழர்களையும் மலேயாவுக்கு வராமல் தடுக்க வேண்டுமென்று பலமான முயற்சி செய்தனர். இராமசாமியும் அவர்கள் தோழர்களும் பெரிய புரட்சிக்காரர்கள். காங்கிரசுக்காரர்கள் பொதுமக்களைக் கலகம் பண்ணும்படி தூண்டுகிறவர்கள். அவர்கள் இங்கு வந்தால் அரசாங்கத்திற்கு அடுத்து பொதுமக்களிடையே குழப்பம் உண்டாகும். ஆதலால், அவர்களை இங்கே வர விடாமல் கப்பலிலிருந்தபடியே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்றும் முறையிட்டனர். ஆனால் இம்முறையில் பலிக்கவில்லை. மதத் துரோகிகள் வருகின்றார்கள். தமிழ் மக்கள் ஒருவரும் அவர்கள் சொற்பொழிவுகளைக் கேட்கக் கூடாது. அவர்களுடைய கூட்டங்களுக்குச் செல்லக் கூடாது என்றும் நாடு முழுவதும் விளம்பரம் செய்தனர்.


இக்காரணத்தாலேயே, ஈ.வே.ராவையும் அவருடைய தோழர்களையும் வரவேற்க எண்ணற்ற மக்கள் கூடிவிட்டார்கள். இவ்வரவேற்பைக் கண்டவுடன் எதிரிகள் நடுநடுங்கினர். இதில் கலந்து கொள்ளாதிருந்தவர்கள் எல்லோரும் திகைப்புற்றார்கள். விலகியிருந்த ஒரு சில இந்து முஸ்லிம் கணவான்களும் பிறகு அதில் கலந்து கொண்டனர். பெரியாரின் வெற்றிக்கு அவரது ஆதரவாளர்கள் மட்டுமல்லாது, மற்றொரு காரணமாயிருப்பவர் அவரை எதிர்ப்போரேயாவர். அதே முறையில் மலேயாவிலுள்ள யாரோ சில பழைமை விரும்பிகள்தான் பெரியாரைப் பற்றி தவறாகப் பிரச்சாரம் செய்து மூக்கறுபட்டார்கள். அங்குப் பெரிய சங்க மாநாட்டையே நிகழ்த்தினார்.


அந்த நாடுகளில் இந்த நாட்டை போலச் சாதி - மதச் சண்டைகள் இல்லையெனினும், மூட நம்பிக்கைகள், அறிவுக்குப் பொருந்தாத குருட்டுப் பழக்க வழக்கங்களுக்குக் குறைவில்லை. பல பேர் பெரியார் என்றால் துறவி இராமசாமியென்றே கருதிக் காலில் வீழ்ந்து வணங்கினர். அவர்களெல்லாம் பகுத்தறிவு விளக்கங்களைப் பெரியாரும் குழுவினரும் தாராளமாக வழங்கினர் அவர்கள் கேட்ட அய்யவினாக்களுக்கெல்லாம் தயங்காமல் தெளிவான பதிவுரைகள் வழங்கினார். மக்களிடையே பேதங்கள் ஒழிந்து சுயமரியாதைப் பெருக வேண்டும் என்ற குறிக்கோளை அவர் எடுத்துரைத்தார்.


மலேயா சுற்றுப்பயணம் ஒரு மாதத்திற்கு மேல் இல்லை. டிசம்பரில் சென்று ஜனவரியில் திரும்பினார். இக்குறைந்த காலத்தில் அந்நாடெங்கும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. பொதுக்கூட்டங்களுக்குச் சீனர்கள், ஜப்பானியர், மலேயர்கள் ஆகியோர் திரளாக வந்தனர். இந்தியப் பெரியாரை பார்க்க வேண்டும் என்பதே இவர்கள் ஆவல். செவ்வாக்குள்ள தமிழர்கள் பெரியாரைத்; சந்தித்துப் பேசுவர். பத்திரிகைப் பிரதிநிதிகளும் சந்திப்பார்கள். அவர்கள் சுயமரியாதைக் கொள்கைகளைப் பற்றி வாதம் புரிவார்கள். மலேயாவில் உள்ள தமிழர்களிடத்தில் நம் நாட்டைப் போல ஜாதிச் சண்டைகள் இல்லை. மதப்போராட்டங்கள் இல்லை. மூடப் பழக்க வழக்கங்களும் குறைவு. பல தலைமுறைகளுக்கு முன் குடியேறிய, அந்நாட்டிலேயே நிலையாக வாழும் தமிழர்களும் இருக்கின்றனர். அங்குள்ள சீனர்கள், ஜப்பானியர்கள் முதலியவர்களின் பழக்கத்தால் தமிழர்களும் ஓரளவு ஒற்றுமை பெற்றுள்ளனர். ஆதலால் அவர்களுக்குச் சுயமரியாதைக் கொள்கைகள் புதியவையல்ல. ஜாதிப்போர், சமய வெறுப்பு, வீண் சடங்குகள் ஒழிய வேண்டும் என்பது அவர்களுக்கு முற்றிலும் உடன்பாடு. இம்மாதிரியான கொடுமைகளை ஒழித்து தமிழர்களை ஒன்றுபடுத்தவே சுயமரியாதை இயக்கம் பாடுபடுகின்றது.

மலேசியாவில் தமிழர் சீர்திருத்த மாநாடு

தீர்மானங்கள்

தந்தை பெரியார் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அகில மலாயத் தமிழர் மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள் பின்வருமாறு.

1. அம்மாநாடு தமிழர்களின் திருமணவினைகள் சிக்கனமாகவும். தாய்மொழியிலும் 

நடத்த வேண்டுமென அபிப்பிராயப்பட்டது.

2. அகில மலாய தமிழச்; சங்கத்திற்கு கொள்கைகளையும், விதிகளையும் புத்தகரூபமாய்த் தயாரிக்கும்படி நிர்வாகக் கமிட்டியாரைக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

3. விதவை மணத்தை ஆதரித்து ஒவ்வொருவரும் அதைக் கைக்கொள்ளுமாறு தமிழர் சமூகத்தைக் கேட்டுக் கொள்வதுடன் இவ்விவாகத்தை எஸ்.எஸ் அரசாங்கம் சட்டமாக்கியுள்ளது போல் எப்.எம்.எஸ் அரசாங்கத்திலும் சட்டமாக்க வேண்டுமென அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.

4. இந்தியா, இலங்கையிலிருந்து வந்து இந்நாட்டில் தொழில் வர்த்தகம் முதலிய துறைகளில் ஈடுபட்டு இருப்போர் ஆறு மாதங்களுக்கு மேல் இங்கு வசிப்பதாயின் தன் மனைவி மக்களை வரவழைத்துக் குடும்ப சகிதமாய் வாழுதல், சுகத்திற்கும் கௌரவத்திற்கும் ஏற்றதாகக் காணப்படுவதினால் தனிமையாய் ஆண்டுக் கணக்காய் இந்நாடு வருவோர் இது பற்றிச் சிந்திக்க இத்தீர்மானத்தை செயலளவில் கொண்டு வர வேண்டுமென்று அம்மாநாடு சிபாரிசு செய்தது.

5. மலாய் நாட்டிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் தமக்குள் நாட்டு வேற்றுமை முதலிய எத்தகைய வேற்றுமைகளையும ;கொண்டாடாது, தாய் மொழிப்பற்றில் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் எல்லாத்;துறைகளிலும் வாழ்க்கை நடத்தும்படியும், தங்கள் முன்னேற்றங்களை நன்கு அமைத்துக்கொள்ள ஒன்று சேர்ந்து உழைக்கும்படியும் அம்மாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது.


6. . அகில மலாயத் தமிழர் மாநாடு கட்டியதன் நோக்கம் தமிழ்மொழி பேசும் வகுப்பினர்களின் சமூக சீர்திருத்தத்திற்காக கூட்டப்பட்டதேயன்றி, தமிழ் நேசன் இந்;தியன்டையேனியர், இந்திய மித்திரன,; ஆகிய பத்திரிகைகளின் பொய் பிரச்சாரத்தில் கண்டபடி வரைந்து, சிங்கப்ப+ரில் கூடும் அகில மலாய இந்தியர் கான்பரன்ஸிற்கும், ஏனைய கூட்டத்தார்க்கும் விரோதமாகக் கூட்டப்பட்டதாக கூறியது தவறென்றும் இம்மகாநாடு தெரிவித்துக் கொண்டதோடு, அப்பத்திரிகைகளைக் கண்டித்து, அவைகளை ஆதரிக்காதிருக்கும்படியும் இம்மாநாடு கேட்டுக் கொண்டது என்று சிலத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

மலேசியாவில் சுயமரியாதைக் கொள்கைப்பரப்பு

“குடிஅரசு” ஏட்டினைத் தொடர்ந்து படித்துப்பார்க்கும் வாய்ப்பினைப்பெற்ற, மலேசியா வாழ் தமிழர்களில் சிலர், தீவிர சுயமரியாதை இயக்கப்பற்றுடையவர்களாக மாறினார்கள். அவர்கள் மலேசியாவின் முக்கிய இடங்களில், சுயமரியாதைச் சங்கங்களை நிறுவி, அவற்றின் மூலம் இயக்கத் தொண்டாற்றி வந்தனர். அவர்கள் பெரியாருக்கு அழைப்பு விடுத்து, அவர் மலேசியாவில் கொள்கைப்பரப்புச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். மலேசியா நண்பர்களின் அழைப்பினை ஏற்று மலேசியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள, பெரியார் அவர்கள் இசைவு அளித்தார்.

ஈ.வெ.ரா பெரியார் அவர்கள் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள், குறிக்கோள்கள் பற்றியும் மனிதன் தன்மான உணர்வோடும், பகுத்தறிவுத் தன்மையோடும் வாழவேண்டிய இன்றியமையாமையை பற்றியும், சாதிவெறி, சமயவெறி, கடவுள் வெறி, ஆகியவற்றை மனிதத்தன்மையோடு வாழவேண்டிய அவசியம் பற்றியும் கூறினார். மூடப்பழக்கங்கள், குருட்டு நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு அறவே இடம் அளிக்கக் கூடாது என்பது பற்றியும், தீண்டாமை அகற்றுதல், பெண்ணடிமை போக்குதல், விதவை மறுமணம் செய்தல், மூடச் சடங்குகளை ஒழித்தல், உண்மை, உழைப்பு, அன்பு, ஒழுக்கம் ஆகியவற்றிற்கு மதிப்பு அளித்தல், சமத்துவம். சகோதரத்துவம், சுதந்திரம்பேணுதல், அறிவியல் சிந்தனைக்கும,; தொழில் நுட்பவியல் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்தல் போன்றவை பற்றியும் மிக விரிவாகவும், தெளிவாகவும், நுட்பமாகவும் பேசினார்.


பெரியார் அவர்களின் மலேசியா சுற்றுப்பயணம் மலேசியாவில் வாழ்ந்த தமிழர்களிடையே, சுயமரியாதை இயக்கக் கருத்துக்களை நல்லமுறையில் வைக்கப் பயன்பட்டதோடு அல்லாமல், அங்கு வாழ்ந்த சீனர், சப்பானிய, மக்கள் ஆகியோருக்கு அந்தக் கருத்துக்களை அறிமுகப்படுத்தவும் மிகவும் பயன்பட்டது என்று கூறலாம். இன்று தமிழ்நாட்டில் சுதந்திரம், சமத்துவம், தாழ்த்தப்பட்டோருக்கு ஆலயப்பிரவேசம் என்றெல்லாம் முழங்கப்படுகிறதே அவைகள் அனைத்தும் பெரியார் அவர்களையேச் சேரும். ஈ.வே.ராவின் மலேசியா சுற்றுப்பிரயாணத்தால் பெரும்பயன் விளைந்தது. அந்நாட்டுத் தமிழர்கள் ஒற்றுமையடைந்தனர். சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி முற்றிலும் நன்றாக உணர்ந்தனர். அந்நாட்டு மக்களிடையே புதிய கிளர்ச்சியும், சமூக சீர்திருத்தத்தில் அளவு கடந்த ஆவலும் தோன்றின. மலேயா நாட்டில் ஈ.வே.ராவின் சுற்றுப்பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்தவர்களும், அவருடையத் தோழர்களும் சுற்றுப்பிரயாணம் முடியும் வரையிலும் கூடவே இருந்தனர்.

பெரியாரின் அயல்நாட்டுப் பயணக்குறிப்புகள்

பெரியாரின் சிந்தனைகள், பெரியாரின் முழுமையான வரலாறு பெரியாரின் வரலாற்றுக் காலக்கண்ணாடி, பெரியாரின் கொள்கைகள் இன்றைய தேவைகளை நிலைநாட்டக்கூடிய ஆய்வு நூல்கள் போன்ற இவையனைத்தும் முழுமையாகவும், விரிவாகவும் தக்க சான்றுகளோடும் தமிழிலும,; பிற மொழிகளிலும் விரைவில் வெளிவரவேண்டுமென்ற நோக்கத்தோடு ஈ.வெ.ரா பெரியாரின் அயல்நாட்டுப் பயணம் பற்றிய அரிய கருவ+லத்தின் விலைமதிக்கமுடியாத கருத்துப் பேழையின் ஒரு பகுதியினை வே.ஆனைமுத்து அவர்கள் ஈரோட்டில் வெங்கடநாயக்கரின் அறக்கட்டளை ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பரின் பெட்டியிலிருந்து தேடியெடுத்து, பெரியாரின் தமையனார் மகனிடமிருந்து 6.5.1998-ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டார். ஒருவரின் கையெழுத்துப் படியினை அவருடைய சமகாலத்தவர் கூடப் படித்துப் புரிந்துகொள்வது கடினம் அக்கடினத்தையும் பொருட்படுத்தாமல் கருவ+லத்தின் கருத்து வளத்தையும், பயண விவரங்களையும் நாம் அனைவரும் அதன்பயனை முழுமையாகப் பெற்றிடவும் அவர் அந்நூலைப் பதிப்பித்தார். தந்தை பெரியார் அவர்கள் 24.12.1931 முதல் 11.11.1932 வரை 331 நாட்கள் பயணம் செய்துள்ளார். அதில் 78 நாட்களுக்குரிய பயணக்குறிப்புகள் மட்டுமே கிடைத்து உள்ளதாக நம் பதிப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார். 13


சோவியத் இரஷ்யாவில் பெரியார்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இந்தியாவிலிருந்தும் பிறநாடுகளிலிருந்தும் சோவியத்து இரஷ்யாவுக்கு ஒருவர் பயணம் செல்வது என்பது எளிதாயிற்று. இந்தியாவிற்கும் சோவியத்திற்கும் இடையே வாணிபத் தொடர்பு ஏற்பட்ட காலத்தில் நாள்தோறும் பல்வேறு பணிகளை முன்னிட்டு இந்தியாவிலிருந்து அரசு அலுவலர்களும், அரசியல் தலைவர்களும், பொதுமக்களும,; மாணவர்களும,; வெளிப்படையாக அங்குச் சென்று வருவது என்பது மிக மிக எளிதாகி விட்டது. அக்காலத்தில் ஐரோப்பாவிலிருந்து நேரே இந்தியாவுக்கு வருவதற்கு சட்டப்படியான அனுமதி வேண்டும். அப்படி அனுமதி பெறாதவர்கள் இலங்கை வழியாக இந்தியாவுக்குள் நுழையலாம் என்பது அக்கால நடைமுறையாக இருந்தது. ஈ.வே.ரா அவர்களும், எஸ்.இராமநாதன் ஆ.இராமசாமி ஆகியோர் சோவியத்து இரஷ்யாவில் சமதர்ம அரசு செயல்படுவதை நேரில் பார்க்கவேண்டும் என்கிற பேரவாவினால் உந்தப்பட்டுத் தலைமறைவாகப் பயணம் மேற்கொள்வதற்கான பயண அனுமதி இன்றி இரகசியமாகவே சிக்கனம் கருதிக் கப்பலில் நான்காம் வகுப்புப் பயணிகளாகவே சென்றார்கள். அவ்வாறு ஈ.வெ.ரா பெரியார் அவர்கள் சோவியத் இரஷ்யாவிற்கு சென்றதையும், அங்குப் பார்த்த செய்திகளையும,; குறிப்புகளாகத் தனது பிரயாணக் குறிப்புகளாக எழுதியுள்ளார். பெரியார் எழுதிய பிரயாணக் குறிப்புகள் பின்வருமாறு.

சோவியத் கவுன்சில் சிஸ்ட்டம்

கார்கோடவுன் கவுன்சில் சிக்கர்ட்டரி வரவேற்றுப் பேசியதில்

தங்கள் கவுன்சில் சிஸ்ட்டத்தைப் பற்றி ஒரு உபன்யாசம் செய்தார்

கார்கொ கவுன்சில் சார்பால் உங்களை வரவேற்கிறேன். நான்

தேர்வாகி இது இரண்டாவது வருஷம.; நான் 3000 டெப்ட்டி 

டெலிகேட்டுகளால் தெரிந்தெடுக்கப்பட்டது எனது பெரிய வெற்றியாகும் சோவியத் 

பூனியன், டவுன். கிராமம் ஆகியவை சேர்ந்து தெரிந்தெடுத்தது அவர்கள் பேரால் 

 அவர்களது பிரதிநிதியாய் வரவேற்கிறேன் என்றார்.


ஓட்டர்கள் யோக்கியதை

இந்த நாட்டில்ஓட்டிற்கு லாயக்கில்லாதவர்கள்:

1. புரோகிதர்கள், சர்ச்சு பாதிரிமார்கள்

2. பழைய போலீஸ்காரர்கள்

3. ஹெயிட்கார்;ட்ள்களில் சிவில் வாரின் போது விரோதமாய் இருந்து  கலகம் செய்தவர்கள்.

4. லேபர்களையும,; பாமர மக்களையும் சாக்காக வைத்துக் கொண்டு 

விரோதமாகக் கிளர்ச்சி செய்தவர்கள்.

5. சொத்துக்கள் வீடுகள் வைத்திருந்தவர்கள் யந்திரம் வைத்திருந்தவர்கள்.

6. சிறு வியாபாரிகள் (வேலை செய்ய சக்தி இல்லாதவர்கள்தான் சிறு 

வியாபாரம் செய்யலாம.; அதுவும் முடியாவிட்டால் அந்தக் குடும்பத்திற்கு 

பென்ஷன் கொடுக்கப்படும்) தேவை. தகுதி, பார்ட்டிக்கு செய்த வேலை,

அதன் வேகம், பலன் ஆகியவைகளைக் கவனித்துப் பென்ஷன் 

தீர்மானிக்கப்படும்) இவர்கள் தவிர 18 வயது முடிந்த எவருக்கம் 

சாகும்வரை ஓட்டு உண்டு. இவர்கள் எந்த வேலைக்கும் 

தெரிந்தெடுக்கப்படலாம் வெளிதேசத்துக்காரர் இங்கு வந்து கெட்டி 

ஆணவுடன் ஓட்டு செய்யலாம்.

என்று பெரியார் தான் சுயமாக எழுதியிருந்த பயணக் குறிப்புகளில் இடம்பெற்ற செய்திகளாக நம் பதிப்பாசிரியர் தெளிவாக கூறியுள்ளார்.


ஈ.வெ.ரா பெரியார் குழுவினர் சோவியத்திற்குச் சென்று முதலில் அவர்களுக்கு எதிர்ப்பட்ட சிக்கல் சாமான்களை இறக்கிடவும,; ஏற்றிடவும் தூக்கிச் செல்வதற்கும் ஆன சுமைக் கூலி பற்றியதாகும். நீங்கள் ஏன் இவ்வளவு அதிகமாகக் கூலி கேட்கிறீர்கள்? எங்களிடம் அவ்வளவு பணவசதி இல்லையே என ஈ.வெ.ரா குழுவினர் சோவியத்து நாட்டுச் சுமை தூக்குவோரிடம் கூறினார்கள். அதற்குச் சுமை தூக்குவோர் நீங்கள் பிரிட்டிஷ் இந்தியப் பிரஜைகள். நீங்கள் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றோம். எனவே அதிகமான கூலி தரவேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் நாத்திகச் சங்கத்தைச் சார்ந்தவர்கள். சமதர்ம அரசமைப்பில் நம்பிக்கை உள்ளவர்கள் எனக்கூற உரிய சுமைக் கூலியை கொடுத்துள்ளனர் பெரியார் குழுவினர்.


பெரியார் குழுவினர் சோவியத்து அரசாங்கத்தின் விருந்தினர்களாக ஏற்கப்பட்டார்கள். பின்னர் சோவியத்து நாட்டில் பயணம் செய்த காலம் முழுவதற்கும் பன்னாட்டுப் பயணத்திற்கான முதலாவது வகுப்புப் பயணிகளாகவே மூவரும் நடத்தப்பட்டு எல்லா வசதிகளும் அளிக்கப்பட்டனர். இவ்விவரங்களை அப்பயணக்குழுவில் சென்ற ஈரோடு இராமு என்கிற இராமசாமியிடம் கேட்டறிந்து கொண்டதாகக் கூறினார். பிறகு ஈ.வே.ரா குழுவினருக்குப் பஸ்ட்டு கிளாஸ்; டிக்கெட் பர்லினுக்கு வாங்கிக் கொண்டு வந்தார்கள.; பிறகு எல்லோரும் கூடவே ரயிலுக்கு வந்து அனுப்பிக் கொடுத்தார்கள் பெரியாரும் அவருடன் பயணம் சென்ற இருவரும் மேற்கொண்ட இப்படிப்பட்ட நெடும் பயணத்தில் அவர்கள் சோவியத்து இரஷ்யாவில் தங்கியிருந்த காலம் 94 நாள்கள் ;ஆகும.;

மாஸ்கோவில் பெரியார்

19.4.32 சோசசிடடல்யிருந்து மாலை மாஸ்கோவுக்குப் புறப்பட்டு ரயிலில் பிரயாணம் புறப்பட்ட 18 மணி நேரம் கடந்து காலை 10 மணிக்கு ரயில் ரஸ்N;டாவுக்கு சாப்பாடு ரயில்வே டைனிங்காரில் சாப்பிட்டு; இரவு ஒரு மணிக்கு கார்கோ ஸ்டேஷனுக்கு வந்தது, ரயிலுக்கு தேரிர் கவுட்டன் ஈ.வே.ரா என்லார்ஸ் மெண்ட் படத்தையும் மற்றும் சில பிரஞ்சி போட்டோவும் தெர்மாமீட்டரும்கொடுக்கப்பட்டது. பயணத்தின்போது வழி நெடுக கூரைவீடுகள். கூரை இந்தியாவைப் போலவே இருந்தது. வீடுகள் கொடிகளால் பின்னி முடைந்து மண் பூசப்பட்ட சுவர்கள் இருந்துள்ளன.


வழிகளில் 1,2,3,4 என்று குதிரைகள் வண்டிகளில் பூட்டி பாரம் இழுக்கப்பட்டிருக்கின்றன. டிராக்டர்கள் பூமியில் உழுதுகொண்டிருந்தது. ஸ்நோ உள்ள காலங்களில் சக்கரம் இல்லாத வண்டிகள் விவசாயம் ஒரு கைத்தொழில் பாக்ட்டரிபோல் செய்யப்பட்டுள்ளது. 20.04.32- மாலை 6 மணிக்கு மாஸ்கோ வந்து சேர்ந்துள்ளார்கள். நதாஸ்த்திக சங்க சிக்கர்ட்டரி ரயிலுக்கு வந்து சேர்ந்தோம் நாத்திகச் சங்க சிக்காட்டரி ரயிலுக்கு வந்து நவாமாஸ்கோவா ஒட்டலுக்கு உணவு உண்ணச் சென்றதாகவும் மாஸ்கோ சென்ற செய்திகள் பற்றியும் பயணக்குறிப்புகளில் இடம்பெற்றுள்ளது.

கோர்ட்டு

மாஸ்கோவா சக்கொலி சசிக்கி டிஸ்ட்ரிக் பீபிள்ஸ் போர்ட்டு பார்க்கப்பட்டது முதலாவது ஆல். இது டிரேட் ய+னியன் கன்சல்டேஷன் ஆபிசு தொழிலாளர்கள் அங்கு வந்து தங்கள் விவகாரங்களுக்கு யோசனை கேகலாம்சார்ஜ் கிடையாது. அவர்கள் சொந்தக்காரர்கள் கூட வந்து யோசனை கேட்டுப் போகலாம.; இங்கு பல வக்கீல்கள் விவகார ஞானம் ஏற்படுத்துவதற்கே இது இருக்கிறது. கோர்ட்டுக்கு சுலபத்தில் விஷயம் புரிவதற்கும் இது அனுகூலமாக இருக்கும் இதில் 6 லாயர்ஸ், 1 மேனேஜர் சில வேலைக்காரர்களும் உண்டு.13

கோர்ட்விசாரணை

கோர்ட் விசாரணையை பார்த்ததை பெரியார் அதைப்பற்றியும் தன் பயணக் குறிப்புகளில்; குறிப்பிட்டுள்ளார். ஒரு ஆண் ஜட்;ஜியும் இரண்டு பெண் ஜீரியும் இருந்தார்கள். முக்கியமான கேசுகளுக்குத்தான் வக்கீல்கள் வருவார்கள். ஜட்ஜிகள் கோர்ட்டுக்கு வந்ததும் சில ஜட்ஜிமெண்ட்டை படித்தார்கள். ஒரு பெண்கோர்ட்டு செகரட்டரி அந்த செகரட்;டரிதான் எல்லா விவரங்களையும் எழுதிக்கொள்ளுகிறார். ஒரு நீய+ஸ் பேப்பர் வித்த பணம் ஐம்பது ரூபாய் கொடுக்கவில்லை என்ற வாதிப் பிராது போட்டிருந்தான். எதிரி பணம் கொடுக்கவேண்டியதை ஒத்துக்கொண்டு தன்னிடம் பணம் இல்லை என்றும் கொடுக்க முடியாது என்றும் சொன்னான். அதற்கு ஜட்ஜி பரிகாசமாய்ச் சிரித்துக்கொண்டு கொடுக்க வேண்டியது உண்மையா இல்லையா என்று தீர்ப்புச் செய்வது என் கடமை. உன்னிடம் பணம்இருக்கிறதா  இல்லையா என்பது வேறு விசயம் என்று தன் தீர்ப்பைக் கூறினார். என்று பெரியாரின் பயணக்குறிப்பில் கோர்ட்டின் ஜர்ஜிமெண்ட் பற்றிய செய்திகளை எழுதியுள்ளார்.

ஏதென்சில் பெரியார் 

ஏதென்சில் இருந்து 1932 பிப்ரவரியில் ஓடெஸ்ஸாவுக்கு மூவரும் கப்பலில் புறப்பட்டனர். அக்கப்பல் புறப்படுவதற்கு முன்னர் பிரிட்டிஷ் உள்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள.; பிரிட்டிஷ் சாம்ராஐ;யக் குடிகளான இம் மூவரும் பிரிட்டிஷ் உளவு அதிகாரிகளிடம் அகப்படாமலிருக்க வேண்டி அக்கப்பலின் அடித்தட்டில் இருந்த ஓர் அறையில் வைத்துப் puuட்டப்பட்டனர். பல மைல்கள் தூரம் இரஷ்ய எல்லையான கருங்கடல் எல்லைக்குப் போன பிறகே கப்பலின் மேல்தளத்துக்கு வர மூவரும் அனுமதிக்கப்பட்டனர். எதென்சு கம்yuuniஸ்டுக் கட்சி அலுவலகத்தில், சோவியத்துக்குப் போக அவர்கள் உதவி நாடிய போது பிரிட்டிஷ் சாம்ராஐ;யக் குடிமக்களான அவர்களை நம்பிட உரிய ஆதாரம் கேட்டனர். 1929-இல் ஈ.வெ.ரா பெரியாரும் எஸ். இராமநாதனும் ஆசிரியர்களாக இருந்து வெளியிட்ட ரிவோல்ட் ஆங்கில வார ஏட்டின்முழுத் தொகுதி ஒன்றை அங்கே தந்து, அந்த ஏட்டின் ஆசிரியர்கள் தாங்களே என்பதைக் குறிப்பிட்ட பின்னரே ஏதென்சு கம்யூனிஸ்டுக் கட்சியில்; ஆர்வம் செலுத்தினர். அந்த ஏட்டிலிருந்த செய்திகளைக் கொண்டு அவர்களை இந்தியாவைச் சேர்ந்த நாத்திகச்சங்கத்தினர் என இரஷ்யாவுக்கு அறிவித்து தான்அனுமதி பெற முயன்றனர்.


ஏதென்சு கம்yuuனிஸ்டுக்கட்சி அலுவலகத்திற்கும் அவர்கள் மூவரும் சேர்ந்து போகவோ அல்லது அடிக்கடி செல்லவோ முடியாத நிலையில், அங்கும் பிரிட்டிஷ் உளவாளிகளின் கண்காணிப்பு மிகக் கடுமையாக இருந்தது. ஆதலால் அக்கட்சி அலுவலகத்தில் தட்டச்சாளராக இருந்த ஒரு பெண்மணி அவர்களின் இருப்பிடத்திற்கு இரவு நேரங்களில் வந்து விவரங்களைச் சொல்லப் போக நேரிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். 

ஜெர்மனியில் பெரியார்

ஈ.வெ.ராவும் ஆர்.இராமசாமியும் 19.5.1932 முதல் 14.06.1932 முடிய செர்மனியில் தங்கிப் பல பகுதிகளையும் இடங்களையும் சுற்றிப் பார்த்துள்ளனர். 27 நாட்களில் செர்மனியில் பெரியார் கண்ட காட்சிகள் அனைத்தும் சுவைபட விவரித்து இப்பயணக்குறிப்பில் எழுதப்பட்டுள்ளன.


26.4.32 அன்று பத்திரிகையில், செர்மனி பாலினிலிருந்து அமெரிக்கா நீயூயார்க்குக்கு மணிக்கு 700 மைல் வேகத்தில் ப+மியில் இருந்து 35,000 அடி உயரத்தில் பறந்து ஆறு மணி நேரத்தில் போய்ச்சேரும்படியான ஒரு ஆகாயக்கப்பல் கட்டப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பார்லினால் ஆகாயக்கப்பல் கட்டுவதால் பேர் போன பேமஸ் ஜென்கின்ஸ் கம்பெனியரால்  தயாரிக்கப்படுகிறது. என்றக்கறிப்பும் 7.5.32 அன்று செர்மனி இண்டர்நேஷனல் பீரீ திங்கர் அசோசியேஷனை சட்டவிரோதமானது என்று செர்மன் கவர்மெண்ட் நன்கு தீர்மானித்து விட்டதாக, இன்று பேப்பர்களில் கண்டிருந்தது உலக நாத்திக சங்கத்திற்கு செர்மனி எட்குவார்ட்டர் என்று பெல்டுமன் வந்து சொன்னார் என்ற செய்தியும் பெரியாரின் பயணக்குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன.16


இவர்கள் ஜெர்மனியில் பயணம் செய்த போது பெர்லினால் எக்சிபிஷன் கிரவுண்டில் செயல்பட்ட நிர்வாணச்  சங்கத்தினை ஈ.வெ.ரா மற்றும் எஸ்.இராமநாதன் பார்வையிட்டார்கள். நிர்வாண நிலையில் நின்ற ஒரு குழுவினருடன் நின்று அவர்கள் நிழற்படமும் எடுத்துக்கொண்டார்கள். அந்நிர்வாணச் சங்கத்தில் ஈ.வெ.ரா அவர்களும் உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டார். அவருடைய அந்தப் பதிவு அட்டை, அப்படியே, அப்பயணச்சுவடியில் பாதுகாப்பாகவே வைக்கப்பட்டிருந்தது. அந்த அட்டையின் பின்புறம் அவரே எழுதிய குறிப்பும் உள்ளது. அதன் இருப்பக்கங்களும் அப்படியே செம்மன்மொழியிலேயும் தமிழ்மொழி பெயர்ப்புடனும் இந்நூலின் இறுதியில்அச்சிடப்பட்டுள்ளன. அப்பயணக் குழுவினருள் ஒருவரான ஆர்.இராமசாமி என்வருக்கு செர்மனியில் மோட்டார்த் தொழிற்சாலையில் ஒரு வேலை பெற்றுத தரப்பட்டு அவர் அங்கேயே தங்கிவிட்டார் என்ற செய்தியும் அப்பயணக் குறிப்பில் இடம்பெற்றுள்ளது. 


பெர்லினில் ஏ.சி.நம்பியாரிடம் அருகே மடல்களைப் பெற்றிருந்தனர். இங்கிலாந்திலுள்ள எஸ்.டி.சகலத்வாலாவுக்கெனவோ மற்றவர்களுக்கே அறிமுக மடல் எதுவும் தமிழகத்தில் எவரிடமிருந்தும் ஈ.வே.ரா பெரியார் அவர்கள் பெற்றுச் செல்லவில்லை என்பது இவற்றின் மூலம் தெளிவாகிறது.


இங்கிலாந்தில் பெரியார்

இங்கிலாந்தில் மேக்ஸ்பரோ, கானிஸ்பரோ, பாண்டி நியு விய்த், பிரைன் மூவா, நிய+போர்ட் முதலான பல இடங்களில் 18.065.32க்கும் 05.07.32க்கும் இடையில் நடைபெற்ற தொழிலாளர்கள் கூட்டங்களுக்கு ஈ.வெ.ராவும் எஸ்.இராமநாதனும் சென்றிருந்தனர். அங்கு சக்லத்வாலா, என்பவர்தான் இவர்களுக்கு பெருந்துணை புரிந்தார். இங்கிலாந்தில் 20.06.1932-இல் மேக்ஸ்பரோவிலிருந்து 12 மைல் தூரத்துக்கு அப்பாலுள்ள லோக் பார்க் பான்சிலே என்ற ஊரில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம் இருந்தது. அச்சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குச் சென்று, ஈ.வெ.ரா பெரியார் அவர்கள் சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் இங்கிலாந்து நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வேலையில்லாத் திண்டாட்டக் கொடுமையைப் புரிந்துகொண்ட தன்மையையும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தொழிலாளர் விரோதப்போக்கைக் கண்டனம் செய்த பாங்கையும், உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையே உலக உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கு வழி என்பதில் அவர் கொண்டிருந்த உறுதியையும் நமக்குக் காட்டுகின்றன.17

இவர்களின் இங்கிலாந்துப் பயணத்தில் பெருந்துணை புரிந்த சகலத்வாலாவுக்கும் உரிய அறிமுக மடல்களை 06.06.32இல்  பெர்லினில் என்கிற இந்தியக் கம்ய+னிஸ்ட் புரட்சியாளரிடமும் பெற்றிருந்தனர். அதே போன்று இலண்டனில் உள்ள சி.ஏ. செயலர் அய்மனுக்கம், பி.பி.சீல் எனபவருக்கும் பெர்லினில் ஏ.சி நம்பியாரிடம் அறிமுக மடல்களைப் பெற்றிருந்தனர். இங்கிலாந்திலுள்ள எஸ்.டி சக்லத்வாலாவுன் கெனவோ மற்றவர்களுக்கே அறிமுக மடல் எதுவும் தமிழகத்தில் எவரிடமிருந்தும் ஈ.வெ.ரா பெரியார் அவர்கள் பெற்றுச் செல்லவில்லை என்பது இவற்றின் மூலம் தெளிவாகிறது.

கிடைக்காமற் போன சில சுவடிகளால், பெரியார் மூலம் நாம் பெற்றிருக்க வேண்டிய விலைமதிக்க முடியாத பல செய்திகளையும், கருத்துகளையும,; விவரங்களையும் நாம் இழந்துவிட்டோம் என்பதை எண்ணிப் பார்க்கும் போது மிகவும் வேதனைக்குரிய விசியமாக இருக்கின்றது. தமிழரிடையே நெடுங்காலமாகவே வரலாற்று உணர்வும் பெரியாரின் அறிவு இயக்க வரலாறும், இன்றளவும் அரைகுறையாகவும் தட்டுத் தடுமாறியும் நிற்பது மிகவும் வருத்தம் தருவதாகும். பொதுவாகவே இந்தியர்களும் தமிழர்களும் புனிதப் பயணம் மேற்கொள்வதில் வல்லவர்கள் இயற்கை அமைப்புப் பற்றிய வரலாறு, மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை சமுதாய மாற்றங்கள், அரசியல்நிகழ்ச்சிகள் இவற்றை அறிவதைக் குறியாகக் கொண்ட பயணங்களும,; அப்பயணங்களை விவரித்துக் கட்டுரைகள் எழுதுதலும் இந்தியர்க்கும் தமிழர்க்கும் புதியவை.

இந்தியாவைச் சுற்றிப்பார்த்த ஐரோப்பியக் கிறித்தவப் பாதிரிகள் ஆகியோர் எழுதியுள்ள பயணக் கட்டுரைகள் உலகப் புகழ் பெற்றவை. ஆவை, அவரவர் வாழ்ந்த காலத்து வரலாற்றின் படப்பிடிப்பு போன்றவை. நாள் குறிப்புகள் என்கிற வகையில் புதுச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளை போன்றோர் எழுதியுள்ள பயணக் கட்டுரைகளும், பலர் எழுதியுள்ள பயண நூல்களும் சிறப்புடையவை. நாம் பெற்றுள்ள பெரியாரின் பயணக்கட்டுரைகளும், இந்தப் பயணக் குறிப்புகளும் பல தன்மைகளில் மேலே குறிப்பிட்ட அறிஞர்களின் பயணக் கட்டுரைகளுக்கு ஒப்பானவை என்றே கூறலாம்.

சிந்தனையில் ஒரு புரட்சியாளராக, சமதர்ம ஆட்சி அமைப்பை விரும்பியவராக விளங்கிய அவர் செயல்பாட்டில் ஓர் அமைதி வழியினை மட்டுமே பின்பற்றினார். இது காந்தியத்தின் தாக்கம் அடிநாளிலேயே அவரிடம் படிந்துவிட்டதன் விளைவாகும். ஆனால் இன்றைய ஆட்சி அமைப்பை அகற்ற வேண்டும் என்பதிலும், சமதர்ம சமுதாய அமைப்பே தேவையானது என்பதிலும், சமதர்ம வளர்ச்சிக்குப் பாடுபடுவோர் இந்திய தேசியக் காங்கிரசையும், காந்தியத்தையும் அழிக்க வேண்டும் என்பதிலும் அவர் தெளிவுள்ளவராகவே விளங்கினார். மேற்கண்;ட செய்திகள் அனைத்தையும் நாம் நினைவில் நிறுத்திட இப்பயணக் குறிப்புகள் நம் அனைவருக்கும் முழுமையாகப் பயன்படும்.

சீனர் கைக்கு மாறிய தமிழரின் சொத்துகள்

சீனர்களைப் பொறுத்தவரை சீனாவில் நடந்த உள்நாட்டுப் போராட்டம் போர் காரணமாக, மலாயா, சிங்கப்ப+ர் ஆகிய இருநாடுகளிலும் உள்ளவர்களை அவர்களது தாய் நாடான சீனாவிற்குப் பணம் அனுப்பவோ, சொத்து வாங்கவோ முடியாத நிலை அவர்கட்கு ஏற்பட்டது. இதுவே அவர்களது வளர்ச்சிக்கு மறைமுகமான காரணமாக அமைந்த, மற்றொரு முக்கியக் காரணம். மாறுதலுக்கு எப்போதும் தங்களை ஆட்படுத்திக்கொள்ளத் தவறாத ஓர் சமூகம் சீனசமூகம் உழைப்பதாகும், தன்பயனை அனுவிப்பதற்கும் ஆகிய இரண்டு நிலைகட்கும் முற்றிலும் தயாரான சங்கம். எனவே இன்றைய நிலையில் தமிழ்மக்களிடம் இருந்த கட்டிடங்கள், நிலங்கள், தொழிற்சாலைகள் எல்லாம் சீன சமூகத்திடம் சென்று விட்டன. இன்று தமிழன் நிலை அங்குப் பரிதாபமாக ஆகிவிட்டது. மலாயா சுதந்திரம் அடைந்தவுடன் மலாய்க்காரர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னுரிமையும், சலுகையும் பெறத்தகுதி பெற்றவர்கள் என்ற அரசுக் கொள்கையால் இன்று முன்னேறி வருகிறார்கள்.

பூகோள ரீதியாக அந்த நாடு இஸ்லாமியத்தை அதிகாரப் ப+ர்வமான மதமாக அடக்கியுள்ள நாடு ஆகும். ஏராளமான பொருட்செலவில் பள்ளி வாசல்கள் எங்கும் தட்டுபடும். அதே வேளையில், மற்ற மதங்களுக்கு வேற்றுமை பாரபட்சம் காட்டாத கொள்கையைக் கொண்டதால் அரசாங்கத்திலிருந்தே இவாகள்  எண்ணிக்கைக்கேற்ப மான்யம் தந்து கோயில் கட்டுவதற்கு உதவுகிறார்கள.; அதை இந்துக்கள் என்ற பெயரால் தங்களைப் பொருள் புரியாமலேயே அழைத்துக்கொள்ளும் தமிழர்கள் பயன்படுத்தி தங்கள் தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்ள முனைந்து நிற்கின்றனர்.

தலைவிரித்தாடும் மூடநம்பிக்கைகள்

அங்குள்ள தமிழர் - இந்திய அரசியல்வாதிகளுக்கு தங்களது ஓட்டுக்களைப்பெற கோவில் திருப்பணி ஒரு அரிய வாய்ப்பு என்று கருதி மூட நம்பிக்கையைப் பரப்பும் மொத்த வியாபாரிகள் போல காட்சியளிக்கிறார்கள். தைப்ப+சம் என்ற பெயரால் ஒவ்வொரு ஆண்டும் காவடி தூக்கிக் கொண்டு கோலாலம்ப+ரிலும், மாரியம்மன் கோவில், முருகன் கோவில் என்பவற்றில் திரண்ட அலகு குத்திக் கொண்டும், தேர் இழுத்துக்கொண்டும் ஆடுகிறார்கள். அங்கே ஒவ்வொரு கோயில் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் நாட்டாண்மையாளர்கள்போல இருப்பதால் மூடத்தனம் செழித்து வளருகிறது. படிப்பறிவு உள்ள பெரிய மனிதர்கள் பெரு நிலைப் பதவியாளர்களிடம் கூட பகுத்தறிவு அறிவியல் மனப்பான்மைக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது, அறிவியல் கருவிகள் அற்புதங்களை அனுதினமும் அனுபவிக்கும் அவர்கள் பக்தி என்ற போதையால் தடுமாறும் தமிழர்களாகவே இருக்கிறார்கள.; படிப்பறிவும், தமிழ்நாட்டுத் தமிழர்களைவிடத் தமிழ் உணர்வு மிக்கவர்களாக, அங்கே தமிழர்கள் இருந்த போதிலும், மதமும் ஆரியக்கொள்கைகள் அலைமோதலும் - தமிழர்களைத் தமிழர்கள் என்று எண்ணவிடாமல் இந்துக்கள் என்று சொல்லவைத்துவிட்டார்கள்.

தமிழர் எழுச்சி

எல்லா மதங்களும் ஒழிந்து தீர வேண்டும், மதம் மக்களுடைய அறிவைத் தடைப்படுத்தக்கூடாது, உரிமையைப் பறிமுதல் செய்யக் கூடாது, மதத்தின் மூலம் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதற்கு இடமிருக்கக் கூடாது. தன் மதத்தில் வெறியும், பிற மதத்தில் வெறுப்பும் உடையவர்களுக்கு இக்கொள்கை நஞ்சாக இருக்கும். ஆதலால் பெரியாரை மதத்துரோகியென்றும், நாத்திகர் என்றும் தூற்றுவோர் ஒரு சிலரே.


சமூகத் துறையிலும் பெரியார் கருத்து மிக முற்போக்கானது, இப்பொழுதுள்ள சமூக அமைப்பு பல பிரிவினைகளுக்கு இடமானது, உயர்வு தாழ்வுகளுக்கு அடிப்படையானது. சண்டை சச்சரவுகளுக்குக் காரணமானது, மக்களுக்குள் ஒற்றுமை தோன்றுவதற்கு இடமளிக்காதது. பிற நாட்டினர் ஆதிக்கம் செலுத்துவதற்கு வழிகோலியது. அதனால் இப்பொழுதுள்ள சமூக அமைப்பு அடியோடு மாற வேண்டும். மக்களையெல்லாம் ஒரு குலம் ஆகும்படியான புதிய சமூகமாக மாற வேண்டும் என்னும் கருத்தினைக் கொண்டவர் நம் பெரியார். ஆதலால் இவரைச் சிலர் வகுப்புவாதியெனக் கூறுகின்றார்கள். வகுப்புப் பிரிவினைகள் நிலைத்திருக்க வேண்டும், நாம் அவ்வகுப்புகளின் மேல் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனும் கருத்துடைய உண்மை வகுப்புவாதிகளே பெரியாரை வகுப்புவாதி எனக் கூறுகின்றார்கள்.

அரசியல் துறையிலும் இவருடைய போக்கு மிக முற்போக்கானது. ஈ.வே.ரா பெரியார் அவர்கள் சமதர்மமே இவருடைய அரசியல் நோக்கம் என்று கூறி வருகின்றார்கள் இக்காரணத்தால் பணக்காரர்கள் இவரை வெறுக்கின்றார்கள் .முதலாளித்துவத்தை நிலைக்க வைக்க விரும்பும் தேசியவாதிகள் இவரை வெறுக்கின்றார்கள். இவ்வாறு மதம், சமூகம், அரசியல் ஆகிய மூன்றிலும் பெரியார் ஒரு புரட்சியாளராக விளங்கி இருக்கின்றார். பெரியார் ஒரு மதவாதியாக இருந்து, பின்னர் மதப் புரட்சிக்காரராக மாறவில்லை. ஒரு முதலாளித்துவவாதியாக இருந்து, பின்னர் சமதர்மவாதியாக மாறவில்லை. பிறப்பிலேயே மதப்புரட்சிக்காரராகப் வளர்ந்தார் சமூகப் புரட்சிக்காரராகப் பிறந்தார். சமதர்மவாதியாகப் பிறந்தார்.

இளமை முதல் இன்றுவரை இவர் கொள்கையில் மாறுதல் இல்லை. விளையாட்டுப் பருவத்தில் இவரிடம் இயற்கையில் அமைந்திருந்;த குணங்களே பிற்காலத்தில் இவருடைய கொள்கையாக மாறின. சொற்பெருக்குகளாக வழிந்து ஒரு இயக்கமாக உருப்பட்டன. தன் கொள்கையை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இவரிடம் எப்பொழுதும் இருந்ததே இல்லை. தன் கொள்கைக்குப் பிறர் இணங்கி வரவேண்டும். பிறர் கொள்கைக்கு இவர் இணங்கவே மாட்டார். ஒரு சீர்திருத்தவாதிக்கு இருக்க வேண்டிய குணம் இதுவே. இவர் பகைவர்களால் பல துன்பங்களுக்கு ஆளாகியும், தங்கள் கொள்கைகளில் எள்ளளவும் விட்டுக் கொடுக்காத உறுதியுடையவராயிருந்தார். இன்றைய சீர்திருத்தங்களில் இத்தகைய உறுதியுடையவர் பெரியார் ஒருவரே ஆவார்.

இன்று தமிழ்நாடெங்கும் தன்மானப் போர் - உரிமைப்போர் ஆகிய முழக்கம் வீறிட்டொலிக்கின்றது. தமிழர்கள் நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து விட்டார்கள். தங்கள் மொழியைக் காப்பாற்ற முனைந்து நிற்கின்றார்கள். தங்கள் நாட்டின் உரிமையில் கண்ணுங்கருத்துமாயிருக்கின்றார்கள். தங்கள் முன்னோர்களின் வீரச்;செயல்களை அறிவுக் கண்ணால் பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர். தங்களின் இன்றைய இழிநிலையை எண்ணி மக்கள் நாணமடைகின்றனர். இவ்விழி நிலையைத் தகர்த்தெறிந்து, சுயமரியாதையைக் காப்பாற்ற ஒன்று கூடுகின்றனர். அதற்கான முயற்சிகளிலும் முன்னேறுகின்றனர். தமிழர்கள் என்று தங்களைக் கருதிக்கொண்டிருக்கிறவர்கள.; அனைவரும் இன்று வீரஉணர்ச்சியுடன் விளங்குகின்றனர். நம்நாடு தமிழ்நாடு, நம் மொழி தமிழ்மொழி, நம் நாகரிகம் தமிழ் என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவைகளே நம் உரிமை, உயிர், உணர்ச்சி என்று உறுதிகொள்ளுகின்றனர்.


தமிழர்கள் தம்மைச் சுற்றி மறைந்திருக்கும் அறியாமைத் திரையை நெருப்பிட்டுக் கொளுத்துகின்றனர். தங்களின் கை கால்களில் ப+ட்டப்பட்டிருக்கும் மூட நம்பிக்கை விலங்குகளை முறித்தெறிகின்றனர். நாம் வாழ்வது அடிமைக் கோட்டை என்பதை அறிந்து கொண்டனர். தங்கள் வீர உணர்ச்சியால், ஒற்றுமை ஆற்றல் அடிமைக் கோட்டைப் பொடி செய்து விட்டு வெளியேற நிற்கின்றனர். தமிழர்கள் தங்களுடைய தற்போதைய அடிமை நிலையை நினைக்குந்தோறும் அவர்கள் ஊக்கமும், ஆண்மையும், உறுதியும் உயர்ந்து நிற்கின்றன. தமிழர்களின் இத்தன்மையை நோக்கும்போது இனி அவர்கள் எண்ணியதை முடித்துதான் தீர்வார்கள் என்பது உறுதி. ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழர்கள் அயர்ந்த உறக்கத்திலிருந்து விழித்தனர். விழித்ததும் சில ஆண்டுகள் கனவுநிலையில் இருந்தனர். நீண்ட காலம் உறங்கியக் களைப்பால் சிறிது காலம் படுக்கையில் புரண்டு கொண்டே கிடந்தனர். பின்னர்தான் சிறிதுச் சிறிதாகக் கண்ணைக்கசக்கி, முகத்தைத்துடைத்துக் கொண்டு முன்னிலும் விழிப்படைந்தனர். இன்று எட்டுத் திசைகளையும் ஏறிட்டுப் பார்க்கின்றனர். முன்னேற்றப் படிகளில் ஏறுகின்றனர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் இருந்த நிலையே வேறு.


தங்கள் உரிமைக்கு முட்டுக் கட்டைகளாக இருப்பவையெல்லாம் தங்களை நல்வழியில் சேர்க்கும் துணைகளென நம்பி வந்தனர். தங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கருவிகளையெல்லாம் தங்களை அடிமையாக்கிய மக்களையெல்லாம் தங்களுடைய வழி காட்டிகளாகக் கருதியிருந்தனர். தலைவர்களாக நம்பியிருந்தனர் இந்நிலை பல நூற்றாண்டுகளாகவே தமிழர் சமூதாயத்தில் நிலைபெற்று இருந்தது. தமிழர்களின் தன்மானக் கிளர்ச்சியையும், உரிமைக் கிளர்ச்சியையும் கண்டு, ஒரு சாரார் வகுப்பு வாதம் என்று கூறுகின்றனர். இவர்கள் தமிழர்கள் கிளர்ச்சிக்கு முட்டுக் கட்டையென்று கருதுகின்றனர். இவர்கள் தமிழர்கள் கிளர்ச்சியை அடக்கவே இவ்வார்பாட்டம் பண்ணுகின்றனர். இக்கிளர்ச்சிக்கு விதைவிதைத்தவர் இதை நீருற்றி வளர்ப்பவர் ஈரோட்டில் இராமசாமி என்று இவ்வெதிரிகள் கூறுகின்றனர். தமிழர்கள் இன்று எங்கள்  தலைவர் இராமசாமிப் பெரியாரே என்று கூறுகின்றனர். 

ஈ.வெ.ரா பெரியார் அவர்களே தமிழர்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பி விட்டனர். தமிழர்களின் வீர உணர்ச்சியைப் பெறுவதற்குக் காரணமாயிருந்தவர். இதில் எள்ளளவும் தவறில்லை. உண்மையில் புகழ்ச்சியில் பெரியாருடைய இடைவிடா உழைப்பு, நெடுங்காலம் அவர் கொண்டிருந்த எண்ணங்கள், உள்ளங்கவரும் அவர்தம் எழுத்துக்கள், உறுதியான சொற்பொழிவுகள், உள்ளத்தில் தோன்றுவதை ஒளிக்காமல் உரைக்கும் கள்ளமற்ற தன்மை, இவற்றால் இன்று தமிழ் மக்கள் உணர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது அவரது பகைவர்களாலும் மறுக்க முடியாத உண்மையாகும். தோழர் ஈ.வெ.ரா இன்று தமிழ்நாட்டில் இணையற்ற தலைவராக விளங்குகிறார். தளராத உழைப்புடைய தொண்டராகக் காணப்படுகிறார். இவருடைய பழைய பகைவர்களுங்கூட இவருக்குப் பொதுமக்களிடம் இருக்கும் செல்வாக்கை மறுப்பதில்லை. பொதுமக்களைத் தன் சார்பாக்கும் வல்லமை படைத்தவர்  அதைத் தடுத்துச் சொல்வதில்லை. அவர் எந்தப் பல்கலைக்கழகத்திலும் படித்துப் பட்டம்பெறவில்லை. நடுத்தரக் கல்வியையும் கற்கவில்லை. ஆரம்பக் கல்வியைத்தான் சரிவரக் கற்றாரா என்றால் அதுவும் இல்லை. ஆதலால் அவர் படிப்பின் பெருமையால் செல்வாக்குப் பெற்றிருக்கிறார் என்றும் கூற முடியாது. இப்படிப்பட்ட ஈ.வெ.ரா பெரியார் அவர்கள் தன் தமிழர் தலைவராக விளங்குகின்றார். சில ஆண்டுகளுக்கு முன் இவரைத் தூற்றியவர்களும் இன்று போற்றுகின்றனர். தமிழ் மக்கள் இவர் சொற்கள் ஒவ்வொன்றையும், தங்கள் வாழ்;க்கையை உயர்த்தும் செல்வங்கள் என்று கருதுகின்றனர்.

முடிவுரை

ஈ.வெ.ரா அவர்கள் தன்னிகரற்ற சிந்தனையாளர். புது உலகைப் படைக்க உலகம் முழுதும் போர்க்கொடி தூக்கிப் புறப்பட்ட போர்த்தலைவர். பகுத்தறிவுப் பாதையை நம் தரணிக்குக் காட்டி, பாமர மக்களின் விழி திறந்த வித்தகர். நமக்காக அவர் கொண்ட இலட்சியங்களைச் செயலாக்க, கஷ்ட நஷ்டங்களை விலையாகக் கொடுப்பேன் என்று முழங்கிய வீரத்தலைவர். அவர் மூட நம்பிக்கைகளையும,; பழக்கவழக்கங்களையும் முதுகெலும்பாகக் கொண்டிருந்த மக்களை முற்றிலும் சிந்திக்க வைத்த பகுத்தறிவுப் பகலவன்.

ஒரு மனிதனுக்குக் கல்வி எவ்வளவு அவசியம் என்பதனையும், அக்கல்வியில் இருந்த பாகுபாடுகளை ஒழிப்பதற்காக அவர் மக்களிடையே விழிப்புணர்வுகளை எற்படுத்தியும,; கல்வியில் பல சீர்திருத்தத் திட்டங்களைக் கொண்டு வந்தும் அனைத்துப் பாமர மக்களுக்குக் கல்வி கிடைக்க வேண்டும் என்று அவர் செய்த புரட்சிகள் அனைத்தையும் பார்க்கும்போது ஒரு சிறந்த கல்வியாளராகத் திகழ்கின்றார்.

தீண்டாமை, ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து அவர் போர்ப் பிரகடனம் செய்தபோது இருந்த சமுதாயம், இன்று மாறியுள்ள சமுதாயம் இவை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது உண்மைகள் வெளிவருகின்றது.

உலகில் தோன்றிய மதங்களால் மதச் சண்டைகளும், எண்ணற்ற உயிர்களும், உடைமைகள் இழப்புதான் நிகழ்ந்தன. இன்று உலகம் தீவிரவாதத்தில் திணறித் திக்குமுக்காடி, ஆங்காங்குக் கொடுமைகள், உயிர்ச் சேதங்கள் எற்படுவதற்கு மதம் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. மதச் சண்டைகளானது மனிதர்களிடையே ஒற்றுமையைக் குலைத்து சின்னா பின்னமாக்குகிறதுது. அக்கொடுமைகளையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் தன் சுயசிந்தனை, முழுப் பகுத்தறிவு, பட்டறிவு, அனுபவம் இவைகளினால் அவற்றை அப்போது முறியடித்தார்.

இன்றைக்கு அரசாங்கமும், பெரிய மனிதர்களும் மதம் இருக்க வேண்டும.; ஆத்மார்த்தக் கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்று சதா முயற்சிக்கின்றார்கள். ஆனால் மதமோ, ஆத்மார்த்தமோ ஒரு மனிதனுக்குத் தானாக வரவேண்டுமே ஒழிய, ஒருவருக்குத் திணிப்பதினால்; நன்மை ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்று கூறி நம்மிடையே குறைந்தபட்ச ஒற்றுமையையாவது ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும்.

பெண்ணுரிமையைப் பற்றிப் பகுத்தறிவுப் பகலவன் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் சிந்தித்த எல்லை அளவிற்கு, உலகில் வேறு எந்தச் சிந்தனையாளர்களும் சிந்தித்தது இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தான் ஒரு ஆணாகப் பிறந்த நிலையிலும், ஒரு சமுதாய விஞ்ஞானியாக மாறி மானுடத்தின் சிறப்புப் பற்றி மட்டுமே சிந்தித்ததால் அய்யா அவர்களால் நடைமுறையிலும் செயல்படுத்த முடிந்தது.

மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த சுயமரியாதைச் சங்கம், சமூகப்புரட்சி, நீதிக்கட்சி, சமதர்ம இயக்கம், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி வைக்கம் போர் போன்ற இயக்கங்களை எற்படுத்தி, அதன் மூலம் மக்களுக்காக தொண்டுகள் பலவும் செய்துள்ளார்.

நம் நாட்டிலிருந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்ற தமிழர்களுக்காக, பல்வேறு நாடுகளுக்கும் சென்று மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று பல மாநாடுகளை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தினார்.

தன்னிகரற்ற சிந்தனையாளர். புது உலகைப் படைக்க உலகம் முழுதும் புறப்பட்ட பிறவிப் போர்த்தலைவர், பகுத்தறிவுப் பாதையைத் தரணிக்குக் காட்டி,  பாமரமக்களின் விழி திறந்த வித்தகர், இலட்சியங்களைச் செயலாக்க கஷ்ட நஷ்டங்களை விலையாகக் கொடுப்பேன் என்று முழங்கிய வீரத் தலைவர் அவர். 

சான்றெண்; விளக்கம்

1. சிதம்பரனார். சாமி , தமிழர் தலைவர், ப-223

2. மேலது, ப-225

3. நெடுஞ்செழியன.இரா,திராவிட இயக்க வரலாறு , ப432

4. சிதம்பரனார். சுhமி, தமிழர் தலைவர், ப-119

5. மேலது, ப-120

6. நாராநாச்சியப்பன், பர்மாவில் பெரியார், ப-42

7. வீரமணி.கி. ,மலேசியாவில் பெரியார், ப-124

8. மேலது,ப-125

9. மேலது, ப-56

10. மேலது,ப-2

11. மேலது, ப-23

12. ஆனைமுத்து.வே.,பெரியாரின் அயல்நாட்டுப் பயணக் குறிப்புகள், ப-7

13. மேலது, ப-182

14. மேலது, ப-34

15. மேலது, ப-148

 
 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World