Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueயாழ்ப்பாணத்து ஓவியங்களின் சமகால வெளிப்பாடு
 

 - அருந்ததி ரட்ணராஜ்


 

          கலையாக்கம் காலத்தைப் பிரதிபலிப்பது. கலைஞன், தான் வாழும் சூழலில் இருந்தே தன் படைப்பை உருவாக்குகிறான். கலைப்படைப்பில் கற்பனை எந்த அளவு முக்கியத்துவப்படுகின்றதோ, அதேயளவு படைப்பாளியின் சுற்றுப்புறமும், வாழும் காலமும் அவன் படைப்பாக்கத்தைப் பாதிக்கின்றது. இந்த அடிப்படையிலேயே  கலை உதயமாகிறது. இந்தவகையில் ஓவியக்கலையும் காலத்தை, ஓவியன் வாழும் சூழலைப் பிரதிபலிப்பதாய் உள்ளது. வுரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மனிதனின் வாழ்க்கைகூட அக்காலத்தின் எஞ்சிய சிற்பங்கள், ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டு அறியப்படுகின்றது. எனவே எந்தவொரு படைப்பாளியும் உண்மையாகத் தன்னையும் தன் காலத்தையும் தனது படைப்பில் கொண்டுவருவானேயானால் அப்படைப்பாக்கம் வரலாற்றுப்பதிப்பாக மிஞ்சும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

          மேலைத்தேயத்துக் கலை வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற போர், தேசியவாத எழுச்சி, வர்க்க முரண்பாடுகள் போன்ற பல நிகழ்வுகள் ஓவியத்தின் முக்கிய மூலக்கூறுகளாக விடயமும் உணரவும் வர வழிவகுத்தன. ஓவியன் தனது சூழலுக்கும் அதன் நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முன்வருவதற்கு இந்தக் காலச்சூழ்நிலையே காரணமாயிற்று எனலாம். இவ்வாறாக மேலைத்தேய ஓவிய வரலாற்றில் அரசியல் சமூக வெளிப்பாடு 19ஆம் நூற்றாண்டிலேயே கலையாக்கங்களில் மிகக் காத்திரமாகப் பிரதிபலிக்கத் தொடங்கியிருந்தும், கீழேத்தேயத்தில் குறிப்பாக இந்திய மரபில் இப்போக்கு இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே வெளிப்படத் தொடங்குகின்றது. இந்திய ஓவியங்களில் சமூக, அரசியல் பிரஞ்ஞை ஏற்படக் காரணம், அவர்கள் எதிர் கொண்ட போராட்ட, சமூக மாற்றச் சூழ்நிலை எனலாம்.

          சமூக, அரசியல் என்பன மேலாதிக்கம் அடைய முன்னர், மேலைத்தேய வரலாற்றில் கூட கடவுளரும், பைபிள் கதைகளும், பழைய வரலாற்றுக் கதைகளுமே ஓவியங்களில் முதன்மை பெற்றிருந்தன. இந்நிலையே இந்திய ஓவியர் மத்தியிலும் நிலவியது. இதிகாச புராணக் கதைகளும், கடவுள் உருவங்களுமே ஓவியத்தின் கருப்பொருளாய் அமைந்திருந்தன.

           இச்சந்தர்ப்பத்தில் 19ஆம் நூற்றாண்டின் மேலைத்தேய ஓவியனின் நிலைப்பாடு பற்றியும் சற்று நோக்குதல் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். இதற்கு முற்பட்ட காலங்களில் மன்னரதும் பிரபுக்களினதும் விருப்பங்களுக்கு ஏற்ப அவர்கள் வேண்டும் ஓவியங்களைப் படைத்துக் கொண்டிருந்த ஓவியன், இந்நூற்றாண்டில் தமக்கு, தனது விருப்புக்கு ஏற்ப ஓவியம் படைக்கும் நிலைக்கு வருகிறான். அப்படைப்பு விலைபோக வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் தனது உணர்வை ஒவியமாக ஆக்கத் துணிகிறான். இதே காலத்திலேயே ஓவியக் கண்காட்சிகளும் ஓவியம் பற்றிய பத்திரிக்கை விமர்சனங்களும் தோற்றம் பெற்றதுடன், ஓவியம் பற்றிப் பேசுதல் என்பதும் புதிய நிகழ்வாக மேலைத்தேயத்தில் ஏற்பட்டது.

          மேலைத்தேயத்தின் இந்தப் பின்னணி பற்றி; இங்கு நான் குறிப்பிடுவதற்கான முக்கிய காரணம், 19ஆம் நூற்றாண்டில் அங்கு நிகழ்ந்த மாற்றம் 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஈழத்திலும் ஏற்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் 20 ஆம் நூற்றாண்டின் இலங்கை ஓவியக்கலை வரலாறு பற்றிச் சற்று நோக்குதல் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்;. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே இலங்கை ஓவியர்களிடையே குழுக்களாய் இணைந்து செயற்படும் போக்கு ஏற்படுகிறது. 1880இல் கொழும்பு ஓவியக்கழகமும் 1891இல் இலங்கை கலைச்சங்கமும் தோற்றம் பெற்றன. இவற்றைத் தொடர்ந்து 1943 ஆம் ஆண்டு ’43 குழு’ (43 புசழரி’) தோற்றம் பெற்றது. இவ்வாறாகக் குழுக்களாக ஓவியர்கள் இயங்கத் தொடங்கியதன் ஊடாகவே இலங்கையின் ஓவியங்கள், அவர்களின் படைப்பாக்கங்கள் பற்றிய ஓர் தொடர்ச்சியைக் காணக்கூடியதாக இருக்கின்றது. மேற்குறிப்பிட்ட குழுக்களில் முதல் இரு குழுவினரும், ஐரோப்பிய செல்வாக்குடன் விக்டோரிய மரபின் இயற்பண்பு பாணியில், தமது படைப்புகளைக் கொண்டுவந்தனர். இவற்றிலிருந்தும் வித்தியாசப்பட்ட போக்கு ’43 குழுஓவியர்களிடம் காணப்பட்டது. இவர்கள் இலங்கை மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நவீனத்துவத்துடன் தமது ஓவியங்களைப் படைக்கத்தொடங்கினர்.

           இவ்வாறாகச் சிங்களவர் மத்தியில் ஓவியக்குழுக்கள் தோற்றம் பெற்றது போன்று, தமிழர் மத்தியிலும் 1938இல் வின்சர் ஓவியக்கழகமும்  1955இல் விடுமுறைக் கால ஓவியக்கழகமும்  தோற்றம் பெற்றன. இவை குறுகிய காலங்களே இயங்கியிருந்தாலும், தமிழ் ஓவியங்களையும் அவர்கள் படைப்புகளையும் இக்குழுக்களை மையமாக வைத்தே தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மேலும், குழுக்களாக இயங்கும்போது ஓவியர்களின் பார்வையும் விசாலமாக்கப்படும் நிலை ஏற்படுவதுடன் அவர்கள் படைப்புகளும் தனித்துவத்துடன் தோற்றம்பெற வாய்ப்பாகின்றது.

           1955இல் தொடங்கிய விடுமுறைக்கால ஓவியர்கள் குழுவினர் பத்து ஆண்டுகள் சீராக இயங்கி, இடைநிறுத்தப்பட்ட பின் 80களில் மீண்டும் தோற்றம்பெற்று இயங்கியபோது, சமூக விழிப்புணர்வுடன் குறிப்பிடத்தக்க சில பங்களிப்புகளைச் செய்திருக்கின்றனர் எனலாம்.

          ஆரம்பகால ஓவியங்கள் இலங்கை மக்களின் வாழ்வைச் சித்திரித்தல் என்பதையே தமது ஓவியங்களின் கருப்பொருளாகக் கொண்டிருக்க, அண்மைக்கால ஓவியர்கள் சமூக, அரசியல் வெளிப்பாட்டைத் தமது படைப்புகளில் கொண்டுவருவதில் அதிக அக்கறை காட்டுவதை அவதானிக்க முடிகின்றது. இந்தப் போக்கு இலங்கையின் இரு சமூகத்து ஓவியர்களுக்குமே பொருந்தும். இந்த வகையில் ஈழத்துத் தமிழ் ஓவியர்களின் அண்மைக்காலப் படைப்பாக்கங்கள் பிரதான இடம்பெறுகின்றன. தமிழ் ஓவியர் மட்டுமல்ல, சிங்கள ஓவியர் மத்தியிலும்கூட அண்மைக்காலங்களிலேயே சமூக, அரசியல் பிரக்ஞையுடன் படைப்புகள் வரத்தொடங்கின எனலாம். இதற்கெல்லாம் எமது சமூக, அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களே அடிப்படையாகின்றது. சமகாலச் சூழலில் ஈழத்தில் வாழ்ந்துவரும் ஒரு தமிழ் ஓவியன் அழகான நிலத்தோற்றத்;தையும் புராண, இதிகாசக் கதைகளையும் ஓவியமாக்குதல் என்பது இயலாத காரியம். தூய கலைநோக்குடன் வரையப்பட்ட ஓவியங்கள்கூட சமக்காலத்தைக் கண்முன் கொண்டுவருவதுடன், எதிர்காலத்திலும் கடந்தகால வரலாறு கூறக்கூடியனவாக அமைகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக எனது பார்வைக்குக் கிடைத்த ஈழத்துத் தமிழ் ஓவியர்களின் - குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓவியர்களின் - படைப்பாக்கங்கள் சிலவற்றை இங்கு நோக்கலாம்.

          தற்போது தமிழர் மத்தியில் இரண்டு தலைமுறை ஓவியர்கள் ஓவி; ஆக்கத்தில் ஈடுபடுகின்றனர் எனலாம். இதில் முதலாவது பிரிவினர் ஓவியப்பயிற்சிப்பெற்று, ஓவிய ஆசிரியர்களாக இருந்து, ஓய்வு பெற்றவர்கள். இந்தச் சந்தா;ப்பத்தில் மற்றுமோர் விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். ஓவியக் கற்கைநெறி ஓவிய ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதுடனேயே எம்மத்தியில் அண்மைக்காலம்வரை இருந்து வந்தது. கடந்த சில வருடங்களாகவே ஓவியக்கலை சற்று விரிவுபட்டு, கண்காட்சி ஒழுங்குகள், அது பற்றிய விமர்சனங்கள் என வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இருந்தாலும் ஜீவனோபாயமாக ஓவியக்கலையை மேற்கொள்வதென்பது இன்னும் எம்மத்தியில் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும்.

          தமிழ் ஓவியங்களின் படைப்புக்களை கருப்பொருள் அடிப்படையில் நோக்குமுன் இவர்களின் ஓவியப்பாணி பற்றி எடுத்துக்கொண்டால், இயற்பண்பிலான பாணியை கையாள்பவர்களாக ஒரு பிரிவினரும் நவீனத்துவத்தைத் தம் படைப்புக்களில் கொண்டுவருபவர்களாக மற்றோர் பிரிவினரும் காணப்படுகின்றனர். மேற்குறித்த இலங்கை ஓவிய வரலாற்றுப்போக்கிலும் இயற்பண்பிலிருந்து நவீனத்துவம் தோற்றம்பெறுவதை அவதானிக்கலாம். தமிழ் ஓவியர்களுக்கும் சிங்கள ஓவியக்குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த தொடர்புகள் காரணமாக தமிழ் ஓவியங்களில் சிங்கள ஓவியச் செல்வாக்கினை அவதானிக்க முடிகிறது.

          

            பிரதிமை, நிலைப்பொருட்கூட்டம், அழகான இயற்கைத் தோற்றம் எனப் பொதுவாக வரைந்துகொண்டிருந்த இம்முதற்பிரிவு ஓவியர்கள்கூட, சமகால நிகழ்வுகளினால் உலுப்பப்பட்டுச் சில வரலாற்றுப் பதிவுகளை ஓவியங்களாக்கியுள்ளனர் குறிப்பாக, 1990க்குப் பின் வரையப்பட்ட ஓவியங்களின் வரலாற்றுப் பதிவுகள் மிகக் காத்திரமாக இடம்பெற்றுள்ளன. முதலில் நான் எடுத்துக்கொள்வது ஓவியர் மு.கனகசபையின்இடப்பெயர்வு’ (1991) என்ற தலைப்பி;லான ஓவியம். 1990க்குப் பின் யாழ்ப்பாண மக்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்று இந்த இடம்பெயர்தல். இராணுவ நடவடிக்கைகள் மக்களைத் தம் சொந்த இடங்களில் நிம்மதியாக நிலைத்திருக்க விடவில்லை. கையில் அகப்பட்ட பொருட்களுடன் கைக்குழந்தைகளையும் காவிக்கொண்டு, பாதுகாப்பான இடம்தேடி நகர்ந்துக்கொண்டிருப்பதே வாழ்க்கையாகிப்போன சமகாலத்தை இந்த அனுபவமிகுந்த முதிய ஓவியர் தனது படைப்பில் கொண்டுவரத் தவறவில்லை.

            நகர்ந்துகொண்டிருக்கும் மக்களின் கால்களின் வேகம் ஓவியத்தில் வெளிப்படுகின்றது. பின்னணி, இடிபாடுகளுடன் கூடிய கட்டிடத் தொகுதி. இதில் யாழ் நூல்நி;லையத்தின் அமைப்பும் காணப்படுகின்றது. ஓவி;யருக்கு யாழ் நூல்நிலையம் எரிக்கப்பட்டதும் அதன் இடிந்த கட்டிடமும் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை இந்தப் படைப்பினூடாகக் கொண்டுவந்திருக்கின்றார். இவரின் பிற்பட்ட - குறிப்பாக 90க்கு பிந்திய - ஓவி;யங்கள் மங்கல வர்ணங்களாலானதாக உள்ளன. ஆரம்ப காலத்து ஓவியங்களில் காணப்பட்ட சிவப்பு, பச்சை வர்ணங்கள் விடுபட்டு மெல்லிய நீலம், மண்ணிறம், மங்கலான மஞ்சள் எனக் கலந்து படைப்பில் வர்ணங்களாலேயே சோகத்தைக் கொண்டுவருகின்றார்.

          இவையே எமது வரலாற்றி;ன் முக்கிய பதிவுகள். வெறுமனே போரும் காட்சியும் இந்த தொண்ணூறுகளின் யாழ்ப்பாணத்தைக் காட்டிவிடப் போவதில்லை. பொது மக்களின் இந்த அவலம், அவர்களின் அன்றாட வாழ்வு மிகத் தத்ரூமாக இந்த ஓவியத்தில் கொண்டுவரப்படுகின்றது.

          அடுத்து, ஓவியர் மாற்குவின் படைப்புக்கள் சிலவற்றை நோக்கலாம். இவர் எப்போதும் ஓவியங்களைப் படைத்துக் குவிப்பாh;. இவரைப் பொறுத்தவரை போh;க்காலம்கூட படைப்பாக்கத்திற்குத் தடையாக இருக்கவில்லை. ஊடகக் கையாள்கையில் பெரிய பரப்பளவைக் கொண்டவர். தனது படைப்பாக்கத்திற்கு நீர் வர்ணம், எண்ணெய் வர்ணம், கித்தான் (ஊயnஎயள) என வரையறைப்படுத்துபவரல்ல. அதனால் சிறிய காகிதத் துண்டுகளிலேயே தன் மனதை, தான் வாழும் சூழலின் தாக்கங்களைப் பதிவாக்கிக்கொள்பவர். இந்தவகையில் 90க்குப் பிற்பட்ட நிகழ்வுகள் இவரின் படைப்புக்களில் அனேகமாகச் சிறைப்பட்டுள்ளன. வரலாற்றின் முக்கிய பதி;வுகளாக இவை இடம்பெறுகின்றன.

            1990இல் பெரும்பாலும் இவரின் ஓவியங்கள் கறுப்பு, வௌ;ளைக் கோட்டோவியங்களாகவே உள்ளன. அவலத்தையும், சிதைவையும் தன் ஓவியப் பணியு+டாகவே வெளிக்கொணர்கிறார். விகாரமாக்கப்பட்ட உருவங்கள், அருவருப்பு+ட்டும் வடிவமைப்பு என்பன பீதியைக் கிளப்பும் உணர்வை இயல்பாகவே ஏற்படுத்திவிடுகின்றது. இவற்றை மிஞ்சி, நிகழ்வு ஓர் பதிவாக நிற்கின்றது. இவ்வாறான படைப்புகளில் குறிப்பிட்ட ஒரு சம்பவம் மாத்திரமின்றி இந்தக் காலத்தின் பொதுவான ஒரு தோற்றம் மனிதன் முகங்களினுhடாக கொண்டுவரப்படுகின்றது. இதற்கு உதாரணமாக இந்த ஓவியம் விளங்குகின்றது.

 

            மேலும், மலிந்துபோன இறப்புகளும் கதறல்களும் இவர் படைப்புகளில் தாராளமாக இடம்பெறுகின்றன. இவற்றிலிருந்து சற்று வித்தியாசப்பட்டதான மாற்குவின் மற்றோர் ஓவியம் பற்றி இங்கு குறிப்பிடவேண்டும். இது 1990க்குச் சற்று முந்தியது. 1987-ல் இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. பைத்தியம் பிடித்த பெண் - ஓவியத்தை ஆழ்ந்து நோக்குகையில் ஓர் கலக்க உணர்வு ஏற்படுகின்றது. சித்தம் கலங்கிய பெண் ஓவியத்தில் அப்படியே கொண்டுவரப்படுகிறாள். போரின் விளைவுகளில் மனநிலைப் பாதிப்பும் ஒன்று. உடல் சிதைந்த மனித உருவங்கள் மட்டுமின்றி மனம் சிதைந்த பெண்ணும் இவரின் படைப்பில் இடம்பெற்று விடுகின்றாள். போர்நிகழ்வுகள் எந்தளவிற்கு மனிதனைப் பாதிக்கின்றது என்பதை எழுத்துக்களில்; கொண்டுவருவதைவிடவும், இவ்வாறான ஓவியங்களைத் தத்ரூபமாக சித்திரிக்கின்றனர்.

            அடுத்து, ஓவியர் .இராசய்யாவின் படைப்புகளிலும் இவ்வாறான காலத்தின் கோலங்களைக் காண முடிகின்றது. மிகவும் நேர்த்தியான இயற்பண்புவாதத்தில் ஓவியங்கள் படைப்பதில் வல்லவர். இவரின் மூன்று ஓவியங்களை இங்கு உதாரணங்களாகக் காட்டலாம். இரண்டும் 1993 இல் வரையப்பட்டவை. ஒன்றுஅகதிகள்என்ற தலைப்பிலான ஓவியம். இது முன்னர் மு.கனகசபையின் படைப்பில் காணப்பட்ட அதே விதமான காட்சியமைப்புக் கொண்டது. இங்கு நகர்ந்து செல்லும் மக்கள் இல்லாமல், ஒரு குடும்பம் நாடியிலும் தலையிலும் கையு+ன்றி கலங்கிப்போயிருக்கும் காட்சி. எதை விடுத்தாலும் இந்த விடயத்தை எமது ஓவியர்கள் எவராலும் தவிh;க்கமுடியாமல் இருந்திருக்கின்றது என்பதற்கு இந்த ஓவியங்களே நல்ல எடுத்துக்காட்டாக உள்ளன. மூட்டை முடிச்சுடன் ஓடித்திரியும் வாழ்க்கையின் அவலம் இவர்களின் படைப்புக்களில் தவிர்க்க முடியாமல் உருவாக்கப்பட்டு விடுகின்றது.

            துவிச்சக்கரவண்டியில் விறகு கட்டிச் செல்லும் இந்த மனிதனின் ஓவியம் என்னை மிகவும் கவர்ந்தது. இதற்கு இவரின் தத்ரூபமான ஓவியப்பாணியும் ஓர் காரணமாக இருக்கலாம். கண்முன்னே காட்சியைக் கொண்டுவரும் இவர் திறன் இந்த ஓவியத்தில் அப்படியே வெளிப்படுகின்றது. யாழ்ப்பாணத்திற்கு 1990 -ன் பின் பயணமாதல் என்பது ஒரு பெரும் கதை. வழியில் காணும் காட்சிகள் யாவும் தனிதனிச் சட்டங்களுக்குள் ஓவியமாகக் கூடியவை. துவிச்சக்கர வண்டியில் விறகு ஏற்றிச் செல்லும் இந்த மனிதன் காலத்தின் துயரங்களைக் கண்முன் கொண்டுவருகிறான். இந்தக் காட்சிகள் எமது இளைய தலைமுறையினர் கதையாகக் கேட்ட காலம் போய் சமகாலத்தின் தரிசனங்களாய், அவர்களின் அனுபவங்களாய் விளங்குகின்றன. இவரின் மற்றுமோர் ஓவியமும் அப்படியே யாழ் மக்களின் வாழ்வைச் சித்திரிக்கின்றது. ஓர் மாணவி படிக்கின்றாள். அருகில் யாழ்ப்பாணத்தின் புதிய கண்டுப்பிடிப்பான போத்தல் விளக்கு hpகிறது. hpயாத மின்குமிழ் தொங்குகிறது. இந்த நிகழ்வுகள் வருங்காலத்திற்கு நினைவுகளிலிருந்து கதைகளாய்க் கூறப்படுவதைவிட ஓவியப்பதிவுகளாய் இருப்பது மிக அவசியமாகும்.

            இனி இளைய தலைமுறை ஓவி;யர்களின் படைப்புக்கள் பற்றி நோக்கினால், இவர்களின் அநேகமான படைப்புக்கள் சமகால நிகழ்வுகளையே விடயமாகக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பிரச்சார ஓவியங்களைத் தனிப் பிரிவாக நோக்கவேண்டும். மேலும் சமகால நிகழ்வுகளை ஓவியமாக்குவதில் இவர்கள் கையாண்ட பாணி நவீனத்துவம் மிக்கதாயும், குறியீட்டுப்போக்கில் விடயத்தை வெளிப்படுத்துவதாகவும் விளங்குகின்றது. இதற்குச் சிறப்பான உதாரணமாக சனாதனனின் ஓர் ஓவியத்தை எடுத்துக்காட்டலாம். வர்ணங்கள் சேர்க்கப்படாத கறுப்பு வௌ;ளைக் கோட்டோவியம் தரும் ஆழம் வியக்கத்தக்கது. எத்தனையோ அர்த்தங்களை ஒன்று சேரக் கொண்டுவருகிறது. இந்த ஒரே விடயத்தை சிறிய மாற்றங்களுடன் தொடர் ஓவியங்களாக்கியுள்ளார். அதாவது முகம் மூடிய பெண் உருவம், மடியில் சிலுவை சுமந்திருப்பதான ஓவியங்கள். இவற்;றின் பின்னணியிலும் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. இங்கு நான் குறிப்பாக எடுத்துக்காட்டும் ஓவியம் இலங்கைத்தமிழருக்கு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் மற்றுமோர் அவலத்தை எடுத்துக்காட்டுகின்றது. காணாமல் போவோர் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. இதைத்தான் இந்த ஓவியம் குறிப்பாக எடுத்துக்காட்டுகிறது. இந்தத் தொடர் ஓவியங்கள் மைக்கேல் ஏஞ்சலோவினால் 1499இல் படைக்கப்பட்ட சிற்பத்தைத் தழுவியனவாக இருக்கின்றன. மரித்த யேசுவை மடியில் சுமந்த தாய் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் சிற்பம், இந்த இளம் ஓவியருக்கு, இன்று எம் மத்தியில் மக்களை இழந்து சோகத்தில் ஆழ்ந்துபோயிருக்கும் எத்தனையோ தாய்மாரை ஞாபகப்படுத்திருக்க வேண்டும். அவரின் சிந்தனை ஓவியமாகிறது. இந்த ஓவியம் இன்று மட்டுமல்ல, என்றும் இன்றைய காலத்தின் சோகக் கதையை நினைவு+ட்டிக் கொண்டிருக்கும்.

           அடுத்து அருந்ததியின்கிளாஸிஎன்ற தலைப்பிலான ஓவியத்தை எடுத்துக்காட்டலாம். 1990இன் பின் யாழ்ப்பாணத்திற்கான வழி பலமுறை மாற்றப்பட்டாலும் கிளாஸிப் பாதை மறக்க முடியாதது. தத்தளிக்கும் கடலில் சிறு வள்ளங்களில் வௌ;ளமாய் அள்ளப்படும் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அல்லலுறும் ஒவ்வொரு கண நகா;வும் விபரிக்க முடியாதது. இந்தப் பயணங்களில் நிகழ்ந்த இறப்புக்கள்தான் எத்தனை. அந்தக் காட்சிச் சித்திரிப்பு இந்த ஓவியத்தில் இவ்வாறு வெளிப்படுகின்றது. கலப்பு ஊடக ஓவி;யம் இது.                            

            கடல்,வள்ளம், அதில் அடிபட்டு வரும் மக்களின் உடைமைகள். மனித உருவங்களே இல்லாமல் அவர்களின் உடைமைகளைச் சுட்டும் பொருட்கள் மட்டும் ஒட்டப்பட்ட இவ்வோவியம் முப்பாpமாணத் தோற்றத்துடன் விளங்குகின்றது. இரவில் நிகழும் இந்தச் துயரச் சம்பவங்களை காணப் பொறுக்காத சந்திரன் முகம் பொத்தி அலறுகிறான். இந்த வரலாற்று நிகழ்வுகள் ஓவியங்களுக்குள் சிறைப்பட்டு நாம் பட்ட துயரங்களை நாளை எடுத்துச்சொல்லும் என்பதில் சந்தேகமில்லை.

            மக்கள் வீடு வாசல் இழந்துநகர்தல்என்பது தமிழ் மக்கள் ஒவ்வொருவரினது மனத்தையும் எந்தளவிற்குப் பாதித்துள்ளது என்பதை வாசுகியின் ஓவியமும் எடுத்துக்காட்டுகின்றது. ஓவியர்கள் கனகசபை, இராசையா போன்றோரின் படைப்பாக்கங்களி;லிருந்து வித்தியாசப்பட்டு, இவர் நவீனத்துவத்தில் இந்த விடயத்தைக் கொண்டுவருகிறார்.

             இவரின் ஓவியப்பாணி தனித்துவமானதாக இருப்பதுடன், துவிச்சக்கர வண்டியில் பொருட்களை ஏற்றிச்செல்லும் இம்மக்களது நகர்வின் வேகம் ஓவியத்தில் புலப்படுவதற்கு இவரது ஓவியப்பாணியே காரணமாகும்.

             இவ்வாறாக, சமகால நிகழ்வுகள் தவிர்க்கமுடியாதபடி ஓவியர்களின் படைப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன என்பதற்கு மேலே குறிப்பிட்ட ஓவியங்கள் உதாரணங்களாக விளங்குகின்றன.

              மேலே எடுத்துக்காட்டிய ஓவியங்களி;லிருந்து சற்று வித்தியாசப்பட்டு முழுக்க முழுக்க போர்ச்சூழலை, நிகழ்வுகளுக்குச் சித்திரிக்கும் ஓவியங்களும் இந்தக் காலப்பகுதியில் பெருமளவில் தமிழர் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளதெனலாம். பெருமளவில் சுவர் ஓவியங்களாகவும் சுவரொட்டிகளாகவும் இவ்வகை ஓவியங்களைக் காணமுடிகின்றது. இவை வெறும் ஓவியங்களாக இல்லாமல், கருத்துப் பாpமாற்ற ஊடகமாகவும் செயல்படுகின்றன. இந்தவகை ஓவியங்களும் தரத்தில் உயர்ந்த மிக அற்புதமான படைப்பாக்கங்களாகவே விளங்குகின்றன.

               இவ்வாறெல்லாம் தமிழர் மத்தியில் தோற்றம் பெற்ற சமகால ஓவியங்கள் எதிர்காலத்தில் வரலாற்றுப் பதிவுகளாக மிஞ்சும் எனக் கருத இடமுண்டு. தொடர்ந்துகொண்டிருக்கும் ஈழத்துப்போh; இந்த ஓவியங்களையும் அழித்துவிடுமோ என்ற அச்சத்தையும் தோற்றுவிக்காமலும் இல்லை. இந்த ஓவியங்கள்; அனேகமாக அந்தந்த சந்ததியினருக்கும் பாதுகாப்பாகப் போய்ச் சேர்ந்து தமிழர் வரலாறு கூறவேண்டும்.

இன்னுமொரு காலடி  பக் : 24-28

   ஓவியர் மாற்குவும் அவரது ஓவியங்களும்                                                                                                                                                                              வாசுகி

 

நண்பா;கள் எனக்காகக் கொண்டு வந்திருந்த சிப்பிகளை என் முன்னால் கொட்டியபோது சிலீh; என்று எழுந்த சத்தத்துடன் மனதின் ஒரு மூலையில் புதைத்து வைத்திருந்த அந்த இனிய நாட்களின் நினைவுகள் எழுந்து வந்தன. அவை மாற்கு மாஸ்ராpடம் ஓவியத்தையும் வாழ்தலையும் கற்ற நாட்கள். ஓவியம் கற்பித்தலுடனே இயற்கையையும் வாழ்க்கையையும் ரசிக்கப் பழக்கித் தந்தார்.

விதம் விதமான சிப்பிகள். பழைய கலைப்பொருள், விலங்குகளின் முள்கள், எலும்புகள், நாணயங்கள், கற்கள், பு+னைகள், நாய்கள் போன்ற மிருகங்கள், தாவரங்கள் என்று பலவகைப் பொருள்களால் வீடு ஒரு குட்டி நுhதனசாலையாகவே நிரம்பி வழியும். வாழ்க்கை முழுவதும் சேகரித்த இந்தப்பொருள்கள் அனைத்தையும் 1995 இடப்பெயர்வில் விட்டுப்போக நேர்ந்தபோதும் தற்காலிகமாக இருந்த இடங்களிலும் அவரது சேகரிப்புத் தொடர்ந்து இன்னும் மன்னாரில் தொடர்கிறது. இந்தப் பொருட்களின் அழகை, லயத்தை ரசிப்பதில் அவற்றுள் உள்ள உருவத்தை அடையாளம் காண்பதில் எமது கற்கை ஆரம்பிக்கும்.

ஓவியர் மாற்கு 1933 ஆம் ஆண்டு ஜீன் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் குருநகரில் பிறந்தார். இவரது தாயின் பெயர் வரோனிகா. தந்தையின் பெயர் ஹேரத் முதியான்சலாகே அப்புஹாமி. குருநகரியிலிருந்தபோது இவரது வீட்டுக்கு அருகில் வசித்தவர் திரு ராஜேந்திரன் என்னும் பெயருள்ள சீமெந்தில் கிறிஸ்தவ சிலைகள் வடிப்பவர். சிறுவயதிலிருந்தே மாற்கு இவற்றைப் பாh;ப்பதிலும் தானும் அதுபோல செய்வதிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார். பின்னர் யாழ்ப்பாணம் சென்ற்பற்றிக்ஸ் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் உருவங்கள் வரைவதில் இவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட அதிபர் வண. ஜெயக்கொடி அவர்கள் நூலகத்திலிருந்த ஓவியப் புத்தகங்களை இவருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தக் கட்டத்தில் ஓவியர் பெனடிக்ற் அவர்கள் குருநகரிலிருக்கும் சென்ற் ஜேம்ஸ் கல்லூரியில் ஓவிய வகுப்புக்களை நடாத்தி வருகிறார். மாற்குவுடன் 15 மாணவர்கள் இங்கு ஓவியப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டனர்.

பாடசாலைக் கல்வியை எஸ்.எஸ்.சியுடன் முடிக்கும் நேரத்தில் கொழும்பிலுள்ள தொழில் நுட்பக் கல்லூரியில் ஓவிய டிப்ளோமோ பயிற்சி நெறி நடப்பது பற்றி இவருக்;குத் தெரிய வருகிறது. ஆனால் குடும்பத்தினரோ இவர் வேலைக்குப் போவதையே விரும்புகின்றனர். இவ்வாறாக இரண்டு தடவை இவரது பயணம் தடைப்பட்ட பின் அந்நேரம் கொழும்பிலிருந்த இவரது ஒன்றுவிட்ட சகோதரனின் ஒத்துழைப்புடன் பகுதிநேரக் கற்கை நெறியாக ஓவியத்தைப் பயில கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியின் ஓவியப்பிரிவில் இணைகிறார்.(இதுவே இலங்கை நுண்கலைக் கல்லூரியாகப் பின்னர் மாற்றப்பட்டது) பின்னா; ஆர்வம் காரணமாக முழுநேரக்கற்கை நெறியைத் தொடர்ந்தார். கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் மாற்கு அவர்கள் கல்விகற்ற காலத்தில் அங்கு ஜே.டி. பெரேரோ அதிபராகவும் திரு டேவிட் பெயின்ரா; விரிவுரையாளராகவும் இருந்துள்ளனர். ஓவியம் கற்கையில் மாற்கு காட்டிய இடையறா ஈடுபாடும் திறமையும் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டிற்கு நேரடிஉயர்வைப் பெற்றுக் கொடுத்தது. அத்துடன், மேலதிகமாக உயர்கற்கை நெறியையும் கற்கிறார்.இங்கு கல்வி கற்கும்போதே தனக்குப்பிடித்தமானதும் மிகவும் பாராட்டப்பட்டதுமான கழுவுதற்பாணி நீர்வர்ண ஓவியங்களை ஆக்கத் தொடங்குகிறார்.

ஓவிய டிப்ளோமோ கற்கை நெறியின் பின் ஓவிய ஆசிரியராக பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் பின்னர் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் பணியாற்றத் தொடங்குவதுடன் ஓவியராக மட்டுமின்றி ஓவிய ஆசிரியராகவும் இவரது வாழ்வு விரிவடைகிறது. மேலும் யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த வின்சர் ஓவியக் கழகத்துடன் தொடர்பும் ஏற்படுகிறது.(வின்சர் ஓவியக்கழகம் 1938-1955) பின்னர் எம்.எஸ்.கந்தையா,சி.பொன்னம்பலம் போன்றோரும் மாற்குவும் 1959இல் விடுமுறை ஓவியக்கழகம் என்கின்ற பாடசாலைக் கற்கை நெறிக்கு புறமான சுயமாக இயங்கும் ஓவியர்களைக் கொண்ட குழுவை தோற்றுவிக்கின்றனர். இது வெவ்வேறு இடங்களில் 1995 வரை யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்துள்ளது.

இலங்கையில் மரபுசார் ஓவியக்கலை வளர்ச்சி ஐரோப்பியர் வருகையுடன் தடைப்பட ஐரோப்பியரது இயற்பண்புவாத நவீன ஓவிய மரபுகள் இலங்கைக்கு அறிமுகமாகின்றன. கலைக் கல்லூரியின் மூலமும் கண்காட்சிகள் மூலமும் தலைநகர் மையப்பட்டதாக இது நடைபெற இங்கு கற்ற ஓவியர்கள் மூலமும் ஏனைய இடங்களுக்குப் பரவுகிறது. இவ்வாறே யாழ்ப்பாணத்திற்கும் தனிப்பட்ட ஓவியர்கள் மூலமும் வின்சர் ஓவியக்கழகத்தின் தோற்றத்துடன் (1938-1955) அமைப்பு hPதியாகவும் ஐரோப்பிய ஓவிய மரபுகள் அறிமுகமாகின்றன.

இக்காலகட்டத்தில் ஓவியத்துறையில் ஈடுபட்ட எமது ஓவியர்கள் அனைவருமே ஐரோப்பிய இயற்பண்புவாத-பிரதிமை பொருட்கட்ட நிலைப் பொருட்கட்ட ஓவியங்களை தீட்டுவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இவ்வாறு குறித்த விடயங்களைப் பற்றி மட்டும் பேசக் கூடிய இயற்பண்பு வாதத்திலிருந்து உலகினதும் வாழ்வினதும் பல்வேறு பாpமாணங்களை, பல்வேறு விதமாக வெளிப்படுத்தக்கூடிய நவீன ஓவிய வடிவங்களை தமிழர் மத்தியில் ஓவியங்கள் மூலமும் கற்கை நெறியாகவும் கண்காட்சிகளாகவும் தொடர்ச்சியான செயற்பாடுகள் மூலம் அறிமுகப்படுத்தியவர் ஓவியர் மாற்கு அவர்களே ஆகும்.

ஓவியா; மாற்கு பலவகையான வா;ணங்களினாலும் ஊடகங்களாலும் வெளிப்படுத்தக் கூடிய சாத்தியமான பல தளங்களில் தனது எண்ணங்களை வெளிப்படுத்துவதன் மூலம் தனது ஓவியங்களைப் படைக்கிறார்.

அவரது ஆரம்பமான நீh;வா; ஓவியங்கள் நீh;வா;ணத்தின் இரகசியமான அற்புதமான பக்கமொன்றுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. கருப்பொருளாக கிறிஸ்தவக் கதைகள் கூடுதலாக இடம்பெறுகின்றன. கடதாசியில் நீh;வா;ணம் கொண்டு தீட்டப்படும் உருவங்கள் மீண்டும் மீண்டும் கழுவப்படுவதன் மூலம் கடதாசியில் சாயமேற்பட்டது போன்றும் வா;ணங்கள் ஒன்றுடன் ஒன்று கரைந்து இருண்ட மண்ணிறம் அல்லது கருநீல சாயலுடையவனவாகத் தோன்றக்கூடிய வகையில் ஆக்கப்பட்டுள்ளன. இவ்வகைப்; பின்னணியிலிருந்து தெளிவாக வரையறுக்கப்படாமல் கரைந்தும் கரையாததுமாக தோன்ற, பிற்காலத்தில் படிப்படியாக உருவங்களின் வெளிவரைகள் தெளிவாகத் தொடங்கி பின்னா; இவையே மாற்குவின் ஓவியங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. இக்கட்டத்தில் ஊடகத்திலும் மாற்றமேற்படுகிறது. நீh;வா;ணத்திலிருந்து சுண்ண வா;ணம் முக்கியத்துவம் பெறுகின்றது.

மாற்கு மனிதரதும் விலங்களினதும் உடலமைப்பில் கூடிய ரசனை கொண்டுள்ளாh;. உயிர்களின் உடலமைப்பு அனைத்துமே ஏதோவொரு வகையில் லயமும் சந்தமும் உடையவை. ஓன்றுடனொன்று ஒத்திசைவானவை என்றும் நம்புகின்றார். தமிழர் வாழ்வின் நிகழ்வுகளாக காவடி நாதஸ்வரக் கச்சோp பெண்கள் போன்ற விடயங்களுடன் புராண இதிகாசக் கதைகள் இயற்கை நிகழ்வுகள் என இவரது கருப்பொருட்கள் விரிவடைகின்றன.

இயற்கை நிகழ்வுகளான அலை மின்னல் முகில் போன்றவற்றை இராகங்களுக்குhp விளக்கங்கள் அனைத்தையுமே மனிதரதும் விலங்கினதும் உருவங்களுடாக அவற்றின் லயத்தினூடாக வெளிப்படுத்துகிறார். இங்கு உருவங்களின் வெளிவரைகள் (ழரவடiநௌ) முக்கியத்துவம் பெறுகின்றன. நேர்கோடுகளும் வளைகோடுகளும் உருவங்களின் அமைப்பிற்கேற்ப அழுத்தம் பெறுவதின் மூலம் அவற்றிலுள்ள லயத்தை ஒத்திசைவை வெளிப்படுத்துகின்றன. கோடுகளின் ரேகைகளின் பல்வகைப்பட்ட தன்மைகளையும் இவா; பாPட்சித்து பாh;த்திருப்பது ரசனைக்குhpயது. அடுத்த கட்டமாக உஉருவறங்களின் லயத்தினுள் மட்டும் அடங்கி விடாது ரேகைகள் திமிறி வெளியேறுகின்றன. இது உருவங்களின் அநசவை அதிர்வை வெளிப்படுத்துவதுடன் ஓவிய வெளியையும் நிரம்புகின்றன. இவ்வாறு ரேகைகளை சுயாதீனமாகக் கையாளுவதற்கு மிகவும் வசதியான ஊடகமாக மாற்குவிற்கு சுண்ணவர்ணங்களே (pயளவநடள) அமைகின்றன. எனினும்  எண்ணைய் வர்ணம் நீர்வர்ணம் மை போன்ற இன்னோரன்ன ஊடகங்களாகவும் பாவிக்கிறார்.

இங்கு ஓவியர் மாற்குவின் தன்னுருவப் பிரதிமை ஓவியங்கள் பற்றிக் குறிப்பிட்டேயாக வேண்டும் .ஒருவரை அச்சாகப் புகைப்படம்போன்று பிரதிபண்ணல் அச்சாகப் புகைப்படம் போன்ற தன்மையிலிருந்து மாறுபட்டு அவரின் இயல்பையும்தனித்துவத்தையும் காட்டிநிற்பவை. மாற்குவின் ஏராளமான ஓவியக் குவியலுக்குள் மறைந்து கிடக்கும் இவை அவரது இளமைக் காலம் தொட்டு இன்றுவரையான பல்வேறுபட்ட தோற்றங்களை அந்தந்தக் காலப்பகுதியில் அவர் பாவித்த பல்வேறுபட்ட ஊடகங்களால் வெளிப்படுத்துபவை.

கருப்பொருள் hPதியாகவும் பாணியிலும் ஏற்கெனவே புழக்கத்திலிருந்து முறைகளுக்கு மாற்றாக, பல விடயங்களைப் பாPட்சித்து அறிமுகப்படுத்திய மாற்கு ஓவியத்தை ஆக்குவதற்கான ஊடகங்களிலும் பலவகையான பொருட்கள்களைக் கையாண்டிருக்கிறார்.

கன்வஸ் நீh;வா;ணத்துக்குhp கடதாசி எண்ணெய் வா;ணம் நீh;வா;ணம் சுண்ணவா;ணம் போன்றவற்றுடன் காp சுண்ணாம்பு பிறின்hpங் இன்லா கொப்பித்தாள் பத்தாpகைத் தாள் என்பவற்றில் தொடங்கி பலகை மேசை கதவு சுவா; என அவரது ஓவியம் தீட்டு பொருட்களின் பட்டியல் விhpயும்.

எண்ணைய் வா;ணமும் கன்வசும் இல்லாவிடில் ஓவியம் வரைய முடியாது. அல்லது, இவற்றால் வரையப்படாதவை ஓவியங்களல்ல என்றிருந்து எம்மவரின் மனநிலையை மாற்றி ஓவியனது உணர்வுகளுக்கும் கற்பனைக்கும் ஊடகம் தடையாக இருக்க முடியாது என்பதை உணா;த்தியவா;.அதிலும் போர்க்கால சூழலில் பொருளாதாரத் தடை எல்லாப் பக்கங்களாலும் சூழ்ந்து வாழ்க்கை பெரும் போராட்டமாக மாறிய காலத்தில் பாடசாலை மாணவர்கள் சாதாரணமாகப் பாவிக்கும் சுண்ண வா;ணங்களே வௌ;ளைக் கடதாசிகளோ கூடக் கடையாக்காது போன காலத்தில் வீடுகளில் பரண்களில் கிடந்த பழைய சீனச் சஞ்சிகைத் தாள்களையும் கலண்டா; படங்களையம் எடுத்து அவற்றிலுள்ள வர்ணங்களை மீள உருவமைப்பதன் மூலம் தனது ஓவியங்களாக்குகிறார். அடக்குமுறையோ தடையோ அதிகரிக்க அதிகரிக்க ஓவியா; மாற்கு படங்களாக கீறிக் குவிக்கும் வேகமும் அதிகரி;க்கும்.

யாழ்நகரை போh; சூழ்ந்து வந்த காலத்தில் சில மூத்த கலைஞர்களும் இளையவர்களும் போருள் வாழ்வதை தம் கலைகளில் வடிக்கத் தொடங்குகின்றனர். மாற்குவும் தனது வாழ்க்கை போன்றே பேனாவாலும் மிகச் சில  சந்தா;ப்பங்களில் ஓரிரு வர்ணங்களாலும் ஆக்கப்பட்டவை. உடல்கள்; முறுகியும் திரும்பியும் வாழ்தலின் அந்தரநிலையை வெளிப்படுத்துபவை.

போh; விமானங்கள் சூழப்பறக்க குண்டு மழை பொழிய அதிகமான நேரங்கள் குழிகளுக்குள்ளேயே கழிய எஞ்சிய நேரத்தில் மாற்குவைப் பாh;க்கப்போனால் வாழ்தலில் நம்பி;க்கை ஊட்டும் படியாக போரால் வாழ்க்கை சலித்துப் போகாதிருக்கும்படியாக அவர் புதிதாக ஏதாவது வரைந்தோ செதுக்கியோ வைத்திருப்பாh;.

சிறு தடியோ எலும்போ தேய்ந்துபோன சைக்கிள் பெடல் கட்டையோ பனங் கொட்டையோ எதுவாயினும் பல சமயங்களில் சிதறி விழும் ஷெல் துண்டுகள் கூட மாற்குவின் படைப்புக்களாக தமது இயல்பை மாற்றி மாற்குவின் படைப்புகளாக மாறிவிடும்.

இந்த ஓயாத நீண்ட காலத் தேடலில் சோ;ந்தவை அனைத்தையுமே விட்டுவிட்டு இடம்பெயர்ந்தபொழுதும் உடலில் நரம்புகளை நோய் தாக்கியிருந்த வேளையிலும் கிளாலியில் பற்றைக் காடுகளுள் திரிந்து காட்டுத்தடிகளை வெட்டி தனது நினைவிலிருந்த நண்பா;களுக்காக எல்லாம் ஊன்றுகோல்கள் செதுக்கி வைத்திருந்தார். எங்களுக்காகவும் (மாணவா;கள்) என்று அதிலிருந்தது.

மீண்டும் வன்னிக்கு இடப்பெயா;வும் நோயும் அதிகரித்து தலையில் சத்திர சிகிச்சையின் பின் கால்களுடன் ஓயாது வரைந்து கொண்டிருந்த கைகளும் இயங்காமல் போன பின்னரும் மாற்கு ஓயவில்லை. நடக்க முடியாவிடினும் கைகளுக்கு சலியாத பயிற்சி கொடுத்ததின் மூலம் மீண்டும் கீறத் தொடங்கி உள்ளாh;. இப்பொழுது அவா; ஓவியங்களை ஆக்குவதற்காகத்தொpந்தெடுத்துள்ள

பின்னணிப் பெட்டி அட்டைகள் (உழசசரபயவநன டிழயசனள) ஆகும். இத்தனை வருட உழைப்பில் படைத்தவை எதுவும் அவரது கைகளில் இன்று இல்லாத காரணத்தால் அவை அனைத்தையும் மீண்டும் ஆக்கிவிட வேண்டும் என்ற வேகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இயங்க முடியாதிருந்த கைகளால் மீண்டும் அவா; வரையும் இந்த ஓவியங்களும் அவரது ரேகைகளும் பழையனவற்றையே ஞாபகப்படுத்தினாலும் நம்பிக்கை ஊட்டுவன. முக்கியமாக இவற்றை அவா; துhpதமாக மீண்டும் படைப்பதன் நோக்கம். இன்று தன்னிடம் பயின்று கொண்டிருக்கும் மாணவா;களுக்கும் இந்தப் பல்தன்மை கொண்ட உத்திகளும் வடிவங்களும் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும்.

ஓவியராக மாற்கு பலதளங்களிலும் தனது கற்பனையை விhpத்தது போன்றே ஓவிய ஆசிரியராகவும் மாணவா;களதும் கற்பனையை ஆற்றலை வளா;ப்பதில் கூடிய கவனம் எடுத்திருக்கிறார்.

தமது உணர்வுகளை சிந்தனைகளை ஓவியமாக வடிப்பதற்கு அடிப்படையான வெளியிலுள்ள பொருட்களை- நபா;களை -காட்சிகளை அவ்வாறே பாh;த்து வரையும் பொருட்கட்ட பிரதிமை நிலவுருவக் காட்சி ஓவியங்களில் தொடங்கி கருப்பொருட்களையும் பற்றிச் சிந்திக்கவும் வெளிப்படுத்தவும் கூடிய வகையில் பயிற்சியை வழங்குகிறார். மேலும் ஓவிய வடிவ hPதியாகவும் ஊடக hPதியாகவும் வேறு வேறுபட்ட பலதையும் அறிமுகப்படுத்துவதன் மூலமும் மாணவா;கள் தமக்கு வாலாயமான முறைகளைத் தொpவு செய்துகொள்ளவும் வழிசெய்கிறாh;.

அவரது பலவிதமான சேகரிப்புப் பொருட்கள் போன்றே அவரது மாணவா;களும் பல விதமானவா;கள். சுண்ணக் கட்டியை கையில் பிடிக்கத் தொpந்தவுடன் நானும் படம் கீறப் போகிறேன் என்று புறப்பட்ட அவரது பேத்திமுறையான குழந்தையில் தொடங்கி பலதரப்பட்ட வயதில் பெண்களும் ஆண்களும் கவிஞர்கள் பல்கலைக்கழக மாணவா;கள் ஆசிரியர்கள் போராளிகள் என்று அனைவருக்கும் வா;ணங்களுடனும் கோடுகளுடனும் மட்டுமின்றி இயற்கையுடனும் சக மனிதா;களுடனும் சிநேகிதமாக இருக்க கற்பித்தார்.

நிறைய இடங்களுக்கு அழைத்துச் செல்வாh;. நிறையப் பேரை அறிமுகப்படுத்துவாh;. நிறைய கதைகள் சொல்வாh;. பாடசாலை ஆசிhpயப் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னா; வீட்டில் ஓவியம் கற்பித்தலே அவரது முழுநேரத் தொழிலாகிற்று. பணமோ பிரதியுபகாரமோ எதிh;பாராது, இந்தக் கற்பித்தல் இன்றும் தொடர்கிறது. இதனால் அவருக்குள்;ளிருந்த ஓவியருக்கான நேரம் நிறைந்து ஓவிய ஆசிரியருக்காகவே கூடிய நேரத்தை செலவிடுகிறாh;.

இவ்வாறு எமது சமூகத்தில் தனிநபா;களுக்கு ஓவியம் கற்பதி;லும் ஓவியா;களாக வாழ்வதிலும் ஆர்வத்தை ஏற்படுத்தியதுடன் மட்டும் நின்றுவிடாது, சமூகத்தின் மத்தியில் ஓவியா;களைப் பாh;த்து ரசித்து மதிப்பதற்காக அறிமுகத்தை ஏற்படுத்துவதிலும் ஈடுபடுகிறாh;.ஓவியக் கண்காட்சிகளிலே தனது மாணவா;களைச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் முன்னிற்கிறாh;.

நவீன ஓவிய வடிவங்களை தமிழர்மத்தியில் ஓவியங்கள் மூலமும் கற்கை நெறியாகவும் கண்காட்சிகளாகவும் தொடர்ச்சியான செயற்பாடுகள் மூலமும் அறிமுகப்படுத்தியவர் ஓவியர் மாற்கு அவர்களே ஆகும்.

-              காலம் இதழ் 2000 பக்.2-6

 

 

 

 

 

 

 

 

மாற்கு தேடலும் கோடுகளும்

-              சங்கரா

அழகு பற்றியும் அவலட்சணம் பற்றியும் நிறையப் பிரச்சினைகள் எமக்கு. இரண்டையும் இருவேறு எதிh;நிலைகளில் நிறுத்தி விட்டு, நடுவில் நின்றுகொண்ட சிதைவு விகாரம் என்று நிகழும்போது இதுவெல்லாம் அழகுக்குப் புறம்பான விஷயங்கள் என்று சலிப்புடன் விலகிவிடுவோம்.இது பிழை.

ஒரு நல்ல ஓவியனுக்கு அழகு அவலட்சணம் என்று எதுவும் கிடையாது அழகானதிலும் கோரம் இருக்கும் கோரமானதிலும் அழகு இருக்கும். திரிபு சிதைவு விகாரம் இவையெல்லாம் அழகின் வெவ்வெறு நிலைகள் தான். எல்லாச் சிதைவுகளிலும் விகாரத்திலும் அடிப்படையில் ஒரு அழகு சிதைக்கப்பட்டது. எந்தளவுக்கு விகாரமாக்கப்பட்டது என்பதெல்லாம் ரசிகா;கள் கண்டு பிடிக்க வேண்டியது.

பிக்காஸோ கூட ஒரு முறை தன்னுடைய செயலாளரிடம் கேட்டாராம் அழகின் எதிh;மறை என்ன என்று உமக்குத் தெரியுமா? நான் நினைக்கிறேன். அப்படி ஒன்றும் இல்லை என்று.

அது சரி இந்த ஓவியர்களுக்கு, குறிப்பாக நவீன ஓவியர்களுக்குச் சிதைவு விகாரம் இவற்றில் எல்லாம் ஏன் இவ்வளவு ஈடுபாடு எல்லாவற்றையும் திரிப்பதில் சிதைப்பதில் விகாரப்படுத்துவதில் அவர்களுக்கு ஏதும் திருப்தி இருக்கின்றதா மனிதரை மனிதராய்க் கீறாமல் துண்டுபோட்டு பகுத்து சிதைத்து என்னபாடு படுத்துகிறார்கள் எதற்காக இது?.

இன்று - நான் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கிய 87 இன் சித்திரை மாதத்து 23ஆம் திகதியாகிய இன்று எந்திரப்பறவை குனிந்து குண்டுகளை எறிகின்றது. துண்டுகளாய்ச் சிதறி மாண்டு போகின்றனர் மக்கள்இரத்தமும் சதையுமாகநாங்கள் பார்த்த ரசித்த பழகிய எமது சகஜீவிகள் துண்டுகளாய் வெறும் சதைத் துண்டுகளாய்ச் சிதறுண்டுபோகிறார்கள்.இதைவிடச் சிதைவு ஏதாவது? இதைவிடத் திரிபு அல்லது விகாரம் வேறு ஏதாவது? இல்லை இதுதான் இதைத்தான் கீறுகிறான் நவீன ஓவியன் சூழலின் பாதிப்புத் தவிர புதிதாய் எதுவும் இல்லை.

நான்தேடுகின்றேன்.. கண்டுபிடிக்கின்றேன்.. கீறுகின்றேன்.. நீங்களும் தேடுங்கள்.. கண்டுபிடியுங்கள்.. ரசியுங்கள்.. இது மாற்கு அடிக்கடி சொல்லுவது.

உண்மை.இதுதான் அடிப்படை. சிருஷ்டி நிலையிலும் சரி, ரசிக நிலையிலும் சரி அடிப்படை தேடல். ஓவியனும் தேடுகிறான்.. எந்தக்கோடு எங்கு தொடங்கி எப்படி முடிவுறும் என்பதை எந்த இடத்தில் வளையும் அல்லது முறியும் என்பதை நுட்பமாகத் தேடுகிறான். பிறகு கீறுகிறான்.

சிருஷ்டியின் அடிப்படை உள்ளொடுங்கிய தேடல்.

தேடலின் ஆழம் கூடக்கூட சிருஷ்டியின் தரமும் அதிகரிகரிக்கும்.

தூரிகையின் மொழி சிக்கலானது வித்தியாசமானது. ஓவ்வொரு கோட்டுக்கும் ஒவ்வொரு நிறத்துக்கும் தனத்தனி அர்த்தங்கள் குணங்கள் இருக்க முடியும். இதுபற்றிய புரிதல்கள் இன்றி ஒரு ஓவியத்தை ரசிப்பது சிரமம். விமர்சிப்பது சுத்த அபத்தம்.

எல்லோரும் கீறக் கூடியது. ஆனால் எல்லோருக்கும் புரியாது. இதுதான் நவீன ஓவியம் என்று விவஸ்தைகெட்டுப் பேசுவது இன்னும் அபத்தம். இப்படியிருக்க புரட்சியும்கூட ஒரு நீண்டகாலத் தலைமுறையின் உன்னதமான தேடல்தான் என்பதை எப்படிப் புரியவைப்பது?

மாற்குவின்                                                                                                                                                                     முகமிழந்த மனிதர்கள்

பிரமைகளும் பாவனைகளும் தேவையற்ற பழைய பெருமைகளும் செறிந்த இந்தச் சமூகப் பரப்பில் தங்களுக்குரிய தனித்தனி அடையாளங்களை இழந்து நசுக்குண்ட மனிதர்களுக்கு முகங்கள் இருக்காதுபோலும்.

அதுதான் மாற்குவின் ஓவிய மாந்தர்கள் நிறையப்பேருக்கு முகங்கள் கிடையாது. இந்த முகமிழந்த மனிதர்களை பெரும்பாலும் உருண்ட திரண்ட தலைகளையும் பிற அவயங்களையும் உடையவர்களாக மாற்கு சித்திரிக்கிறார். இந்த வடிவங்களில் ஒளிவிழத் தவறிய பகுதிகளை இருள் விழுத்திக் காட்டுகிறாh;. இதனால் வடிவங்களில் கனபரிமாணம் ஏறுகிறது. இயல்புக்கும் மீறிய வளர்ச்சி முனைப்பாகத் தெரிகின்றது.

கடுமைதெறிக்கும் நிறங்களில் மாற்குவிற்குப் பிரியம் அதிகம். சேர்கிலைப் போல. ஆனால் சேர்கிலிடம் (யஅசைவாய ளாநச படைட) மெல்லிய சோகத்தின் சாயல் எப்பொழுதும் இருக்கும். கறுப்பு-பொதுவாக அச்சம் துக்கம் இவற்றின் குறியீடாகத்தான் தொழிற்படுவதுண்டு. மாற்குவிடம் இப்படி இல்லை.

இவரிடம் கறுப்பு துயரத்தின் குறீயீடாய் அல்ல: வீரியத்தின் குறியீடாய் நிற்கிறது, எமது நிலத்தின் பனைகளைப் போல,

கரியதும் பெரியதுமான எமது பனைகளில் அவற்றின் விறைப்புக்கும் உறுதிக்கும் உரம் சேர்ப்பதாகவே கறுப்பு தொழிற்படுகிறது. பனைகளி;ன் நிமிர்வும் விறைப்பும் வாழத்துடிக்கும் ஆவேசத்துக்கும் வாழ்வின் மீதான விசுவாசத்துக்கும் ஒரு குறியீடாகவே சொல்லப்படுவதுண்டு. மாற்குவி;ன் மனிதர்களிடமும் முகங்களை இழந்த பிறகும் வாழமுனையும் தீவிரம் வெளித்தெரிகிறது.

இந்த முகமிழந்த மனிதர்களை ஓவியங்களில் வாத்தியம் வாசிப்பவர்களாயும் காவடி சுமப்பவர்களாயும் உதிரிகளாயும் காணமுடியும்.

பிந்திய நிலைகளில் இந்த முகமிழந்த மனிதர்களிடம் உருண்ட திரண்ட தன்மைகளை விடவும் தட்டையான நசுக்கப்பட்டது போன்ற தன்மைகள் தூக்கலாய்த் தெரிகின்றன. கிட்டத்தட்ட தகடுகளில் வெட்டிஎடுக்கப்பட்டு மெல்லிய ஒத்திசைவுடன் வளைத்துவிடப்பட்டது போல ஒரு தோற்றம். இடியும் மின்னலும் நடனம் போன்ற ஓவியங்கள் நல்ல உதாரணங்கள்.

மாற்கு நிறையப் பரிசோதனைகள் செய்திருக்கிறார். இளம் மாற்கு தனது மங்கல் பருவத்தில் நீர் வர்ணங்களைப் பாவித்து உருவாக்கிய கழுவுதற் பாணி ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. நீர்வர்ணங்கொண்டு வரையப்பட்டட சித்திரத்தை நீரினால் கழுவும் போது, நிறங்கள் படிப்படியாகக்கரையும். ஓவியர் தான்பெற விரும்புகிற தோற்றம் வரும்வரையும் வர்ணங்களை மறுபடியும் பு+சி பிறகு கழுவுதல் வேண்டும்.

இந்தவகைச் சத்திரங்களின் விசேஷ குணம் இவற்றின் மங்கல் தன்மைதான். குறிப்பாக தீவிர பிரகாசத்துக்கும் தீவிர இருட்டுக்கும் இடையில் இந்தமங்கலான தன்மைக்கூடாக வர்ணச் சமநிலையைப் பேணுவது சிரமமான காரியந்தான். மாற்கு இங்கு ஒரு தனியான பாணியாக இதைத் தொடர்ந்தும் வளர்த்தெடுப்பதில் ஏனோ தீவிரம் காட்டாமல் இருக்கிறார்.

பிந்திய நிலைகளில் தன்னுடைய மங்கல் பருவத்திலிருந்தது முழுவதுமாக விடுபட்டு நிற்கும் மாற்குவைத்தான் நாம் பார்க்கிறோம்.

அடுத்தது, சாதனத்தை எளிமைப்படுத்துதல். பொதுவாக எல்லா ஓவியர்களும் வெறுமையாகக் கிடக்கும் சாதனத்தை நிறங்களாலும் கோடுகளாலும் நிரப்புகிறார்கள். இங்கு மாற்கு ஏற்கனவே ஒரு நிறம் அல்லது நிறச்சேர்க்கை கொண்ட சாதனத்தில் தான் வெளிப்படுத்த விரும்பும் விஷயத்துக்குத் தேவையான பகுதிகளை வேறு நிறங்களால் மறைத்துவிடுகின்றார்.

துயரத்தையும் மீறி இரட்சிப்புத் தெரிகின்றது. (இங்கு சாதனம் என்று கருதப்படுவது ஓவியம் கீறப்படுகின்ற காகிதத்தைதான்.)

இதற்கும் அடுத்ததாக மாற்குவின் முக்கிய பரிசோதனை இராகங்கள் பற்றியது. இராக மாலா என்ற பெயரில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சியைத் தொடர்ந்து மாற்குவும் இந்தப் பரிசோதனையில் ஈடுபடுகிறார்.

படிமங்களுள் விழ மறுத்து விலகி ஓடும் இசையின் விசேஷ அரூபத் தன்மையைக் கோடுகளாலும் நிறங்களாலும்  தீர்மானிக்; முயல்வது பிரச்சனைக்குரிய ஒரு விஷயம்ந்;தான். மாற்கு இதில் வெற்றிபெற்றாரா?

இல்லை என்று சொல்ல முடியாது ஆனாலும்; வெல்ல இன்னும் இருக்கிறது என்பது என்னுடைய அபிப்பிராயம்;. நான் நினைக்கிறேன் குறித்த இராகங்கள் மனதில் தூண்டிவிடும் உணர்வு நிலைகளை அதே சமபலத்துடன் தூண்டிவிடும் ஆற்றல் இந்தக் கோடுகளுக்கும் நிறங்களுக்கும் இருக்க வேண்டும் என்று.

மாற்கு நிறையக் கீறியிருக்கிறார்

காலத்துக்குக் காலம் வேறுபட்ட பிரக்ஞை நிலைகளை அவர் வெளிப்படுத்துகின்றார். இளம் மாற்கு பெருமளவில் கிறிஸ்தவப் பின்புலத்துடன் கீறத் தொடங்குகிறார். வளர்ச்சி நிலைகளில் எதையும் எமது கலாசாரப் பின்புலத்துக்கூடாய் வெளிப்படுத்தும் முனைப்பு தீவிரம் பெறுகின்றது.

இப்போது நாங்கள் பார்த்துக்கொண்டிருப்பது, கோடுகள் பற்றிய பிரக்ஞையுடன் கீறிக்கொண்டிருக்கும் முதிர்ந்த மாற்குவை.

இங்கு குறிப்பிட வேண்டியதுஇறுதி இராப்போசனம்என்ற ஓவியம். முகபாவங்களால் சித்திரிக்கப்பட வேண்டிய மிகைஉணர்ச்சி நிலைகள் ஒத்திசைவுடன் நீளுகின்ற கழுத்துக்களினூடாகச் சித்திரிக்கப்படுவது அருமையாயிருக்கின்றது. உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று கிறீஸ்து கூறும் போது நானாயிருக்குமா அவனாயிருக்குமா என்ற ஆதங்கம் கலந்த திகைப்புடன் அதிந்து நிற்கும் சீடர்களை நேரி;ல் தரிசிக்கின்றோம்.

முதிர்ந்த மாற்குவிடம் எல்லாவற்றையும் கோடுகளாலேயே சாதிக்க முயலும் தீவிரம் நிரம்பி;க்கிடக்கிறது. அரூப பாணியிலும்கூட கோடுகளைக் குறைத்தல் என்ற நிலையில்தான் அவரைப் பார்க்க முடிகிறது.

அரூப பாணி என்றதும் ஒன்றும் புரியாத வெறும் பிரமைகளைக் கூட்டும் புதிர்கள் என்ற அளவில்தான் நிறையபேர் நினைக்கிறார்கள். இதுவும் பிழை.

அரூப பாணியிலும் கூட கீறப்போகும் விஷயம் குறித்துத் திட்டவட்டமான நிச்சயம் செய்யப்பட்ட படிமங்கள் ஓவியரிடம் இருக்கும். படிமங்கள் தெளிவற்று மங்கலாய் இருக்கும்போது, ஓவியமும் புதிர்களின் குவியலாகிப் பொறுமையைச் சோதிக்கும்.

கீற ஆரம்பிக்கலாம்.. பிறகு சமாளிக்கலாம் என்பதெல்லாம் ரசிகர்களை முட்டாளாக்கும் முயற்சி மட்டுமே. இங்கு பிரமிக்க எதுவும் இருக்காது. பிரமைகளும் புதிர்களும்தான் மிஞ்சும்.

மாற்குவிடம் இந்தச் சிரமங்களில்லை. ரசிகர்களுக்குப் பிடிகொடுத்துக் கீறவேண்டும் என்பதில் அக்கறை அவருக்கு. இவருடைய அரூப பாணியை முன்பு சொன்னதைப்போலக் கோடுகளைத் தவிர்த்தல் என்ற அர்த்தத்தில் தான் நாம் புரிந்து கொள்ளமுடியும்.

குறிப்பாக அலையின் முகப்பு அட்டையில் (அலை-26-ல்) வெளிவந்த குருட்டுப்பாடகன் ஓவியம். அடுத்தது மண்ணின் அழைப்பு என்ற ஓவியம். இப்படி இன்னும் இன்னும்

குருட்டுப்பாடகனின் வான் நோக்கி நிமிரும் முகமும் கைகளில் வாத்தியக் கருவியுமாகக் குந்தியிருக்கும் மனித வடிவம் வரையப்பட்டுள்ளது. கோடுகளின் சிக்கனம் பேணப்பட்டிருக்கிறது. பாடகனுக்குப் பார்வையில்லை என்பது மேலுயரும் சிரசுக்கூடாய்ச் சித்திரிக்கப்பட்டாலும் கூட தலைப்பிலிருந்து தரவுகளைப் பெற்றுப் புரிந்துக்கொள்ள வேண்டிய நிலைமை.

ஒரு ஓவியத்தின் மையக் கருத்தைக் கட்டியெழுப்பும் கோடுகளும் பிற தூரிகை அசைவுகளும் சாதனத்தின் முழுப் பரப்பையும் நிரப்பாத நேரங்களில் மிஞ்சியிருக்கும் வெளி பிரச்சனைக்குரியது. இந்த வெளி;க்குள் அர்த்தங்களைப் புதைத்து அதைத் தொடர்ந்தும் வெளியாகவே பேணுவதும் ஒரு முறை. தவிர இந்த வெளியை, ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அதை குறியீடுகளால் நிரப்பியவர் பணிக்கர் அலங்காரங்களால் நிரப்பியவர் ஜாமினி ராய் கோடுகளால் நிரப்புகிறார் மாற்கு.

வடிவத்துள் தொடங்கும் கோடுகளை வடிவத்துக்கு வெளியிலும் நீட்டிவெற்றிடத்தை வெற்றிகரமாக நிரப்புகிறார். அலங்காரம், காதலர் போன்ற ஓவியங்களைப் பார்த்தால் இது தெரியும். வடிவ எல்லைகளுள் நின்றுவிடாது அதற்கும் அப்பால் நீண்டுசென்று அந்தரத்தில் நின்றபடி எதையைல்லாம் பேசத்துடிக்கும் கோடுகள். அருமையாக ஒத்திசைக்கின்றன. இது பிக்காஸோவின் பகுப்புக் கலவைச் சித்திரத்தை ஞாபகப்படுத்தினாலும் அதுவல்ல இது.

இன்னுமொன்றுபெண்நிலைக்குத்துத் தோற்றத்தில் சரிபாதியாக வெட்டிபிளக்கப்பட்ட பெண் உருவத்தை கோடுகளால் பிரதிசெய்து அங்கேயும் தேவையற்ற கோடுகளைத் தவிர்த்து குறைந்த கோடுகளால் கிட்டத்தட்ட நிமிர்த்தி; வைக்கப்பட்ட வீணையைப்போல வரையப்பட்டிருப்பது பிரமாதம்.

மாற்கு இதுவரை கீறியிருப்பது இரு நூறுக்கும் அதிகம் மூன்று கண்காட்சிகளுக்குப் போதும் இன்னும் எஸ்-லோன்  படைப்புகளை வெட்டியெடுத்து தனது கருத்திசைய வளைத்து நிமிர்த்தி நிறையச் சிற்பங்களையும் செய்திருக்கிறார்;. இது இன்னுமொரு கட்டுரையில் விரித்து எழுதப்பட வேண்டியது. இக்கட்டுரையும் கூட குறிப்பிட்ட ஒரு ரசிக நிலையில் மாற்கு பற்றிய சில அவதானங்களும் அபிப்பிராயங்களும் மட்டுமே.

என்னளவில் கோடுகளை உயிர்ப்பிக்கும் மாற்கு பெறுமதியானவர் பிரமிக்கச் செய்கின்றவர் ஏனெனில்கோடுகள் தனித்து நின்று இயங்குபவை. எல்லாவகைக் குறியீடுகளும் தாமாகி நிற்பவை. இதுவெல்லாம் ஆழமாய்த் தேடுகின்ற ஓவியரின் கையில் தூரிகை இருக்கும்போது.

-சங்கரா (நன்றி: தேடலும் படைப்புலகமும்

காலம் இதழ் பக்:8-12

 
Related News
 • தமிழ் இலக்கிய, ஓவியத் துறைகளுக்கிடையே நடந்த ஊடாட்டங்கள்

 • இசைத்தமிழின் தொன்மையும் தொடர்ச்சியும்

 • ஆவணப்படங்களின் வழி கல்வி விழிப்புணர்வு

 • நாட்டியத் தமிழின் திட்டமும் நுட்பமும்

 • ஓவியக்கலைக் கோட்பாடுகளும் சோழர் ஓவியமும்
 •   
    
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World