Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueஓவியக்கலைக் கோட்பாடுகளும் சோழர் ஓவியமும்
 

 முனைவர் சா. ஜஸ்டின்

 
சுருக்கம்

தமிழகத்தை ஆட்சி செய்த அரச மரபுபில் சோழர்கள் நீண்ட நெடும் வரலாற்று தொடர்மரபினை உடையவர்களாகக் கருதலாம். சங்காலத்தில் துவங்கப்பட்ட சோழமரபு இடைக்காலங்களில் பல ஆட்சி மாற்றத்தை  கடந்து கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை சிறப்பான ஆளுகையுடன் ஆட்சி நடத்தினர். இதில் முதலாம் இராசராசன் (கி.பி. 953-1015) ஆட்சி காலத்தை கலைகளின் பொற்காலம் என அழைக்கின்றனர். தஞ்சாவூரினை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த (இரஜேராசச்சரம்) எடுப்பித்தின். கட்டடக்கலை மட்டுமின்றி சிற்பக்கலை மற்றும் ஓவியக்கலைக்கும் சிறந்த படைப்பாக இன்றுவரை சிறப்புற்று விளக்கின்றது. இச்சிறப்பு பெற்ற பெரியக்கோயில் பற்றி வரலாற்று அடிப்படையில் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. (S.K. Govindasamy the frescas of Brhadeswara Temple At Tanjore, 1981) சோழர்கால ஓவியங்கள் பற்றிய சில ஆய்வு கட்டுரைகளும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக வெளியிட்டு (சோழர் ஓவியம்,2010) நூல்கள் அதன் விளக்கங்கள் ஓவியங்களுடன் தருகின்றன. இருப்பினும் ஓவியத்தின் கலைக்கோட்பாடுகளுடன் இதுகாரும் ஆய்வுகள் வெளியிடப் படவில்லை. எனவே ஓவியக்கலைக் கோட்பாட்டுடன் சோழர்கால ஓவியத்தை ஒப்பிட்டு ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் மைய நோக்கமாக அமைகிறது.

 

சோழர்கால ஓவியங்கள்

   தமிழகத்தில் பல இடங்களில் சோழர்கால கோயில்கள் கட்டப்பட்டிருப்பினும் ஓவியங்கள் எஞ்சி இருப்பது ஒரு சில கோயில்களில்தான் மட்டும் தான். நார்த்தாமலை, தஞ்சாவூர் பெரியக்கோயில் கங்கைகொண்ட சோழபுரம், தாராரசுரம் இதில் ஓரளவிற்கு அதிக பரப்பளவுகள் கொண்ட  ஓவியங்கள் தஞ்சை பெரியக்கோயில் சோழர் ஓவியமாகும். பெரியக் கோயில் விமானத்தின் கருவறை மேல்தளத்தின் உட்சுவர்களில் தென்பகுதி, மேற்கு, மற்றும் வடக்கு பக்கச் சுவர்கள் முழுவதும் சோழர் கால ஓவியங்கள் உள்ளன.  தென்பக்க உட்சுவரில் அகத்தியர் பைரவர், எழு கன்னமார்கள் மற்றும் சிவன் பார்வதி அமர்ந்த நிலை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேற்கு பக்க உட்சுவரில் மேற்கு நோக்கியவாறு சுந்தரமூர்த்திநாயனாரின் வாழ்க்கை வரலாற்று ஓவியத் தொகுப்பு, ஆடல் மகளிர், சிதம்பரம் பொன்னம்பலம், போன்றவைகளும் கிழக்கு நோக்கிய மேற்குச் சுவரில் ஆடல் வல்லான் ஓவியம், அரச மகளிர் போன்ற ஒவியங்கள் உள்ளன. வடக்குப் பக்க உட்சுவரில் வடக்கு நோக்கியவாறு முப்புறம் எரித்த காட்சி மிக பெரியதாகவும் புத்தரின் ஒவியம், கனகாதிமுனிவர்கள் ஒவியமும் காணப்படுகிறது. வடக்கு பக்க உள்சுவரின் தெற்கு நோக்கிய பகுதியில் இராவண அனுகிரகமூரத்தி ஓவியம் மிகப்பெரியதாக வரையப்பட்டுள்ளது. கிழக்கு பக்கம் உள்ள ஓவியங்கள் இதுவரையில் கண்டறிப்படவில்லை.

 

ஓவியக்கலைக் கூறுகளும் கோட்பாடுகளும்

  ஒவ்வொரு கலையையும் பிரித்திரிவதற்குப் அதன் தரத்தினை உணர்வதற்கும் தனித்துவம் பண்பினை அடையாளப்படுத்தவும் அதன் கூறுகளை பிரித்தறிதல் அவசியமானதாகும். ஓவியர்கள் தங்களின் உணர்வுகளை புள்ளி, கோடுகள் (Lines),  பரப்பு (Surface)  வெளி (Space),  உருவம் (Form)  வடிவம் (Shape)  ஒளித்தகுவு (Light & dark)  மற்றும் வண்ணத்தினை பயன்படுத்தி ஓவியக் படைப்புகளாக வெளிப்படுத்தினர். இதே போன்ற கலைக் கோட்பாடுகளைப் பற்றி தமிழ் இலக்கியங்களும் விட்ணுதருமோத்திர புராணத்தின் சித்திரசூத்திர பகுதி போன்றவைகள் விளக்குகின்றன.

 

சித்திர சூத்திரம்

  சித்திர சூத்திரம் இயற்றப்பட்ட காலம் தொடர்பாக பல முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. சிவராமமூர்த்தி கி.பி. 4-ஆம் தூற்றாண்டைச் சேர்ந்தாகவும், முதலில் சித்திரசூத்திரத்திற்கு ஆங்கில உரை எழுதிய (1937) ஸ்டெல்லா சிரம்றிச் (ஷிtமீறீறீணீ ளீக்ஷீணீனீக்ஷீவீsலீ)  என்றும் அறிஞர் கி.பி. 8- ஆம் நூற்றாண்டைச் சேர்ததாக குறிப்பிடுகின்றன. சித்திர சூத்திர பகுதி மார்கண்டேய முனிவருக்கும் வஜ்ர என்ற இளவரசனுக்குமிடையே நடைபெற்ற உரையாடலை பற்றிய 8 அத்தாயல்களை ( அத்யாயம் 35 முதல் 42 வரை) உள்ளடக்கியது. இதில் ஓவியக்கலை பற்றிய அறுவகைக் கோட்பாடுகள் (ஷடாங்க கோட்பாடு) விளக்குகிறது. அவைகள், 1. உருவ வேறுபாடு ( ரூபபேதம்) (2) அளவு பொருத்தம் ( பிரமாணம்) (3) மனவெழுச்சி (பாவம்) (4) பளபளப்பும் பகட்டும் தோற்றுவித்தல் (லாவண்மோஜனம்) (5) உருவ ஒற்றுமை (சிதிருச்சயம்) (6) மேடு பள்ளங்களையும் திட்பத்தையும் வண்ணங்களை கலத்தல் முறையும் (வர்னிகாபங்கம்) போன்றவாகும்.

   தமிழ் இலக்கியங்களில் ஓவியக்கலைப்பற்றிய கோட்பாடுகள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன. ஓவியக்கலைக்கென ஓவியச் செந்நூல் இருந்ததையும், மாதவி நடனமாடிய அரங்கினை அமைப்பதற்கு ஓவியக் செந்நூல் பயன்படுத்தப்பட்டதையும் மணிமேகலை இலக்கியம் பின்வருமாறு பதிவு செய்கிறது.

 

 "நாடக மகளிர்க்கூ நன்கனம் வகுத்த

 ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும்

கற்றுத் துறைபோகிய பொற்கொடி நங்கை”( மணிமேக: 2:31)

எனவே கி.பி. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மணிமேகலை, மற்றும் சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் ஓவியச்செந்நூல் இருந்தற்கான குறிப்பு காணப்படுவதால் சங்ககாலத்தில் இந்நூல் வழக்கில் இருந்து அழிந்திருக்க வேண்டும் அல்லது மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என கருதலாம்.

 

 

கோடுகள்

  ஓர் ஓவியப்படைப்பிற்கு ஆதாரமாக இருப்பது அதில் உள்ள கோடுகள் என்றால் மிகையாகாது. கோடுகளுக்கு அடிப்படையாக இருப்பது புள்ளிகளாகும். சிறு துகள் போன்ற அணுக்களிலிருந்து (திவீஸீமீ ஜீணீக்ஷீtவீநீறீமீ)  உலகம் மற்றும் உயிர்கள் தோற்றம் பெறுவதாக பொருள்முதல்வாத கோட்பாட்டாளர்கள் குறிப்பிடுவர்.  அதே போன்று சிறு புள்ளியிலிருந்து தொடங்கி கோடு, வண்ணம் என ஓவியக்கலை விரிகிறது. ஒரு புள்ளியின் பெயர்ச்சியே கோடு என்றும் ஒரு கோட்டின் பெயர்ச்சியே பரப்பு (ஷிuக்ஷீயீணீநீமீ)  என்றும் பெத்தகோரசு கருத்து தெரிவித்தார். இக்கருத்துக்கு மாறாக ஓரணுக்களின் (விஷீஸீணீபீs) பெயர்சிகளும் கூட கோடுகளாகத்தான் இருக்க வேண்டும் என்று அரிஸ்டாட்டில் கோடுகளின் தோற்றம் பற்றி குறிப்பிடுகிறார். புள்ளிகளின் நகர்வு அல்ல இணைப்புகளே கோடுகளாக முடியும் என்பது இக்கட்டுரையாளரின் கருத்தாகும்.  தமிழக ஓவியக்கலை மரபில் கோடுகளின் பயன்பாடும் பங்களிப்பும் மகத்தானதாகும். கோடுகள் ஓவியக்கலை மட்டுமின்றி சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலைக்கும் அடிப்படையாக அமைகின்றது.

 

கோடுகளின் வகைகள் (ப-7)

   ஓவியம் வரைய அடிப்படையாக உள்ள கோடுகள் பல வகையாக பிரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. அவைகள் நேர்கோடு (க்ஷிமீக்ஷீtவீநீணீறீ றீவீஸீமீ),  சீராக செல்லும் கோடு, படுக்கைக் கோடு (பிஷீக்ஷீவீக்ஷ்ஷீஸீtணீறீ றீவீஸீமீ),  சாய்கோடு (ஷிறீணீஸீt லிவீஸீமீ),  அலைகோடு (கீணீஸ்மீ றீவீஸீமீ)  என்பனவாகும். மேற்கண்ட கோடுகளைக் கொண்டு ஒரு நபர் நிற்பது அமர்வது, சாய்வது, கிடப்பது சுழல்வது போன்ற வடிவங்களுடன் ஒப்பிடலாம். திண்ணிய வீச்சான கோடுகள் வேகத்தையும் மெல்லிய லயமிக்க கோடுகள் அமைதியையும் மோனத்தையும், ஒளி, நிழல் நெகிழ்வுத் தன்மையையும் வெளிப்படுத்த முடியும்.

 

சோழர்கால ஓவியத்தில் கோடுகள்

   பெரியக் கோயிலின் கருவறை மேல்தளத்தின் தெற்கு உட்சுவரில் அகத்தியிருடன் முனிவர்கள் அமர்ந்து வியாக்யாணம் செய்யும் காட்சி மற்றும் ஆலமரத்தின் (ப-5)  இடது புறம் பைரவரின் ஓவியம் இடம் பெற்றுள்ளது. இந்த ஒவியக்காட்சியில் காடுகளில் உள்ள மரங்களுக்கு பச்சை நிறத்தை பயன்படுத்தியிருப்பினும் காடுகளில் உள்ள மரங்களின் கிளைகள், இலைகள், போன்றவற்றை அழுத்தமான (ஞிணீக்ஷீளீ)  கரும்பச்சை நிறத்தை பயன்படுத்தி நுட்பமாகவும் மெல்லிய கோடுகளாலும் வரைந்துள்ளனர். மரத்தின் விழுதுகள் இருப்பது போன்றும், மரகிளைகளின் பறவைகள், குறங்குகள் உலாவுவது போன்றும் நுட்பமான கோடுகளில் சோழர்கால கலைஞன் சிறப்பாக வரைந்துள்ளன.

 

உருவவேறுபாடு (ரூபபேதம்) - சுந்திரமூர்த்தி நாயனார் ஓவியம்

     சித்திரசூத்திரம் குறிப்பிடும் அறுவகைக்கோட்பாட்டில் முதலவதாக உருவவேறுபாடு (ரூபவேதம்) அமைகிறது. உருவ வேறுபாட்டு கொள்கை என்பது புலக்காட்சி (திருஷ்டி/ சடப்பொருள்) சார்ந்தாகியும், புலக்காட்சி சாராத ( அதிருஷ்ட) காட்சிகளை அமைத்தல் பற்றி விளக்குகிறது. கருப்பொருளின் தன்மைக்கு ஏற்ப உருவங்களின் தன்மையும் வேறுபடுவகை ரூபபேதம் உணர்த்துகிறது. பெரியகோயில் கருவறையின் மேல் மேற்கு உட்சுவரில் சுந்திரமூர்த்தி நாயனார் கைலாயம் செல்லும் பெரியபுராண  முந்தை கருப்பொருளாகக் கொண்டு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இவ்வோலியத்தை மூன்று பிரிவாக பிரித்து பூலோகம் (நிலப்பகுதி) வானம், கைலாயம் என வேறுபடுத்தி வரைத்துள்ளனர். சுந்தரரின் திருமணம் நடக்கின்ற கூடத்தில் சபையோர்களும் காண்பித்து முறையிடுகின்றார். (ப-11)  இக்காட்சியில் சபையில் உள்ள மக்களின் ஒவ்வொரு உருவங்களுக்கும் உள்ள வேறுபாட்டையும் தனித்துவத்தையும் சிறப்பாக வரைந்துள்ளனர்.

 

அளவுபொருத்தும் ( பிரமாணம்)

   சித்திர சூத்திரத்தில் குறிப்பிடுவது போன்று ஒரு கலைப்படைப்பு சிறப்பானதாக அமைய அதன் அளவு பொருத்தம் (பிரமாணம்) மிகவும் அவசியமானதாகும். கடவுள் படிமம், மனிதர்கள், தேவர்கள், விலங்கினங்கள் வரைவதற்கு உரிய அளவு முறைகளை சித்திரசூத்திரம் குறிப்பிடுவது போன்று மானசாரம், மயமதம், காசியப சிலப்சாத்திரம் சிற்பரத்தினம் போன்ற சிற்பநூல்களும் குறிப்பிடுகின்றன.  சரியான அளவு முறையை பயன்படுத்தி கோயில், சிற்பங்கள் மற்றும் ஓவியம் வரைவதில் சோழர்கால கலைஞர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக திகழ்ந்தனர். அதற்கு ஆதாரமாக தஞ்சை முழம் அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்ததை பெரியக் கோயில் கோபுரத்தில் உள்ள அளவீடைக் கொண்டு அறியலாம். எனவே ஓவியத்தில் அளவுகளை பயன்படுத்தியுள்ளனரா என்பதை இக்கட்டுரையாளர் ஆய்வில் கண்டுணர்ந்துள்ளார்.

  தெற்குச் சுவரில் வரையப்பட்டுள்ள (ப-1) பைரவரின் ஓவியம் சமவங்கநிலையில் நின்றநிலையில் முதன்மை பத்து தாள (உத்தமதசதாளம்) அளவினை பயன்படுத்தி வரைந்துள்ளனர். அதே போன்று  ஏழுதாள (சப்ததாளம்) அளவைக் கொண்டு முனிவர்கள், மற்றும் மனிதர்களை அமைக்க வேண்டும் என நூல்கள் குறிப்பிடுகின்றன. வடக்குச் சுவரில் உள்ள சனகாதிமுனிவர்களின் உருவத்தை அளவீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏழுதாள அளவினை பயன்படுத்தி ஓவியம் தீட்டியுள்ளதை அறியமுடிந்தது. வடச்சுவரில் உள்ள விநாயகர்(ப-2), தெற்கில் உள்ள அகத்தியர் ஓவியங்கள் ஐந்து தாள அளவு முறைகளை பயன்படுத்தி பொருத்தமாக வரைத்துள்ளனர். கடவுளர் படிமங்களை 16 வயதுடைய உருவ அமைப்பில் வரைய வேண்டும் என்று சித்திர சூத்திரம் ஓ ர் வரையறையை குறிப்பிடுகிறது.

 

மனவெழுச்சி ( பாவம்)

   உணர்ச்சியின் வெளிப்பாடே மனவெழுச்சி (பாவம்) என்றும், ஓர் படைப்பு உயிரோட்டத்துடன் இருப்பதற்கு அக்காட்சியில் கலைஞன் ஏற்படுத்தியுள்ள மனவெழுச்சியே காரணம் என்பர்.  சோழர்ககால ஓவியத்தில் அனைத்து காட்சியிலும் மனவெழுச்சியை வெளிப்படுத்தியே கலைஞன் வரைந்துள்ளான். சிருங்காரம், வீரரசம், அச்சம், கோபம் (ரௌத்ரம்) போன்ற மனயெழுச்சியை சோழர்கால ஓவியத்தில் காணலாம். வடக்குச் சுவரில் வரையப்பட்டுள்ள முப்புரம் எறித்த கதையின் ஓவியத்தொகுப்பு வரையப்பட்டுள்ளது. முப்புரம் எறித்த கதையினை சங்க இலக்கியத்தில் புறநானுற்றில் மதுரை மலதனிறநாகனார் பாடலும், திருநாவுக்கரசரின் தேவார பதிகத்திலும் பதிவு செய்துள்ளனர்.

 

சாகா வரம் பெற்ற வித்யும் மலி, தாரகாட்சிகன் (ப-10) கமலாட்சன் ஆகிய அசுரர்களை சிவன் தனது புண்சிரிப்பாலும் எறித்து (ப-8)  அழித்தை வரைந்துள்ளனர். இக்காட்சியில் சிவபெருமானின் நெற்றிக் கண் சினம் கொண்டும் இருவிழிகளும் புண்சிரிப்பினை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. சிவ கனங்கள் அசுரர் படைகளை தாக்குவதற்கு வீரமாக வருகின்றதை கண்டு அசுரர்களும் பெண்களும் புறமுதுகு காட்டி ஒலமிட்டுக் கொண்டு பயத்துடன் ஒருவது போன்று போர்களத்தில் காணப்படும் மனவெழுச்சியை சிறப்பாக பதிவு செய்துள்ளனர். அசூரர்களின் முகத்தில் காண்பிக்கப்பட்டுள்ள மரணத்தின் அச்ச உணர்வு மிகவும் சிறப்பாக வரையப்பட்டுள்ளது.

 

 தெற்கு நோக்கியுள்ள வடக்குச் சுவரில் வரையப்பட்டுள்ள இராவண அனுகிரக மூர்தியின் ஓவியம்    முழுமையாக இல்லை எனினும் எஞ்சியுள்ளவைகள் உணர்ச்சிமயமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சாகாவரம் பெற்ற இராவணன் சிவன், பார்வதியுடன் அமர்ந்துள்ள கைலாய மலையை அசைக்கும் போது சிவன் தழை பாதத்தினால் இராவணை நசுக்குகின்றார். அதன் வலியை தாங்காமல் முகத்தில் உள்ள வேதனை உணர்வை (ப-10) ஓவியன் சிறப்பாக விளக்கியுள்ளனர்.

 

உருவ ஒற்றுமை (சாதிருச்யம்)

  ஆறுவகை கோட்பாட்டின் நான்காவது கோட்பாடு உருவ ஒற்றுமையை பற்றி விளக்குவதாகும். கலைப்படைப்பிற்கும், உருவாக்க பயன்படும் பொருட்கிற்க்கிடையே உள்ள ஒற்றுமையை விளக்குவதற்கும் இயற்கை பொருட்களை ஒப்புமையோடு உள்ளது உள்ளமையாக வரைய வேண்டும் என சித்திரசூத்திரம் கூறுகிறது. இக்கோட்பாட்டினையே சங்க இலக்கியமான மதுரை காஞ்சி பின்வருமாறு விளக்குகிறது.

 

 " எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி

   நுண்ணதின் உணர்ந்த நுழைந்த நோக்கிற்

   கண்ணுள் வினைஞரும் பிறருங்கூடி" ( மதுரை 723- 84)

கண்ணில் கண்ட காட்சியை உள்ளத்தில் உணர்ந்து படைப்பிற்கு பொருத்தமாறு வரைகின்றவர்களே ஓவியர்கள் (கண்ணுள் வினைஞர்) என்று குறிப்பிடுகின்றது. மேற்குறிப்பிட்ட கருத்தினையே.

   “ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்” ( மணிமே: 5-7)

என்று மணிமேகலை இலக்கியம் குறிப்பிடுகிறது.

 

  சோழர்கால ஓவியத்தில் ஒவ்வொரு காட்சியும் உருவ ஒற்றுமையுடன் வரையப்பட்டுள்ளது. சுந்திரமூர்த்தி நாயனார் ஓவியத்தில் திருமணக்காட்சிக்கு (ப-11)  உரிய அமைப்புகளை சிறப்பாக அமைத்துள்ளனர். திருமணப்பந்தலில் சமயல் கூடத்தில் ஆண்களும் பெண்களும் இணைந்து பெரிய பாத்திரங்களை அடுப்பில் இட்டு சமைக்கின்ற காட்சியில் ஒரு சமயல் கூடத்தில் நிகழும் அனைத்து உருவ அமைப்பினையும் கற்பனைதிறனுடன் வரைந்துள்ளனர். தென்புறத்தில் வரைந்துள்ள அகத்தியரின் ஓவியத்தில் ஒரு காட்டுபகுதியின் சூழலையும் அதற்கான ஒற்றுமையுடைய காட்டு விலங்குகள், மரங்கள் மலை குன்றுகள் என சிறப்பாக உருவ ஒற்றுமையை பின்பற்றியுள்ளனர். முப்புரம் எறித்த ஓவியக்காட்சியில் போர் நடக்கின்ற இடத்திற்கு ஏற்ற படைவீரர்கள் வேகத்துடன் போரிடுதல் போன்றும், பலர் உடல் சிதறி இறந்துக்கிடக்கின்ற காட்சியை சிறப்புடன் வரைந்துள்ளனர்.

 

பளபளப்பு (லாவண்யோசனம்)

          பளபளப்பு அல்லது அலங்காரத் தன்மையை (லாவன்யோகனம்) படைப்பில்  வெளிப்படுத்துவதை ஓர் கோட்பாடாக சித்திர சூத்திரம் குறிப்பிடுகிறது. ஏனெனில் சிற்பக்கலையாயினும் ஓவியக்கலையாக இருப்பினும் அலங்காரங்கள், அணிகலன்கள் போன்றவைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.  அவ்வகையில் சோழர்கால ஓவியத்தில் நடன மாதர்களுக்கும்,(ப-4)  இறையுருவங்களும் அதிக அணிகலண்கள் அணிவித்தும் மனிதர்களுக்கும் முனிவர்களுக்கும் குறைவான அணிகலன்கள் அணிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஓவியத்தில் அணிகலன்களில் பளபளப்புத் தன்மையையும் பொலிவையும் காட்சிபடுத்த மென்மையான ஒளிர்மாக்க வண்ணங்களை பயன்படுத்தியுள்ளனர்.

 

வண்ணம் கலத்தல் (வர்னிகாபங்கம்)

            வண்ணங்களை உருவாக்குதல் முதல் அவற்றை கலைப்படைப்பின் பயன்படுத்தி வண்ணங்களை மாற்றுதல், மேடுபள்ளங்களையும் திட்பத்தையும் தோற்றுவித்தலை வர்னிகாபங்கம் என்று சித்திரசூத்திரம் 40-வது அத்தியாயத்தில் விளக்குகிறது. சிற்பநூல்களும் சங்க இலக்கியங்களும் கூட வண்ணக்களைப் பற்றி குறிப்பிடுகின்றன. முதன்மை வண்ணங்கள் ஐந்து என்றும் அவை கருப்பு, வெண்மை சிவப்பு மஞ்சள் நீலம் என நூல்கள் குறிப்பிடுகின்றன.

 

             சோழர்கால ஓவியத்தில் பச்சை, சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, செம்மஞ்சள், கருஞ்சிவப்பு போன்ற வண்ணங்கள் மிகுதியாக பயன்படுத்தியுள்ளனர். முனிவர், நடன மங்கை, பார்வதி தேவி ஆகியோரின் உருவங்களை கருமையாக காட்டுவதற்காக பச்சை நிறத்தை உடல் முழுவதும் அழுத்தமும் மென்மையாகவும் காட்டியுள்ளனர். இரண்டு பரிமான ஓவியங்கள் வரையும் மரபினை மாற்றி முப்பரிமாணத்துடன் (ஜிலீக்ஷீமீமீ பீணீவீனீணீஸீtவீஷீஸீ)  சோழர்கள் வரைந்தனர். அழுத்தமான நிறத்தையும் மென்மையான நிறத்தையும் இணைத்து முப்பரிமானத் தோற்றத்தை சோழர்கால கலைஞர்கள் உருவாக்கினர்.  

முடிவுரை

            உலகில் தோன்றிய ஒவ்வொரு கலையும் தனித்துவக் கோட்பாடுகளைக் கொண்டதாகயே இருக்கின்றன. ஓவியக்கலைக்கு என்றும் தனித்துவமும் கொள்கையும் பண்னெடுங்காலம் தொட்டு இருந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் பல சங்க இலக்கியங்களில் பரவிக்கிடக்கின்றன. சிலப்பதிகாரத்தில் ஓவியச்செந்நூல் இருந்தது என்றும் இந்நூல் உதவியுடன் மாதவி நடனமாடிய அரங்கத்தை அமைத்தனர் என பதிவு செய்கிறது. இதற்கு மாறாக சித்திரசூத்திரத்தில் நடனக்கலையை அடியட்டியே ஓவியக்கலை கோட்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும் என குறிப்பிடுகிறது. இக்கருத்து முரண்பாட்டுடையதாக உள்ளது. இருப்பினும் சித்திரசூத்திரம் குறிப்பிடும் ஆறுவகைக் கோட்பாடுகளும் மற்றும் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் கோட்பாடுகளும் சோழர்கால ஓவியர்கள் நன்கு அறிந்திருக்கவேண்டும். எனவே தான் அதன் தாக்கம் பெரியக்கோயிலில் உள்ள சோழர்கால ஓவியத்தில் பின்பற்றப்பட்டுள்ளன எனலாம்.
 
 
Related News
 • யாழ்ப்பாணத்து ஓவியங்களின் சமகால வெளிப்பாடு

 • தமிழ் இலக்கிய, ஓவியத் துறைகளுக்கிடையே நடந்த ஊடாட்டங்கள்

 • இசைத்தமிழின் தொன்மையும் தொடர்ச்சியும்

 • ஆவணப்படங்களின் வழி கல்வி விழிப்புணர்வு

 • நாட்டியத் தமிழின் திட்டமும் நுட்பமும்
 •   
    
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World