Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueஎல்லீசர் தமிழாய்வு முன்னோடி
 

  

எங்கிருந்து பார்க்கத் தொடங்குவது  என்கிற  தொடக்கப்புள்ளியே   பலதருணங்களில் இடர்ப்பாடுகளைத் தோற்றுவித்து விடுகிறது. காலனியகால ஆய்வுகளுக்கும்  இது பொருந்தும்.மாக்ஸ்முல்லர் போன்ற   காலனிய   கால   ஆய்வர்கள்   இந்திய   மொழிசார் பார்வைகளை  வடக்கிலிருந்து  தொடங்கினார்கள்   என்பர். ஸமஸ்கிருத  மொழிவழியாக  இந்தியாவை    நோக்குவது  என்பது தெற்கின்    இருப்பைக் கவனத்தில்  கொள்ளாமலும்  தள்ளிவைத்தும் விடுகிற போக்கைக்கொண்டதாகிவிடும்.ஸமஸ்கிருத மொழிவழியாக இந்தியாவை நோக்குவது என்கிற மையவாதப்போக்கின் உன்னதநிலை,  மாக்ஸ்முல்லர் தம் பெயரை  மோட்சமூலர் என்று மாற்றிக்கொண்டதில் வெளிப்படுகிறது எனலாம்.  மோட்சமூலர் என்கிற சுட்டலில் வடவாரிய மொழி  ஒலிப்பும் வடவாரியப்பண்பாட்டுத்தாக்கமும்  உன்னதம் பெறுகிறது என்றவாறு இதை விரித்தும் பார்க்கலாம். ஆங்கிலேயக் காலனியகால நிலவியல் வரைபடஙகளும்கூட பிரிட்டனை மையமாக வைத்தே வரையப்பட்டதால் ஆசிய ஆப்பிரிக்கக் கண்டங்கள் போன்ற கீழைத்தேயங்களின் இடஞ்சுட்டலில் தெற்கு விளிம்புக்குத் தள்ளப்பட்டதான நிலையை அவதானிக்கலாம் என்ற ஒரு பார்வையையும் இந்த இடத்தில் பொருத்திப்பார்க்கலாம். யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே என்ற பழைய திரைப்பாடல் ஆதங்கமும் இங்கு ஒரே நேர்க்கோட்டில் வைத்து எண்ணத்தக்கதாயுள்ளது.


இந்த நிலையில் தான்  இதற்கு  நேர்மாறாக,  எல்லீஸ்  தமது பெயரை எல்லீசன் என்று தமிழ் ஒலிப்புப் படி மாற்றிக்கொள்வதும் ஸமஸ்கிருத  மொழிவழியாகஇந்தியாவை நோக்குவதுஎன்கிற பார்வை திராவிடக்கண்ணோட்டத்திலிருந்து இந்தியாவை நோக்குவது என்று மாற்றம்பெறுகிறசெயற்களமும் கவனம்பெறுகிறது. ஆனால் தமிழ்ச்சூழலுக்கே உரித்தான பொதுப்புத்தி சார்ந்து அவர்விரும்பியபடி இன்னமும் அவர்பெயரை எல்லீசன் என்று அழைக்காமல் எல்லீஸ் துரை என்று அழைப்பது நகைமுரணாகவுள்ளது.ஏ.எஸ்.கே அய்யங்கார் பகுத்தறிவாளராகி பெரியாருக்கு  நண்பராகி  அவர்பற்றி  அரியநூலை  எழுதி வெளியிட்டு   என் பெயரோடு அய்யங்கார் என்கிற சாதிப்பின்னொட்டு பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதோடு அரசிதழில் அறிவித்தும்கூட இன்னமும்.ஏ.எஸ்.கே அய்யங்கார் என்றே சொல்லப்படுவதைப்போல.

         ஆக திராவிடப்பார்வையின் மூலவிசையாக முன்னோடி ஆசானாக ஒரு புதியசிந்தனைப் பள்ளிமுறையைத்  ோற்றுவித்தவராக   எல்லீசரை  நாம்  இனங்காணலாம்.  மொழிசார் நிலஎல்லையை அடிப்படையாகக்கொண்ட திராவிடம்என்கிற கருத்தியல் இவருடைய கால நீட்சியாக கால்டுவெல்லால் அடுத்தகட்டத்துக்கு நகர்த்தப்பட்டதைக் காண்கிறோம். அதன் அடுத்தகட்டப் பரிமாணம் பெரியாரால் வெளிச்சம்பெறுவதையும் பார்க்கிறோம். சமகாலச் செயல்பாடுகளை மட்டுமே கருத்தில்கொண்டு  தட்டைத்தன்மையாக  குணா  போன்ற  தமிழ்த் தேசியர்களால் திராவிடம் என்பது கற்பிதம் என்று சொல்லப்பட்டாலும்  திராவிடக்கருத்தியல்  இன்னும் கூர்மைப்பட்டிருந்தால்  உள்ளடக்கரீதியில்  இன்னும் வலுப்பட்டிருந்தால்  பின்னால் வந்த  அண்ணா போன்றவர்களால் வடக்கு வாழ்கிறது  தெற்கு தேய்கிறது  போன்ற  முழக்கங்கள் வைக்கப்பட்டிருக்காது என நடுநிலை நோக்கர்களால் புரிந்துகொள்ளமுடியும்.மொழி,பண்பாடு,சமூகம் என அரசியல் தளவிரிவுபெறும் எல்லீசரின் ஆய்வுகள் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

1812 ‡ல் தென்னிந்திய மற்றும் பிற மொழிகளை ஆங்கிலேய அதிகாரிகளுக்குக்கற்பிக்க  சென்னைக் கல்விச்சங்கம் என்று தமிழில் அறியப்பட்ட  புனித ஜார்ஜ்   கோட்டைக் கல்லூரி நிறுவுதல், 1816 ‡ ல் முத்துசாமிப்பிள்ளை என்பவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி  ஏட்டுச்சுவடிகள்   தொடங்கி, வீரமாமுனிவரது  ஆக்கங்களை   தேடிச்சேர்ப்பித்தல்      திருக்குறள் உரைவரைவு ,திருவள்ளுவர் உருவம்பொறித்த நாணயங்கள் வெளியிடுதல்,மிராசுஉரிமை பற்றிய அரிய ஆய்வுரை, மாடுகளைத்தாக்கும் அம்மைநோயைத்  தடுப்பது   பற்றிய  புராண வடிவிலான படைப்புயாத்தல் ,  சென்னை நகரில் ஏற்பட்ட குடிநீர்ப்பஞ்சம் போக்க கிணறுகள் வெட்டுதல் ,கால்டுவெல்லுக்கு 40 ஆண்டுகள் முன்னதாகவே திராவிடமொழிக்குடும்பம் என்ற புலமைக் கருத்தாக்கத்தைக் கண்டுணர்தல், என நீள்கின்றன அவரது பணிகள்.
தமிழ்மறுமலர்ச்சிக்கு எல்லீசரே ஊற்றுக்கண் எனக்குறிப்பிடும் அயோத்திதாசர் ஜார்ஜ் ஆரிங்டன் என்ற வெள்ளை அதிகாரியிடம் பரிசாரகராகப் (பட்லர்)பணியாற்றிய எனதுபாட்டனார் கந்தப்பனென்பவர் ஓலைச்சுவடிப்பிரதியிலிருந்து திரிக்குறளையும் நாலடி நானூரையும் ஈஸ்ட்இண்டியா கம்பெனியார் காலத்தில் தமிழ்ச் சங்கங்கூட்டிவைத்த கனம் எலீசு துரையவர்களிடம் கொடுத்து அச்சுக்கு வெளிவந்திருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.ஆனால் இவ்வாறு வெளியான குறள் பதிப்பின் பாடங்கள் அயோத்திதாசருக்கு உவப்பளிக்கவில்லை என்றும், திராவிட பெளத்தர்களாம் மேன்மக்களைபறையர்கள் என்றும் தாழ்ந்த சாதியோர் என்றும் கூறிவந்த பெயர்கள் மகமதியர்கள் ஆளுகைவரையில் கேள்வியில்லாமல் இருந்தது.கருணையும் விவேகமும் மிகுந்த பிரிட்டிர் ராஜாங்கம் தோன்றியபோது ,இவர்களைத் தாழ்த்திவரும் விர்யங்கள் சிலது விசாரணைக்கு வந்ததுடன் எலீஸ் துரையவர்களால் கணித சாஸ்திரிகளாக உள்ளவர்க நூல்களையும் வித்துவ சாஸ்திரிகளாகும் பாணர்கள் நூல்களையும் அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்துவிட்டார் என்றும் அயோத்திதாசரை மேற்கோள்காட்டி ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதுகிறார். (தாமஸ் டிரவுட்மேன் நூலின் முன்னுரையில்)

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டவையல்ல அவற்றின் வாழ்வுக்கு அது தேவையற்றது அவை ஒரு தனிமொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை சமஸ்கிருதம் அக்குடும்பத்தோடு பின்னால் கலந்துவிட்டாலும் அதற்கு அக்குடும்பத்தோடு நெருங்கிய உறவு கிடையாது என்று தெளிவாக அறிவுறுத்தும் எல்லிசர்தமிழுக்கும்ஈப்ரு மொழிக்குமுள்ள ஒற்றுமைகளைச் சுட்டுகையில் மனித வாழவு பற்றிய நூல்கள் தமிழில் உள்ள அளவு வேறு ஆசிய மொழி எதிலும் இல்லை என்று தெரிவிப்பதாக அறியமுடிகிறது.

13 அதிகாரங்கள் மட்டுமே திருக்குறளில் மொழிபெயர்க்க தேர்வுசெய்திருந்த போதும் அக்கால ஓலைச்சுவடி வாசிப்பினால் விரிவாகக் கற்றிருந்த புறநானூறு, நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி,ஏலாதி,சிறுபஞ்சமூலம், இன்னாநாற்பது,இனியவைநாற்பது ,அறநெறிச் சாரம். ஆசாரக்கோவை, திருமந்திரம், திருவாய்மொழி, திருவாசகம், சீவகசிந்தாமணி, கம்பரமாயணம், ஏரெழுபது, வளையாபதி, சூளாமணி, நல்லாப்பிள்ளை பாரதம், பெருந்தேவனார் பாரதம், சிவவாக்கியம், தேம்பாவணி, தொன்னூல் விளக்கம், நைடதம், நீதிநெறிவிளக்கம், தண்டலையார் சதகம், கோவிந்த சதகம்,இரங்கேச வெண்பா, சிவசிவ வெண்பா, பிரவுலிங்க லீலை, மூதுரை, நன்னெறி, நல்வழி ஆகிய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டி திருக்குறள் உரை எழுதியிருப்பதாக அறியமுடிகிறது.இதிலிருந்து அவரது பன்முக அறிவாற்றல் புலனாகிறது. அவரது மொழிபெயர்ப்பு  ஷ்ஐமிஎர்ஸ்ரீரெமிஷ்ஸஎ மிர்ழிஐவியிழிமிஷ்லிஐ வகையினது:  மொழிபெயர்ப்புத் துறையில் பின்னைய தலைமுறைகளுக்கெல்லாம் பெரும் அறைகூவலாக  விளங்குகிறது என்கிறார்  மருதநாயகம்.மேலும்  எல்லீசர்  மேற்கோள்  காட்டும்  புறநானூற்றுப் பாடல்  ஒன்று  உ.வே.சா  புறநானூற்றுப் பதிப்பைப் பற்றிய அதிர்ச்சிதரும் ஓர் உண்மையைப் புலப்படுத்துகிறது என்றும் எல்லிசர் உரையில் குரவர் தப்பிய என்ற தொடர் உ.வே.சா பதிப்பில் பார்ப்பார் தப்பிய என்று இடம் பெறுவதைச் சான்று காட்டுகிறார் அவர்.தொடர்ந்து ஒரு நேர்மையான விமர்சகராகவும் தேம்பாவணி பற்றிய கருத்துகளை புலப்படுத்தியுள்ளார் எனத் தெரிகிறது.

சில ஐரோப்பிய எழுத்தாளர்கள் இந்திய மொழிகளில் ஆர்ழிமிஷ்மிற்டெ எனும் ஆங்கிலச்     சொல்லின் பொருளைத் தரும் சொல்லேதுமில்லையயன்று கூறியுள்ளதைக் கண்டிக்கும் எல்லீசர் அவர்கள் இப்பண்பே இந்தியர்களிடம் இல்லையயன்று மறைமுகமாக வலியுறுத்துகிறார்கள் எனறு கூறுவதோடு அமையாது இத்தகைய அவதூறான குற்றச்சாட்டுக்குத் திருவள்ளுவரின் செய்நன்றியறிதலை மட்டுமல்லாது ஒளவையின் நன்றிமறவேல் போன்ற பலவேறு மேற்கோள்களைத் தக்கமுறையில் எடுத்தாள்கிறார்.ஆனால் தமிழ்ச்சூழலின் அதீத துயரம் சுவடிகளை ஆடிப்பெருக்கன்று தண்ணீரில் விட்ட வகையிலும் அனல்வாதம் புனல்வாதம் மூலம் அழித்தொழித்ததிலும் அடங்கியதைப்போலவே எல்லீசர் ஆக்கங்களும் அழிந்துவிட்டன என்று அறிகிறபோது வேதனையளிப்பதாகவுள்ளது.தென்னிந்திய தொல்வரலாற்றறிஞரும் எல்லீசரின் ஆதரவாளருமாகிய வால்டர் எலியட் அவை பீட்டரின் சமையல்காரனுக்கு அடுப்பெரிக்கவும் கோழிவறுக்கவும் பயன்பட்டன என்கிறார். பலரும் படித்துப் பயன்பெற வேண்டிய சிறந்த ஓர் அறிஞறின் படைப்புகள் பக்கம் பக்கமாக எரிந்து சாம்பலானதை அறிந்தபோது நான் துயரத்திலாழ்ந்தேன்.இந்த நிகழ்வு பைசாச மொழியில் பிரகத்கதா  எழுதிய குணாத்தியர் தனது படைப்பை ஓர் அரசன் புரக்கணித்த காரணத்தால் அதனை மகிழ்ச்சியோடு கேட்கிற, ஆர்வத்துடன் பார்க்கிற விலங்குகளுக்குப் படித்துக்காட்டி ஏடுஏடாகத் தீயிலிட்ட கதையை நினைவூட்டியது என்கிறார்.

இனியும் இத்தீச்சிந்தனைகள் தமிழ்ச்சமூகத்தில் மூளாது காப்போம் .எல்லீசரை நினைப்போம்.

 

 
Related News
 • போரும் இலக்கியமும் 2

 • தலித் பெண்களின் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக தலித் இலக்கியக் குரல்கள்

 • எழுத்துக்கடன் கொண்டு மொழி தழைக்குமா? வீழுமா?

 • நீரற்றது கடல் நிலமற்றது தமிழ்

 • போரும் இலக்கியமும் 1
 •   
    
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World