Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueபோரும் இலக்கியமும் 1
 

(சென்னைப்பல்கலைக்கழக,தமிழிலக்கியத்துறை ஒழுங்குசெய்த பன்னாட்டுத் தமிழாளுமைகள் பங்குபெற்ற கலந்துரையாடல்)

பேரா.வீ.அரசு

(தமிழிலக்கியத் துறைத்தலைவர்,சென்னைப்பல்கலைக்கழகம்)


          இந்த அரங்கில், நமது அண்டையில் இருக்கக்கூடிய ஈழத்தில்  நடக்கும் போர், அது தொடர்பாக உருவாகி வருகிற இலக்கியங்கள் குறித்த ஒரு கலந்துரையாடலுக்கு நாம் ஏற்பாடு செய்ததற்கு காரணம் - ஈழத்தில் பிறந்த, உலகம் முழுவதும் இன்று பரந்து வாழ்கிற பல அறிஞர்கள் வேறொரு பணிக்காக சென்னைக்கு வந்தபோது அவர்களை நாம் பயன்படுத்திக் கொண்டு அவர்களோடு கலந்துரையாடுவதற்காக இந்த வாய்ப்பை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம்;.

        பேரா.சிவத்தம்பி  போரும் இலக்கியமும் பற்றி நம்மிடையே ஒரு புலமை வாய்ந்த ஒரு அறிமுக உரையை நிகழ்த்த இருக்கிறார்கள். அதற்கு முன்பாக இந்த கலந்துரையாடல் எப்படி நிகழ வேண்டும் அல்லது என்ன செய்திகள் குறிப்பாக எங்கள்மாணவர்களுக்கு கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம் என்றால், கடந்த 83 தொடங்கி, மிக உக்கிரமாக நடந்துவரும் அந்தப் போரினால் உருவாகி இருக்கக் கூடிய இலக்கியங்களின்; பரிமாணங்கள், இலக்கியம் மற்றும் பண்பாடு பயிலும் எங்கள் மாணவர்களுக்கு அது பெரிதும் உதவியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

          இந்த நேரத்தில் இன்னொரு செய்தியையும் சொல்ல வேண்டும். எங்கள் - எம்.ஏ தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாடு படிக்கும் மாணவர்களுக்கு என்று அவர்களுக்கு ஓரு தாள் (ஒரு பேப்பர்) படிக்கிறார்கள். அது - தமிழ் டயஸ்பொரா என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய, குறிப்பாக மிக அண்மைக்காலங்களில் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற, நாடுவிட்டுநாடு வாழக்கூடிய இந்த அவலத்தை அடிப்படையாகக் கொண்ட, அந்த வாழ்க்கைமுறைச் சார்ந்து உருவாகியிருக்கும் பல்வேறு விதமான கலை இலக்கியக் கூறுகளை அறிந்து கொள்ளும்வகையில் எங்கள் மாணவர்களுக்கு நடத்தி வருகிறோம். அதை, தமிழ்டயஸ்பொரா என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம். அதற்கு சரியான தமிழச்சொல்லை, தேடிக்கொண்டிருக்கிறோம். தமிழ்அகர்ச்சி, தமிழன் உலகம் முழுவதும் பரவல், உலகத்தமிழ்…எப்படிச் சொல்லலாம் என்பது பற்றியும் விவாதிக்கிறோம்.

        டயஸ்பொரா என்ற சொல்லை எடுத்துப் பார்த்தால், அது - யூதர்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதைக் குறிக்கும் ஒரு சொல் என்று மட்டுமே அது அகராதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதைப்போல “யூதர்கள்” என்ற இடத்தில் தமிழர்கள் என்ற சொல்லைப் போடலாம். அந்தப் பின்புலத்தில் எங்கள் மாணவர்கள் தமிழ் “டயஸ்பொரா” தாள் தொடர்பான ஒரு நேரடிப் பயிற்சியாகவும் இந்த கலந்துரையாடல் அமையும் என்று நாங்கள் கருதுகிறோம்.

          ஏன் நாம் இதையெல்லாம் குறித்து இவ்வளவு விளக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் சமகால நடவடிக்கை சார்ந்த விசயங்களை, நாங்கள் ஒரு பாடமாகக் கற்பதற்கு விருப்பப்பட்டால், அதற்கு கொடுக்கப்படும் வெவ்வேறுவேறு வகையான, அந்த வண்ணங்கள் குறித்து நாம் அக்கறை கொள்வதனால் இப்படியான விளக்கங்களையெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையும் நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

          ஈழத்தைப் பொறுத்தவரை இந்தப்போரில் உருவாகக் கூடிய இலக்கிய வகை என்பதைப் பற்றிக் கூறுகிறபோது  தமிழ்நாட்டில் அல்லது தமிழில் வந்த இரு கவிதைத் தொகுதிகளை - ஈழத்துக்கவிதைத் தொகுதிகளைக் கூற வேண்டும். 11 ஈழத்துக்கவிஞர்கள் என்று சொல்லி 1985 ல் க்ரியா பதிப்பகம் ஒரு 11 கவிஞர்களின் 52 கவிதைகளை அது தொகுத்து வெளியிட்டது. அந்த கவிதைத் தொகுதிகளை தொகுத்தவர்கள் நுகுமானும் ஏசுராசா என்பவரும் “ஈழத்து தமிழ்க்கவிதையின் முக்கியமான போக்குகளை பிரதிபலிக்கும் ஐந்து தலைமுறைகளை உறுதிபடுத்திய ஒரு தொகுப்பு” என்று  அந்தக் கவிதைத் தொகுதி;யின் முன்னுரையில் எழுதியிருக்கிறார்கள்,

          தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஈழத்துக்கவிதைகளை மிக விரிவாக அறிமுகப்படுத்திய மிக முக்கியமான தொகுப்பு நூல் என்று சொல்லமுடியும். அந்த தொகுப்பு நூலை நாம் பார்க்கிறபோது 1960 தொடங்கி ஏறக்குறைய அந்தநூல் அச்சுக்கு வந்தது 1985 ஆக இருந்தாலும், நான் நினைக்கிறேன்… 1980 வரை எழுதிய கவிதைகளின் ஒரு தொகுப்பாக அந்த நூல் வந்நது. 

          அந்த நூலைக் குறிக்கிற அந்த வாசகம் ஒரு நவீனத்தன்மையை தனக்குள் கொண்ட ஒரு ஈழத்து கவிதை என்று சொல்கிறது. அடுத்து 83ல் மிகப்பெரிய கலவரம் நடந்தது, நாம் அறிந்தது கருப்பு ஜீலை உலகம் முழுக்க அறிந்த ஒரு ஜீலை அதைத் தொடர்ந்து 85ல் ஒரு கவிதைத் தொகுதி வந்தது. அது 31 கவிஞர்களின் 82 கவிதைகளை உள்ளடக்கிய “மரணத்துள் வாழ்வோம்” என்ற ஒரு கவிதைத்தொகுதி, அந்த தொகுதி இதற்கு முன் வந்த ஈழத்து 11 கவிஞர்களின் நவீன தமிழ் கவிதைகள் என்று சொன்னால் நவீன கவிதை, அரசியல் கவிதை என்று அது தன்னைச் சொல்லிக் கொள்கிறது. இதில் என்ன செய்தி என்று சொன்னால் நவீன கவிதை, அரசியல் கவிதை என்று ஏன் வடிவம் பெறுகிறது? 

          அந்த தொகுதியை நீங்கள் படித்தால் விளங்கிக்கொள்ளலாம். அந்த தொகுதியில் இருக்கக்கூடிய தன்மையிலிருந்து  (ஒரு சில கவிதைகளில் வந்திருக்கலாம்) ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு ஆண்டு இடைவெளிக்குள் 86 - 85 அல்லது வசதிக்காக அந்த தொகுதி 80களில் துவக்கப்பட்டதாக வைத்துக்கொள்வோம். இது 83 என்ற குறி;யீட்டைத்தொடங்கி, 85ல் வரக்கூடிய கவிதைத்தொகுதி - ஒரு அரசியல் கவிதை தொகுதி – அரசியல் கவிதைகள் என்ற பெயரோடு அது வெளி வருகிறது.

          தமிழில் முதன்முதலில் அரசியல் கவிதைகள் என்ற பெயரோடு வந்த தொகுதி அதுதான். இந்த அரசியல் கவிதை என்பது எப்படி உருவாகிறது? அந்த கவிதைத்தொகுதியில் வரக்கூடிய கவிதைகள் ஒரு…ஏதோ…ஒரு எடுத்துக்காட்டாக இப்படி அந்தக் கவிதைத் தொகுதியில் - நாம் இந்த கவிதைத் தொகுதியைத்தான் படிக்க வேண்டும் என்ற அக்கறை எடுத்து ஒரு கவிதையைப் படித்தாலே போதும். ஈழத்தின் வாழ்ககையைச்சொல்லும்; ஒரு கவிதையை எடுத்துப் படிக்கிறேன். பாலசூரியன் என்பவர் எழுதியிருக்கிற கவிதை இது.

செடியில் புதிய எழும் வேர்த்துளிகள் கீழே துப்பாக்கிகள் இடுக்கில் ஒளியும். ஜீப் வண்டி சீறும். உயரத்தைக் காற்று விழுங்கும். தெருவில் குருதி நிறையும். தரையில் வற்றி உலர இளையான் விழும். சிலவேளை - வாலாட்டி நுகருகிற தெருநாய் இருப்பினும் உலகம் அமைதி தழுவி நிற்கும் ஒரு பொழுதில் வேட்டொலிகள் கீறும்@ அமைதி குலையும். விளையாடும் சிலவேளை தெருநாயும் படையெடுக்கும். துயரத்தில் மிரண்ட காற்று அதிரும் இப்படியே அப்படிதான்.

          (இளையான் என்கிற சொல், நம்மூருக்குத் தெரியாது. அந்த ஊர்ல கொசு என்று நினைக்கிறேன். இல்லையில்லை ஈ என்கிற வட்டாரச்சொல்) 

இளவாலை விஜேயந்திரனுடைய இன்னொரு பகுதி, இதனுடைய பரிமாணத்தை (நமக்கு) புரிந்துகொள்ள நமக்கு உதவும். 

இளமையில் வெறுப்பைத் தின்று விழுங்கிய ஒவ்வொரு கணமாய் ஊறும் என்று சாபமிட்டாய். உழன்றேன். காற்றில்லாத அறையில் மூடச்சொல்லி விழிகள் கெஞ்சவும் மூச்சற்றுக் கடந்தேன் கன்னங்கள் நனைந்தபடி. “வாழ்வைச் சிறிதாய் அர்த்தப் படுத்திப்பார் இதோ உன் உலகம்” என்கிறீர். மனதிடம் சொல்லி வெளிக்கொணர்ந்தேன் வீதியெல்லாம் குருதி கிடந்தது வேலியெல்லாம் எரிந்திருந்தது தொலைவில் துரத்தும் ஒலிகளின் சத்தம் கேட்கிற நெஞ்சோ மறுபடி உடைந்தது@ கழுகுகளாக தரையிறங்கியது மறுபடி உறக்கம் கலைந்தாயிற்று இருளின் அமைதியில் வெளியில் கரைந்தேன் விழியின் மணிகளில் தீப்பொறி ஏந்தினேன். ஒன்று சொல்லாமல் போய்விட்ட உனக்கு மற்றது சொல்லாமல் வந்துவிட்ட அவர்களுக்கு

          இப்படி அனைத்துக் கவிதைகளும் அந்த களத்தில் நடந்தபோரை போர் சார்ந்த பல்வேறு விதமான கூறுகளை மெய்மைப்படுத்தியதை நாம் காணமுடிகிறது. எனவே தமிழ்கவிதை பாரம்பரியத்தில் ஒரு ஆண்டுகளுக்கு முன் வந்த தொகுதியும் தன்னுடைய தன்மையாலும் கூறுகளிலும் முற்று முழுதாய் வேறொரு பரிமாணத்தையும் போக்கையும் அது சொல்வதென்று சொன்னால் அது பற்றிய அக்கறை நமக்கு மிக முக்கியமாக இருக்கிறது. அதுபற்றிய படிப்பும் அது பற்றிய பேச்சும் நமக்கு மிக அவசியமான ஒன்றாக படுவதென்ற காரணத்தால் அப்படியான ஏற்பாட்டை நாம் செய்திருக்கிறோம் இதைப்போலவே கவிதையைப் போல மிகுதியான நாடகங்கள் வந்திருக்கின்றன. காவியங்கள் உருவாகின்றன.  

          ஜெயபாலனுடைய ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் என்ற ஒரு காவியத்தைச் சொல்லலாம். அதைப் போல தமிழகத்தில் அச்சான லங்காராணி புதியதோர் உலகம் என்ற நாவலைச் சொல்லலாம். புதியதோர் உலகம் என்ற நாவல் மிக முக்கியமான தமிழ் நாவல்களில் ஒன்று. ஒரு போராட்டக்களத்தைப் பற்றி தமிழில் எழுந்த ஒரே நாவல் என்றுகூடச் சொல்லலாம். அதைப்போல செழியன் என்பவருடைய “ஒரு நாட்குறிப்பிலிருந்து” குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.          அதைப் போல டாக்டர் மலரவன் என்று ஒருவர் எழுதியிருக்கக்கூடிய போர்உலா என்ற டைரி. இப்படி நாட்குறிப்புகளாகவும் கடிதங்களாகவும் காவியங்களாகவும் புதினங்களாகவும் நாடகங்களாகவும் மிகமிக அதிகமாக கவிதைகளாகவும் தமிழ் இலக்கியம் தமிழர்களால் எழுதப்படுகிற தமிழ்நாடு சாராத வேறொரு மண்ணில் வாழுகிற தமிழர்களால் உருவாக்கப்படுகிற இந்த இலக்கியம் தமிழ்இலக்கியத்திற்கு ஒரு மிகப்பெரிய பாரம்பரியத்தைத் தருகின்றது. 

          அது முதல் உலகப்போர் ஓவியங்கள் சார்ந்த அல்லது கலைசார்ந்த படைப்பு சார்ந்த ஒரு புதிய தன்மையை தனக்குள் கொண்டு வந்ததைப்போல் பிற்காலங்களில் ஒரு புதிய இலக்கிய வகையை உலகுக்குச் சொல்லியது போல கருப்பின மக்களின் போராட்டம் ஒரு புதிய இலக்கிய வகையை உலகுக்கு தந்ததைப்போல தமிழர்களுக்கும் அது வாய்த்திருக்கிறது. அந்த கொடுமையான அந்த சோகமான வாய்ப்பு நமக்கு ஒரு இலக்கிய வகையைத் தந்திருக்கிறது. 

          இந்த இலக்கிய வகையின் பல்வேறு பரிமாணங்களை அல்லது அதில் ஈடுபட்ட அல்லது அதோடு வாழ்ந்து கொண்டிருக்கிற அல்லது அப்படியான கவிதைகள் பலவற்றை எழுதிய பலரும் இங்கு வந்திருக்கிறார்கள். இங்கு வந்தி;ருக்கிற ஒவ்வொருவரும் அந்த சூழலில் அந்த வாய்ப்பைப் பின்பற்றி இருந்தவர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

          இன்று இந்த நிகழ்ச்சிக்காக வந்திருக்கின்ற கவிஞர் வில்வரெத்தினம் அவர்களையும் (அவர் யாழப்பாணத்தை சேர்ந்தவர்) நந்தினி சேவியர் அவர்கள் அவரும் யாழப்பாணத்தைச் சேர்ந்தவர். வசந்தி ராஜா அவர்கள் யாழப்;பாணத்தைச் சேர்ந்தவர் கனடாவில் வாழ்பவர் என்று நினைக்கிறேன் பார்வதி கந்தசாமி அவர்கள் யாழ்ப்பாணத்தவர் கனடாவில் வாழ்கிறார். நட்சத்திர செவ்விந்தியன, ரஞ்சத்குமார்ஆகியோர் வர இருக்கன்றனர். நடராஜ சுசீந்திரன் ஜெர்மனியில் வாழும் ஈழத்தமிழர் பாரதிதாசன் (ஜெர்மனியில் வாழும் ஈழத்தமிழர்) செல்வம் அருளானந்தம் கனடாவில் வாழும் தமிழுர். அதைப்போல மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சுகுமாறன் மற்றும் ஜெய்சங்கர் இருவரும் வர இருக்கன்றனர்.

          அதைப்போல நார்வேயில் வாழுகிற சரவணன் தமிழகத்தில் வாழுகிற மதுசூதனன் கனடாவில் வாழுகின்ற கவிஞர் சேரன் கொழும்பில் இருக்கிற ஜீவாகரன் மேலும் நான் பெயர் சொல்லாமலும் வேறு சிலபேர் இங்கிருக்கலாம். இப்படியான இவர்கள் அனைவரும் இந்த கலந்துரையாடலில் முதன்மையாக கலந்துகொள்ள இருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய படைப்பு சார்ந்த விவகாரத்தை நம்மோடு கலந்துரையாடுவார்கள். 

 நமக்குக் இருக்கக்கூடிய இந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொருவரும் ஒரு 10 லிருந்து 15 நிமிடங்களுக்குள் தங்களுடைய கருத்தைச் சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்ந்து எங்களுடைய மாணவர்கள் உங்களோடு மனந்திறந்து பேசத் தயாராக இருக்கிறார்கள். அதற்கும் நீங்கள் அனைவரும் வாய்ப்பைத் தரவேண்டும். என்று கேட்டுக்கொண்டு இப்பொழுது பேரா.சிவத்தம்பி அய்யா அவர்கள் இந்த, போரால் உருவான இலக்கியம் குறித்த கலந்துரையாடலை ஒருங்கிணைக்கும் வகையில் தமது உரையை நிகழ்த்துவார்கள் நன்றி!

பேரா.சிவத்தம்பி

          சென்னைப்பல்கலைக்கழக இலக்கியத்துறையைச் சார்ந்து மிகுந்தசிரமேற்கொண்டு ஒழுங்குசெய்யப்பட்ட ஒரு ஒருங்குகூடலாகும் இது. ஒரு கட்டுக்கோப்பை இந்தக் கருத்தரங்கின் - இந்த கலந்துரையாடலின் முழு நேரத்திலும் பேணிக்கொள்வோமேயானால் நிறைந்த பிரயோசனம் கிடைக்கும். தங்கள் கருத்துகளுக்கு என்னுடைய குறிப்புரைகள் மிகமிகப் பயன்தரக் கூடியவையாகும்.          போர் இலக்கி;யம் என்பது தமிழுக்கு மாத்திரமல்ல உலக இலக்கியங்கள் எல்லாவற்றிலும் மிகக் கணிசமான காத்திரமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்தந்த நாடுகளில் ஏற்பட்ட போர்கள் ஒரு புறமாகவும் உலக நிலையில் ஏற்பட்ட போர்கள் ஒரு புறமாகவும் இந்த போர்கள் என்பவை மனிதர்கள் தாங்கள் காணுகின்ற விடயங்களை உணர்கின்ற முறையிலே மாற்றியமைந்திருக்கின்றது. ளநளெவைஇஎந  என்று சொல்லுவார்கள், அது உணர் பொருளை உணர்முறையிலேயே போர்களை நாங்கள் கணிக்கலாம். இதை நாங்கள் முதலாவது உலக யுத்தத்திற்குப்பின்னர் ஐரோப்பாவில்  கலை இலக்கியத்துறையில் ஏற்பட்ட மாற்றங்களை நாங்கள் அறிவோம். ஒரு கவிதைப் பாரம்பரியமே ஐரோப்பாவில் தூக்கி எறியப்பட்டது. அதனை ஒட்டிதான் நாம் இங்கு பத்து இருபது வருடங்களுக்குப் பின்னர் புதுக்கவிதைக்கு வந்து சேர்ந்தது. ஐரோப்பாவினுடைய இலக்கியத்தை அதனுடைய லயத்தை போர் மாற்றியது.

   போர்கள் எல்லா மனிதர்களையும் தாக்குகின்றன. அவை எவ்வாறு முக்கி;யமாகின்றன என்பது  முக்கியமான ஒன்று. போர் எப்போதுமே ஒரு இயற்கைசாராத இயற்கையோடு இயையாத பொருத்தமுடைய இயல்பான ஒரு காரியமல்ல. ஆனால் அது மனிதர்களால் உண்டாக்கப்படுகிறது. இடி மின்னல் போன்று காற்று மழைபோன்று இயற்கை கூறுகளால் உண்டாக்கப்படாமல் மனிதர்களாலேயே உண்டாக்கப்படுகிறது.

         அசாதரணமான இயற்கை விதிகளை மீறியபோது அது மனித அருந்தல்களுக்கும் துன்பங்களுக்கும் இடர்களுக்கும் போரின் காரணமும் போரின் காரியமும் எப்போதும் அவர்களைக் கவர்ந்த வண்ணமாக இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் இது நமக்குப் புதிதானதல்ல.

         புறநானூற்றி;ல் பார்த்தோமானால் அங்கும் போருக்குச் செல்லுங்கள் என்றும், போருக்குச் செல்லவேண்டாமென்றும், போரினால் இழைக்கப்பட்ட துக்கம்பற்றி போரில் ஏற்பட்ட இழப்புகளினால் கணவனை இழந்த ஒருபெண் எவ்வாறு நிலத்தில் சோறு உண்ண வேண்டி வந்தது பற்றி இப்படியெல்லாம் போரினுடைய பன்முகங்களை புறநானூறு காட்டுகிறது. போரிலக்கியம் நமக்கு புதிதானதுமல்ல. ஆனால் அந்த இலக்கியப் பாரம்பரியம் பின்னர் கைத்துப் போயிற்று. அதைப் பற்றி நாங்கள் பேச வேண்டியதில்லை. அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. உலக  இலக்கியங்கள் எல்லாமே 1ம் 2ம் உலகயுத்தம் இவற்றில் பார்த்தது. இத்தகைய ஒரு அனுபவம்தான் இலங்கையில் ஏற்பட்டது. சுதந்திரப்போராட்டம் போன்ற ஓர் அனுபவம்; இல்லையென்றாலும், எனவே நாங்கள் இதை சற்று வித்தியாசமாகப்; பார்க்க வேண்டும். ஆனால்; தமிழுக்கு முற்றிலும் புதிதாக அமைந்ததென்றால் மலேசியாவில் நாற்பதுகளில் ஏற்பட்ட ஜப்பானிய போர் சம்பந்தமான போர்கள், அறியப்பட்ட முழுமுறைகள், நாங்கள் சற்று பின்னோக்கிப் பார்க்க கூடியதாக இருக்கிறது. அல்லது பர்மாவினால் போரின் காரணமாக, பர்மாவில் ஏற்பட்ட குழப்பங்கள் தமிழக வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது என்பதுபற்றி, சான்றாக எத்தனையோ நாவல்கள் வந்துள்ளன. ஆனால் இந்தப் போரின் தாக்குதல்கள் இல்லாமல் இலங்கையில் நடக்கின்ற இப்போரில் குறிப்பிட்ட, அதை ஒரு பொதுக்கட்ட நிலையில் பார்த்தால் 16 வருடங்களாக நடைப்பெறுகிறது. இன்னொரு கட்டநிலையில் பார்த்தால் 26 வருடங்களாக நடைப்;பெறுகிறது. இது உலகறிய ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அந்த போர் நிற்க வேண்டுமென்று சர்வதேச மட்டத்தில் பல முயற்சிகள் நடைப்பெறுகின்றன.


வருடங்களாக தொடர்ந்து கொண்டு வருகிற இப்போரினை நாங்கள் பல்வேறு மட்டங்களில் பேசலாம். ஆனால் இரண்டு பிரமாதமான மட்டங்கள் உண்டு. ஒன்று, போர் பற்றியது. அந்த போருக்குள்ளே சம்பந்தப்பட்டிருக்கிற கருத்துகளைப் பற்றியது. இதற்காக யார் யார் எப்படி போராடுகிறார்கள் என்பது பற்றியது. அது ஒரு மட்டம். இன்னொரு மட்டம், இந்தப் போரினால் ஏற்பட்ட மனித அருந்தல் இந்த மனித அவலம் மற்றது. திருநாவுக்கரசர் சொல்லுவார் “தீயினும் காலில் படும்”என்று.

இதனால் ஏற்பட்ட நகர்வுகள், பெயர்வுகள், சமூக உறவுகளில், வாழ்க்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் இதனால் தமிழ் இலக்கியக் கூறுகளில் ஒரு அசாதரணமான, ஒரு போக்கினை கொண்டு வந்தது. 

          இப்பொழுது இங்கு இலங்கையிலிருந்து வந்துள்ள இவர்களது கடமை என்னவென்றால் இந்த கவிதை, இந்தப் படைப்பாக்கம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதனைப் படைப்பிலக்கிய கர்த்தாக்கள் என்கின்ற வகையில் அல்லது சுவைஞர்கள் என்ற வகையில் எங்களுடைய மனப்பண்புகளை நாங்கள் எடுத்துக் கூறுவோம். மாணவர்களுக்கு பெரிதும் உதவுவதாக இருப்பது மாத்திரமல்ல. இந்த இலக்கியங்களை அவர்கள் புரிந்துக்கொள்வதற்கும் அத்தகைய ஒரு கலந்துரையாடல் உதவும். இங்கு எதிர்பார்க்கப்படுவது போரின் காரண காரியக் கருத்துநிலை, போராட்டங்கள், அது பற்றிய ஒரு வரியை 

         அதனால் ஈழத்து இலக்கியம் பற்றிய ஒரு புரிந்துணர்வுக்கு நாங்கள் உதவுவதாக இருப்போம் என்று கருதுகிறேன். எனவே இதற்கு மேல் நான் அதிகம் பேசாமல் அழைக்கப்பட்டிருக்கின்ற நண்பர்கள் ஒவ்வொருவரும் 10 நமிட நேரத்தை எல்லையாக வைத்துக்கொண்டு ஆக மீறினால், 15 நிமிடத்திற்கு மேலாகச் செல்லாமல் தங்கள் மனப்பதிவுகளை, தங்கள் ஆக்கப் பதிவுகளை எவ்வாறு பார்க்கிறார்கள், எவ்வாறு செய்கிறார்கள், எவ்வாறு செய்துள்ளார்கள் அல்லது அந்த படைப்பிலக்கிய முழுமுயற்சியையும் இவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு வாக்குமூலமாக இது அமையுமேயானால் இவர்களின் பதிவு எங்கள் எல்லோருடைய கவனத்தையும் கவருமென்றும், ஈழத்தின் இலக்கியம் மேலும் செழுமைப்படும் என்று கருதுகிறேன். அத்தகைய வாக்குமூலங்கள், மனப்பதிவு எழுச்சியை உங்களிடம் எதிர்பார்த்து என்னுடைய சிற்றுரையை முடித்துக்கொள்கிறேன். முதலிலே அந்தனி ஜீவா தனது உரையைக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

   (கண்ணாடி இல்லாததாலே எல்லோருடைய பெயரையும் பார்க்க முடியல. பார்வையில பிரச்சனையில்ல கண்ணுலதான் பிரச்சனை. ஆன படியாலே…).

நடராஜா சுசீந்திரன்

         சென்றவர்கள் வென்றதுண்டு@ வந்ததில்லை என்று பெட்ரோல்டு பிரெக்ட் அவர்கள் கூறுவார்கள். போருக்குச் சென்றவர்கள் வென்றதுண்டு@ வந்ததில்லை. இது அவருடைய வாசகம். நான் ஜெர்மானிய நாடகக்கலைஞனும் கவிஞனுமாகிய பெட்ரோல்டு பிரெக்ட்னுடைய வாசகத்தோடு என்னுரையைத் தொடங்குகிறேன்.

       பிராங்பர்ட்  நகரத்திலிருந்து வருகின்றேன். போர்க்கால பாடல்கள், போருக்குக் கூவி அழைக்கின்ற பாடல்கள் ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்கையில் அனர்த்தங்களைப் பாடுகின்ற பாடல்கள் போரினால் நாம் பெற்ற அவலங்களைப் பாடுகின்ற பாடல்களும் புகலிடத்தில் நாங்கள் கேட்கின்ற வாசகங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. என்ற புகலிட இலக்கியம் (என்கின்ற) புதிய இலக்கியப்பரப்பில் இன்று தோற்றம் பெற்று அல்லது ஒரு முறிந்த கிளையாக காணப்படுகின்ற, (அந்த இலக்கியத்தில் காணப்படுகின்ற)ன. 2ம் உலக மகாயுத்தம் நடந்து சுமார் நீண்ட 40@50 வருடங்களை கடந்துவிட்டபோதும், போரில் ஏற்பட்ட காயங்களில் இப்போதும் சீழ்வடிந்து கொண்டிருக்கும் வரைக்கும் அந்த போர் ஓய்வில்லை என்று நோபல்பரிசு, “ஐ விஷ் வெல்” என்கிற ஜெர்மானிய எழுத்தாளர் சொல்லுகின்றார். நாங்கள் வார்த்தைகளால் ஒரு அமைப்பைக் கட்டிவிடலாம். வார்த்தைகளால் இந்த உலகத்தை ஆளும்படியாக நாங்கள் கட்டிவிடலாமென்ற ஹவுஸ் என்கின்ற காவியத்தில் பேராசிரியர் என்கின்ற நாடகத்தில் பிரிஸ்டோ தம்முடைய மாணவர்களுக்கு பேராசிரியர் உடையோடு வந்து கொடுக்கின்ற பேருரையில் அவருடைய வாசகங்கள் இருக்கின்றன. 

          இந்த வார்த்தைகளால் ஒரு உலகத்தையே ஒரு போலி உலகத்தையே கட்டியமைக்கின்ற போருக்கு கூவி அழைக்கின்ற விசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றபொழுது போரின் உபஉற்பத்திகளாக நாங்கள் (அகதிகளாக) நாடெங்கும் உலகெங்கும் பரந்து கிடக்கிறோம். இதுவரைக்கும் தமிழர்களின் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த இனங்கண்ட போரதிக்க ஓரினம் நான் தமிழன்தானா? அல்லது ஆப்பிரிக்காவில் எங்கையோ ஒரு மூலையில் பிறந்த கருப்பனோடு என்னை அடையாளப்படுத்தக்கூடிய ஒருவனா என்கின்ற வாசகங்களை அந்த இலக்கியங்கள் பேசுகின்றன. இன்னும் இதுவரைக்கும் ஆண்;மையும் வீரமும் படைத்த வீரர்களை உருவாக்கிய தமிழினம். அது எங்களுடைய சங்க இலக்கியங்களில் அல்லது புறநானூற்றில் அல்லது இன்னும் சொல்லப்போனால் மேலைய இலக்கியங்கள் குறிப்பிடப்படுகின்றது. ஆனால் அங்கே நாங்கள் இந்த (அந்த) புகலிட இலக்கியங்கள் (வந்து) இந்த போரால் விடுபட்ட இன்னொரு முக்கியமாக ஒரு பாத்திரமாக அல்லது பாதகமான அம்சமாக பெண்விடுதலையை நான் பார்க்கிறேன்.

 அங்கே இருக்கின்ற ஆண்களும் சரி பெண்களும் சரி இதுவரை காலமும் இதுவரை என்னுடைய சமூகம் ஒடுக்கிய ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற பெண்ணினத்தின் இதுவரையிலான பாடுகளை நினைத்து இனியும் நாங்கள் அதிலிருந்து திரும்ப வேண்டும் என்கின்ற இன்னொரு பரிமாணத்தையும் நாங்கள் அங்கே காணக்கூடியதாக இருக்கின்றோம். நான் ஆரம்பத்தில் சொன்னவாறே தங்களை இன்னொரு வேற்று மனிதனாகவும் தான் இதுவரை கற்றுக்கொண்ட பாரம்பரியத்தில் இருக்கின்றோம். நான் ஆரம்பத்தில்  சொன்னவாறே தங்களை இன்னொரு வேற்று மனிதனாகவும் தான் இதுவரை கற்றுக்கொண்ட பாரம்பரியங்கள் பண்பாடுகளையுடைய விழுமியங்களாகக் கருதப்பட்;ட விசயங்களிலிருந்து விலகி இன்னொரு விழுமியங்களைத் தேடுகின்ற போக்கு அங்கே நிலவுகின்றது. எங்கள் புகலிட இலக்கியங்கள் வந்து இந்த போரால் விடுபட்ட இன்னொரு முக்கியமாக ஒரு பாத்திரமாக அல்லது பாதகமான அம்சமாக பெண் விடுதலையை நான் பார்க்கிறேன். அங்கே இருக்கின்ற பெண்கள் அங்கே இருக்கின்ற பெண்களும் சரி இதுவரை காலமும் இதுவரை என்னுடைய சமூகம் ஒடுக்கிய ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற பெண்ணினத்தின் இதுவரையிலான பாடுகளை நினைத்து இனியும் நாங்கள் அதிலிருந்து திரும்பவேண்டும் என்கின்ற இன்னொரு பரிமாணத்தையும் நாங்கள் அங்கே காணக்கூடியதாக இருக்கின்றோம்.

            நான் ஆரம்பத்தில் சொன்னவாறே தங்களை இன்னொரு வேற்று மனிதனாகவும் தான் இதுவரை கற்றுக்கொண்ட பாரம்பரியங்கள் பண்பாடுகளுடைய விழுமியங்களாகக் கருதப்பட்ட விசயங்களிலிருந்து விலகி இன்னொரு விழுமியங்களைத் தேடுகின்ற போக்கு அங்கே நிலவுகின்றது. எங்கள் புகலிட இலக்கியங்களில் இரண்டாவதாக முற்றிலும் புதிதான பெண்விடுதலைக் கருத்துக்கள அங்கே - அந்த இலக்கியங்களில் காணப்படுகின்றன.

            மூன்றாவதாக பாசம் பசிப்ப மடியைக் கொல்(ல)லாமா பதினெண்கீழ்க்கணக்கு நூலில் திரிகடுகம் சொல்லுகின்ற வார்த்தையின் மூலம் வார்த்தையாக நாங்கள் அங்கிகரிக்கின்றோம். ஒரு பொருளாதார வசதிகள் படைத்த ஒரு நாட்டில் இருக்கிறோம். ஏதோ அங்கிடும் பிச்சையாக அங்கிடும் சமூக உதவியாக எங்களுக்கு கிடைக்கின்றவை நாளை மதிப்பு கூடுகையில் அவர்களுக்கு என்னுடையது எனக்கு கிடைக்கின்ற ஒரு பங்கை அனுப்ப வேண்டுமென்று அவர்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்? இந்த வாசகங்களைப் பார்க்கிறோம். அவர்கள் படைகின்ற இலக்கியங்களில். இறுதியாக நான் சொல்லுகின்ற மிகவும் சுருக்கமாக என்னுடைய கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதால் அடுத்த தலைப்பு. அடுத்ததாக நான் இங்கே குறிப்பிடவேண்டிய விசயம் அது. ஆதங்கம் மனிதனுக்குள் ஏற்படுகின்ற அதாவது கடந்தகால நினைவுகளையே இன்பமாகவும் கடந்தகாலத்தில் துன்பங்களில் அழுந்திய காலங்களையும் இன்பமாகக் கருதும் ஒரு போக்கை அந்த புகலிட இலக்கியங்களில் நீங்கள் காணலாம்.

நான் அடிக்கடிகூறுகின்ற வார்த்தை,

பாட்டனார் பண்படுத்திய பழமரங்கள் போட்டு வைத்த தோப்பை அழியவிட்டு தொலைதூரம் வந்தவன் நான். என்னுடைய பேரனுக்காய் எவன் வைப்பான் பழந்தோட்டம்?

என்று கவிஞர் ஜெயபாலன் அவர்கள் பாடுவார்கள். அதாவது, என்னுடைய தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது என்று கதை பேசுவது அல்லாமல நாங்கள் பட்ட அனுபவங்களும் அது - இன்பமாக இருக்கலாம் அல்லது துன்பமான அனுபவமாக இருக்கலாம். ஆனால் புகலிடத்தில் இவையாவும் இனிக்கின்ற தன்மையை இவையாவும் எம்முடைய கடந்த காலங்கள் யாவும் இனிக்கின்ற தன்மையைக் காணுவதால் எங்களுக்கு பச்சாதாபமே மிஞ்சியிருக்கின்றன. நாங்கள் இப்பொழுது வாழ்ந்துக் கொண்டிருக்கிற ஒரு பொருளாதார பொருளாதாரத்தில் மேம்பட்ட ஒரு சமூகத்தில் எங்களுக்கு நல்ல உடை உடுத்தக் கூடியதாக இருக்கின்றது. எங்களுக்கு சகல புதிய கண்டுப்பிடிப்புகளையும் நாங்கள் பெற்றுக்கொள்ள கூடியவையாக இருக்கிறது. ஒரு மேற்கத்திய ஜன நாயகத்தை அனுபவிக்கக் கூடியதாக இருக்கிறது.

இறுதியாக இந்த விசயங்கள் எங்களது பச்சாதாபங்கள் எங்களுடைய இலக்கியங்களில் விஞ்சியிருக்கும் என்றுக் கூறி இதோடு நாங்கள் எப்பொழுதுமே உரைக்கின்ற நீ சொல்லுகின்ற எம்முடைய வாசகம் எனக்கு உடன்படாது போனாலும் நீ அதை சொல்ல வேண்டும் என்கின்ற உரிமையைப் பாதுகாப்பதற்கு என்னுடைய உயிரை ஈந்தேனும் நான் அந்த உன்னுடைய உரிமையை பாதுகாப்பேன் என்ற தத்துவ ஞானியின் வசனங்களோடு உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன் நன்றி.

கவிஞர் சு.வில்வரெத்தினம்

         அறிஞர்களும் இங்கிருப்பவர்களும் சொல்லிவிட்டதால் அறிமுகம் தேவையில்லை என்றே நினைக்கிண்;றன். பாட்டொன்று பாடச்சொல்லுகிறார்கள்…(பாடுகிறார்)

எமது காய்ந்த தெருக்கள் தோறும்

எரிக்கும் வெயிலைக் கேள் 

எரிக்கும் வெயிலைக் கேள்

எரிக்கும் வெயிலைக் கேள்

எமது விறைந்த பனைகளோடும்

கதைக்;கும் காற்றைக் கேள்

எமது கிராமம் எரிந்து போச்சு

எமது வீதி தனித்த தாச்சு

எமது காற்றில் மரண மூச்சு

எமது வீடுஇருண்டு போச்சு

எமது சிதைந்த நகரின் வாயில்

தொலைவில் தெரியதே 

எமது தொலைவில் தெரியதே

எமது தொலைவில் தெரியதே

எமது சிதைந்த நகரின் வாயில்

தொலைவில் தெரியுதே!

எமது வெளியில் நிமிரும் பனைகள்

எம்மை அழைக்குதே

எமது கடல் எமது நிலம் 

எமது வயல் எமது வெளி

எமது வயல் எமது வெளி

எமது வளைந்த தெருக்கள்தோறும்

எரிக்கும் வெயிலைக்கேள்

எமது விறைந்த பனைகள் தோறும்

கதைக்கும் காற்றைக்கேள்.

எமது சிதைந்த நகரின் வாயில் தொலைவில் தெரியுதே என்ற இந்தப்பாடலைப் பாடியவன் யாழ்ப்பாணத்தின் ஒரு இளங்கவிஞனும் நாடக ஆசிரியருமாகிய நிலாந்தன். இவர் ஒரு போராளியாகவும் இருந்தவர்.

         இளம் வயதிலேயே போர் வாழ்வை உவந்து ஏற்றுக்கொண்ட ஒரு பரம்பரை எங்கள் காலத்தில் வாழ்கின்றது. தொடர்ந்தும் அவ்வாறு போர்க்கால வாழ்வை எதார்த்தமாக ஏற்றுக்கொண்டு வாழ்வதற்குரிய ஒருவாழ்க்கை எங்களால் முழுவதுமாக வரவேற்கப்;படக் கூடியது. இந்த போர்க்கால சிதைவுகளினால் ஏற்பட்டிருக்கிற மனத்துயரங்களும் புண்களும் விழுப்புண்களாக பிறருக்குத் தெரிந்தாலும் எங்கள் மனத்திலேயே அவைகள் காயம்பட்ட புண்களாகத்தான் ரணம் படிந்திருக்கின்றது. இதில் எந்த விதமான வேற்று நியாயங்களுக்கும் இடமில்லை என்று சொல்லக்கூடிய வகையில் கவிதைகளில் நாங்கள் அவற்றைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த போர் என்பது நாங்களாக உவந்து ஏற்றுக்கொண்ட ஒன்றா? அல்லது எங்கள் மீது நிர்பந்திக்கப்பட்ட ஒன்றா? என்று நாங்கள் பார்க்கவேண்டும். பச்சாதாபங்கள் போர்க்கால வாழ்வில் ஏற்பட்டிருக்கிற அனர்த்தங்கள் சிதைவுகள் எல்லாவற்றிற்கும் மேலாக இது எல்லாவற்றிற்கும் மூலகாரணியாக இருந்த அந்த நிர்ப்பந்தம் என்ன? என்பது குறித்து நாங்கள் மிகவும் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

          இந்த போர் என்பது ஆரம்பத்தில் 1948ல் இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பாக இருந்தே ஈழத்தில் பெருந்தேசியவாதிகளால் அல்லது பேரினவாதிகளால் சிறுபான்மை இனத்தினுடைய மொழி, பண்பாடு ரீதியாக கைவைத்து விடுவதற்கு முன்பாகவே திட்டமிட்ட அவர்களுடைய வாழ்புறங்களை அபகரித்துக் கொள்ளுகிற விளைநிலத்தை அபகரித்துக் கொள்கிற வளம் நிறைந்த வாழ்வினை அபகரித்துக் கொள்கிற ஒரு தனி முயற்சியிலிருந்துதான் ஆரம்பமாகியது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். 

           டி.எஸ் சேனநாயகா அவர்கள் ஆட்சிக்கு வந்தபொழுது முழுச்சுதந்திரம் எய்துவதற்கு முன்பதாக ஆட்சிக்கு வந்திருந்த காலத்திலயே ஆங்கிலேயர்களோடு சேர்ந்து ஒரு விவசாய குடியேற்றத் திட்டம் ஒன்றை  அமைப்பதற்கு விரும்பியபொழுது ஆங்கிலேயர்களால் ஒருசிங்களப் பிரதேசம் அதற்கு முன்மாதிரி நிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதிலே முற்று முழுதாக திருப்தி அடையாத டி.எஸ் சேனாநாயகா அவர்கள் இலங்கையின் ஹைபெக் சிலோன் பத்திரிக்கையின் அவருடைய நண்பர்களாக இருந்த ஒரு சிங்கள பத்திரிக்கை ஆசிரியரை அழைத்து பாலத்தீனத்திலே எவ்வாறு யூதர்கள் குடியேற்றம் செய்கிறார்கள் என்பதை பூரண விவரங்களுடன் கொண்டுவந்து ஒரு ஆய்வறிக்கையை டி.எஸ் சேனநாயாக அவர்களிடம் சமர்ப்பித்தார். அவ்வாறு செய்யப்பட்டதன் பின்னால் தமிழர்களதும் முஸ்லீம்களதும் வாழ்விடமாக கல்லோயாவில் அவர்களுடைய நிலங்கள் அவர்களுடைய வாழ்விடத்திலிருந்து அடித்து குலைத்துவிட்டு அந்த இடத்தில் திட்டமிட்ட விவசாயக் குடியேற்றத்தை நிகழ்த்;தினார். ஆக முதலில் ஆரம்பத்திலேயே பண்டார நாயகாவினால் 1956 - ல் கொண்டுவரப்பட்ட சிங்களமட்ட சட்டம் என்பதிலிருந்து பண்பாட்டுத் தளத்தில் அல்லது எங்களுடைய மொழியில் கைவைத்தல் என்பதின் ஊடாகத்தான் பிரச்சினைகள் தொடங்கியது. வெளியிலே தெரியவில்லை எனவே ஆரம்பத்திலேயே கை வைக்கப்பட்ட விடயம் நிலம். இதைத் தொடர்ந்து அம்பாறையில் டி.எஸ் சேனநாயகாவால் மேற்கொள்ளப்பட்ட அதே வகையான குடியேற்றத்திட்டங்கள் விவசாய குடியேற்றத் திட்டம்.

          அது முஸ்லீம்;களினதும் தமிழ்மக்களினதும் இருசாரரினதும் நிலங்;களை வளைத்துக்கொள்ளுகிற ஒன்றுதான். கல்லோயா குடியேற்றத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டபோது முஸ்லிம் மக்களினாலும் தமிழ் பேசும் மக்களினாலும் கல்லோயா கும்மி போன்ற பல்பேறு பாடல்கள் மக்கள் மத்தியில் பாடப்பட்டு வந்தன. இந்த கல்லோயா குடியேற்றத்திட்டத்திற்கு எதிராக அன்றைக்கே அந்த இலக்கியங்கள் தொடங்கி விட்டன. எனவே நாங்கள் ஒன்றை அறிந்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு இந்த பெருந்தேசியவாதிகள் எங்களுடைய நிலங்களை எங்களை அடித்துக்கொன்று அந்த மக்களை 1948க்கு முன்பாகவே கல்லோயாவில் 150க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டிருக்கலாம். இது எதார்த்தப் பூர்வமான வரலாற்று ரீதியான உண்மை. ஆகவே எப்பொழுது தொடங்கப்பட்டதென்று கேட்கிறபோது 1958ம் ஆண்டு கலவரத்தோடுதான் தொடங்கியது என்பதல்ல. ஆகவே இவ்வாறான நிலப்பறிப்புக் கொள்கை திட்டமிட்டு இலங்கை அரசாங்கத்தினரால் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் மொழி பண்பாடு சேர்ந்த மற்ற ஏனைய துறைகளில் பண்டாரநாயகாவின் அது தொடர்ச்சியாக இன்னொரு வகையும் மேற்கொள்ளப்பட்டது. அவரை இரண்டு கட்சிகளும் மாறிமாறி இந்த பெரும் தேசிய இனவாதிகள் மாறிமாறி ஒருவர் பண்பாட்டில் மேற்கொள்ளுவதை இன்னொருவர் கல்வியில் தரப்படுதலால் மேற்கொள்ள இவ்வாறாகவே இவர்கள் கொண்டுவந்தது.

           இவ்வாறான இடத்தில் இந்த மக்கள் என்ன செய்யலாம்? எதை ஏற்றுக் கொள்ளலாம்? இதற்கு எதிராகப் போராடாமல் இதற்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்களா இல்லையா? இந்த இயக்கங்கள் அல்லது இந்த விடுதலையாலும் பாராளுமன்ற நடைமுறையை ஏற்றுக்கொண்ட கட்சிகள் கூட தங்களினுடைய அகிம்சைவழிப் போராட்டங்களை மேற்கொள்வதற்கு முன்பாகவே பெரிய நிலாவனை போன்ற கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு சார்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் வலுக்கட்டாயமாக படையினர் உதவியோடு சிங்களக்காடையினர் தமிழ்க்கிராமங்களை நோக்கி தாக்குதல் நிகழ்த்துவதற்காக வந்தபொழுது அதற்காக அவர்களுக்காக ஆட்டுக்கடாகறி சமைத்து உண்ணக் கொடுப்பதற்காக ஒரு கடையிலே மேற்கொள்ளப்பட்ட தயாரிப்பு நடைவடிக்கைகளை அவதானித்து கிராம மக்களுக்கு வந்து சொல்ல கிராம மக்கள் தன்னிச்சையாக எழுந்து அவர்களை எதிர்த்துப்போராடி அடித்து கலைத்து சுட்டு விரட்டிய சம்பவங்கள் கிராம மக்களால் மேற்கொள்ளப்பட்டன. அதையும் இவற்றை எல்லாம் விட இவர்களுக்;கு முன் இவற்றையும் விட பின்னால் ஆயுத ரீதியாபோராட்டங்களை முன்னெடுப்பது தமிழ் மக்களுக்கு இடையே உள்ள சாதி எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொள்ளுகின்ற இடதுசாரி இயக்கங்கள் கூட தமிழ் மக்களுக்கு இடையிலே இருந்த உயர்சாதி வேளாண் குலத்தவர்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் ஆலயப்பிரவேச நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தது. அவை கூட இளைஞர்கள் பின்னாளில் ஆயுதம் ஏந்த முன்னுதாரண நடவடிக்கையாகத்தான் அமைந்திருந்தது. 

          ஆகவே இந்த ஆயுதப் போராட்டங்கள் என்பதை அந்த நேரத்தில் இடதுசாரிகள் மேற்கொண்டிருந்தபோது அவற்றை எதிர்த்து எந்தவிதமான ஒரு ஆயுதப்போரட்டமும் பிழை என்று விமர்சிப்பதற்கு எந்தவொரு மனிதாபிமானிகளும் முன்வரவில்லை. ஆனால் எதற்கும் எந்த ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கும் சரி அகிம்சைவழி போராட்டத்திற்கும் சரி அந்த போராட்டம் வீரம் மிக்கதாகவும் நியாய பூர்வமானதாகவும் சர்வதேச மனிதாபிமான நெறிமுறைகளுக்கு குறைவில்லாதவனாகவும் அமைய வேண்டுமென்று குரலெழுப்புதல் நியாயமானது. அதில் தவறில்லை. 

           1956ம் ஆண்டு காலத்திலேயே அகிம்சை ரீதியான போராட்டம் பாராளுமன்ற சனநாயகத்தைத் ஏற்றுக்கொண்ட தமிழரசுக் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது சுதந்திரம் போன்ற பத்திரிக்கைகள் தமிழ்த்தேசிய உணர்வை ஊட்டுகின்ற பத்திரிக்கைகளாக வெளிவந்தன. அவற்றிலேயே சில பலரது கதைகள் வெளிவந்தன. ஆனால் அதிலே மு.தளையசிங்கம் என்பவரால் எழுதப்பட்ட தியாகம் என்கின்ற கதை 1957ல் வெளிவந்தது. அதில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு போராட்டம் ஆயுதக்களராட்டம் தான் இருக்கும் என்ற வகையில் நாவல் பேசுகிறது. 

          ஆக இந்த 61ம் ஆண்டு சத்தியாகிரகப் போராட்டம் தோல்வியுறப்போவதை முன்கூட்டி உணர்ந்தது போலவே அந்த படைப்பிலக்கியம் அமைகிறது. இதற்குப்பின்னால் ஒரு பெரிய நீண்டஇடைவெளி தமிழ்த்தேசியம் சார்ந்த படைப்பிலக்கியங்கள் ஒரு நீண்ட இடைவெளியிலே 58ம் ஆண்டு கலவரம் நிகழ்ந்தது.

          தமிழ்த்தேசியக் கவிதைகளினுடைய முதலாவது தொகுப்பின் ஆரம்பம் தமிழ் எங்கள் ஆயுதம். இவ்வாறு புதுக்கவிதையில் மேலும் பல கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. இதற்குப் பின்னால் பதினோரு ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள். அதற்குப் பின்னால் மரணத்தில் வாழ்வோம் என்கின்ற தொகுப்பு. 11 ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் முழுதும் அரசியல்நிலையை பிரதிபலிப்பவை அல்ல. அதற்குப் பிறகு கண்டியிலிருந்து காலம் எழுதியவரிகள் அதற்குப்பின்னால் செம்மணியில் இடம்பெற்ற அநியாயப் படுகொலைகள் மிக மோசமான நடவடிக்கைகள் போன்றவற்றை வைத்து செம்மணி என்ற ஒரு தொகுப்பு பல்வேறு பேர் எழுதினர். 

          இவ்வாறாக, இந்தக் கவிதைகளில் காலந்தோறும் அந்தந்த காலப்பதிவுகளை பல்வேறு கவிஞர்களினாலும் எழுதப்பட்ட பதிவுகளை உள்ளடக்கிய தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இவைபோல சிறுகதைகளிலே வெளிவந்திருக்கின்றனவா என்று பார்த்தால் சிறுகதைகளிலே வரவில்லை. ஆனால் உயிர்ப்பூ என்கின்ற ஒரு சிறுகதைத் தொகுதி வடமராட்சி பகுதி எழுத்தாளர்களினுடைய தொகுப்பாக வெளிவந்தது. அவற்றில் பல அந்த யுத்த காலத்தினுடைய நெருக்கடி நிலைமைகளையும் மற்ற தமிழ்த்தேசியம் சார்ந்த பிரச்சனைகளையும் பேசின. அப்பொழுதுதான் முதன்முறையாக பேரா.சிவத்தம்பி அவர்கள் எழுதிய முன்னுரை மிக காரசாரமான வாதப்பிரதிவாதங்களை மார்க்சிய வாதிகள் மத்தியில் எழுப்பின. அதை இலக்கியத்தில் நான் அதிகம் சொல்லிக் கொண்டு போனால் நீளும்.

         அவ்வாறு அந்தக் காலகட்டத்தில் இன்னும் பல மார்க்சிய எழுத்தாளர்கள் நந்தினி சேவியர் போன்ற இன்னும் பல மார்க்சியவாதிகளாக இருந்த பல எழுத்தாளர்கள் கூட தமிழ்த்தேசியம் இனப்பிரச்சனை சார்ந்த கதைகள் அந்த காலத்தில் எழுத வெளிப்பட்டார்கள் தெணியான் கலாமணி போன்றோர்கள் அவ்வாறே கலாமணி போன்றவர்கள் கதையெல்லாம் மிகவும் அழகியமுறையில் அந்த சிறுகதைகளைக் கொண்டு வந்தவர். அந்த காலத்தில் ஒரு பெரிய சிறுகதை வெளியீடு பெரிய பாய்ச்சல் இருந்தது. அது ரஞ்சகுமார் கதைகள். அலை சஞ்சிகை இந்தவகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சஞ்சிகை, கவிதைகளாக இருந்தாலும் சரி ஏனைய படைப்புகளாக இருந்தாலும் சரி தமிழச்தேசியக் கோட்பாட்டை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையிலேயே பல படைப்புகளை கொண்டு வந்தன.

          அந்தக் காலத்திலேயே தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட 9 தமிழர்களினுடைய நினைவுச்சின்னங்கள் நொறுக்கப்பட்டபோது, அதனுடைய ஒரு காலப்பதிவாக வெளிவந்த கல்லிமலை கவிஞன் மஜிஸ்ராஜாவினுடைய கவிதைத் தொகுப்பு அறியபடாத வகையினதாக உள்ளது. அதில் புதிய தற்காப்பின் கீழ் என்று ஒரு கவிதை அதிலே வருகிறது.நாங்கள் இன்னும் அதே அடிமைநிலையின் கீழ் என்றவொரு கவிதை வருகிறது. மூன்று நூற்றாண்டகளாக நாங்கள் எவ்வாறாக அடிமைகளாக இருந்தோம் என்பதை சொல்லுகின்ற ஒரு பாடல் அது.மூன்று நூற்றாண்டுகள் போயின. ஆயினும் ஆயினும் அம்மா அம்மா உன்னுடைய நெஞ்சகத்தில்;…இன்னும் விலங்கு! இன்னும் விலங்கு! தமிழ்த்தாய்; மூன்று நூற்றாண்டுகளாக இருக்கின்ற அந்த விலங்கு உடைபடவில்லை என்ற ஆவேசக் குரலாக சேரனுடைய குரல் (அந்த) நெஞ்சு கொண்ட நெறியன் நாடகத்திலே ஒலித்தது. ஆகவே இவ்வாறு நெஞ்சு கொண்ட நெறியனைப் போன்ற நாடகங்கள் இதிலிருந்து தீ சுமந்து ஒரு நாள் நாடகம் வரையும் இந்த நாடகம்வரை மிகுந்த ஒரு முக்கியமான பதிவங்களாகத்தான் அந்தக் காலத்தினுடைய முழுவெளிப்பாட்டையும் கொண்டு வந்தனவாக இருந்தன. ஆகவே இன்று வரைக்கும் இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வுமுன் வைக்கப்படுவதென்பதும் அது தமிழ்மக்களினுடைய சுயநிர்ணய உரிமையை அடியொற்றிதாக இருக்க வேண்டும் என்பதிலும் எங்களுக்கு அசைக்க முடியாத ஒரு திடமான தீர்மானம் பலநூறு கலைஞர்களுக்கு உள்ளது. அதிலிருந்து சேரன் உள்ளிட்ட கலைஞர்கள் ஒன்றும் பின்னிணைப்பை செய்தவர்கள்; என்று நாங்கள் என்றும் கூறவில்லை.

          இந்த போர்க்காலத்தின் இடையிலே ஏற்பட்ட சில நெறிபிறழ்வுகளுக்கு எதிரானவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் எங்களுடைய பழைய பயணத்தில் இருவாறாக இதில் பின்னிணைவு கொண்ட இளைஞர்களும் இதில் மிக அதிதீவிரமான நிலை எடுத்துக்கொண்டு அதிதீவிரமாக போரை ஆதரிக்கின்ற நிலையில் இருப்பவர்களும் முழு விசாரணை செய்து சந்திக்கின்ற ஒரு முக்கியமான புள்ளிமையம் ஏற்படும் இடத்து இந்த போருக்கு முடிவு வருவதற்கும் அதே நேரம் எங்களுக்கும் மிகச் சரியான தீர்வு கிட்டுவதற்கும் இந்த தற்போதைய போருக்கு தீர்வு காணப்போவதில்லை. 

        தற்போது யாழ்ப்பாணத்தில் நடந்த நிலவரங்கள் எலக்சனுக்காக நடந்த வழியனுப்பு விழாவாகவே 3000 உயிர்களை மடிய வைத்திருக்கின்ற வகையில் நடந்ததுதான் காட்டுகிறது. இது போலியான கவிஞர் நுஹ்மான் சொல்வதைப் போல அந்த பாடலோடு உங்களுக்கு முடிக்கலாம் என்றிருக்கிறேன்.புகலிடம் பெற்றவர்கள் நாங்கள் கனவு காண்பவர்களால் பொய்யான சமாதானத்தால் குழப்பி விடப்பட்டவர்களால் பூமியில் எல்லா பாகங்களிலும் அடிமைகளாய்…அகதிகளாய்…அவமானப்பட்டவர்கள் நாங்கள்.எங்கள் வீடுகளில் நாய்கள் விளையாடுகின்றன.எங்கள் வீடுகளில் முதியோர்கள் தனித்து விடப்படுகிறார்கள் எங்கள் வீடுகளில் விளக்குகள் எரிவதில்லை.எங்கள் கிராமத்தின் வீதிகள் இறந்து போயின.அய்யோ அறுவடைக்காலத்தில் எங்கள் வயல்கள் பறி போயின.அய்யோ மீன்விடும் காலத்தில் எங்கள் கடல்கள் பறிபோயிற்று. நாங்கள் கதியற்றுப் போனோம். நாங்கள் கதியற்றுப் போனோம். கதியற்றுப் போன இந்த நிலைக்கு குரல் கொடுப்பது கலைஞர்களின் பணி. இவற்றுக்கான தீர்வு காண போராடுவது போராளிகளின் பணி.இந்த இரண்டில் இரண்டுமான எழுச்சி சரியான ஒரு தர்மபாதையை நோக்கி நடைபோடுமானால் அது நமக்கு ஒரு சந்தோசமான காலமாக அமையும். விடைபெறுகிறேன்.

நந்தினி சேவியர்

                  அரசியல் வரலாற்றைப் பேசவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லாமல் பறிபோனால் நாங்கள் ஏன் இந்த பிரச்சனையிலே இப்படியான படைப்புகளை படைக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்பதைச்சொன்னால் உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நாங்கள் நினைக்கிறோம்.

        ஒரு காலத்தினிலே யாழ்ப்பாணத்திலே தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஒரு போராட்டத்தை - ஆயுதப்போராட்டத்தைத் துவங்கியது. ஆலயப்பிரவேசம் தேநீர்கடைப் பிரவேசம் போன்றவற்றை இடதுசாரிகள் என்று சொல்லப்படுபவர்கள் ஆயுதப்போராட்டத்தை உக்கிரமாக நடத்தினார்கள். அப்பொழுதும் அந்த போராட்டத்தை போராட்டத்தில் எதிரணியாய் நின்ற கணிசமான தொகையினர் அவர்களுடைய குரலாக காசிஆனந்தன் குரல்; ஒலித்தது. 

           அந்தப் பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பது என்;ன முறை? எனவே அப்பொழுது நாங்கள் உண்மையிலேயே எங்களுக்கு இந்த தீண்டாமை ஒழிப்பு பற்றி சொன்ன இந்த போராட்;டத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிற்கிற இந்த மக்களின் அடக்குபவர்கள் மீது அவர்கள் சொல்லுகின்ற அந்த தத்துவங்களின் மீது எங்களுக்கு அப்பொழுது சிங்கள பிரதேசங்களி;ல் அல்ல: சிங்களவர்களுடைய அடக்குமுறைகள் பற்றியதைவிட இது கொஞ்சம் உக்கிரமாக எங்களுக்குத் தெரிந்தது. ஆனால் பிற்காலத்திலே நாங்கள் இந்த தேசிய இயக்கத்தில் எங்கள் கார்த்திகேசன் போன்றவர்கள் கூட ஒரு இடதுசாரி என்று பார்க்காமல் ரயில்நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட பொழுதுதான் அது சாதியில குறைஞ்சதா இருந்தாலும் பரவாயில்லை. தமிழனென்றால் அடிவிழும் என்கிற ஒரு நிலைப்பாட்டை நாங்கள் உணரக் கூடியதாக இருந்தது. சுதந்திரன் ஒரு கவிதையில் பாடினார்.

          மாகோ சந்தியிலே என்னை ஒருவன் அடித்தான்.அவனுடைய முகத்தைப் பார்த்த பொழுதும் மாவிட்ட புரத்தைக் கண்டதுபோல அந்த முகம் இருந்தது என்ற தொனிபட பாடுகிறார். அடித்தவர்களுடைய முகம் எல்லாமே ஒரு அடக்குகின்றவர்களுடைய முகமாக அவருக்குப்பட்டது. உண்மையிலேயே 83 கலவரத்திற்கும் வடமராட்சியில் நடந்த ழிநசயவழைன் இன் டஇடிநசயவழைன் போன்ற நிகழ்வுகளில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேதான் உண்மையில் நாங்கள் ஒரு எங்களுடைய கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டது. 

         அடக்குமுறைக் கொடுமை எங்கிருந்து வந்தாலும் அதற்கு எதிராக எங்களுடைய பேனாக்களை பயன்படுத்த வேண்டுமென்கின்ற ஒரு காரணத்திற்காக எங்களுடைய அடையாள அட்டை தரப்பட்டிருப்பது எங்களை தமிழன் என்று காட்டுவதற்காக என்பதை உணர்ந்து கொண்ட காரணத்தினால் அந்த அடக்குமுறைக்கு எதிராக நான் என்னுடைய பேனாவை நான் பயன்படுத்த துவங்கினேன். தொடர்ந்தும் பயன்படுத்துவேன். அப்படியான படைப்புகள் தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கப்படுகின்ற அல்லது பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு மத்தியிலே நின்று வெளிவந்து கொண்டிருப்பதை நான் பார்க்க கூடியதாக இருக்கிறது என்று சொல்லுகிறேன்.

          உண்மையிலேயே நாங்கள் சிலரை தவறவிடுகிறோம். எதிரணியைச் சேர்ந்தவர் என்பதற்காக செங்கை ஆழியானுடைய படைப்புகளை நாங்கள் நிச்சயமாக ஆவணப்படுத்த வேண்டிய தேவை ஒன்று எங்களுக்கிருக்கிறது. காரணம் என்னவென்றால் இரவுநேரப் பயணிகள் நாங்கள் பலாலி கடலைத் தாண்டி பிரியாமல் அந்த காலத்தை காரணப்படுத்திய ஒரு நல்ல புத்தகம் இரவுநேரப் பயணிகள் யாழ்ப்பாணத்து ராத்திரிகளைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார். அதுபோல ரஞ்சகுமார் என்று வன்னிப்பிரதேசத்திலே தாமரைச்செல்வி என்கின்ற ஒரு பெண் இவர்கள் தங்களுடைய உண்மையான கஷ்டங்களையும் இதுகளையும் எழுதுகின்ற பொழுது அதுதான் போர்க்காலச்சூழலில் வருகின்ற இலக்கியம். போரின் மத்தியில் வாழ்ந்துப்பட்ட அனுபவங்களை அவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் என்னுடைய போர்க்களத்தை வெளியிலே இருந்து பார்த்துக்கொண்டு பாவனை பண்ணுகின்ற அந்த போலியான இலக்கியங்களும் வரத்தான் செய்கின்றன. அவற்றைவிட உண்மையான இலக்கியங்களை நீங்கள் தேடி படிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு என்னுடைய இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை நான் முடித்துக்கொள்கிறேன். 

பார்வதி கந்தசாமி

        நானும் என்னைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறும்படி போராசிரியர் பணித்திருந்தார். நான் இலங்கையில் வாழ்ந்து இன்று கனடாவில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். நான் யாழ்ப்பாண குடா நாடுக்கும் வெளியே முல்லைத்தீவு என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு சிறு கிராமத்திலிருந்து வந்தவர். இரு பகுதிகளையும் இணைந்த பெற்றோர்க்குப் புதல்வியாகப் பிறந்த காரணத்தினால் எனக்கு இரண்டு விதமான குணங்கள் உண்டு. நான் இன்று கூடுதலாக வாழ்க்கையில் மிக அடிமட்டத்தில் உள்ள மக்களுடன் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். குறிப்பாக தமிழ்மக்களுடன் கனடாவில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளேன். அதனால் நான் இறுதியாக போடப்பட்ட ஒரு நாடகம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் போட்ட ஒரு நாடகம் மனவிலங்கு அதில் இறுதியாக வாசிக்கப்பட்ட அடிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எத்தகைய மனத்தடங்களில் அங்குள்ள மக்கள் வாழ்கின்றார்கள் என்பதனை நீங்கள் அறிய சாத்தியமாக இருக்கும்.

சாவின் தடயங்கள் பதித்த 

தேசம் அகன்று 

காலினிலே ஆட்கொள்ளும்

ஆழ்கடல்கள் பலதாண்டி 

கையில் உயிரேந்தி வந்த மகன்

புகலிடத்தில் சுவடு எதுவுமின்றி

உருக்குலைந்து போன செய்தி 

தமிழ்த்தாயின் சூல்களிலே புகுந்து 

சுவாலை வடிவாகி 

விதவைக் காற்றாகி

ஈழத்துக் காற்றினிலும் கலந்தது உயிர்.


              புகலிடத்தில் வாழும் தமிழ்மக்கள் அங்கு தோன்றும் இலக்கியங்களுக்குப் பின்னணியாக உள்ள சில அம்சங்களைப் பற்றி நாம் சில வார்த்தைகள் உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்.

          புகலிடத்தில் உள்ள இலக்கியத்தளம் தமிழகத்தில் உள்ள இலக்கியத்தளத்திலிருந்து முற்றி;லும் வேறுபட்டது. அதாவது பழந்தமிழ் இலக்கியப் பரப்பிலிருந்து வியாபித்த இந்த இலக்கியத் தளத்திலிருந்து முக்கியமான ஒரு பாய்ச்சலாக இந்த புகலிட இலக்கியங்களை நாங்கள் கவனிக்கக் கூடியதாக இருக்கின்றது. இங்கு பேசப்பட்ட கூறப்பட்ட கவிதைகள் அவற்றிற்கு ஆதாரமாகின்றன.

           ஜெயபாலன் கூட தனது அண்மையில் வெளிவந்த ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் அந்த கவிதைத் தொகுப்பில் தனது (தாயைப் பற்றிய) தாய்க்காக அதனை அற்பணிக்கின்றார். தனது தொப்புள் கொடியை வெட்டி விடாது கண்ணீராலும் செந்நீராலும் என்னைக் காத்து வருகிற அம்மா ராமநாத ராசம்மாவுக்கு என்று அந்தத் தொகுதி கூறும்பொழுது அங்கே…அந்த தொப்புள் கொடி இன்னமும் தொடர்ந்தும் ஈழத்தில் இருக்கின்ற அந்த நம்பிக்கையை ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த இந்த புகலிடங்களில் வாழும் மக்களிடம் நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. 

            ஈழத்திலிருந்து புகலிடங்களுக்குப் புலம்பெயர்ந்தோர் என்று நாங்கள் கூறும்போது அவர்களை நாங்கள் இருவகையாக கணிக்கலாம். அவர்கள் ஈழத்திலிருந்து மிக அண்டை நாடான இந்தியாவிற்கு வந்து புலம்பெயர்ந்தவர்கள். அவர்களில் இரு வகையினர் உள்ளனர். ஒரு வகையினர் முகாம்களுக்குள் மடங்கி வாழ்க்கையைச் சமாளிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு பகுதியினர். புலம்பெயர்ந்த நாடுகளுக்கு பலராலும் கூறப்படும் இந்த மேற்கு நாடுகளுக்குச் சென்றவர்கள் அனுப்பும் அன்னியச் செலவாணியை ஓரளவுக்கு சமாளித்துக் கொண்டு வாழ்பவர்கள் இந்த இரண்டு முகங்களும் இந்தியாவிலேயே உள்ளன. (ஈழத்துக்கு வெளியே) இந்தியாவிற்கு வெளியேயான புகலிடத்தைச் சேர்ந்தவர்களென்று நாங்கள் கூறுபவர்கள் அவர்களிலும் பல்வேறு முகங்கள் காணப்படுகின்றன.

           அங்கு தாங்கள் புகலிடத்தைச் சாராதவர்கள் என்றும் புகலிட அதாவது அகதிகளாக வந்தவர்கள் அல்ல என்று மார்பைத் தட்டிக்கொண்டு நின்ற ஒரு பகுதியினர் அந்த நாடுகளிலே காணப்படுகின்றனர். குறிப்பாக இங்கிலாந்திலும் அமெரிக்காக் கண்டத்திலும் வாழ்கின்றார்கள். அவர்கள் இந்த 83-க்கு முன்னர் சென்றவர்கள் 83-ஆம் ஆண்டுக்குப் பின்னால் சென்றவர்களும் அதே நம்பிக்கை கொண்டவர்கள் சிலர் வாழ்கிறார்கள். அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் வேலை பார்த்துவிட்டு அங்கு சென்றவர்கள். அவர்கள் அகதிகளாகச் சென்று அகதிகளாக தஞ்சம் கேட்ட மக்களை வேற்று நாட்டார்போல புறக்கணித்த செய்திகள் இந்த இலக்கியத்தில் நீங்கள் காணலாம். புகலிட எழுத்துக்களிலே காணப்படுகின்றன. ஆனால் இன்று அந்த நிலைமாறி ஈழத்தில் இருந்துவந்த அனைவரும் அகதிகள் என்ற அந்த ஒரு பொதுத்தன்மையை இன்று நாங்கள் பலரிடமும் காணக்கூடியதாக இருக்கிறது.

          நாங்கள் வேறுபட்டவர்கள் நாங்கள் அகதிகள் அல்ல என்ற அந்த நிலைப்பாட்டை அவர்கள் எடுக்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்றால் இந்த நாடுகளில் எவ்வாறு தலித்துக்களின் பிரச்சனைகள் பெரிய பிரச்சனைகளாக தலித் இலக்கியம் கூடுதலான மக்களுடைய கவனத்துக்கு எடுத்துக்கொண்டதோ அது போல மேற்கு நாடுகளிலும் நாங்கள் ஈழத்தவர்கள் அல்ல அல்லது அகதிகள் அல்ல என்று கூறியவர் கூட நாங்களும் ஈழத்தவர்கள் தான் என்ற ஒரு உணர்வுக்கு அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதற்கான காரணம் அங்குள்ள இனத்துவேசம். அந்த இனத்துவேசத்துக்கு அவர்கள் பிராமணர்களாக இருந்தால் என்ன? வேளாளர்களாக இருந்தாலென்ன? தலித்துகளாக இருந்தாலென்ன? அவர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள். இந்த நாட்டிலே மக்கள் புகலிடத்திலே பொதுமைப்பட்ட உணர்வைப் பெறுவதற்கு இது ஒரு பிரதான காரணம் . அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அங்கு இன்றும் ஸ்திரப்படுத்த முடியவில்லை.

          பொருளாதார அடிப்படையில் அவர்கள் தங்களை விடுவிக்க முடியாதொரு சூழலில் இருக்கிறார்கள்.  தங்கி நிற்றல் அங்கு உண்டு. அங்குவாழும் மக்கள் உண்மை என்பது என்ன அர்த்தம் என்று இல்லாதவர்களாக வாழ்கின்றார்கள். வாழ்க்கையில் ஒரு பிடிப்பு நம்பிக்கை உண்டு என்ற எண்ணப்பாடு அவர்களிடம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. அவர்களுடைய அடையாளம் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது. வேர்கள் அறுக்கப்பட்ட மனிதரை அங்கு மீள் நடுவை செய்யப்பட்ட நிலைமைதான் இந்த நாடுகளில் காணப்படுகின்றது. இதனால் இவர்கள் தங்களுடைய அடையாளங்களை நிலைநிறுத்துவதற்கு பல்வேறு அங்கமான முயற்சிகளை அங்கு மேற்கொள்கிறார்கள். இதில் குறிப்பாக ஒரு காலத்தில் தங்களை தங்களுடைய காலில் நிற்கக்கூடிய நிலைக்கு வந்தவர்கள் இங்கு காணப்பட்ட பல்வேறு பாரம்பரியங்களை மீளுருவாக்கம் செய்ய முயலுகின்றனர்.

        இங்கு சாதி அடிப்படையில் மீளுருவாக்கம் செய்யாமல் அங்கு அதனை வேறு ஒரு வித்தியாசமான வடிவத்தில் மீளுருவாக்கம் செய்கின்றனர்.

         யாழ்ப்பாணத்துப் பாடசாலைகளை பாலமாகக் கொண்டு அங்கு சங்கங்கள் அதாவது பழைய மாணவச்சங்கங்களை உருவாக்கி அதில் தலைமைத்துவம் நாங்கள் தலைவர்கள் என்று போட்டியிடுகின்றார்கள். இவர்களில் பெரும்பாலனவர்களுடைய வேலை அங்கு பெரிய அதிபர்களாக இருந்தவர்கள் கூட இங்கு செக்யுரிட்டி கார்ட்சாக வேலை செய்கிறார்கள். அதாவது பெரிய கம்பெனிகள் முதலிய இடங்கள் சென்று காவலர்களாக வேலை செய்கின்றார்கள். ஆனால் இந்த பழைய மாணவச்சங்கங்கள் அவர்களுக்கு ஒரு தளமாக தங்களது முகங்களை அடையாளம் காட்டக்கூடிய தாங்கள் சமூகத்தில் பெரியவர்களாக இருக்கின்றோமென்று அடையாளம் காட்டக்கூடிய ஒரு தன்மையை அங்கு நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.

           சமூகத்தன்மைக்கு பல்வேறு உதாரணங்களை நாங்கள் காட்டலாம். இத்தகைய நிலைமையில் சில மாற்றங்கள் மேற்குநாடுகளில் தேர்தல் நடைப்பெற்றுள்ளன. அதில் குறிப்பாக பெண்களுக்குச் சுதந்திரம் கிடைத்துள்ளது என்ற பரவலான ஒருஎண்ணப்போக்கு பொதுவாக மக்களிடம் காணப்படுகின்றது. மேற்குநாடுகளுக்குச் சென்ற பெண்கள்; அங்கு சென்றுவிட்டார்கள். அவர்களுக்கு உடை சுதந்திரம் ஆடைசுதந்திரம் கிடைத்துவிட்டது. அவர்கள் கால்சட்டை போடுகிறார்கள் (ண்)சாக்ஸ் போடுகிறார்கள் விரும்பி;ய உடையை அணியக்கூடிய சூழல் வந்துவிட்டது என்பதை அவர்கள் வெளியில் காண்கிறார்கள். இதனால் ஒரு அச்சுறுத்தலாக அமைகிறது. அதைத்தவிர அந்த நாட்டிலுள்ள சில  சட்டங்கள் அங்கு பெண்களுக்கு சில உரிமைகளைப் பெறுவதற்கென வழி வகைகளைச் செய்துள்ளன. அதனை நாங்கள் மறுக்கமுடியாது. ஆனால் அதேநேரத்தில் அங்கு எங்களுடைய பெண்கள் முழுச்சுதந்திரத்தை உடையவர்களாக இருக்கின்றார்களா? என்றால் இல்லை. எமது நாட்டில் நடைபெறாத தற்கொலைகள் அந்த நாடுகளில் நடைபெறுகின்றன. இது எங்கள் மக்கள் மத்தியில் நடைபெறுகின்றன. இதனால் அங்கு பெண்களுடைய நிலைமையிலே சில மாற்றங்கள் நடந்தாலும் அவை ஆக்கப்ப+ர்வமானவையாக இல்லை.        

இந்தமேற்கு நாடுகளிலே அதாவது மக்களை குழுக்கள் குழுக்களாக எங்களுடைய மக்களையே குழுக்கள் குழுக்களாகக் காட்டும் ஒரு பண்பு காணப்படுகின்றது. அதாவது உயர்ந்த மாடிக் கட்;டங்களில் சில கட்டடங்களில் ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். கடந்த வருடம் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இரு பெண்கள் அவர்களுடைய உறவினர்களால் தாக்கப்பட்டார்கள். தாக்கப்பட்டதும் பத்திரிக்கைகளிலிருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு பெண் நிறுவனம் அந்த பத்திரிக்கைக்கு பதில் அளிக்கும்போது அந்த பெண் அந்த நிறுவனத்தின் இயக்குநர் கூறினார். ““இந்தப் பெண்கள் படிப்பறிவு இல்லாத கீழ்ச்சாதிமக்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியான மக்கள்தான் இப்படியான வேலையைச் செய்வார்கள். உயர்ந்த சாதி மக்கள் அப்படியான வேலையைச் செய்வதில்லை. இந்த இழிந்த சாதியினருக்குப் பாடம் புகட்டுவதற்காகத்தான் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது”“ என்று.இவ்வாறு தான் பல நிறுவனங்களும். உண்மைத்தன்மை இல்லாமல் அவர்கள் ஏதோ ஒரு அந்தரமான சூழ்;நிலையிலே வாழ்கின்றார்கள். இந்த நிறுவனத்தைப்பற்றி பின்னர் துண்டு பிரசுரங்கள் அடித்துவிடப்பட்டன. எனினும் அந்தநிறுவனம் இன்றும் அங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

எங்களுடைய புலம்பெயர்ந்த நாடுகளிலேயே சஞ்சிகைகள் பத்திரிக்கைகள் வெளிவருகின்றன. இங்கு நான் காட்டினேன் சில பத்திரிக்கைகளை. அந்த பத்திரிக்கைகள் ஒரு போக்குடையவையாகவும் எந்த விதமான சாரம்சத்தையும் கொள்ளாமல் ஒன்றே திரும்பத் திரும்பப் பாடும் பத்திரிக்கைகளாகவே பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன. 

           ஓரிரு பத்திரிக்கைகள்தான் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து (சஞ்சிகைகள்) வெளிவருகின்றன. உயிர்நிழல, எக்ஸில், காலம் போன்ற சஞ்சிகைகளெல்;லாம் புலம்பெயர்ந்த நாடுகளில் வரும் சஞ்சிகைகள் தாக்கமானவையாக உள்ளன. ஏனைய பத்திரிக்கைகள் அங்கு எந்தவிதமான சாராம்சத்தையும் கொள்ளாமல் தாங்கள் தங்களுடைய முகம் வெளியேதெரியவேண்டிய அந்த நோக்கத்திற்காக இயங்குபவையாக உள்ளன. உதாரணமாக ஒரு பத்திரிக்கை ஆசிரியனுடைய பெயர் அந்தப் பத்திரிக்கையின் பெயர் தகப்பனுடைய பெயர் வராது (கார்த்திகேசு சிவதம்பி என்று வராது) அது உதியன் சோஅண்டுசோ அப்படித்தான் அந்த பத்திரிக்கைகள் பத்திரிக்கை ஆசிரியர்களை கூப்பிடுவார்கள். அந்த பத்திரிக்கை ஆசிரியர்கள் தங்களுடைய முகத்தைக் காட்டுவதற்காக அதனை பயன்படுத்துகின்றனர். இவ்வாறான போக்கு இந்த புகலிடங்களில் காணப்படுகின்றன. மக்களுடைய வாழ்க்கையின் சோககீதங்கள் இந்த புலம்பெயர்ந்த இலக்கியங்களிலேயே தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நான் எனது கால அவகாசம் காரணமாக மீண்டும் உங்களுடன் கலந்துரையாடலில் பங்கு கொள்கிறேன். வணக்கம்.

ரஞ்சகுமார்

முதலிலேயே இதுவரை காலமும் ஒருவழிப் பாதையாக அமைப்பதற்கு ஆன முயற்சியை எடுத்து ஆறாம் திணை காலச்சுவடு சரிநிகர் ஆகியவற்றுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன் இங்கே ஒரு அருமையான கலந்துரையாடலை இந்த பல்கலைக்கழகத்தில் இனிய நண்பர்களுடன் செலவழிப்பதற்காக களம் அமைத்துத்தந்த பேரா.அரசு அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவத்துக்கொள்கிறேன். காலதாமதமாக வந்ததற்கான மன்னிப்பை ஏனெனில் எமது நாட்டில் சுதந்திரமாக பயணிக்கவோ பேசவோ எழுதவோ முடியாநிலையில் இங்கே வந்ததும் நாங்கள் அனுபவிக்கும் அந்த ஆவேசத்துடன் அவுத்துவுட்ட ஆட்டுகுட்டிகள்மாதிரி நாங்கள் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதன் காரணமாகத்தான் மத்தியானம் இந்த சபைக்குத் தாமதமாக வந்தேன். அதற்கான மன்னிப்பை உங்களிடம் கூறிக்கொண்டு தாமதமாக வந்தபடியால் இந்த கலந்துரையாடல் எந்த வழியில் சென்றதென்று பூரணமாகத் தெரியாநிலை.

          நான் வந்தபோது நண்பர்கள் வில்வரத்தினம் அவர்கள் இலங்கை அரசியல் வரலாற்றின் சில பகுதியைத் தொட்டுச் சென்று கொண்டிருந்தார். அவர் குறிப்பிட மறந்த ஒரு விவரத்தை நான் உங்களுக்குச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

          பொதுவாக இங்கு குறிப்பிட்டது தமிழ்ப்பிரதேசத்தில் நிகழ்ந்த ஆயுதப் போராட்டங்களைப் பற்றி அதைவிட முக்கியமான இரண்டு பெரிய ஆயுதக்கிளர்ச்சியை சிங்களக் காடையர்கள் நிகழ்த்தி இரண்டு தடயம் பெரிய படுகொலைகளுக்கு உள்ளானோம். மேலும் தற்போதும் கூட அதே மக்கள் விடுதலை முன்னணி என்கிற அந்தசிங்கள தீவிரவாத இயக்கம் மேலும் மறைமுக அரசியல் ராணுவ வேலைகளை செய்துகொண்டு இருக்கிறது. அவர்களுடைய சில பகுதியினர் கூறிக்கொள்கிறார்கள். 

           தற்போதைய தமிழ்த்தேசிய விடுதலையைத் தலைமை தாங்கிச் செல்லும் போராளிகளும் தங்களுக்கு வெளிநாடுகளில் ராஜதந்திர உணர்வுகள் தட்டி வளர்க்கப்படுவதால்; அதை பரிபூரணமாக நம்பாவிடினும் அதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு என்றும் சில வேளைகளில் இந்த நமது போராட்டம் அவர்கள் 10 - 15 வருடங்களில் திசை திருப்பப்படக்கூடிய சூழ்நிலைகளும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ள வேண்டும். சொல்லப்போனால்… இந்த மக்களுடைய உணர்வுகளைப் பற்றி சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

           

எனவே என்னுடைய கதைகள் சில எப்படி எழுதப்பட்டன என்பதைப் பற்றி உங்களுக்கு ஒரு ரெண்டு மூன்று விசயங்கள் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

           பொதுவாக நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்னுடைய வயது 41. நண்பர் சேரனுக்கு சிலவேளை 42 43 இருக்கலாம் வில்வரத்தினம் ஜெயபாலன் (ஒரு) எல்லாரும் நீங்க பார்த்தீங்கள். இப்ப தமிழ்த்தேசியவாதத்தை தலைமைதாங்கி புகழ்மாலை போட்டுக்கொண்டிருக்கின்ற தலைவர்கள் எல்லோரும் ஒரு 35 அல்லது 45வயசுக்கு இடப்பட்ட ஆட்களாகத்தான் இருக்கணும். இந்த வயசுக்குட்பட்ட என்னோட தலைமுறை என்ற மனோத்தத்துவம் பொதுவாக தமிழ்த்தேசியவாதத்துடன் அதன் வெற்றியுடன்தான் எங்கள் வாழ்வு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை உணர்ந்த அதற்கான வியர்வை சிந்திக் கொண்டிருக்கிற ஒரு தலைமுறை என்று நீங்கள் இப்படி கொள்ளலாம். இப்பொழுது நாங்கள் இங்கு சொல்லுவார்கள் +2 அட்வான்ஸ் லெவல் படித்துக்கொண்டிருக்கிற காலகட்டத்தில்தான் இந்த விடுதலை உணர்வுகள் இளைஞர் மட்டத்தில் மிகவும் உக்கிரமடையத் துவங்கின. அந்தக் காலகட்டத்தில் என்னுடன் படித்தவர்கள் பலபேர் இன்று உயிருடன் இல்லை. பலபேர் எங்களுடன் இல்லை. வேறு ஒரு இடத்தில் நாட்டிலிருந்து அல்லது இந்த உலகத்திலிருந்து பிரிந்து போயிருக்கிறார்கள். அந்த நினைவுகளின் ஊடகத்தான்; எமது கவிதைகளோ எங்கட கட்டுரைகளோ எங்கட கதைகளோ எழுதப்படுகின்ற இந்தக் காரணத்தால் குறுக்கான இரண்டு கதைகளை எவ்வாறு எழுதினேன் என்று உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

           உங்களுக்குத் தெரியும் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடிய பாட்டொன்று காலம் உனக்கொரு பாட்டு எழுதும் காலம் எனக்கொரு எழுதும் எம்.ஜி.ஆர் படப்பாடலாக இருக்கவேண்டும். அதை காலம் உனக்கொரு பாட்டெழுதும் என்று நான் மாற்றி எழுதினேன். என்னுடைய கதைகள் பெரும்பாலும் முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. கற்பனைகள் என்பது கொஞ்சம்கூட இருக்காது. இந்தக் கதைகளை எனக்குச் சொன்னவர்கள் சாதாரண மக்கள். நேரடியாக அனுபவிக்காவிடினும் இந்த கதைகளை எங்கள் கிராமத்துப் பெண்கள் சொல்வதைக் கேட்டுத்தான் நான் அந்தக் கதைகளை  எழுதுகிறேன்.

   அந்த, காலம் உனக்கொரு பாட்டெழுதும் என்ற கதையில் வருகிற ஏழு போராளிகள். அந்த ஏழு போராளிகளுள் ஒருவரை நான் நேரடியாக அறிவேன். அவன் எனக்கு ஒரு வயதோ இரண்டு வயதோ இளமையானவன். எனது பாடசாலையில் படித்து வந்தவன். நல்ல நண்பன். அவர்கள் எங்களது ஊரில் இருந்த இந்தக் காலகட்டம் நான் சொல்லுகிற காலகட்டம் இப்பொழுதைப்போல யுத்தம்புரிகிற காலகட்டமல்ல. கிரனைட்டுகள் பிஸ்டல்கள்; ஏ.கே.47 அந்த மாதிரியான யுத்தச் சூழ்நிலையில் மக்களின் பலமான ஆதரவு அவர்களுக்கு அந்தக் காலகட்டத்தில் இருந்தது. அப்பொழுது ஒரு நல்ல மழைபெய்கிற நாள். ஒரு வேனில் ஏறி இன்னொரு இடத்துக்கு சில ஆயுதங்களை கைமாற்றுவதற்காக சென்று கொண்டிருந்தார்கள். நல்ல மழைபெய்த காரணத்தினாலே ரோட்டுல, சன நடமாட்டமெல்லாம் குறைஞ்சு சரியான அமைதியான சரியான பயங்கரமழை. அப்ப மழை பெய்து கொண்டிருக்கிற நேரத்தில திடீரென எதீர்பக்கமாய் ஆர்மீக்காரன் வந்துட்டான். வெகிக்கிள் சவுண்ட் உடனே ரெண்டு பக்கத்தாலும் பயர் பண்ணத் துவங்குவாங்க. அவங்களும் பயர் பண்ணுவாங்க. அவங்களும் பயர் பண்ணுவாங்க. இதுகள்ள இருந்த பேர்தான் கொஞ்சம் அவசரப்பட்டு எரிந்த வெடிகுண்டு அந்த கணத்துலேயே வெடிச்சு அதில ஆறுபேர் செத்துப்போவாங்க. ஒருத்தன் மட்டும் தப்பிக்கிறான். ஒருத்தன் மட்டும் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறான். தப்பினவன் என்னோட படிச்சவன். என்னுடைய பள்ளிக் கூடத்தில ஒன்னாவது படித்தவன். என்னோட ரெண்டு மூணு வயசு குறைஞ்சவன். தப்பியோடி நிறைய தூரம் நாலஞ்சு மைல் தப்பி ஓடியிருக்கிறான். ஓடியபொழுதும் இன்னொரு ஆர்மிக்குரூப் வந்திருக்கு. வெறுமே சிவில்ல. ஒரு வேன்ல சிவில்ல இன்னொரு ஆனே குரூப் வந்திருக்கு. அது நாலஞ்சு மைல்களுக்கு அப்பால் இவன் தப்பி ஓடி இன்னொரு கிராமத்திற்கு தப்பி ஓடுவதற்காக களச்சுப் போனான். நல்லா களச்சு ஒரு அஞ்சு மையில் மட்டும் ஓடிப்போக எதுக்க ஒரு வேன் வந்து போவும். அவன் நெனச்சுப்பான் “பெயரின் போறதுதானே?” கையத்தட்டி “நான் வரட்டுமா?” என்றுகேட்டான். “சரி வா”ண்டு கூப்பிடுவான். கிட்ட போய் பார்த்தாதான் தெரியும் அதுவும் ஆர்மிகார் என்று. அதோட இந்த கதை முடியுது. அந்தக் கதைதான் முதல்முதல்ல என்னை ஈழத்து இலக்கிய வரலாற்றில் முக்கியமான, முக்கியமான என்று சொல்லமாட்டேன். வித்தியாசமான எழுத்தாளராக என்னை இனங்காட்டியது. 

   இன்னொரு கதை இருக்கு. “கோளரு பதிகம்” என்ற ஒரு கதை இருக்கு. இந்த கதையும் கூட முழுக்க முழுக்க உண்மைச்சம்பவத்தை கொண்டது. உங்களுக்குத் தெரியுமோ? தெரியாதோ? எங்களுடைய அரசியல் இயக்கங்கள் நிறைய இருந்தன. அதிலொரு இயக்கம் முழுக்க முழுக்க குறிப்பிடத் தகுந்ததொரு இயக்கம் ண்.டு.கு.P அந்த ண்.டு.கு.P  இயக்கம் அநேகமாக இடதுசாரி தன்மையை கொண்டது. அந்த இயக்கம் இந்த போராட்டத் தலைமை வகுத்து நடத்தி இருந்தால் இந்தமுடிவுகள் இப்போது நடந்து கொண்டிருக்கிற அராஜகங்களையெல்லாமல் எல்லாம் இல்லாமல் வேறுவிதமாக இந்த போராட்டங்கள் நடந்திருக்கக் கூடுமென்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த ண்.டு.கு.P யில் இருந்த தோழர்கள் என்னுடன் நெருங்கப்ப் பழகினவர்கள், ஒருவர் என்னுடைய அயல்கிராமத்தைச் சார்ந்தவர். இன்னொருவர் என்னுடைய கிராமத்தைச் சேர்ந்த சிறுவயதிலேயே என்னுடன் பயின்றவர். இந்த இரண்டு பேரையும் பற்றியதுதான் அந்த கதை. 

           அத்துடன் அந்த யாழ்ப்பாண நகரில் கொஞ்சகாலம் எனது கிராமத்தைவிட்டு யாழ்ப்பாண நகரில் தொழில் நிமித்தமான ஒரு வாடகை வீட்டில் நான் இருந்தேன். அந்த வாடகை வீடு ஒரு காலத்தில் ஒரு தீவிரவாத இயக்கத்தின் முகாமாக இருந்தது. தீவிரவாத இயக்கங்களில் எழுந்த மோதலின்; காரணமாக, அந்த வாடகை வீட்டில் ஒரே நாளில் எதிர் தரப்பைச் சேர்ந்த 28 பெயரை ஒரே நாளில் ஒரு தரப்பு சுட்டுக்கொன்று அதை புதைத்தது. அதே அந்த வீட்டில் அதே அறையுள் இந்த  ண்.டு.கு.P  எல்லாம் அவர்களை தடை செய்யப்பட்ட பிறகு, சேர்ந்த ஒரு நண்பர் என்னுடன் வந்து தங்கினார். தங்கியபொழுது அவர் எனக்குச் சில கதைகளைச் சொன்னார். பழைய கதை. போராட்டம் சம்பந்தமானது அல்ல. வாழ்க்கை சம்பந்தமானது. அந்தக் கதைகளையும் நான், இருந்த வேறுசில கதைகளையும் சேர்த்து நான் “கோளறு பதிகம்” என்று கதை எழுதினேன்.

            கோளறு பதிகமென்பது ஆயுதப்போராட்டத்தின் சில தவிர்க்கக் கூடிய துரதர்ஷட வசமான இந்த உட்கட்சிப் போராட்டங்களை அல்லது தீவிரவாத இயக்கங்களுக்கிடையே நிகழ்ந்த படுகொலைகளை வெட்ட வெளிச்சமிடுகிற கதை என்று நினைக்கிறேன். முக்கியமானதென்னவென்றால் அந்த இரண்டு பேரும் நான் சொன்னேனே…முதலாவது,  காலம் உனக்கொரு பாட்டெழுதும் என்ற அந்த கதையில் வந்த போராளி அவர் பிடிபட்டு ஜெயிலுக்கிருந்து பிறகு விடுதலையாகி வந்தப்பையும் கொழும்பில் சந்தித்தேன். அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக சொல்லுகிறார்கள். அந்த இயக்கத்தினால் கொலை செய்யப்பட்டார் என்று சிலபேர் சொல்லுகிறார்கள். மற்றவர் கோளறுபதிகத்தில் வருகிற அந்த மற்ற நண்பர் பழையபடியும் அதே தீவிரவாத இயக்கத்தால் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். நன்றி வணக்கம

பௌசர்

            நான் கிழக்கு மாகாணத்தின் ஒரு மிகச்சிறிய கிராமத்தில் இன்றைக்கு அந்த கிராமம் தன்னுடைய அழகுஅத்தனையும் இழந்து பெரும் அவல வாழ்க்கையை வாழும் மனிதர்களில் தனித்திருக்கிற ஒரு கிராமம் சேனையூர் என்பது. என்னுடைய கிராமத்தை நினைக்கிற பொழுதெல்லாம் எனக்கு வில்வரெத்தினத்துடைய அந்த கிராமம் பற்றிய பாடல் ஞாபகத்திற்கு வருகிறது. போர்க்காலச் சூழலில் “ஈழத்து இலக்கியம்” என்று பேசுகிற போழுது பேசப்பட்ட செய்திகள் சில துளிகள்தான். பேசப்படாதவைகள்@ சொல்ல முடியாதவைகள் அது கணக்கிலடங்கா. போர்க்காலச் சூழலில் இலக்கியம் எப்படி வரும் என்ற ஒரு கேள்வி முக்கியமானது. போர்க்காலச்சூழலில் வருகிற இலக்கியம் உண்மையைச் சொல்லுமா? எந்தளவு தூரத்திற்கு அதி;ல் நாம் உண்மையைப் பெற்றுக்கொள்ள முடியும்? ஒரு வரையறைக்குள் நின்றுதான் இன்றைக்கு நாம் இலக்கியத்தையோ அல்லது கலையையோ படைக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிறோம். ஏனென்று சொன்னால் எங்களுடைய வாய்கள் பிளாஸ்டர் போட்டு ஒட்டப்பட்டுள்ளன@ எங்களுடைய கைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தச் சூழலில்தான் நாங்கள் கலை இலக்கியவாதிகள் ஏதோ சொல்லக்கூடியவற்றை சொல்ல முற்படுகிறோம். நாடகத்துறையைப் பொறுத்தவரையில், நான் நாடகம் தொடர்பானவன் என்ற வகையில் சில விசயங்களைக் கூறமுடியும், அதாவது கலை இலக்கியம் எப்படி இந்தச் சூழலைப் பிரதிபலிக்க முற்படுகிறது? 

           ஒரு நாளைக்கு கோதுமை மாவு அல்லது 10 கிலோ அரிசி இப்படி மிகக் குறிப்பிட்ட அளவுக்கான பொருட்களை அதாவது அதுவும் ஒவ்வொரு மாதமும் அந்தக் கார்டிலே பதிவுசெய்து கொண்டுதான் பொருட்களை அந்த மக்கள் எடுத்துச் செல்லலாம். இந்தச் சூழ்நிலை எல்லாம் இன்றும் இலக்கியத்தில் வரவேயில்லை. இன்றைக்கு நான் இங்கே பேசக்கூடியதாக இருக்கின்றது. அதே போல மட்டக்களப்பினுள்ள படுவாங்கரை என்கிற பிரதேசத்திலே வாழுகிற மக்கள், நகர பிரதேசத்தில் வாழுகின்ற ஒருவகையான வாழ்க்கையை வாழுகின்ற அதே வேளையில், ஓரளவுக்கு அவர்களுக்கு வசதி இருக்கிறது@ பணம் வரக்கூடியதாக இருக்கிறது. ஆனால் மட்டக்களப்பினுடைய படுவாங்கரை என்று  சொல்லப்படுகிற அந்த பிரதேசத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தங்களுடைய வேளாண்மையைச் செய்ய முடியாத நிலை. தோழிலைச் செய்ய முடியாத நிலைமை. மாடும் வயலும் கன்றும் வைத்திருந்த அவர்களுடைய வாழ்க்கை, இன்றைக்கு ஒரு வேளை சோற்றுக்குக்கூட கஷ்டப்பட வேண்டிய நிலைமை. இவையெல்லாம் இன்னும் எங்களுடைய இலக்கியங்களில் வரவில்லை. வரக்கூடிய காலம் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆகவே இலக்கியங்கள் நான் முதலே குறிப்பிட்டதுபோல பேசப்பட்ட செய்திகள் ஒரு சிலதுளி. பேசப்படாதவைகள் இன்னும் ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன என்று கூறி, கலந்துரையாடலில் சில விடயங்களை கதைக்கலாம் என்று கூறி விடைபெறுகிறேன். 

சரவணன்

              இன்றைய உதயன் பத்திரிக்கை செய்தியின்படி, கடந்த புதன்கிழமை தொடங்கிய இராணுவ நடவடிக்கை, தொடர்பாக இன்றைக்கு அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்திருக்கிற தகவலின்படி 200 ராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 800 ராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் கூறுகிறது. இந்தத் தகவல் இப்போதுதான் ஒப்புக்கொள்ளப்பட்டது. முதலில், ஆரம்பத்தில் இந்த 3, 4 நாட்கள் அவை மறைக்கப்பட்ட செய்திகளாக இருந்த இந்த இப்படியான போராட்டம் மிகவும் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறது

             ஒருபுறம் தேர்தலுக்கான ஆயத்தங்கள் மிகவும் வேகமாக நடந்துக்கொண்டிருக்கிறது. தேர்தலில் ஒருவித பிரச்சாரக் கருவியாக இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ராணுவ நடவடிக்கை வெற்றி கொள்ளப்படும் என அரசுத்தரப்பினால் எதிர்ப்பார்க்கப்பட்டது. அதுபற்றிய தோல்வி ஒருபுறம் இருக்க, எங்களுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் மத்தியிலிருந்து கிடைக்கின்ற செய்திகளின்படி, அங்கு இந்திய ஆயுதங்கள் குறிப்பாக ஹெலிகாப்டர்கள் போன்றவை அங்கு இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. எந்தளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் நிச்சயமாக கடந்த இருவாரங்களுக்கு முன்னர் பத்திரிக்கைச் செய்திகளிலெல்லாம் அடிப்பட்ட தகவல் உங்களுக்குத் தெரியும். இலங்கை அரசுடனான சில ஆயுதப்பகிர்வுகள் இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டது உங்களுக்குத் தெரியும். இப்படி நிலைமையை நாங்கள் இந்த இடத்தில் குறிப்பிடவேண்டிய காரணம் இந்த நிலைமையை நீங்கள் விளங்கிக்கொண்டால் அங்கு இன்றைய சூழலிலும் இந்த இலக்கியவெளிப்பாடுகள் எனும்போது இவ்வளவு தொல்லையையும் கருத்தில் கொண்டு நாங்கள் மேல் அதிகமாகப் பேசவேண்டிருக்கிறது. 

             இன்று நான் நினைக்கிறேன,; ஈழப்போர் அதன் இலக்கிய வெளிப்பாடுகள் என்று பேசும்போது ஈழத்தின்; நேரடி அனுபவங்களின் வெளிப்பாடாக வரும் இலக்கியங்கள் ஒருபுறம் இருக்க இன்னொருபுறம் ஈழப்போரின் பக்கவிளைவுகளாக அது சகதேசங்கள் மத்தியிலிருந்தும் இருந்தும் ஏனைய பல்வேறுபட்ட வடிவங்களிலுமாக அதற்கு வெளியில் வெளிவரும்; இலக்கியங்களையும் சேர்த்துப்பார்க்க வேண்டுமென நான் நினைக்கிறேன். இந்த இரண்டும் பெருமளவு நாங்கள் பேசுகின்ற இலக்கியமென்பது வடக்கு கிழக்குகளில் கேட்கப்படுகின்ற அதிலிருந்து வெளிப்பட்ட இலக்கியங்களை மட்டுமே கருதுகின்றோம். ஆனால் அதற்குவெளியில் அதைச்சார்ந்து அவற்றின் பக்கவிளைவுகளாக அவற்றின் கடுமையான வெளிப்பாடுகளாக வெளிவந்து பல்வேறுபட்ட இலக்கியங்கள் குறித்தும் நாங்கள் பேசவேண்டிய தேவை இருக்கிறது. 

              குறிப்பாக அதற்கு வெளியில் மலேயாமக்கள் மத்தியில் இன்று மலேயா மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அவற்றைவிட உழைக்கும் மக்கள் சார்ந்த அவர்களது சுரண்டல் சார்ந்த பிரச்சனையாக இருக்கின்ற அதே வேலை வடகிழக்குபோரின் பக்கவிளைவுகளையும் அவர்கள் எதிர்கொள்வதும் அவற்றின் விளைவாக அங்கிருந்து வெளிப்படுகின்ற இலக்கியங்கள் குறித்தும் முக்கியப்பார்வையை நாங்கள் இப்போதும் செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த மலையகம் வடகிழக்கு இவையிரண்டும் தவிர்த்து இந்த இரண்டு புவியியல் சார்ந்த பரப்புகளுக்கு வெளியில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியிலிருந்து வெளிவரக்கூடிய இலக்கியங்களையும் நாங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். 

              முக்கியமாக இங்கு குறிப்பிடுவதாக இருந்தால் வடக்கு கிழக்கு இலக்கியமாநாடுகள் இலக்கிய விருதுகள் இவையெல்லாம் அங்கு வருடாந்தம் நடத்தப்படுகிறது. அதற்குள் மலையகத்திலும் மலையக இலக்கிய விழா, மலையகக் கலை விழா போன்றவையும் நடத்தப்படுகிறது. இந்த இரண்டுக்குள்ளும் சேர்க்கப்படாத அதற்கு வெளியே வெளிவரும் பல இலக்கியங்கள் இருக்கின்றன. அவை இந்த இரண்டுக்குள்ளும் இரண்டு மாநாடுகள் இலக்கிய கூட்டங்களில் இவற்றுக்குள் சேர்க்கப்படாதது என்பது நாங்களும் யேசித்துக்கொண்டு வருவது. இந்த ஒரு புள்ளிய சுட்டிக்காட்டிக்கொண்டு இன்னொருவிடத்தையும் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். அது - இது வரைக்காலம் முற்போக்கு இலக்கியம் சார்ந்து அதை அந்த கருதுகோளின் அடிப்படையில் பல்வேறுபட்ட இலக்கியங்களை அந்த நோக்கிலிருந்து பார்த்தோம். ஆகவே எமது வகையறாக்களுக்குள் அல்லது வரையிலக்கணங்களுக்குள் அடக்ககூடியவையாக அவற்றை எடுத்துக்கொண்;டு அவற்றுக்கான விமர்சனங்கள் கருத்துக்கள் பிரச்சாரங்கள் அல்லது அவற்றை முன்கொண்டு செல்வது என்பவற்றை நாம் மேற்கொண்டு ஆனால் இந்த வடக்கு கிழக்குக்குள் போராட்ட களத்திலிருந்து பிறக்கின்ற பல்வேறுபட்ட இலக்கியங்களை இலக்கியங்களாக கொள்ளாத ஒரு போக்கு ஒரு மரபு ஒன்று அல்லது அப்படி ஒரு நிலைமை இருப்பதாக நான் நம்புகிறேன். 

               இன்று களத்திலிருந்து வெளிவருகின்ற அவ்வாறான இலக்கியங்கள் பிரச்சாரமாக இருக்கலாம். அது அந்தத் தரப்பினரின் பிரச்சாரமாக இருக்கலாம். அல்லாது போனால் சுயமாக இல்லாமல் ஒரு கூட்டு முயற்சியாக இருக்கலாம். ஆனால் அவை விமர்சனங்களுக்கு உள்ளாக அது அவை தொடர்பான கரிசனைக்குரிய எமது பார்வையை செலுத்த வேண்டிய நிலைமை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டுமென்று நாம் நம்புகிறேன். இது எமது மரபில் ஒரு போக்காகவே எங்கள் மத்தியில்; வளர்ந்திருப்பதாக எனக்குப் படுகிறது. இந்த வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள இலக்கியங்கள் பேசப்படுவதும் குறிப்பாக முற்போக்குச் சாயல்கொண்ட அல்லது ஒரு குறிப்பிட்ட இந்தப் போராட்டத்தினருக்கு முற்பட்ட காலத்தைப்பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்ற அல்லது புகலிடம் சார்ந்த இலக்கியங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற இந்த இவற்றிற்காக தான் நாம் இருக்கின்றோமோ என்று எண்ணத் தோன்றுகின்றது இது ஒன்று. இன்னொன்று புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பற்றியெல்லாம் கதைத்திருக்கின்றோம்.

          இன்று நாங்கள் போரின் பக்கவிளைவுகளாக அதன் வெளிப்பாடுகளாக வெளிவந்த இலக்கியங்கள் குறித்து நாங்கள் பேசுகின்றபோது புகலிடத்திலிருந்து வெளிவருகின்ற இலக்கியங்களையும் அவ்வாறான பார்வையிலிருந்து பாரக்கவேண்டி இருக்கிறது. இந்தப் புகலிட இலக்கியங்கள் என்பது சமீப காலமாக அது தனியாகப் பேசப்படுகின்ற போதும் அதிலிருந்து புகலிடத் தலித்திய இயக்கம் புகலிடப் பெண்ணிய இலக்கியம் புகலிட மார்க்சீய இலக்கியம் இவ்வாறான போக்குகள் இனிவரும் காலங்களில் பேசப்படும் போலத் தெரிகிறது அவ்வாறான புகலிடப் பெண்ணிய இலக்கியங்கள் குறித்தெல்லாம் இதற்குமுன் பேசத் தொடங்கப்பட்டதாகிவிட்டது. இவற்றை சில புள்ளிகளாக நிறுத்திவிட்டு விடைபெறுகிறேன். நன்றி

தொடரும்........

 

 
Related News
 • போரும் இலக்கியமும் 2

 • தலித் பெண்களின் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக தலித் இலக்கியக் குரல்கள்

 • எல்லீசர் தமிழாய்வு முன்னோடி

 • எழுத்துக்கடன் கொண்டு மொழி தழைக்குமா? வீழுமா?

 • நீரற்றது கடல் நிலமற்றது தமிழ்
 •   
    
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World