Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue



ரதிச்செல்வன்
 

 

 நமக்கான எல்லா வார்த்தைகளும்
சொல்லி முடிக்கப் பட்டாயிற்று
என நிறைவுறும் தருணம் குறித்தும்
 

மனதின் எல்லா உணார்ச்சிகளையும்
வார்த்தைகளில்
முற்றுமுழுதாய் வடித்தெடுக்கும்
யுகசிற்பி யாரெனத் திகைக்கும் தருணம் குறித்தும்
சிந்திக்கையில்
 

வார்த்தைகளின் ரசவாதம்
புதிர்க்கச் செய்கிறது
 

மார்கழிப்பனிப் பொழுதுகளில்
வெந்நீர்க்குளியலாய் இதம்தரவும்
மனசை ரணமாக்கி அமில மழையில்
அமிழ்த்தவும்செய்துவிடும் வார்த்தைகள்...
 

நினைவுச் சுரங்கங்களில்
துழாவும்
சொர்க்கவாசல் கதவுகளின்
திறந்திடு சிசேமாகும்
 

அகம் புறம் ஊடல் என
சிக்குபுள்ளி கோலமாய்
முடிச்சிடும்
எனக்கும் அவனுக்குமான
நிகழ்பொழுதிலும்
நமக்கும் பிறருக்குமான
நடப்புப்பொழுதிலுமாய்

இடமிருந்து வலமாய்
மேலிருந்து கீழாய்
ஆட்டிப் படைத்து
அலைக்கழிக்கும் வார்த்தைகள்
வாழ்வின் ஏற்ற இறக்கங்களில்
ஞாபக அலை அடிப்புகளின்
குவிநிறையாய்
வார்த்தைகளைக் கண்ணுற்றபடியே
மறுபடியும் மறுபடியும்
வார்த்தைச் சமுத்திரத்தில்
இறங்குவோம் வா
கைகளைப்பற்றியபடி.
 

 

 
Related News
  • கவிஜீவன்

  • உடைதல்
    - வேல் சரவணக்குமார்

  • தெருவைத்தொலைத்தல்
    - விஷ்ணுபுரம் சரவணன்

  • எங்கள் அடையாளம்
    - கம்பீரன்

  •   
     

    உங்கள் பெயர் *
      தமிழில் தட்டச்சு செய்ய
    உங்கள் கருத்துக்கள் *
    மின்னஞ்சல் முகவரி *

     

    Comments
     
     
     
    Head Image
    முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

     Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

    Designed and Hosted by Info World