Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue



கடவுளின் பெருமூச்சு
 

Kaliyamoorthi

 

 

புராதனக் கோவில் நகரங்களில்

வவ்வால் புழுக்கை வீச்சும்நடுவே

புணர்ந்து கொண்டிருக்கின்றன சிற்பங்கள்

காலகாலமாய்.

 

கற்றாழை நெடியுடன் அலைகிறது

காமத்தின் தகிப்பேறிய காற்று.

 

நீர்வற்றிய நதிகளிலும் குளங்களிலும்

கூச்சமற்றுக்குளித்து

கும்பிட்டு

கூடிக்கலைகிற மனிதநதி

அலைமோதுகிறது கடைவீதிகளில்.

 

ஒளிமழையில் நனைகிற கோவில்களில்

பலகாலமாய்

காற்றும்  வெளிச்சமுற்ற அறைகளில்

பழுத்து நோய்மையுற்ற கடவுள்கள்

ஆசிவழங்குகிறார்கள் அனைவருக்கும்

அனைத்துக்கும்.

 

சப்தங்கள் மயங்கும் பின்னிரவில் கசங்கிய மல்லிகையும் வியர்வை நெடியுமாய்

கருவளையமிட்ட உறங்காக்கண்களுடன்

இருட்டுச்சந்துகளில் நிற்கின்றன

சிதிலமுற்ற சிற்பங்கள்

தீராப்பசியுடன்.

 

யார்காதிலும் விழுவதில்லை

கடவுள்களின் பெருமூச்சு.

- கோ. கலியமூர்த்தி

 

 
Related News
  • வெளி

  •   
     

    உங்கள் பெயர் *
      தமிழில் தட்டச்சு செய்ய
    உங்கள் கருத்துக்கள் *
    மின்னஞ்சல் முகவரி *

     

    Comments
     
     
     
    Head Image
    முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

     Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

    Designed and Hosted by Info World