Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue



ஆம்! சுற்றுலா தேசம் இது
- விஷ்ணுபுரம் சரவணன்
 

 நீங்கள் இப்போது நடந்துகொண்டிருக்கும்
வீதியில் தான்
சிறுகுழந்தையொன்று பின்னந்தலையும் தாயுமில்லாமல் அழுதேயிறந்த‌து
நீங்கள் நடங்கள்
நீங்கள் இப்போது பார்க்கும் வீட்டில்தான்
போராளி ஒருத்தியினை
நான்கைந்துபேர் மொழிகலப்பற்று புணர்ந்தார்கள்
நீங்கள் நடங்கள்
நீங்கள் இப்போது நிற்கும் பதுங்குகுழியில்தான்
மேலே செல்லடியிலிறந்த ஆறுமாத குழந்தையை தூக்கவியலாமல்
கையில் துவக்கோடும் தவிப்போடும் நின்றிருந்தான்
போராளி ஒருவன்
நீங்க‌ள் ந‌ட‌ங்க‌ள்
நீங்க‌ள் இப்போது ஓய்வெடுக்கும் அறை இருக்குமிட‌த்தில்தான்
அக‌திமுகாம் இருந்த‌போது
நீர்பிடிக்கவும் மகனுக்காவும்
வரிசையில் காத்திருந்த‌
முதியவர் ஒருவர் சுருண்டுவிழுந்து இறந்தார்
நீங்கள் ஓய்வெடுங்கள்
நாளை வேறொரு பகுதிக்கு செல்லலாம்
ஆமாம்
இப்போது இந்நாட்டின் எல்லாபகுதிகளுக்கும் செல்லலாம்
சுற்றுலா தேசமிது

 
Related News
  • போதிமரம்
    - தமிழ்நதி

  • கோடை இரவுகள்
    - தமிழ்நதி(கனடா)

  • எனது நிலத்திற்காக பிரார்த்தியுங்கள்!
    - தீபச்செல்வன் (ஈழம்)

  • இடமாறு தோற்றப் பிழை
    - ஜி.தேவி

  •   
     

    உங்கள் பெயர் *
      தமிழில் தட்டச்சு செய்ய
    உங்கள் கருத்துக்கள் *
    மின்னஞ்சல் முகவரி *

     

    Comments
     
     
     
    Head Image
    முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

     Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

    Designed and Hosted by Info World