Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue



சங்கத்தமிழ் அனைத்தும் தா
 

 கி.சதீஷ்குமார்

தொல்பழங்குடிகளின் சுவாசத்தோடும் பூர்வ நுண் கலைகளின் சுவடுகளோடும்

கல்லையும் மண்ணையும் புரட்டியபடி

பேரிரைச்சலோடு புறப்பட்டு வருகிறது புராதன நதி ஒன்று...

 

ஆதிக்கங்களும் அடுக்குகளும் உடைபட

ஆர்பாட்டத்துடன் பொங்கிப் பாய்ந்தோடுகிறது-அப்பெருநதி

 

நீரோட்டத்தின் உயிரோட்டமாய் அதன் கரைகளெங்கும்

அடர்வனமாய் வகைவகையாய்ப் பசுமைமாறா இலக்கியங்கள்...

 

மானுடவாழ்வின் தட்பவெப்பத்தை

சமநிலைப்படுத்தும் சான்றுகள் புவியெங்கும் வேர்விட

 

பல வண்ணங்களும் அடையாளக் கலவைகளும்

வேதிக்கழிவுகளென நதியில் கலந்தபோதும்

தனித்தன்மை மாறாத் தமிழ் நதியே

 

அணு உலையும் அணுக்கழிவுமில்லா வடக்கும்

புளூட்டோனியமும் யுரேனியமும் பயன்படுத்தாத தெற்கும்

ஆயுதக்கூடங்களும் ஏவுகணை சோதனைகளுமில்லா மேற்கும்

உளவு பார்க்கும் விமானங்களில்லா உன்னத வான்பரப்பாய் கிழக்கும்

 

அவரைக்கொடிக்கு அணுஆயுதக் கப்பல்களையும்

பீர்க்கங்கொடிகளுக்கு பீரங்கிகளையும்

கொடையாய் வழங்கிட பூமிப்பந்தை வேண்டி

 

சமாதானப் பேச்சுக்களுக்கு ஓராயிரம் அவ்வையார்களை

நின் கருப்பையிலிருந்து உருவாக்கி

 

இணையத்தால் இணைந்தவர்களை இதயத்தாலும் இணைத்திடும்

மரபணுமாற்றத்தை மானுட மூளையில் விதைத்து சங்கத்தமிழே

 

அனைத்தையும் அனைவருக்கும் தா.

 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World