Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue



மணிச்சுடர் கவிதைகள்
 

1)     பூப்பேன்....

காய்ப்பேன்....

வளர்தல் பிழை

                        -என

 

அளவாய்

அழகாய்

வெட்டப்படும்

போன்சாய்

                        அல்ல

 

விழுதிறங்கி

மண்ணுள்

ஊடுருவி

நிலைக்கும்

ஆல்(ள்)

 

                        நான்.....

2)     வறுமை

வலி

வேதனையை

விழுங்கிச்

                        செரித்தோம்

 

வாழ்வு

களிப்புற.......

 

அவரவர்

அபிலாஷைகளில்

அநாதியாய்

அலைந்துழன்றோம்

பிராயங்களில்

சண்டைப் போட்ட

மரப்பாச்சி

 

ஆளுக்கொன்று

வாங்கிட

வகையிருந்தும்

வசமாகவில்லை

                        இன்று.

 

3)     சம்பாஷணைக்கான

சங்கதிகள்

பரிவர்த்தனைக்கு

சாத்தியமற்றதாகையில்

நிசமாக அல்ல,

பாவனைக்கேனும்

காது கொடுக்க

முனைபவரிடையே

கால நேரம் மறந்து

கொண்டாடுமிடத்து

குழந்தையாய்

 

நான்.

 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World