Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue



கோ. கலியமூர்த்தி கவிதைகள்
 


 சுவடு

வனம் இருந்த சுவடாய்
பொட்டல் இருந்தது
நதிநடந்த சுவடாய்
மணல்வெளி கிடந்தது
மணல் கிடந்த சுவடாய்
பள்ளம் இருந்தது
பின்....
உயிர்கள் வாழ்ந்ததன் சுவடாய்
எலும்புகள் கிடந்தன.
போன்சாய் உலகம்
தேனற்றுப் போயின 
பிளாஸ்டிக் பூக்களைச்சுற்றி அலைந்து
செத்து உதிர்கிற தும்பிகளின் காலத்தில்
தப்பிப்பிழைத்த மலர்கள்
பதறித்துடிக்கிறது
புல்லாங்குழலாகும் கனவு சிதைந்து
பாடையாக்கப்பட்ட மூங்கில்
வண்டுகளற்றுப்போன வரலாற்றை
சொல்லியிருக்கவில்லை யாரும்

பருவம்தப்பிய மழைகளின் தேசத்தில்
பாய்மரம் சிதைந்த படகாய்
அலைக்கழிக்கிறது காலம்
கொந்தளிக்கும் அலைகளின்
கோபத்தைக்கூட
நுரைக்கும் பீராகவே
பார்க்கத் துவங்கிவிட்ட நிலத்தில்

எல்லா டவர்களும் இயங்கும்போதும்
தொடர்புஎல்லைக்கு வெளியேதான் இருக்கிறார்கள்
எல்லோரும்
எப்போதும்.
 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World