Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue



இடமாறு தோற்றப் பிழை
- ஜி.தேவி
 

விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருந்த
அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட
தேவாலயத்தில்
கூட்டமேதுமற்ற பிரார்த்தனை நேரத்தின்
இடைவேளையில்
சற்றே இளைப்பாறச் சென்றார் ஆண்டவர்
செவி கேளாதோருக்கு கேள்வியும்
விழியற்றோருக்கு காட்சியும்
முடங்கள் முடமாவதற்கான
முன் சிகிச்சையும்
சந்தான பாக்கியங்களுக்கான
சத்கிரிகைகளையும்
செய்வதற்கான ஆயத்தங்களில்
குறிப்புகள் தேடி
மஹாகிரந்தத்தைப்
புரட்டிக்கொண்டிருந்தார்...
திராட்சைரசத்தைப் ப்ருகியபடி.
பக்கத்தறையில் பாவமன்னிப்புக்
கேட்டுக் கொண்டிருந்த
குரல் இடையூறாகவே
அதை கவனிக்கத் துவங்கினார்
பசியின் கொடுமை தாங்க முடியாமல்
தன் குழந்தைகளைக்
கொன்ற ஈரமற்ற தருணத்தை
விவரித்துக் கொண்டிருந்தாள்
தன் அத்துணை
சிகிச்சைகளையும் கைவிட்ட கடவுள்
மறுநாள் தேவாலயத்தின்
பின்புறம் தன்னைத் தானே
சிலுவையில் அறைந்து கொண்டான்.
இன்றுவரை அவன்
உயிர்த்தெழவேயில்லை.

 
Related News
  • போதிமரம்
    - தமிழ்நதி

  • கோடை இரவுகள்
    - தமிழ்நதி(கனடா)

  • ஆம்! சுற்றுலா தேசம் இது
    - விஷ்ணுபுரம் சரவணன்

  • எனது நிலத்திற்காக பிரார்த்தியுங்கள்!
    - தீபச்செல்வன் (ஈழம்)

  •   
     

    உங்கள் பெயர் *
      தமிழில் தட்டச்சு செய்ய
    உங்கள் கருத்துக்கள் *
    மின்னஞ்சல் முகவரி *

     

    Comments
      Name arunprasad k.p  
      Comments
    Nandru...... Thodarattum intha pani.............
     
      Email Id vml.arun@yahoo.co.in  
       
      Name p.sakthivel  
      Comments
    super, congrats
     
      Email Id p_sakthy@yahoo.com  
         
     
     
    Head Image
    முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

     Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

    Designed and Hosted by Info World