Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue



அனசன்: என் வாழ்க்கை ஒரு அழகான கனவு
 

"பத்தாவது முறை 

கீழே விழுந்தவனைப் பார்த்து  

பூமித் தாய்  

முத்தமிட்டுச் சொன்னது  

நீ  

ஒன்பது முறை  

எழுந்தவனல்லவா !"

என்பார் கவிஞர் தமிழன்பன்.மேற்கண்ட வரிகளுக்கு பொருத்தமானவர் அனசன்.திறமைசாலிகளை எங்கு மறைத்து வைத்தாலும் அவர்களின் திறமைகள் மூலம் வெளியுலகிற்கு வெளிச்சமாவார்கள்."விதைகளை மண்ணிற்கு அடியில் மறைத்து வைத்தாலும் விருட்சமாய் வீறிட்டு எழும்.அதேபோல் தங்கத்தை நெருப்பினில் சுட்டாலும் சுடராய் ஒளிவீசும்; சந்தனத்தை வெட்டி சிதைத்தாலும், சிதைத்தவருக்கு மணம் தரும்.திறமைகள் இதேபோல்தான் மட்டம் தட்டி மறைத்து வைத்தாலும் வெடித்து எழுந்து நிற்கும்.  

டென்மார்க்கில் அந்நாட்டின் குடியுரிமை பெற்று வாழும் ஒரு தமிழன் ஹான்ஸ் கிறிஸ்டியன் அனசன்.புலம்பெயர்ந்த தமிழரான இவர் என் வாழ்க்கை அழகானதொரு கதைஎன்ற பெயரில் தனது சுயசரிதையை வரைந்துள்ளார்.இடிபாடுகளுக்கும், அவமானங்களுக்கும் மத்தியில் துவண்டு வீழ்ந்துவிடாமல், எழுந்து நிற்பதை எண்ணுகையில் சீனத்துச் சிந்தனையாளர் கன்பூசியஸின் வரிகளே நம் கண்முன் வந்து நிற்கிறது.எப்போதும் வீழ்ந்துவிடாமல் இருப்பதில் ஆனந்தம் இல்லை.விழும் ஒவ்வொரு முறையும் எழுந்து நிற்பதில் தான் ஆனந்தம் உண்டு.”  

நடுத்தர வர்க்க குடும்பம்: 

கவித்துவமானதொரு நாடான டென்மார்க்கில் கூய்ப்பென்ஹாவுன் என்ற ஊரில், ஏழை நடுத்தர வர்க்க குடும்பத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு பிறந்தவர் அனசன்.தன் தொட்டிலைக்கூடப் போட இயலாத சின்னஞ்சிறிய அறையிலேயே பிறந்து வளர்ந்ததாக கூறும் அனசன், தன் தந்தையும்,தாயும் ரசனைமிக்க கவிதா மனநிலையைக் கொண்டவர்கள் என்றும்,தன்னைப் பெற்றெடுத்த கட்டில், ஓடென்ஸ் பகுதியில் வாழ்ந்த செல்வச்சீமான் (பெராம் பிரபு) ஒருவருடைய பிரதேசப்பெட்டி வைப்பதற்கு செய்யப்பட்ட பீடத்திற்கு உபயோகிக்கப்பட்ட மரங்களை வைத்து உருவாக்கப்பட்டதாகவும், அந்த இறப்பினை அலங்கரிப்பதற்காக கட்டியிருந்த கருப்பு துணித்துண்டுகள் ஒட்டிகிடப்பதையும், மெல்லிய பட்டு துணிகளும், எரியும் மெழுகுவர்த்திகளும் சூழக்கிடந்த அந்த சடலத்தின் பெட்டியில் செய்யப்பட்ட கட்டிலில் தான் வளர்ந்தவன் என்றும் அந்த சிறிய அறையிலும் பெரும்பலான இடத்தை செருப்பு தைக்கும் உபகரணங்களே அடைத்து கொண்டது போக, மீதியில் தன் தொட்டில் இருக்கும் என்று தனது குழந்தை பருவத்து நிகழ்வுகள் பற்றிய அனசனின் பதிவுகள் அவரது ஏழ்மை நிலையினைச் சித்தரிக்கின்றன.  

தேவதைக் கதைகளுக்கான கரு: 

ஏழ்மை நிலையில் வாழ்ந்த அனசன் பெற்றோர்களின் முழு அரவணைப்பில் வாழ்ந்தபோது சில விபரீதமான சம்பவங்கள், சிறுவயது அனுபவங்கள் தன் மனப்பதிவினில் ஆழ்மனதில் தேங்கிக்கிடந்து கற்பனை வளம் பெற்று இலக்கியங்களாக உருவெடுத்தன.சிறுவயதில் மனநோயாளிகளின் இருப்பிடத்திற்குச் சென்ற அனசன், தனிப் பகுதியில் அடைத்துவைக்கப்பட்ட மனநோயாளி நிர்வாணப் பெண்ணாக அமர்ந்திருப்பதையும், அவளது வெறிபிடித்த பார்வையும், ஓலமும் அவரது மனதை விட்டு நீங்காது பாதிப்பினை ஏற்படுத்தியதையும், மனநிலை குன்றியிருந்த தன் பாட்டன் விசித்திரமான உருவங்களை மரத்திலே செதுக்கி(விலங்கின் தலைகளைக் கொண்ட மனித உடலாகவோ (அ) சிறகுகள் கொண்ட  விலங்காகவோ) அப்பொம்மைகளை ஏழை விவசாயி குழைந்தைகளுக்கு அளித்ததும்,மனநிலை குன்றிய  தனது பாட்டனை தெருவின் விடலைப் பையன்கள் கேலி செய்வதும்,தனது மனதை பாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.”  

நாடக அரங்கில் கண்ட நடிகைகள் அனைவரையும் தன் தேவதை கதைகளுக்கான தேவதைகளாக உருவகித்து வைத்தார்.இதன் பின்னரே தேவதை கதைகளுக்கான கருக்கள் தம் மனதில் உதித்ததாக அனசன் பதிவு செய்துள்ளார்.  

நாடகத்தில் ஈடுபாடு: 

தன் தந்தையின் மரணத்திற்குப் பின் அனசன் மூடநம்பிக்கைகள் நிரம்பியவராகவும், வெகுசுலபமாக, உணர்வுப் பூர்வமாகக் கற்பனை வசப்படுபவராகவும் உருவெடுத்த அனசன் சிறுவயதிலேயே தனக்கென ஒரு பொம்மை அரங்கினை அமைத்துக் கொண்டு விளையாடியதும், நாடகங்களைப் பார்த்து நடிப்பினைக் கற்பதும் தனது பொழுதுபோக்காக்கினார்.வித்தியாசமான குரல் வளமும் அவருக்கு இருந்தது.  

தாயினால் திணிக்கப்பட்ட தையல் தொழிலின் வாயிலாகப் பெற்ற பதின்மூன்று றீஸ்டாலர் சம்பாத்தியத்தின் மூலம் கூய்ப்பென்ஹாவுன் செல்ல தாயிடமிருந்து அனுமதி பெற்றார்.பிரபலமாக உருவாகுவதே என் நோக்கம்”, “முதலில் வெகுவாக சிரமப்பட வேண்டி இருக்கும்.பின்னர்  தான் புகழ் பெற முடியும்என்ற எண்ணத்தில் 14 வயதில் கூய்ப்பென்ஹாவுன் சென்றார்.  

ஒரு நாடகக் கலைஞராக வேண்டும் என்ற எண்ணம் குடிகொண்டது.ஆனால் அவ்வெண்ணம் அனைவராலும் நிராகரிக்கப்பட்டது.நாடகமே என் தொழிலாகும்.நான் புகழ்பெற வேண்டிய துறை இதுவேஎன்ற எண்ணத்திலிருந்து மாறாமல் உறுதியாக இருந்த அனசன், வறுமையினால் உணவின்றி, தங்க இடமின்றி, எந்த ஒருவரின் உதவியுமின்றி மற்றவர்களின் கேலிப் பார்வைக்கு உள்ளாகியுள்ளார்.  

மன நோயாளிக் காட்சி: 

தேவாலய உறுப்பினராகும் சடங்கிற்காக ஒரு முறை நடன பெண்மணி ஸ்ஷாலை சந்திக்கச் சென்ற அனசன் தன்னிடம் இருந்த பகட்டான ஆடைகளையும், தொப்பிகளையும் அணிந்து சென்ற போதிலும் மற்றவர்களின் பார்வைக்கு தன்னை இவ்வலங்காரம் மேம்படுத்திக் காட்டும் என்று கருதிய போதும், பிச்சை எடுக்க வந்ததாகக் கருதி பிச்சை இட்டாள் ஒரு பெண்.இத்தகைய சூழலிலும் மனந்தளராத அனசன் அப்பெண்ணிடம் நடித்துக் காட்டினார். ஆனால் அவருடைய வினோதமான அசைவுகளையும், மிகையான கிளர்ச்சியும் தன்னை ஒரு மனநலம் குன்றியவனைப் போல காட்சிப்படுத்தின என்று கூறுவதிலிருந்து வறுமையிலிருந்து அவருடைய உடலும், மனதும் பாதிக்கப்பட்டிருப்பதை அறியமுடிகிறது.பல இடங்களில் வேலை தேடி கிடைக்காமல் போனதால் மனமுடைந்து ஆறுதலளிக்கவோ, அறிவுறுத்தவோ யாரும் இல்லாத போது, தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கில் தன் எண்ணம் மேய்ந்தது.ஒருவன் வெற்றி இலக்கை அடையும் முன், மிகவும் துன்பப்பட நேரிடும் என்பதை உணர்ந்து தனது கவனத்தை நாடகங்களில் செலுத்தியுள்ளார்.  

தன் தொழிலின் மீதுள்ள காதல்:  

தனது தொழிலைக் காதலிக்கும் எவனும் வெற்றி அடையாமல் இருந்ததில்லை என்பதற்கு உதாரணமாக அனசன் வாழ்ந்துள்ளார் என்பதற்கு அவர் வாழ்வில் நிகழ்ந்த இச்சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது.  

பெளலும் வியேயினியாவும்என்னும் இசை நாட்டிய நாடகத்தை காணச் சென்றபோது தேம்பி”, “தேம்பிஅழுதவனை தேற்றிய பெண்மணிக்கு அனசன் கூறிய பதில் அவரது தொழிலில் அவர் கொண்டுள்ள  காதலை விளக்குகிறது. 

நாடகமேடையில் நிகழ்ந்த நாடகத்தில் பெளவ்,வியேயினியா என்ற காதல் ஜோடி பிரிந்த நிகழ்வினைக் கண்டு மேடையில் கண்ட பெளலுக்காகவும் வியேயினியாவுக்காகவும் நான் உண்மையாக அழவில்லை நாடக மேடையை நான் என்னுடைய காதலி வியேயினியாவாகப் பார்க்கின்றேன்.நாடகத்தில், வியேயினியாவின் பிரிவால் பெளல்  எவ்வளவு துக்கத்தை அனுபவிக்க நேர்ந்தாரோ,அவ்வளவு துக்கத்தை, “மேடையினின்றும் நான் பிரிய நேரிட்டால் அனுபவிப்பேன்என்ற கூற்று உனது இலக்கை அடையும் வரை ஓரிடத்திலும் தயங்கி நின்று விடாதேஎன்ற விவேகானந்தரின் சிந்தனையைச் செயல்படுத்துகிறது. 

வறுமையிலிருந்து மீண்ட அனசன்: 

தச்சுத் தொழிலாளியாக சில நாட்கள் கழிந்தது.அதிலும் போதுமான ஊதியம் இல்லாததால் கூய்ப்பென்ஹாவுன் இசைக் காப்பகத்தின் இயக்குநராகப் பதவிவகித்த சிபொனி (Siboni) என்கிற இத்தாலியரின் உதவியால் ராயல் தியேட்டரில் ஒரு பாடகனாக பணியமர்த்தப்பட்டார். 

அங்கும் பசி பட்டினி நிலைகளே தொடர்ந்திருப்பதால், தங்கும் இடங்களும் இல்லாமல் தவித்திருந்து, குளிர்காலத்திற்குத் தேவையான உடைகளின்றி குளிரில் நொந்து தமது குரல்வளத்தினையும் இழந்து துன்பப்பட்டார் அனசன்.சென்றவிடமெல்லாம் பரிகசிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்.  

உதவி புரிந்த உள்ளங்கள்:  

அவருடைய ஆரம்பகால எழுத்துகளிலே பிழைகளைத் தவிர வேறு எதுமில்லை.ஒரு முறையான பயிற்சியும் இல்லாமல் தனது எழுத்துலகில் காலடி பதித்தார்.ஜெர்மனிய மொழியை இலவசமாக  கற்றுக்கொள்ள ஒரு பெண்மணியின் உதவியினை நாடினார்.அவரின் உதவியினால் லத்தீன் மொழியையும் ஓரளவு கற்க முயற்சி எடுத்தார்.அதன்பின் கூல்பெயா என்ற பெண்மணியின் உதவியுடன் டேனிஷ் மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். 

இவரது சிறுசிறு முயற்சிகள் விருட்சமாவதை போல முதல் நாடகம் அரங்கேற்றப்பட்டது.தன்னுடைய சொந்த கருப்பொருளால் பதினைந்து நாட்களில் தேசிய துன்பியல் நாடகம் தயாரானது.அதற்கு விஸ்ஸென் பார்க்கின் கொள்ளைக்காரர்கள்என்று தலைப்பிடப்பட்டது. 

கவிதைகளில் தன் ஆதிக்கத்தை செலுத்துதல்: 

கவிதைகளில் தனது மனது அங்கம் வகிப்பதை உணர்ந்த அனசன், கவிதை எழுதுவதை தன் அடுத்தப் பணியாக மேற்கொண்ட அவருக்கு அடுக்கடுக்காக பல உதாசீன வார்த்தைகள் வந்து விழுந்தன.கல்விக்கூடத்திலிருந்து தங்கியிருந்த அதிபரின் வீட்டிலிருந்து எல்லோராலும் நிராகரிக்கப்பட்டார் அனசன். 

தனது கவிதைகளில் அதிக பிழைகள் இருந்ததினால் அக்கவிதைகள் எல்லோராலும் விமர்சிக்கப்பட்டு பரிகாசத்திற்கு ஆளாகினார்.ஒருமுறை அதிபரின் உணர்ச்சிவயப்பட்ட சபித்தலுக்கும் ,கோபத்துக்கும் ஆட்கொள்ளப்பட்டதை அவர் கூறும்போது, அவருக்கு உணர்ச்சி வயப்பட்ட அந்த மனதர் என்னைச் சபித்ததுடன்,கோபம் கொண்டு. நான் என்றுமே முழு மாணவனாக முடியாதுஎன்றும் ,புத்தக வியாபாரியின் சேமிப்புக்கிடங்கில் என்னுடைய கவிதைகள் மண்ணாகிப் போகும் என்றும், நான் என் இறுதி நாட்களை மனநல காப்பகத்தில்தான் கழிப்பேன் என்றும் தெரிவித்தார்”,என்று கூறுவதிலிருந்து இவரது மனஇறுக்கத்தை நம்மால் உணரமுடிகிறது. 

கூய்ப்பென்ஹானில் அதே மனிதர், தான் தவறிழைத்து விட்டதாகவும், தவறான முறையில் நடத்தி விட்டதாகவும் கூறி வாழ்த்துக்கள் தெரிவித்ததையும் பிற்காலத்தில் தனக்களித்த ஆசீர்வாதங்களாகவே ஏற்றுள்ளார்.  

நம்பிக்கையளித்த ஆசான்:  

பள்ளி நாட்களில் கற்றலில் விருப்பம் குறைந்த அனசனுக்கு நம்பிக்கையற்றதொரு கணத்தில், தனது தலைமை ஆசிரியரிடம் கல்வி  கற்பதற்கு எப்போதுமே மிகமிக மந்தபுத்தியுள்ள ஆள் நான்என்று தானே கடிதம் எழுதி அனுப்பிய அனசனுக்கு ஆசிரியர் அனுப்பிய மறுகடிதம் அவரது தாழ்வுணர்ச்சியை விரட்டியடித்து தன்னம்பிக்கை உணர்வினை ஊட்டுவதாக அமைந்திருந்த செய்தியினை பதிவு செய்துள்ளார். 

எதிர்பார்த்ததைவிட தான் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், என்னுடையத் திறமைகளில் நான் சந்தேகப்படக்கூடாது என்றும் கூறினார்.தன்னுடைய 23 வயதில், என்னை விட மூத்தவனாகவே ஒரு கிராமத்துச் சிறுவனாக தன் கல்வியை தொடங்கியதாகவும் உண்மையில் நான் முன்னேற்றமடைகிறேன் என்று கூறினாரென்ற பதிவுகள் பலரின் உதாசீனங்களுக்கு மத்தியில் சிலரின் நம்பிக்கைகளால் அனசனின் திறமைகள் விருட்சமாக பரவியுள்ளதை அறியலாம். 

அனசனின் படைப்புகள்:  

இத்தகைய போராட்டங்களுக்கிடையே முட்டிமோதி வெளிவந்த அனசன் பல்வேறு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றார்.வீழ்ச்சியிலும் பெரும்வீழ்ச்சி தன்னம்பிக்கையை இழந்து வருவதேகன்பூசியஸ் அவர்களின் சிந்தனை கவனிக்கத்தக்கது.  

விழுந்தாலும் அருவியாய் விழுங்கள், எழுந்தாலும் இமயமாய் நில்லுங்கள்”, இச்சிந்தனைக்கேற்ப புறப்பட்ட அனசன், “ஆத்மா”, “என் அன்னைக்கு”, “இறக்கும் குழந்தை”, “அமக் நோக்கு ஒரு நடைபயணம்”, “புனித நிக்கலஸ் கோபுரத்திலே காதல் (நாடகம்)”, “பாதசாரியின் பயணம்”, “மனத்தோற்றங்களும், வாழ்க்கைச் சித்திரங்களும்என்ற புதுக்கவிதைத் தொகுப்பு” “பிரிவும் சந்திப்பும்”,”பயணத்தின் நிழல்கள்”,”ஒரு இளம்பூனையின் குற்றச்சாட்டு”,”நோய்வாய்ப்பட்ட கவிஞன்போன்ற நகைச்சுவைக் கவிதைகளையும் வெளியிட்டார்.  

லா குவாரன்டைன்மற்றும் லா ரீய்ன் டி சீஜ் ஆன்ஸ்ஆகியவற்றை மேடைக்காக மொழிமாற்றம் செய்தார்.ஓர் ஆண்டின் பன்னிரண்டு  மாதங்கள்”(கவிதை), “டென்மார்க்கின் ஊடாக ஒரு திவ்விய யாத்திரை”, “டேனிஷ் கவிஞர்களின் சித்திர வேலைப்பாடு”, “அக்னெட்டும் கடலின் மனிதனும்”, “இம்ப்ரூவிசேடோர்”, “பிடில் வாசிப்பவன்(1837)”, “ஓ இஜட்”, “இல் காண்டிநேவியின் கீதம்(மூன்று நாடுகளின் குணநலன்களை பாராட்டும் வண்ணம்)”, “ஒரு கவிஞரின் சந்தை”(பயண நூல்), “சந்தை”, “பாட்டி”(2001), OG I MORGEN (டேனிஷ் மொழி) போன்ற பல கவிதை நூல்களையும் வெளியிட்டார்.தேவதை கதைகள்எல்லோராலும் விரும்பப்பட்டு புகழ்பெற்ற நூல்களாகும்.  

பிறரின் பரிகாசத்திற்கும், கேலிக்கும் மத்தியில் எழுந்து பெரியதொரு சாதனையைப் படைத்து காட்டியவர் அனசன்.அனசன் எழுதியன என்றும் வாழும்என்று எல்லோராலும் புகழ்பெறும் அளவிற்கு அவரின் எழுத்திற்கு தாவும் ரசிகர்களும் அதிகமாயினர்.எழுத்துலகில் நிலையானதொரு தடம் பதித்தார்.  

முடிவுரை: 

ஆரம்பகாலத்தில் அவரது நாடக ஆர்வத்தைக் கிண்டலடித்தவர்களும், மனநோயாளி என்று தூற்றியவர்களும், அவரின் கவிதைகளை குப்பைகள் என்றும், அவர் எதற்கும் லாயக்கற்றவர் என்று கூறியவர்களும் அவரது திறமைகளைக் கண்டு, புகழினைக் கண்டு வியந்து நிற்கின்றனர்.அனசன் எழுதியன என்றும் வாழும்என்று போற்றி வருகின்றனர். 

இளவரசரிடமிருந்து ஏழை விவசாயி வரை பண்பான இதயமுள்ளவர்களைக் கண்டிருக்கிறார்.ஒரு சிறந்த நாடகக் கலைஞராகவும், நாடக எழுத்தாளராகவும், கவிஞராகவும், பாடகராகவும் மட்டுமின்றி, சிற்பியாகவும் பரிணமித்துள்ளார்.செருப்பு தைப்பவனின் மகனாய் பிறந்த ஸ்டாலின் உலகத் தொழிலாளர் வர்க்கத்தை இரண்டாவது உலகமகாயுத்தத்தின் போது வெற்றிப் பாதையில் வழிநடத்தினார்.அதேபோல் மறுப்பிறப்பாக மற்றொரு செருப்பு தைப்பவனின் மகனான அனசன் உலக மக்களின் மனங்களில் தனது படைப்புகளால் யுத்தம்  செய்து வென்று விட்டார் என்பது, மலைப்பாக தான் உள்ளது. 

அனசன் பெற்றிருந்த திறமைகளை ஒடுக்கிவிட முடியவில்லை. அவரே தனது திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்.தம்மை உலகிற்குப் பிரகடனப்படுத்துவதில் அசைக்க முடியாத தைரியமும் கொண்டிருந்தார்.அவருடைய ஏழ்மைப் பின்னணியும், ஒப்பீட்டளவில் அவருடைய நாட்டின் விளிம்புநிலை அந்தஸ்தும் புறந்தள்ளப்பட்டு அவர் உலகம் கொண்டாடும் மாமேதையானார்.

 *****

 

 

 

 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World