Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueகுலாத்தி சமூகத்தில் பெண்கள் !?...
 

து.ரேணுகாதேவி                                         

சமதர்மநாடு என்ற அடையாளத்துக்குள் நிர்பந்திக்கப்பட்ட இந்நாட்டில்தான் ஏற்றத்தாழ்வுகள் புரையோடிக்கிடக்கின்றன. ஏழைப்பணக்காரன், கீழோன், மேலோன் என்ற பாகுப்பாடுகள் விளைந்து வளா;ந்துள்ளன. பிறப்பால்; இனத்தால்; சாதியால்; பணத்தால் வகுக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளே கொடுமை நிறைந்தன. இத்தகைய சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நமக்கு ஒருசில சமூகத்தினாpன் வாழ்நிலைகள் வெளியுலகத்திற்குத் தொpயாமல் மறைந்துக்கிடக்கவும் செய்கின்றது. இத்தகைய மக்களின் வாழ்நிலைகள் வெளிக்கொணரும் போதுதான் அவ்வினத்தின் வரலாறு ஆவணமாகிறது.
1994 - ல் வெளிவந்த “குலாத்தியாச்சே போர்” (ஒரு குலாத்திக் குழந்தை) எனும் சுயசாpதையின் வாயிலாக பாலியல் உணர்ச்சியூட்டும் தமாஷா நடனம் ஆடும் குலாத்தி சமூகத்தின் வாழ்நிலைகள் பெரும்புயலைக் கிளப்பியது. குலாத்திச் சமூகத்தில் முறையற்றுப் பிறந்து வளா;ந்த கிஷோர் சாந்தாபாய், குலாத்திச் சமூகத்துப் பெண்களின் நிலைகளையும், அவர்களுக்கு இளைக்கப்படும் கொடுமைகளையும் ஒளிவு மறைவற்ற நெஞ்சை நெகிழவைக்கும் விதமாக வெளிபடுத்தியுள்ளார். தனது சமூகத்தின் தரம் தாழ்ந்த பழக்கவழக்கங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடிய சிறுவனின் உயிர்த்துடிப்பு நிறைந்த சுயசாpதை “குலாத்தி-தந்தையற்றவன்”.
மேற்கு மகாராஷ்ராவுக்குக் குடிபெயா;ந்த குலாத்திச் சமூக மக்கள் ராஜஸ்தான் நாடோடிப் பழங்குடிக் சமூகத்தினைச் சார்ந்தவர்கள். இவர்கள் கழைக்கூத்து நடத்திவந்த நிலைமாறி வறுமையால் மிகவும் கவர்ச்சியான தொழிலான நடனத்துக்கு மாறினா;. இச்சமூகத்தில் பிறந்த பெண்களுக்கு நடனமும் இசையும் பயிற்றுவிக்கப்பட்டு, ஆண்களைச் சந்தோஷப்படுத்தி கவர்ச்சி நடனம்புரிந்து பணம் சம்பாதிக்கும்படி இப்பெண்கள் கட்டாயப் படுத்தப்பட்டனா;. இச்சமூகத்து ஆண்கள், பெண்களை வைத்தே பணம் சம்பாதிப்பதால் தனது மகள்களையும்; சகோதாpகளையும் கவர்ச்சி நடனம் புரியச்செய்து பணம் சம்பாதித்து மதுவும்; கூத்தும்; மாமிசமும் உண்டுகளிப்பதில் ஈடுபடுகின்றனா;. தங்கள் மனைவிகளை மட்டும் இத்தொழிலுக்கு அனுப்புவதில்லை.
குலாத்திச்சமூகத்துப் பெண்களுக்கு கல்வி, அவர்களின்; குடும்பத்தினராலேயே நிராகாpக்கப்படும் சூழல் நிகழ்கின்றது. இதனால் இவர்களுக்கு பிஞ்சு பருவத்திலேயே நடனப்பயிற்சியும், இசைப்பயிற்சியும் வழங்கப்படுகின்றது. பெரும்பாலான குலாத்திப் பெண்கள் ஒன்பது (அ) பத்துவயதிலேயே நடனம் பழக ஆரம்பித்து, பக்குவமாக இருப்பதோடு சுலபமாக வளைந்துக் கொடுக்குமாறு செய்கின்றனா;. பெரும்பாலான இந்தப் பெண்கள் பள்ளிக்கூடம் பக்கமே செல்வதில்லை.
மீசை முளைக்காத இளைஞன் முதல் பற்கள் இல்லாத முதியவன் வரை அனைவரையும் கவரும் வண்ணம் ஆடும்படி நிர;பந்திக்கப்படுகின்றனா;. ஆண்கள் வீசும் காசுகளைப் பொறுக்குவதற்காக தாவிதாவி ஓடி தன்நிலையில் சோர்ந்து விழும்வரை அலைக்கழிக்கப்படும் சூழலில் வாழ்கின்றனா;.
குலாத்திச் சமூகத்தில் பிறந்தனாலேயே தனக்குப் பிடித்தமான வாழ்க்கையைத் தோ;வுசெய்யும் உரிமையை இழக்கின்றனா;. தன் காலம் முழுவதும் தவறான தொழிலின் வாயிலாக தன் அப்பா, அண்ணன், தம்பி ஆகியோருக்கு சம்பாதித்து கொடுக்கும் அளவிற்கு நிற்பந்திக்கப்படுகின்றனா;. “அழகாக பிறந்ததால் நாங்கள் நடனகாரிகள் எல்லோருக்குமே நாங்கள் சொந்தம். ஏதேனும் ஒரு ஆணை மட்டும் காதலிக்க எங்களுக்கு உரிமை இல்லை” என்ற குமுறல்கள் கனன்றுகொண்டே இருக்கின்றது இப்பெண்களின் இதயங்களில்…
தமாஷா நடனக்காரிகள் என்ற முத்திரைக் குத்தப்பட்டதால் இவர்களை மணந்துக்கொள்ள யாரும் முன்வருவதில்லை. இவர்களில் எவரேனும் காதலுக்கு ஆட்கொள்ளப்பட்டால் தண்டனைக்காளாகி, மீண்டும் ஜல்ஷா நடனத்திற்குள்ளேயே முடக்கி வைக்கப்படுகின்றனா;.
இச்சமூகத்தில் பிறக்கும் பெண்களுக்கு கொடூரமான வாழ்வே அமைகின்றது. பருவமடைந்து கன்னிகளாக இருக்கும்போதே இப்பெண்கள் விற்கப்படுகிறார்கள்.                                                                                                                                                                     அதன்பின் கா;ப்பமடைந்துவிட்டால் கைவிடப்படுகிறார்கள் இப்பெண்கள். அதனால்தான்; குலாத்திக் குழந்தைகள் தங்கள் பெயருக்குப் பின்னால் தாயின் பெயரையே வைத்துக்கொள்கின்றார்கள். இதுவே அவர்கள் முறைத்தவறிப் பிறந்தவர்கள் என்பதை வெளிக்காட்டி நிற்கின்றது. இவ்வாறு பிறந்த குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது அங்கு எதிர்கொள்ளப்படும் கேலிகளுக்கு அஞ்சியே கல்வியை ஒதுக்குகின்றனா;. பள்ளியையே விட்டு அகன்றுவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா;.
நடனக்குழுவில் இருப்பதால் இப்பெண்கள் காமத்தொல்லைகளுக்கு ஆளாக நோpடுகின்றது. கிஷோர் சாந்தாபாய் சிறுவயதில் தன்தாயின் பாசத்திற்கு ஏங்கித் தவித்தநிலையும்; குலாத்திச்சமூகத்தில் பிறந்ததால் தன் தாய் ஏமாற்றப்பட்ட நிலையையும் பதிவுசெய்துள்ளார். 
மணமேடையில் மணமகளாக எதிர்காலத்தை வரவேற்க தயாராகியிருந்த சாந்தாவுக்கு (கிஷோரின் தாய்) பதிலாக அவளின் சகோதாp மணமகளாக ஆக்கப்பட்டாள். அதற்கு காரணமாக அவளது தந்தையே முன்நிற்கிறார். காரணம் மகளின் அழகைக்காட்டி சாந்தாவின் அழகில் மயங்கிய பணம்படைத்த வயதானவர்கள், அரசியல்வாதிகளுக்கு வியாபாரம் செய்யும்பொருட்டு விற்றுவிடுகிறார். அழகு குறைந்த தன்னுடைய இன்னொரு மகளை மணமகள் இடத்தில் நிறுத்தி சதிசெய்து, தனக்கு கிடைத்த பணத்தை வைத்து ஊதாரியாக திரிகின்றான்.
ஆனால், சாந்தாவோ வயிற்றில் கரு உண்டானதும் கைவிடப்படுகின்றாள். கருவைக் களைத்துவிட்டு தந்தை நடனமாடச் சொல்கிறான். கருவைக் களைக்காமலேயே நடனமாடும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றாள். எட்டுமாதம்வரை கற்பவதியாயே இருந்து ஊர்ஊராய் அலைந்து திரிந்து ஆடி அழுத்துபோகிறாள். குழந்தைப்பிறந்த பிறகும் ஆடுகிறாள். பிறந்த ஒரு மாதமே ஆன பச்சிளம் பசியால் கதறும்போது பால்கொடுக்க முடியாமல் துண்டுத்துணியைப் பாலில் ஊற வைத்துக் குழந்தையின் வாயில் சப்புவதற்குக் கொடுத்துவிட்டு, குடிவெறியால் கிடக்கும் ஆண்களை சந்தோஷப்படுத்த ஆடுகின்றாள். கதறும் குழந்தையை காணவிடாமல் தடுக்கும் தன்னுடைய தொழிலையும் சுயநலஉலகையும் நினைத்து தவிக்கிறாள்.
ஆடிஆடி ஓய்ந்துகிடக்கும் நம்மை எவரேனும் மீட்க மாட்டார்களா? என்று ஏங்கித் தவித்து தனக்கு ஆசை வார்த்தைக்கூறித் திருமணம் செய்துக்கொள்ளுமாறு கூறும் ஆண்களின் மனநிலை அறியாது மீண்டும் ஒருவன் வலைக்குள் வீழ்கின்றாள். அந்த நாpயின் தந்திரத்துக்கு பலியாகி மீண்டும் ஒரு குழந்தைக்கு தாயாகிறாள். குடிப்பழக்கம் அவனது உயிரைக் குடித்தால் தனிமைப்படுத்தப்படுகின்றாள். ஜல்ஷா நடனக்குழு அவளை உள்ளிழுத்துக்கொள்கின்றது. மீண்டும் அங்கும் ஒருவன் அவன் வாழ்க்கையில் புகுந்து திருமண ஆசைக்காட்டியதால் இந்த வாழ்விலிருந்தும் தன் குடும்ப ஆண்களின் பிடியிலிருந்து தப்பிக்கொள்ள நினைத்து அவனுக்கு மனைவியாகி அவனது வெறுப்புக்கும் சலிப்புக்கும் ஆளாகி துயரம் துரத்தியதால் ஓடிஓடி ஓய்ந்துப்போகிறாள். தன்னால் வேறு ஒருவனிடம் பெற்று வளா;க்கப்பட்ட கிஷோரை வைத்துக்கொள்ள அவன் மறுத்ததால் தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டியதால் மகனை பிரிந்து அவனிடமே அடைக்கலம் புகுந்து வாழ்வே அல்லல்பட வாழ்கின்றாள்.
தன் தாய் சாந்தாவை போல் இச்சமூகத்தில் பிறந்த அனைத்துப் பெண்களின் நிலையும் இதுவே. தன்னை வழிநடத்தி செல்லக் கூடிய தன் குடும்பத்தினரே தவறான வழிக்குச் செலுத்துகின்றனா; என்பதை அறிந்தும் அவர்களின் பிடியிலிருந்து மீளமுடியாமல் சிக்கித் தன்வாழ்வினை சீரழித்துக் கொள்ளும் அவலநிலைக்குத் தள்ளப்படுவதை தன் சுயசாpதையின் வாயிலாக கிஷோர் சாந்தாபாய் பதிவுசெய்துள்ளார்.
குலாத்திச்சமூகத்து ஆண்கள் தங்கள் சமூகத்துப்பெண்களைத் திருமணம் செய்துக்கொள்வதில்லை. பெரும்பாலும் மற்றச்சமூகத்து இளம்பெண்களை (அழகான) கடத்தி வந்து மௌனி என்றச் சடங்கின் வாயிலாக அப்பெண்களையும் குலாத்திகளாக மாற்றிவிடுகின்றார்கள். அவ்வாறு கடத்தி வரப்பட்ட அப்பெண் அந்த ஆணுக்கு ஒரு குழந்தையைப் பெற்றுத்தந்த பின்னரே அந்தக் குலாத்தி அவளை மணந்துக்கொள்ள சம்மதிக்கிறான். அந்தப்பெண் அவனை விட்டு ஓடிவிடாமல் இருக்க இவ்வாறு நடைப்பெறுகின்றது. 
         ஜல்ஷா நடனத்தின் மூலம் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் தந்தையும் சகோதரா;களும் பிடிங்கிகொள்வதோடு நில்லாமல் ஆளுமைமிக்க பிரமுகா; அப்பெண்ணின் அழகில் மயங்கி அவளோடு வாழக்கேட்டால், அவாpடமிருந்து நிலம், தங்கம், வீடு, பணம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு, அவளை அவனோடு அனுப்பி வைக்கவும் செய்கின்றனா;. அப்பெண்ணை விலைக்கு வாங்குபவன் அப்பெண்ணிடம் தனக்கான தேவை முடிந்தப்பிறகு (அவள் கற்பம் அடைந்தவுடன்) அவளைவிட்டு விலகி செல்கின்றான். அல்லது உரிமையாளனாலோ அவனது குடும்பத்தினராலோ விஷம் வைத்துக் கொள்ளப்படுகின்றாள்.
குலாத்தி சமூகத்து ஆண்கள் அதைப்பற்றிக் கவலைக்கொள்வதில்லை. இத்தகைய பிரச்சனைகளைத் தடுக்க அவர்கள் உரிமையாளனை தனது வீட்டிலேயே தன் மகளோடு வாழ்க்கை நடத்திக்கொள்ள அனுமதிக்கின்றான். அந்த உரிமையாளனிடம் பணப்பற்றாக்குறை ஏற்படும் நிலைவாpன் அப்பெண்ணின் தந்தையான அக்குலாத்தியால் அவன் விரட்டப்படுவான். மீண்டும் வேறு ஆண்மகனை தேடிச்செல்ல அப்பெண் நிர்பந்திக்கப்படுகின்றாள். அப்பெண்ணிற்கு வயதானப்பின் அவளது தங்கை என்று அடுத்தடுத்தப் பெண்கள் இதே தொழிலை செய்து பணம் சம்பாதிக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள். சில அப்பாக்கள் தனக்கு பணம் தேவை என்பதால் தன் மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றனா;. வயதான பிறகு இவர்கள் யாருமற்ற நாதிகளாய், அனாதைகளாய் நோயுற்று, உணவின்றி மெலிந்து குப்பையோடு குப்பையாக ஒதுக்கி வைக்கப்படுகின்றனா;.
இந்நிலையில் தொடா;ச்சியாக அப்பெண்கள் புழுக்களைப்போல நசுக்கப்பட்டப்பின், அவர்களது மகள்களை அதேப்போல் ஜல்ஷா குழுவில் சோ;த்து தொழிலை தொடங்கி வைக்கின்றனா;. “கன்னித்தன்மை இழந்த ஒரு பெண்ணிற்குத் தமாஷா சந்தையில் மிகக்குறைந்த விலையே கிடைக்கும்”. இத்தகைய பாலியல் உணர்ச்சியூட்டும் தமாஷா நடனம் ஆடும் குலாத்திப்பெண்களின் குலத்தில் பிறந்த கிஷோர் சாந்தாபாய் காலே, தன் சமூகத்தின் இழிநிலைகளிலிருந்து போராடி கல்வியில் வென்று டாக்டரானார். “பள்ளிக்கூடம் போறதுக்கு நீ ஏன் ஆசைப்படுறே?... டோலக் அடிக்க கத்துக்கோ” என்று கூறியவர்களின் பேச்சுகளை மீறியும் தன்னிலையாய் போராடி நீண்டதொரு கடினமான பாதைகளைக் கடந்துவந்து, கடுமையான கஷ்டங்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டு எதிப்பாராத உதவிகளால் பலத்த சோதனைகளுக்குப் பின் தன் இலட்சியத்தை நிறைவேற்றினார். தமாஷாக்குழுவில் “கிஷ்யா” என்ற பெயருடன் டோலக் அடிப்பதும், தன் சித்திகளுக்கு விபச்சாரத்திற்கு ஆள்பிடிப்பதுமான தவறான தொழிலில் ஈடுபட்டிருந்த கிஷோர் தன் குலத்தொழிலை வெறுத்து, இப்போது டாக்டா;.கிஷோர் சாந்தாபாய் காலே ஆனார்.
தன்னுடைய கல்வி தன் குலத்தின் இழித்தொழிலையும், அவர்களின் பண்பாட்டு சீர்கேடுகளையும் மாற்றுவதற்கே பயன்படவேண்டும் என்ற நோக்கில், பணம் சம்பாதிப்பது தன் நோக்கமில்லை என்பதை நிறுபிக்கும் விதமாக வறுமையில் வாடுபவர்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்வதுடன், தன் இனத்தினரைப் பற்றிய இந்நூலின் வாயிலாக, அதனைப் படித்தவர்கள் கேவலமான குலத்தொழிலை வெறுத்தனா;. தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்தனா;. இளைஞா;களுக்கு விளையாட்டு மைதானம் ஏற்பாடு செய்தார். இதனால் புகை, குடிப்பழக்கம் குறைந்தது.
குலத்திக் குலத்தின் அவலங்களான “குலாத்தியாச்சே போர்” (குலாத்தி - தந்தையற்றவன்) என்ற இச்சுயசாpதை வெளியான ஆறு ஆண்டுகளில் குலாத்திகள் நடனம் நின்றுபோனது என்ற செய்தியையும் பதிவுசெய்துள்ளார். ஒரு தனி மனிதனால்; கல்வியின் துணைக்கொண்டு தன் குலத்தின் தலையெழுத்தையே சீரமைக்க முடியும் என்பதை “குலாத்தி - தந்தையற்றவன்” என்ற இச்சுயசாpதை நிறுபணம் செய்துள்ளது.
    
குலாத்தி (தந்தையற்றவன் )  கிஷோர்சாந்தாபாய் காலே, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் , சென்னை.2012
 
 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World