Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueசெலாஞ்சார் அம்பாட்டுகளும் செத்துமடியும் தமிழினமும்
 

 கவிஞர்.தெ.வெற்றிச்செல்வன்,

உதவிப்பேராசிரியர்,

அயல்நாட்டுத்தமிழ்க்கல்வித்துறை,

தமிழ்ப்பல்கலைக்கழகம்,

தஞ்சாவூர்.

           தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவக்கோர் குணமுண்டு என்கிற தொடரில் தனிக்குணம் என்ன என யோசித்தால்;;; இதுகாறும் தமிழ்ச்சமூக வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து அடையாளப்படுத்தினால் கிடைப்பதென்ன? ஏமாற்றம், துயரம், சுயஅழித்தொழிப்பு, ஓர்மையின்மை, தனிநபர் வழிபாடு, வந்தாரை வாழவைக்கும், அதே சமயம் தன்னினத்தவரை வாழவிடாமல் செய்யும் சனாதன சாதி இழிவுகள் பழம்பெருமை பேசிக் காலம்கழித்தல்; அளவுமிஞ்சி நடிப்பவரை நம்புதல்; குறைந்தபட்ச செயல்திட்டம் நோக்கித் திரளமுடியாத குறுங்குழுவாதம்; சடங்கு சம்பிரதாயங்களுக்கு அதீத முக்கியத்துவமளித்தல்; சுயமாரியாதையற்று சோம்பேறித்தனத்தில் உழலுதல்; பிற இனங்களின் பண்பாட்டில் பாடங்கற்காமை; அறிவியல் - பகுத்தறிவியல் கண்ணோட்டத்தைப் பேணாமை இவை போல்வனவற்றின் கதம்பத்திரளே அந்த தனிக்குணம் எனலாமா?

         இதைச் சொன்னால் திருக்குறளுக்கு உரை என்ற பேரில் அரைத்த மாவை அரைத்து, துப்பிய சளியை விழுங்கித்துப்பும் - பட்டிமன்றத் தமிழ் வளர்க்கிறேன் என்று கதைக்குதவாத குதர்க்கம்பேசும் கசுமாலத்தமிழாசிரியர்கள் கோபப்படலாம். நடுநிலையான சூடுசுரணையுள்ள தமிழாய்வாளர்கள் கோபப்படாமல் இது குறித்து தொடர் முன்னெடுப்பை இயக்குவதன்மூலம் தமிழ்ச்சமூக வளர்மைச்செயல்பாடு குறித்து இயக்கங்கட்டி செயல்படத் தொடங்குவதன் இன்றியமையாமையை உணர்வர். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி எனும் திண்ணைப் பேச்சர்களும் கடவுளே தமிழ் வளர்த்தாள் எனக் கதையளக்கும் கசடர்களும் தமிழைப் பிழைப்புக்காக வழித்து நக்கிவிட்டுப் போனதைத் தவிர வேறு என்ன செய்தார்கள்?

         சேரனும், சோழனும், பாண்டியனும் அடித்துக்கொண்டு செத்ததைதமிழ்வீரம்’  என்று அடையாளப்படுத்த முடியுமா? புகழ்ந்து முதுகு சொறிந்து கொடுக்கும் புலவர்க்கு ஊரான் வீட்டுச்சொத்தை, ஊர்களை, யானையை, பொற்காசுகளை வழங்கிய அவர்தம் பொறுப்பற்றதன்மையை கொடை எனச்சொல்ல முடியுமா? தமிழா; இருவா; சண்டையிட்டு மாற்றாருக்கு வழிவிட்டு உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா எனவோ, குரங்கு அப்பம் பிரித்த பூனை கதையாகவே போன வரலாற்றை என்னவென்பது? கற்பு கற்பு என ஓயாமல் கதறிவிட்டு மனைவியின் மூன்று தீட்டு நாட்களில்கூட பொறுக்காமல் படுக்க காமக்கிழத்தி, காதற்பரத்தை, சேரிப்பரத்தையிடம் சென்ற கற்புக்கரசர்கள் தலைமக்களான கதைப்பை என்னவென்பது?

          தமிழிசையை விட்டுவிட்டு பிறமொழிக் கீர்த்தனைகளுக்கு தொடைத்தட்டிக் கொண்டிருக்கின்றோம். ஊடகங்களில் பொது இடங்களில் இயன்றளவு தமிழ் புழக்கத்தையாவது கொண்டுவர முடிந்ததா என்றால் 12 , 13 நூற்றாண்டுகளாக மணிப்பிரவாளம் கோலோச்சுகிறது. குறைந்தபட்சம் தமிழில் பெயர்களையாவது வைக்கமுடிகிறதா என்றால் எண்கணிதமும் சமயப் பிழைப்புவாத சோதிடமும் சோனகிரி தமிழர்களைப் பிதுக்கித் தள்ளுகிறது.

          வலவன் ஏவா வானவூர்தி என அந்தக்காலத்திலேயே தமிழன் சிந்தித்திருக்கிறான்.அணுவைப் பற்றி யோசித்திருக்கிறான் என்று பிளந்துகட்டுகிறவர்களிடம் தமிழன் அறிவியல் கண்டுபிடிப்புகளை சொல்லச்சொன்னால் விரல்விட்டு அந்தக்கால கல்லணை முதல் இந்தக்கால மின்னஞ்சல் வரை ஒன்றிரண்டை முக்கிமுக்கிச் சொல்லலாம்.

          தமிழை பக்திவளர்த்தது என்று சொல்லுபவர்கள் நெஞ்சார யோசித்தால் தோன்றுவது என்ன? வழிபாட்டு மொழியாகமட்டும் பலநாடுகளில் குறுகிப்போனதற்கு சாமியாடிகளும் பூசாரிகளும் சமயவாதிகளுமல்லாது யார் காரணம்?

          நீண்ட நெடுங்காலமாகவே தன்னிகரற்று விளங்கும் தலைமைதாங்கும் சக்தி என்ற ஒன்று தமிழ்ச்சமூகத்துக்குள்ளிருந்து உருவாக்கப்படாதபடி நேர்ந்த அவலம் பேரவலம். எனவே எளிதாக கொத்தடிமையாயின் கூலியாகி பணிந்தேத்தி கூழைக் கும்பிடுகளுடனும் போலிப்புகழ்ச்சியுடனும் உலகம் முழுதும் அறியாமைப் புதைசேற்றில் அழுந்திப்போன வரலாற்றை என்னவென்பது.

          அடிமை வியாபாரக் காலத்தில் மேலைநாடுகளில் கூட இல்லாத அளவு அடிமட்டத்தமிழர்கள் அல்லலுற்று மந்தைகள்போல ஓட்டிச்செல்லவும் சரக்குகள்போல ஏற்றிச்செல்லவுமான வரலாறு தமிழர் வரலாறு. மிக நாகரிகமாக ஆங்கிலேய நிர்வாகிகள் மிகவிசுவாச இணக்கக்கொண்ட, எளிதில் களைப்படையாத கடின உழைப்பாளிகள் என்று மெச்சித்தானே தோட்டத்தொழிலுக்கு ஓட்டிவிரட்டினர்.

           சென்ற இடத்திலும் சாதி, தாய்த்தமிழகத்திலும் சாதி இனம்சார்ந்த நியாயம்சார்ந்த வலைப்பின்னல் உருவாகாமல் போக அண்மைக்காலத்து வீரஞ்செறிந்த தமிழ் அடையாளம் காட்டிய ஈழப்போர் முடிவுக்குவர, காட்டிக்கொடுப்புத் தமிழர் மாண்பு,உட்பகை  உட்பட பலவும் காரணமன்றோ?

           இங்குதான் வழிபாட்டில் hpமையில்லை எனதனிக்குணம்ஒதுக்கிவைத்ததே வெள்ளைக்காரன் கட்டிய தேவாலயத்தில் அனைவரையும் சமமாய் மதித்து அவன் உள்ளே விடச் சம்மதித்தபோதும் தனிக்குணத் தமிழர்கள் உடையார் கிறிஸ்டியன் முதலியார் கிறிஸ்டியன்; வெள்ளாளர் கிறிஸ்டியன் என அடித்துக்கொள்ளவில்லையா? ஆனந்தரங்கர் நாட்குறிப்பு தொடங்கி அண்மைக்கால செய்திக் குறிப்பு வரை இதேநிலைதான்.இந்த நிலைகளை இன்னும் விளக்க .சிங்காரத்தின் வார்த்தைகள் நன்கு உதவும்.

                   “உலகத்தமிழர்களே ஒன்றுபடுங்கள்!” தில்லைமுத்து கூவினான். “தமிழினம் முன்னேறத் திட்டம் தீட்டுங்கள்!”.            

                   “தில்லைமுத்து! எனது நண்பர் ஒரு கதை சொன்னார். வீரத் தமிழினத்தின் மாட்சிமிகு நிலைமை பற்றி நீ அதைத் தெரிந்துகொள்வது அவசியம். சுருக்கமாகச் சொல்கிறேன்”. பாண்டியன் நிமிர்ந்து உட்கார்ந்தான். “எல்லாரும் அன்றன்று காலையில் வேலை தொடங்குமுன், மணியக்காரனிடம் போய் ஆளுக்கு மூன்று செருப்படி வாங்கிக்கொள்ள வேண்டுமென்று அரசு ஆணையிட்டது. மறுநாள் கருக்கலில் ஊருக்கு ஊர் மணியக்காரன் வீட்டுக்குமுன்னே வீரத்தமிழ்க் குடிமக்கள் கூடி நின்று, ‘விரசாய் அடிச்சுவிடுங்கையா, வேலைக்குப் போகணும், நேரமாகுதுஎன்று முறையிட்டு, முதுகைத் திருப்பிக் காட்டிக்கொண்டிருந்தனர். சுணங்காமல் அலுவலை முடித்துச் செல்வதற்காக அவரவர் சக்திகேற்பக் காலும் அரையுமாக லஞ்சத் தொகையும் எடுத்துச் சென்றிருந்தார்கள். இதுதான் தமிழினத்தின் இன்றைய நிலை, நேற்றைய நிலை”.

                   “எனக்குத் தமிழக நிலவரம் தொpயாது”. தங்கையா சொன்னான்: “சிறு வயதிலேயே கப்பலேறி வந்துவிட்டேன்நிலைமையை மாற்ற என்ன செய்ய வேண்டுமென்கிறாய்? சொல்லேன்”. என்று தொடா;கின்ற புதினத்தில் தமிழினம் இவ்வாறு சித்திhpக்கப்படுகிறது.

                   “இல்லை. அவா;கள் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தமிழ்நாடு என்றென்றும் மானத்துடனும் வீரத்துடனும் தனிச்சிறப்புடனும் தலைநிமிர்ந்து நிற்கும்”.

இதுவரை மானத்துடனும் வீரத்துடனும் தனிச்சிறப்புடனும் தலைநிமிர்ந்து நின்றுள்ளதோ?”.

 “என்ன சந்தேகம்? சங்க நூல்களைப் பயின்ற யாருக்கும் இந்த ஐயம் தோன்றாது. ஆனால் நீயும், தங்கையாவும் விதிவிலக்கு; நீங்கள் இருவரும் விதண்டாவாதக்காரர்கள்”.

 “தில்லைமுத்து! நீ தமிழகத்தை நேரில் கண்டதில்லை. கவிதைகளில் பார்த்தவன். கவிதை என்பதில் கற்பனை என்ற பொருள் மறைந்திருக்கிறது. இதை மறந்து விடக்கூடாதுபாண்டியன் குரலில் சூடு பிடித்தது.

 “பழம் பாடல்களில் விதந்தோதப்படும் தமிழ் வீரமெல்லாம் பெரும்பாலும் சில்லறைச் சச்சரவுகளைப் பற்றியவையே. காளையார்கோயில் வேங்கைமார்பனைப் பாண்டியன் வென்றதில் என்ன பெருமை இருக்கிறது? இருவரும் தமிழர்கள். ஓர் அரசன், சின்னஞ்சிறு கிராமத் தலைவன் ஒருவனை வீழ்த்தி, அவனுடைய சொத்து சுதந்திரங்களைப் பறித்துக் கொண்டான். இதிலென்ன பெருமை இருக்கிறது”.

சிகரெட் பற்ற வைத்துப் புகையை இழுத்து ஊதினான்.

டில்லிப்பட்டாணியர் தமிழகத்தில் புகுந்து சூறையாடியபோது இலக்கியப் புகழ் பெற்ற தமிழ் வீரர்கள் எங்கெங்கே எதிர்த்துப் போராடினார்கள்? எத்தனைப் போர் உயிர்ப்பலி கொடுத்தார்கள்? எங்கும் இல்லை, எவருமில்லை. மாலிக்காபூரின் குதிரைப்படை வெகுதொலைவில் வரும்போதே, ‘வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசையாண்ட தென்னவன்ஒரே ஓட்டமாய் ஓடிப்போய் நோடியமங்கலம் மலைக்காட்டில் ஒளிந்துகொண்டான்”.

                 “பட்டாணியர் படலத்தை மனதில் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறாய்”. தில்லைமுத்து உறுமினான். “ஒரு வழுவலை வைத்துக்கொண்டு ஓர் இனத்தையே இழிவுபடுத்தக் கூடாது. உனக்கு மொத்தப் பார்வை குறைவு.

                  “மொத்தப் பார்வை அதிகமாயிருப்பதே என்னிடமுள்ள குறை: இல்லாதது அல்ல. அது நிற்க, விஜயநகர வடுகர்சேனை வந்தபோது நடநத்தென்ன? தமிழர்களின் உதவியோடு பாண்டியனின் அரசு வீழ்த்தப்பட்டது. விஜயநகரத்தானுக்குத் தமிழ்க் கூலிப்படைகளை அமர்த்திக் கொடுத்து பாண்டியனின் படைகளையே கைமாறச் செய்த தரகன் யார்? அரியநாதன்-தமிழன்.

                   “நம் வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, இஸ்லாமிய ஆதிக்கத்தை ஒழித்து, ஹிந்து சமயத்துக்குப் புத்துயிரூட்டவே விஜயநகர ராயர்கள் தமிழ்நாட்டின்மீது படை எடுத்தார்கள்”. தங்கையா குறும்புச் சிரிப்புடன் தலையிட்டான்;. இதை நீ மறுக்கிறாயா?”

                   “இஸ்லாமிய ஆதிக்கத்தை ஒழிப்பது, மண்ணாங்கட்டி! இது ஓர் அசல் கற்பனை. அவர்கள் நாடியது விஜயநகர ஆதிக்கம்சண்டைக்குப் பயந்து சுல்தானுக்கு மகளைக் கட்டிக் கொடுத்த ராயர்! பெரும்படை இருந்தும் சண்டை போடாமலே சுல்தான்களிடம் சரணடைந்த ராயர்இப்படிப் பல ராயர்கள் விஜயநகரை ஆண்டிருக்கிறார்கள். இதுதான் இஸ்லாமிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய லட்சணம்”.

                  “வடுகர்கள் விவகாரம் நமக்கு வேண்டாம்”. தில்லைமுத்து கூறினான். “தமிழினத்தின் மான வீரப் பரம்பரை பற்றிய உன் கருத்து விபரீதமானது. அதை நான் ஏற்கமாட்டேன். தமிழ் உணவு கொண்ட எந்தத் தமிழனும் ஏற்க மாட்டான்”.

                  “விபரீதம் அல்ல, உண்மை. தமிழ் வீரம், தமிழ் நாகாரிகம் என்பதெல்லாம் நம் புலவர்களின் தோப்பி மயக்கத்தில் தோன்றிய வெறும் கற்பனையாக இருக்கலாம் என்றே எனக்குத் தெரிகிறது”.

                   “உளறாதேசெங்குட்டுவன்! ஏலாளன்! ராஜேந்திரன்! சுந்தரன்! கருணாகரன்…!

                  “பழங்கதை, பழங்கதை. எல்லா இனங்களுக்குமே இப்படி ஐந்தாறு பெயா;கள் உண்டு. இவார்கள் எல்லாரும் எந்த அளவில் எதைச் சாதித்தார்கள்? அலெக்ஸாண்டார் பாரசீய மகாசாம்ராஜ்யத்தை வென்றான், ஹிட்லர், ஒரே பாய்ச்சலில், பிரிட்டிஷ் - பிரெஞ்சு - பெல்ஜிய - டச்சுப் படைகளைச் சின்னாபின்னமாய்ச் சிதைத்தெறிந்தான். கிணற்றுத் தவளைக்கு அமேஸான் ஆறு, பசிபிக், ஆழி, இமயமலை எல்லாமே அந்தக் கிணற்றுக்குள்தான்.’’ என்று பகடியாகவும், சுயவிமர்சனமாகவும், ரௌத்திரத்தோடும் சிங்காரம் உரையாடும் தர்க்க நியாயங்கள் தமிழ்ச்சமூகத்தின் முன் எப்போதுமே காத்துக் கிடக்கின்றன.

        ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகல் என்னநீதி எனச் சாதிக்கு வக்காலத்து நியாயமா? தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சர்ந்தவரது பிணத்தை தூக்கிப்போக பொதுப்பாதையில் வழிகொடுத்தஆஷ’; துரையைச் சுட்டுக்கொல்லவில்லையா? அதை விடுதலைப்போராளியின் தியாகமாக அறுவடை செய்து கொள்ளவில்லையா? அனைத்து வகுப்பார்க்கும் ஆங்கிலேயரது கல்விகொடுக்கும் நிலையங்கள் அடித்து நொறுக்கப்படவில்லையா?

          இலங்கை மலையகத்திலிருந்து சப்பித் துப்பப்பட்ட மலையகத்தமிழரை  (வந்தாரை வாழவைக்கும் சமூகம், சென்றார் மீண்டுவந்தால் வாழவைக்க வேண்டியதில்லை போல) கண்டுகொள்ளாமலும் வேறு எங்காவதுபோகட்டும் எனும் முகத்திருப்பியும் நடத்தவில்லையா?

           மலேயாவிலிருந்து சீனார்கள்யாரும் திரும்பக்கூடாது அங்கையே போராடி உங்கள் நிலையைத் தக்கவையுங்கள் என உறுதிபடுத்திய மாவோ சீனர்களுக்குக் கிடைத்தது போல தமிழர்களுக்கு தலைமையின்மையால் தான் சீனர் மக்கள் வாக்காளர் தொகை அதிகாpத்து மலேசியாவின் தீர்மானகரமானதாக இன்று உருவாகியிருக்கிறது சீனர் வரலாறு. பர்மாவிலிருந்து ஓடிவந்த தமிழகதிகள்  பிறஇன அகதிகளைவிட தரம்தாழ்த்தி நடத்தப்பட யார்காரணம்?

           மரண ரயில்பாதை அமைக்கப்போய் லட்சக்கணக்கில் கொடூரமாக மாண்ட தமிழர்க்கு இழப்பீடுகூட வாங்கமுடியாத நிலையில் தத்தளித்ததும், சீனர்களும், சயாமியரும், மலாய்க்காரரும் அதில் வரலாற்றுணர்வுடனிருந்து கணக்கீடு செய்து இழப்பீடு வாங்கியதுமான வரலாறுதானே சயாம் மரண ரயில் வரலாறு?

           அதன் தொடர்ச்சிதான் பூமிபுத்ர(மண்ணின்மைந்தர்) திட்டங்களில் புறக்கணிக்கப்பட்ட செலாஞ்சார் அம்பாட்டுகளில் செத்துமடியும் புலம்பெயர்ந்து புலம்பெயர்ந்து நாடோடி மக்களுக்கிருக்கும் பாதுகாப்பும் இருப்புசார் உறுதியும்  கூட அற்றுப்போன தமிழர்வரலாறு?

           தாய்த் தமிழகத்திலிருந்து மனஊரிலிருந்து சேரிக்குப் பெயர்ப்பிக்கப்பட்ட போது பஞ்சத்தில் அடிபட மலேயாவுக்கும் பற்பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனார் போன இடத்தில் வாழ்வைத்  தகவமைக்க முடியாதபடி , குடிப்பழக்கம்  குலத்தெய்வம்  குண்டுசட்டிக்  குதிரையோட்டல்களால் குறுகிமீண்டும் தோட்டங்களிலிருந்து வேறுவேறு தோட்டங்களுக்கும் புலம் பெயர்ப்பிக்கப்பட்டபோது கேட்க நாதியில்லை என்பதை புதினமே பேசுகிறது.

அம்மா ஏம்மா மூட்டமூட்டயா கட்டிவச்சிருக்க?

………………………………………….            

எங்கம்மா போறோம்?

தெரியாதுயா?                  

…………………………………………                                        

 ஏம்மா போறோம்?                                      

 தெரியாது கண்ணு.” (பக்;;:83)

எனத் தொடங்கும் உரையாடல் தன்னை விரிவுபடுத்தி மண்ணின் மைந்தரான மலாயர்களுக்கு அரசு அமைத்துக் கொடுக்கும் குடியிருப்பு அபிவிருத்தித் திட்டத்தில் இடம்பெயர்ந்த ஒரு தோட்டக்காட்டு மக்களின் கதை செலாஞ்சர் அம்பாட் நாவலாக விரிகிறது.

          வீட்டுக்குள் ஆள் புழங்குகிறார்களோ என்ற அனாவசிய பிரம்மையைக் கிளப்புகிறது வாசல்திறந்து கிடந்தவீடுகள்அல்லது வீட்டில் இத்தனைகாலம் குடியிருந்தவர்கள் சந்தடி சத்தத்தை காணவில்லை என்று கலங்கி நிற்கிறதோஎன்று தோட்டவீடுகள் வெறிச் சோடிக்கிடக்கும் நிலை சித்திரிக்கப்படுகிறது.

                “ இப்படித்தான்யா மாட்ட ஓட்டிகினு வந்தமாரி வெள்ளைக்காரன் நம்மல ஓட்டிக்கிட்டு வந்தான்னு.. காக்காய் ஓட்டத்தான் கூட்டிட்டு போறேன்னு சொல்லி காட்ட அழிக்க சொல்லி , கல்லு முள்ளு காடு மேடல்லாம் வேல வாங்கி, மலேரியா கொசுல கடிபட்டு செத்து, சையமுக்கு கம்பி சடக்கு போட சப்பாங்காற சாகடிச்சது போக, மிச்ச சொச்சந்தான் நம்பன்னு, எங்கஅப்பா சொல்லுவாரு, இப்பியும் அப்படித்தானே நடக்குது! என்னா…? ஏதுன்னாவது கேட்டுத் தொலைக்கக் கூடாதா…? என்னா கடிச்சா தின்னுருவான் ” (பக்;;;:29) என்று கதாபாத்திரங்கள் அங்கலாய்க்கின்றன.

                “ தோட்டச் சனங்கள் கூடிப் பேசும் சங்கக் கொட்டாய் , தாத்தாவின் மடியில் உரிமையோடு படுத்துக்கிடக்கும் பேரனைப் போல தகரக் கூரையில் படர்ந்து கிடக்கும் மாமரஇலைகள், இரண்டு தலைமுறைகளாய் உடன் வாழ்ந்த வாழை, தென்னை, துளசி, கனகாம்பரச் செடிகள், ஓய்வொழிச்சலான நேரங்களில் லயத்துப் பெண்கள் கூடும் நெல்லி மரம் இவற்றைக் கடக்கும்போது , வெயிற் காலங்களில் கித்தா மரத்திலிருந்து விழுந்து திசைக்கொன்றாய் சிதறிய கித்தாக் கொட்டைகளாய் சிதறிப்போன சனங்களின் நினைவு உள்ளுணா;வைத் தீண்டுகிறது ” (பக்:31) என்பதான வருணிப்புகள் சிதறுண்ட வாழ்வைப் படம்பிடிக்கின்றன. தவிர்க்க முடியாதவையான தொடர் இடப்பெயர்வு அவலங்கள் இப்படித்தான் நேர்கின்றன என, காரணகாரியச் செயன்மைகள் பேசத்தானே வேண்டியிருக்கிறது?

                “ ரப்பர்க் காட்டைக் கடந்து மெயின் ரோடு சாலையில் ஏறியவுடன் லாரிக்குள் தாராளமாய் வெளிச்சம் பாய்ந்து கண்களைக் குத்தியது. உச்சி வெயிலின் தகிப்பு லாரிக்குள் புகுந்துதனக்கும் ஓரிடம்; வேண்டும்என்று உரிமையோடு நுழைந்து கொண்டது.. லாரி வேகம் பிடிக்க காற்று புயலாய் வீசி கண்களைக் குறுக வைத்தது. தலை மயிர் சிதறிப் பறந்தன. மேல் தாவணி தேசியக் கொடியாய்ப் பறந்தது. மனித நடமாட்டம் குறைந்ந தார் சடக்கு அது. வெள்ளை மேகங்கள் இன்னதென்று சொல்ல முடியாத வடிவங்களில் வானத்தில் மிதந்து கிடந்தன. நேரத்துக்கு நேரம், அது நிலையற்ற வடிவங்களுக்கு மாறுவதானது, சனங்களின் வாழ்வும் இன்னதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத குழப்பமான நிலைக்கு உவமையானதோ? ” (பக்:33)

                “ பிறந்த சூறாவில் உள்ள பெயர் சரியானதுதான் என் மாஜிஸ்டிரேட்டிடம் கைத்தூக்கிச் சத்திய பிரமாணம் செய்து வாங்கி வந்து இரண்டு வருசம் ஓடிவிட்டது. அதுவும் எஸ்டேட் கிராணியிடம் லீவு கேட்டு நின்று, அவரிடம் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை பெற்றுக்கொண்டு , போக்குவரத்துச் செலவுக்குக் கடன் வாங்கி, நாலுமுறை எஸ்டேட்டுக்கும் டௌன் ஆபீசுக்குமாய் நடையாய் நடந்து , நாயாய்க் காத்திருந்தது, தலை சொரிந்து, தப்பும் தவறுமாய் மலாயில் பேசி, கூனிக்குறுகிய பின்னரேதான் திருத்தம் செய்யப்பட்டது. இப்போது பாஸ்போர்ட்டில் பெயரைத் திருத்தும் படலத்தில் அலைக்கழிய வேண்டியிருக்கிறது. பதிவதிகாரிகளின் கவனக்குறைவுதான் எழுத்துப் பிழைகள் நேரக் காரணம். இதற்காக தண்டனையை அனுபவிக்கிறார்கள் பாமரச்சனங்கள். ஓரிரு எழுத்துப் பிழைகள் கூட மலாயாவில் பிறந்த ஒருவனுக்குக் குடியுரிமை மறுக்கப்படுவதை நினைக்கும்போது மனம் வெறுப்பை உமிழ்ந்தது ” (பக்:36)

                          ‘ வக்கத்துப் போயிட்டமே மக்காஎன்று ராக்காத்தா புலம்பியபடியிருந்தாள் என நகரும் புதினம் நீல பாஸ்போர்ட் சிவப்பு பாஸ்போர்ட் என்கிற வேறுபாடுகள்  பாரபட்சங்கள் கும்பினியார் (வெள்ளையர்); காலத்தில் இருந்த நிலைமைகள் பேசப்படுகின்றன.

             “ பிரஜாவுரிமை கொடுக்கிறதுக்கு தோட்டந் தோட்டமா வந்து கைத்தூக்கச் சொல்லி பிரஜாவுரிமை கொடுத்தாங்களாம் அன்னிக்கி, நம்ம அப்பன் பாட்டன் கைத்தூக்கிருந்தான்னா இன்னிக்கி இப்படி லோல் பட வேண்டியதில்ல ” , வெற்றிலையை இடைவெளியே விடாமல் குதப்பிக்கொண்டிருந்த அதே கிழம் பேசியது.           

                  “ எங்கப்பா சொல்லுவாருஅப்போ கப்பலேறி வந்தவங்க இது பொழைக்க வந்த ஊருதான் , நம்ம தாய்ப்புள்ள ஊருக்கே திரும்பிடணும்னு ரொம்பப் பேரு கைத்தூக்கிலியாம்…” என்றார் இன்னொருத்தர் ” (பக்:37)

              மலாய்மொழியில் பேசினால்தான் பிரஜாவுரிமை கிடைக்கும் எனும்போது தமிழ் எழுதப்படிக்கவேத் திணறிய தமிழர் பலர் உமை பெறாமலே கூனிக்குறுகி அவமானங்களைத் தின்று இறந்துபோன வரலாறு தமிழர் வரலாறுதான்.

               ரப்பர்தோட்டங்கள் மறைந்து குறைந்தளவு அதிகாரம் எனும் முதலாளித்துவக் கணக்கில் முளைத்தவைதான் செம்பனைக்காடுகள். ரப்பர் தோட்ட வீட்டிலாவது குறைந்த பட்சம் வாழ வழியண்டு. ஆனால் அந்த ஈயவீடுகளினும் கீழான மரத்தரையமைப்பு வீடுகள் இருபது முப்பது குடும்பங்கள் வாழ ஒரே கொட்டகை. கொசுக்கடி.,மருத்துவ கழிப்பிட சுகாதார வசதியற்ற சிறைக்கொட்டடிகள் போன்ற வாழ்வு.

               தமிழர் தனிக்குணம் வெள்ளையரால் படிக்கப்பட்டு உலகெங்கும் பரப்பப்பட்ட பிறகு சீனத்தவுக்கேயானால் என்ன? ஜப்பானியனானால் என்ன? பர்மியானானால் என்ன? சிங்களனானால் என்ன? ஒரு சாராயக்கடையும் முனீஸ்வரன் கோயிலும் தோட்டக்காட்டிலேயே அமைத்து அதைவிட்டு வெளியே வந்து நகரவாசனை நுகரமுடியாதபடி தமிழர் அடைக்கப்பட்டனர்.. மற்ற வெளிச்சமூகம் பற்றிய பார்வையற்று - தமக்குள்ளேயே அடி வெட்டுக்குத்துகளில் தமிழ்ச் சமூகம் குறுக, தாய்த் தமிழகச்சேரி என்கிற கருத்தாக்கத்தை காலனியம் உலகெங்கும் பரப்ப - உலகின் பல்வேறு நாடுகளில்தமிழர்சேரிஅமைத்த வரலாற்றை என்னவென்பது.

பாரதி இன்றிருந்தால் என்று கற்பனைத்தால், “தமிழருணவை தமிழன் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? தமிழா;நோக தமிழா;பாh;க்கும்வழக்கம் இனியுண்டோஎன்றுதான் எழுதியிருப்பானோ என்னவோ. கங்காணி ஆள்கட்டி - கிராணி தமிழர்சேரிகள் - தமிழ்ச் சமூகத்தில் திடீர் திடீரென வாலாட்டும் ரௌடிகள் என இவர்களிடமே வதைப்பட்ட தமிழ்ச்சமூகம் உள்முரண்பாட்டுச் சமூகமல்லாமல் வேறெது?

                             “செலாஞ்சார் அம்பாட்பெல்டா நில மேம்பாட்டுத் திட்டத்தைச் சார்ந்தது. கிராமங்களின் உட்புறப் பகுதிகளில் சொந்த நிலமற்று இருக்கும் மலாய்க்காரர்களை, மறு குடியமர்ந்த அரசாங்கம் வகுத்த திட்டம் இது. சில ஏக்கர் நிலத்துக்காவது அவர்கள் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் அபிலாசையில் பிறந்த திட்டம் தான்பெல்டா’.

                நாட்டின் புதிய பொருளாதாரக் கொள்கையில், நாட்டுமக்களின் ஏழ்மையை நீக்குவது முகாந்திரமானது. அந்தப் புதிய பொருளாதரத்தை வடிவமைக்கும் திட்டத்தின் ஒரு அங்கம்தான் பெல்டா நிலக் குடியேற்றத்திட்டம். இருபத்தோரு வயதிலிருந்து ஐம்பது வயது உள்ளவா;கள் இத்திட்டத்தில் பங்கு கொள்ளலாம். மலாய்க்காரர்களே இதில் பெருமளவில் பங்கெடுத்தாh;கள். இதில் பங்கெடுக்க இந்தியர்களுக்குச் சரியான வழிகாட்ட அரசியல் ஸ்தாபனமோ , தொழிற்சங்கமோ சீறிய அக்கறை எடுக்கவில்லை.

                இத்திட்டம் மூன்று கட்டங்களை உள்ளடக்கியது. முதல் கட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்ட, பத்திலிருந்து பதினான்கு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யலாம். அந்த நிலப்பகுதியில் செம்பனைப் பயிரிடப்பட்டிருக்கும். செம்பனை வளர்ந்து அறுவடைக்கு உள்ளாகும் வரை அவர்கள் அங்கே பயிரிட்டுப் பிழைக்கலாம். நிலம் அவர்கள் பாதுகாப்பில் இருக்கும். கொஞ்ச காலத்தில் அந்நிலத்தை அவர்களுக்கே அரசாங்கம் பட்டா போட்டு சொந்தமாக்கி விடும். மெய்ன் சாலையிலிருந்து பஹாங் அடர்ந்த காடு வரை சுமார் பதினெட்டு மைல் பரப்பளவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் காடு அழிக்கப்பட்டு இத்திட்டம் மேம்பாட்டுக்கு திறந்து விடப்பட்டிருந்தது. காட்டுப்பகுதியில் பலர் தாக்குப்பிடிக்க முடியாமல் நிலத்தை விட்டு விட்டு மீண்டும் கிராமங்களுக்கோ, பட்டணத்தை நோக்கியோ போய்விட்டார்கள். இப்படி புறக்கணிக்கப்பட்ட நிலம்தான் செலாஞ்சார் பகுதி. பஹாங் மாநிலத்தில் வனத்தை ஒட்டி இருக்கும் கைவிடப்பட்ட, இந்த செம்பனை வளர்ந்த நிலப்பகுதியை பெல்டா நில மேம்பாட்டு நிறுவனம் குத்தகைக்கு விடத் தொடங்கியது. சீனர்கள் வாய்ப்பை நழுவவிடாமல் பல ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்கள். அப்படி குத்தகை எடுத்த, ஏழு செலாஞ்சார் நிலப்பகுதிகளில், ஒரு நிலப்பகுதியான செலாஞ்சார் அம்பாட்டில்தான் (செலாஞ்சார் நான்கு), வாழ வேறு வழியின்றித் தவித்த சனங்கள், ஏமாற்றி கொண்டு வரப்பட்டு கொட்டடியில் அடைக்கப்பட்டனர். இந்த மறுகுடியேற்றத் திட்டத்தில் பங்கெடுத்து கடைசி வரை நின்று தாக்குப்பிடித்த மலாய்க்காரர்களுக்கு வாக்களித்தபடி நிலம் சொந்தமாயிற்று. சொந்தமான நிலப் பகுதிகளில் மக்கள் நலனுக்காக அரசு, பள்ளிக்கூடங்கள், மருந்தகங்கள், கடை வீதிகள் தண்ணீர் மின்சார வசதிகள் செய்துதந்தது. மலாய்க்காரர்கள் பலர் இத்திட்டத்தில் குறுகிய காலத்தில், குறைந்தது பத்து ஏக்கர் நிலத்துக்கு உடமையான அதே நேரத்தில் தான்சிவப்பு அடையாள முத்திரைகுத்தப்பட்டவர்கள் செலாஞ்சார் அம்பாட்டில் அகதிகளானார்கள்”. (பக்:75,76)

                 எனவே, போர் அகதிகளாக மட்டுமல்ல, பொருளாதார அகதியாக, சுற்றுச்சூழல் அகதியாக, இனஒதுக்கல் அகதியாக பல பரிணாமம் உண்டு தமிழ் அகதிமைக்கு. இயற்கை உபாதை கழிக்கக்கூட மானத்தோட வாழக்கூட இயலாத வாழ்வு….

                                 “மனதில் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, குதிகாலிட்டு; உட்கார்ந்தாள்.

                 எங்கிருந்தோ சரசர வென்ற ஒலி எழுந்தது. பட்டென்று எழுந்தாள். மினுக்கி எரியும் விளக்கொளியில் ஏதும் தட்டுப்படவில்லை. மீண்டும் குதிகாலிட்டாள். விஷ ஜந்துகளின் பயம் பிட்டத்துக்குப் பின்னாலும் முன்னாலும் இழை இழையாய் ஓடியபடி இருந்தது. அடி வயிற்றை திருகித் திருகி சுழற்றி எடுத்தது. ஆனாலும் பீதி உணர்வு அதனை உள்ளிழுத்துக் கொண்டது. மீண்டும் எழுந்தாள். வயிற்றைக் கலக்கியது. வந்த வேலையை முடித்துவிட்டு ஓடிவிட வேண்டுமென்று துணிந்தாள். மெல்ல குதிகாலிட்டு அமா;ந்தாள்.

                 மரத்தின் மட்டைகள் காற்றில் அசையும் ஒலி எழுந்தது. மட்டையிலிருந்து தலைக்கு மேலே தொங்கித் தொலையுமா என்ற அச்சம் ஊடுருவியது. மீண்டும் எழுந்து கொண்டாள். ஏதோ ஒன்று மேலிருந்து நழுவி தலையில் விழுந்து நழுவிச் சென்றது. அவள் உடம்பு ஒருமுறை சிலிர்த்து குலுங்கியது. குபுக்கென்று வியர்வை மொட்டுகள் நெற்றியை ஈரப்படுத்தியது.

                 சுதாரித்துக் கொண்டு மீண்டும் அமர்ந்தாள்.

                 இப்போது, மோட்டார் சைக்கிள் ஒலிகேட்டது. சற்று நேரத்தில் மிகஅருகில் ஒலிக்க ஆரம்பித்தது. அதன் வெளிச்சம் கொட்டியில் பாய்ந்து ஒளி பரத்திவிட்டு, சற்று நேரத்தில் அணைந்தது. ஒலியும் ஒளியும் அடங்கியது.

                 “எலவு புடிச்சவன்.. இந்த நேரத்துல வந்து தொலைக்கிறான்.,” ஆடி ஆடி எரிந்து கொண்டிருந்த விளக்கின் தீக்கொழுந்தை ஊதி அணைத்தாள். திரி கருகிய வாடையும் மண்ணெண்ணை நெடியும் மூக்குச் சுவரில் மோதி விலகியது.

                 “ஒண்ணுக்கு ரெண்டுக்குக் கூட நிம்மதியா போ முடியுதா? வெள்ளென வந்து தொலையறானுங்க!” (பக்:78,79 )

                                 “ தோ பாரு முனிம்மாஎன்னா கத்தனாலும் யாரு காதுலேயும் உலாதின்னு ஆய்டுச்சிஎதுக்கு அந்த நாய்ங்கிட்ட வாய கொடுக்கனும்? பொம்பளன்னும் பாக்காம கைய வைக்குறான். அவன் அம்மா ஒருத்தனுக்கு முந்தான விரிச்சிருந்தாமருவாதின்னா என்னானு வளந்திருப்பான்இது ஓடுகாலிக்குப் பொறந்திருக்கும்அதான்…! அந்த சீனத்தவுக்கே போடுற எலும்புத் துண்டு பத்தாதுன்னு நம்மள வேற கடிக்க வருது. ” (பக்:87)

          “கட்டிக்க சீல இல்லன்னு நாத்தனா வீட்டுக்கு வந்தாளாம்நாத்தனா ஓலப்பாய கட்டிக்கிட்டு எதுக்க வந்தாளாம்என்று ஒரு சொலவடை உண்டு.

                     “நம்ம யாருக்கு என்ன பொல்லாப்பு நெனச்சம்…? நமக்கு ஏன் இந்த சோதன”…? என்று குமுறினாள் வேலாயி. “தெல்லாவாhp நாய்ங்கஎன்று சொல்லி குலுங்கி அழுதாள்.

          இருவரிடையேயும் ஒரு கூச்சமான மௌனம் கனத்து நிலைத்தது.

          முனியம்மாளுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியிருந்தது. கோபம் வந்து என்ன செய்ய? செல்லுபடியாகாத கோபம்!... வலியவனின் அநியாயத்துக்கு எதிராக எளியவனின் தார்மீகக் கோபம் ஈடு கொடுக்க முடியுமா? கோபம் வந்தால் அடங்கிக் கிடப்பதுதான் உத்தமம். அதுதான் அதிகாரத்துவத்தின் நீட்சி! எதிர்த்துக் கேட்டால் வில்லங்கந்தான் மேலும் விஸ்வரூவம் கொள்ளும்!.

           போலிஸில் புகார் செய்ய முடியுமா?

           சட்டத்தின் கைகளில் கொண்டு போய் நிறுத்த முடியுமா?

           பெரியவர்களிடம் போய் சொல்லி நியாயம் கேட்க முடியமா?

           இங்கே அயோக்கியர்கள் வைத்ததுதான் சட்டமாகிக் கிடக்கிறது?

           கடவுள்னு ஒருத்தர் இருக்காரா? அப்படியே இருந்தாலும் கெட்டவர்களை அழித்து அவர்களைக் காப்பாற்றும் சக்தியற்றுப் போயிருப்பாரா? அல்லது இப்படி ஒரு இடத்தில், இப்படி ஒரு சமூகம், இம்சைக்குள்ளாகியிருப்பது கடவுளுக்கு முதற்கொண்டு தெரியாமல் போனதா?

           விடிவெள்ளி முளைக்க முடியாத உலகத்தின் விளிம்பில் வாழும் பேதை சனங்களின் குரல் யாருக்கு கேட்கப் போகிறது?

           மௌனத்தை உடைத்து முனியம்மா பேசினாள்.

                     “பொறுமையா இருநா சொல்றத நல்லா கேளு. இத யாருக்கிட்டேயும் சொல்லாதசொல்லிப் புண்ணியமும் இல்லஒம் புருஷங்கிட்டயும் சொல்லாதஅவன் புழுங்கத்தான் முடியும் வேற ஒண்ணும் செய்யவும் முடியாதுஅப்பறம் ஒங்களுக்குள்ள சண்டையும் சச்சரவுந்தான் மிஞ்சும்.. போய் பேசாம படு.. மகமாயின்னு ஒண்ணு இருந்தாகண்டிசனா கூலி கொடுக்கும்..”

           மூக்கன் போதையில் சுருண்டு படுத்துக் கிடந்தான். அவன் ஊறி உழன்று கிடக்கும் உலகம் அவனைப் பிரக்ஞையற்று கிடக்க வைத்திருக்கிறது. அதில் சுகித்து முயங்கிக் கிடக்கிறான். அப்போது வேலாயிக்கு அவன் மேல் அடங்காத கோபம் பிளிறியது. மூண்டெரியும் நெருப்பை அமுக்கி அணைக்க முயன்று தோற்றாள்.

           கொட்டடி மேலுமொரு சூன்யம் நிறைந்து இருண்டு போயிருந்தது!

           இரவு எவ்வளவுக்கெவ்வளவு அநியாயங்களை மறைத்து வைத்து விளையாடுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு செலாஞ்சாரின் பகலும் கொடூரங்களையும் வெளி உலகம் அறியாது புதைத்து வைத்திருக்கிறது. இங்கே பகலெல்லாம் இரவுகள்தான். வெளியுலகம் அறியாத பகல் இரவுதானே? இந்தப் பகலுக்கு யார் வெளிச்சம் பாய்ச்சப்போகிறார்கள்? பகலுக்கே உரித்தான வெளிச்சம் இங்குள்ள பகலுக்குக் கிடைக்காமலே போய் விடுமா? இது ஒரு அனாதைப்பகல்!.” (பக்:126,127)

             இந்த செம்பனைத்தோட்டத்துக்கு ஒரு பத்திரிக்கையாளன் துணிந்து சவால் மிகுந்த பணியேற்று வந்து அவர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுகிறான். மலேசியாவில் பஹாங்க் காட்டில் கொத்தடிமைகள் நாற்பது பேருக்கு மேல் கொட்டடிவாசம். என கருப்புக்கட்டம் போட்ட செய்தி முதற்பக்கத்தில் வெளியாகியிருந்தது. மறுதினம் நாடாளுமன்றத்தில் இச்செய்தி தொடர்பாக கடும்விவாதம் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செலாஞ்சார் அம்பாட்டுக்குப் படையெடுத்தனர்.

          கைகத்தடிகள் கைது செய்யப்படவும் சீனத்தவுக்கே தலைமறைவாக புதினம் முடியாமல் முடிகிறது. தயவு செய்து எனக்குப் பிரஜாஉரிமை கிடைக்க உதவி செய்யுங்கள் என்று உங்களைக் கையெடுத்துக் கும்பிட்டு; கேட்டுக் கொள்கிறேன். நீங்களும் என்னை கைவிட்டுவிடாதீர்கள் என்று மனுவாசகத்தின் குரல் உலகத்தமிழ்ச் சமூகத்தில் ஒலித்துக் கொண்டேதானிருக்கிறது.

            மலேசியாவில் தமிழர்களின் ஒரு பகுதி வாழ்வு அவலமானதுதான். இந்த அவலத்துக்குப் பல காரணங்களை நாம் சொல்லலாம். காலனித்துவம் அவர்களை வெறும் கூலிப்படைகளாகவே வைத்திருந்தது ஒரு முக்கிய காரணம். சுதந்திரம் வந்த பின்னரும் புதிய அரசு பூமி புத்திராக்களை முன்னேற்றும் உத்வேகத்தில் தோட்டப்புற இந்தியத் தொழிலாளர்கள் பற்றிய அக்கறையே இல்லாமல் அலட்சியப்படுத்தியதும் காரணம். ஆனால் இந்த மக்களின் அறியாமையும் முயலாமையும் இணைந்து அவர்களை இந்த அடிமை நிலையிலிருந்து விலகி உயர விடாமல் மனத்தால் முடக்கிக் கட்டிப் போட்டிருந்ததும் ஒரு முக்கிய காரணம்.

             மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் புண்ணியவான் மிக முக்கியமானவர். எழுதும் கலையை இடைவிடாது போற்றுவதுடன் நல்ல வாசிப்பின் மூலமாக அதனைக் கூர்மைப் படுத்திக்கொண்டு வளர்த்தவர்.

       “செலாஞ்சார் அம்பாட்என்னும் இந்தப் புதிய நாவல் அவரின் உச்சப் படைப்பாக அமைகிறது. “சிவப்பின் பிரதிநிதியாக இருந்து அதன் சீரழிவு வரலாற்றின் ஒரு சிறு பகுதிதான் கருப்பு மையால் எழுப்பட்டசெலாஞ்சார் அம்பாட்”  என்னும் இந்நாவல்என அவர் கூறுவது மிகப் பொருத்தம்.

    மலேசியத் தமிழர்களின் சமூக வரலாற்றின் ஓர்  இருண்ட பகுதியை    உயிர்ப்பிக்கும் இந்த நாவல் தமிழ் எழுத்துலகிற்கு கணிசமான கொடை.

என ரெ.கார்த்திகேசு முன்னுரைத்துள்ள கருத்துக்களை நானும் வழிமொழிகின்றேன். எதார்த்தமான நேர்கோட்டு எழுத்தும் வட்டாரவழக்கின் நிர்வாண அழகும் அவலம் குறித்த நெகிழ்வும் ரௌத்திரமும் கொண்டு  திகழும் புதினம் இது. தமிழ்ச்சமூகத்தின் மனசாட்சி இனியும் உலுக்கப்படுமா? தனிக்குணம் மாறுமா?  

வீழ்வோமாயினும் வாழ்வோம்

 

நூல் : செலாஞ்சார் அம்பாட்,(நாவல்) ஆசிரியர் : கோ.புண்ணியவான், மலேசியா,2014

 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World