Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Author
Author
Dr. D. Vetrichelvan is a versatile writer and has authored 12 books so far including poetry, short story and literary research articles. He has also directed a short film entitled 'Tharisu'. He is engaged in a major project on international tamilology and another dealing with eminent scholars like Caldwell and G U Pope. Presently he is working in the Dept of Tamil Studies in Foreign Countries of the Tamil University.
Thalaiyangkam
 

      வீட்டில்அலுவலகத்தில்சமூகஅமைப்பில் எங்கும் விமர்சனங்களுக்கு மரியாதை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என்று அங்கலாய்க்கும் குரல்கள் அதிகரித்து வருவதைக் கேட்கிறோம். பகடி செய்வதும் ஒருவகையில் விமர்சனம்தான்.பக்கம் பக்கமாக அத்தியாயம் அத்தியாயமாக நீளும் பலகொடூர வரலாறுகளை நொடிப்பொழுதில் தகர்த்துவிடுபவை பகடிகள்.எனவேதான் அணுகுண்டுகள் வைத்திருந்த அமெரிக்கா பகடிக்கலைஞர் சார்லிசாப்ளினைக் கண்டுபயந்தது. பகடிக்காரர்கள் அழுக்குமனம் கொண்டவர்களைப் பிழிபிழியெனப் பிழந்துவிடுவார்கள். நோய்பீடித்த உடல்களுக்கு பிசியோதெரபியைப் பரிந்துரைப்பதுபோல் நோய்பீடித்த சிந்தனையுடையவர்களுக்கு கிரேசிமோகன் வார்த்தையில் சொன்னால் பிழியோதெரபியைத்தான் பரிந்துரைக்க வேண்டும். அந்தவகையில் தினமணியில் வந்த லோக்கல் குருவோ ரேப் கேசில் உள்ளுர் சிறையில் லோக குருவோ மர்டர் கேசில் மத்திய சிறையில் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே எனும் பகடி புகழ்பெற்றது. பழங்காலத்துப் பகடியொன்று இன்றைய சமகாலத்துக்கும் பொருந்திவருவது.தர்க்கரீதியில் சிந்திப்பவரும் , பலசிக்கல்களின்போது மகாராசாவிடமிருந்து எளியமக்கள்மீது அக்கறையோடு காப்பாற்றியவரும் ஆன விகடகவியைக் கண்டு ராசகுருவுக்கும், ராசமகாராசாவுக்கும் கடும்காண்டு.எப்படியாவது மட்டம்தட்ட எண்ணி நேற்று நான்கண்ட கனவில் நடைபயிற்சியின்போது இரண்டு குழிகளில் விழுந்துவிட்டோம்.நான் விழுந்தது தேன்நிரம்பிய குட்டை. நீ விழுந்ததோ மலம் நிரம்பிய குட்டை என்று ராசமகாராசா எடுத்துவிட எல்லோரும் கொல்லெனச் சிரித்துவிட்டார்களாம். மறுநாள் விகடகவி ராசமகாராசாவைப்பார்த்து, ராசா நேற்றுநீங்கள் கண்ட கனவின் மீதியை நான் கண்டேன்.அதாகப்பட்டது அவ்வாறு நாம் விழுந்த இடம் நடமாட்டமும் நம்மைத் துப்புரவாக்கிக் கொள்ளத் தண்ணீரும் இல்லாத இடம். எனவே நாம் ஒருமுடிவு செய்கிறோம்.அதாவது உங்கள் உடலை நானும் எனதுஉடலை நீங்களும் பரஸ்பரம் நாக்கினால் சுத்தம்;செய்துகொண்டு திரும்புவதாகக் கனவு ராசமகாராசா என்றானாம் விகடகவி. இப்படி நக்கினார்க்கினியர்களை பகடியால் அடிக்காமல் வேறு எதால் அடிப்பது? சிந்திப்போம்.

Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World