Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Author
Author
Dr. D. Vetrichelvan is a versatile writer and has authored 12 books so far including poetry, short story and literary research articles. He has also directed a short film entitled 'Tharisu'. He is engaged in a major project on international tamilology and another dealing with eminent scholars like Caldwell and G U Pope. Presently he is working in the Dept of Tamil Studies in Foreign Countries of the Tamil University.
Thalaiyangkam
 

      மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம் சிங்களத் தீவினுக்கோர்பாலம் அமைப்போம் வங்கத்திலோடி வரும் நீரின் மிகையால் மையத்துநாடுகளில் பயிர்செய்குவோம் வெட்டுக்கனிகள் செய்து தங்கமுதலாம் வேறுபல பொருளுங் குடைந்தெடுப்போம் காசிநகர்புலவர்பேசுமுரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர்கருவிசெய்வோம் வானையளப்போம் கடல்மீனையளப்போம் சந்திரமண்டலத்தியல் கண்டுதெளிவோம் காவியம் செய்வோம் நல்ல காடுவளர;ப்போம் சக்திதெருபெருக்கும் சாத்திரம் கற்போம் என்று, வணிகம்,அண்டைநாட்டுறவு,பாசனநீர;மேலாண்மை,வேளாண்மை,தகவல்தொழில்நுட்பம்,விண்வெளிஆராய்ச்சி,சூழலியல்,காடுவளர;ப்பு,கலைவளர;ப்பு என அறிவியலை,தொழில் நுட்பத்தை மனித நேயத்துடன் கலைப்புலமையை வளர;க்கப் பாடிவைத்தான் பாரதி. ஆனால் எதையும் வாதத்திறமையுடன் அணுகாமல் விதண்டாவாதத்தை விதைக்கும் போக்கு கண்டிக்கத் தக்கதாக இருக்கிறது.அணுவைப்பிளந்து ஏழ்கடலைப்புகட்டி குறுகத்தறித்த குறள் என்ற அடிகளை வைத்துக்கொண்டு, அணுவைப்பிளக்கும் தொழில்நுட்பம் அறிந்தவன் தமிழன் எனப்பிளந்துகட்டுவதும் மயிற்பொறி என்ற வார;த்தையை வைத்துக்கொண்டு தமிழன் விமானம் ஓட்டுவதுகுறித்து அறிந்துவைத்திருந்தான் என்று கதைவிடுவதும் பட்டிமன்ற தமிழாராய்ச்சி அதிமேதாவிகளுக்கு உளறிக்கொட்ட நம் காதுகள் என்ன குப்பைத்தொட்டியா? பாரதி இதையும் தமிழர;களுக்கு தோற்காது அல்ல இரும்புக்காது என்று பதிவு செய்கிறான். தமிழனால் அணுவைப் பிளக்கமுடிந்தால் பிறகு ரூதர;போர;டு தாம்சன் வரும் வரை காத்திருப்பானேன்? தமிழனுக்கு விமானத் தொழில்நுட்பம் தெரிந்தால் பிறகேன் ரைட் சகோதரர;கள் வரும்வரை காத்திருக்க வேண்டும்? வேதத்தில் வியாமானிக்க தந்திரம் இருப்பதாக அறிவியல் கட்டுரைவாசிக்கும் காலம் கொடுங்காலமாகிவருகிறது.ராமர்பாலம் உள்ளிட்ட நம்பிக்கைகளால் நாம் இழந்தவைகள் ஏராளம். மதவாதத்தாலும் மூடநம்பிக்கையாலும் உலகிலேயே அறிவியல் கண்டுபிடிப்புகள் குறைந்த தேசம் நமது தேசம் எனப் புள்ளிவிவரங்கள் கூறும்.மதம் கடந்து அறிவியல் சார;ந்து மானுட சமுத்திரம் நானென்று கூறும் பெருமிதத்தை பாவேந்தர்வழியில் பாரினில் ஒலிக்கச்செய்வோம்.

Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World