Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Author
Author
Dr. D. Vetrichelvan is a versatile writer and has authored 12 books so far including poetry, short story and literary research articles. He has also directed a short film entitled 'Tharisu'. He is engaged in a major project on international tamilology and another dealing with eminent scholars like Caldwell and G U Pope. Presently he is working in the Dept of Tamil Studies in Foreign Countries of the Tamil University.
Thalaiyangkam
 

     

    அண்மையில் சென்னைக்கலைக்குழு பிரளயன் மேற்பார்வையில் பேரா. ராஜீ இயக்கத்தில் "வஞ்சியர்காண்டம்", நவீன நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. திருச்சியில் "களம்" அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நாடகம் பல அதிர்வுகளை எழுப்பியது.

வஞ்சிக்காண்டம் சரி, அதென்ன வஞ்சியர் காண்டம்? மையக் கதாபாத்திரங்களான கோவலன்  கண்ணகி கதை, ஒப்பாரிப்புலம்பல்கள், மரணம், மதுரை தீப்பற்றி எரிதல் என வழமையான சிலப்பதிகாரக் காட்சிக்களுக்கிடையில் புதைக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட,       ஓரங்கட்டப்பட்ட பெண்களின்; அடிமைகளாக பிடித்துவரப்பட்டோரின் குரல்களில் சிலப்பதிகார மறுவாசிப்பு தெளிவான காட்சியமைப்பு, தொடர்ந்து கைத்தட்டல்கள் கிடைத்த கூரிய விமர்சன உரையாடல்கள், கிளர்ச்சியூட்டக்கூடிய பிரதிக்குப் பின்னால் மெலிதாகக் கசிந்தோடுகிற சோகம் இழையோடிய இசைப் பின்னணி / ஒளிநிழல் பின்னணி, தெய்வநிலையிலிருந்து கீழிறக்கப்பட்டு சகமனுஷியாக கண்ணகியை நம்மோடு கொண்டு வருகிற படைப்பாக்கம், என கன கச்சிதமாக பார்வையாளர்களை ’நான் கலந்து’ பார்க்கும் படி ஈர்த்தது. தமிழ்ப்பல்கலைக் கழகக் கூத்துக்களரி, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி, கன்னியாகுமரி கலைக்குழு, புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைத்துறை என நடிகர்கள் தேர்ந்த இசைச்சிற்பங்களாய் நிகழ்வைப் புலப்படுத்தினர். செவ்வியல்கலை நாட்டுப் புறக்கலையை ஓரங்கட்டி வைத்திருப்பதிலிருந்து நாட்டுப்புறப்பார்வையிலான பிரதிக்கு செல்லியல் கலை பின்னணி சேர்ப்பதைப் போல மறுவாசிப்பு அமைந்திருந்தது. தமிழர்கள் தங்கள் பண்பாட்டை அரசியலை, மறுவாசிப்பு செய்ய வேண்டும், அதற்கு முன் வாசிப்பையும் சரியாக.

Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World